Tuesday, May 4, 2010

அகில உலக ஐக்கிய அரபு அமீரக பெண் பதிவர்கள் முன்னணி

...அப்படி எதுவும் ஆரம்பிக்கலைங்க.. சும்மாத்தான் எல்லாரும் சந்திச்சோமே. சகோதரி ஸாதிகாவின் அமீரக விஜயத்தை ஒட்டி (பில்ட் அப் எப்பூடி) ஏற்பாடு செஞ்ச சந்திப்பு. எல்லாரும் சந்திப்போமான்னு ஹூசைனம்மா கேட்டவுடனேயே எனக்கு ஒரே சந்தோஷமா இருந்தது. எப்படியும் எல்லாரையும் பார்த்துடனும்னு எங்க மாப்பியை நச்சரிச்சு, ரெடியாகி கிளம்பி போனோம்.


நிறைய பேர் பதிவுகள்ல பார்த்துருக்கேன். வலையுலகம் மூலமா கிடைக்கும் நல்ல விஷயம்னு சொல்ல சொன்னால், எல்லாரும் ஒட்டுமொத்தமா சொல்வது இங்கு கிடைக்கும் நல்ல நட்புக்களைத்தான்! நானும் ஆச்சரியப்படுவேன், அதெப்படி முகம் தெரியாத ஒருத்தவங்களோட சட்டுன்னு பழக முடியும்னு. ஆனா முத‌ல் ச‌ந்திப்பிலேயே நீண்ட‌ நாள் ப‌ழ‌கின‌ தோழிக‌ள் போல‌ எல்லாரும் க‌ல‌க‌ல‌வென்று இருந்த‌து என‌க்கு இன்னும் ம‌லைப்பா இருக்கு.


வீட்டை விட்டு கிளம்பும்போதே நல்லா பசி.. இன்னைக்கு வெளிய சாப்பிடலாம்னு நைசா மாப்புக்கிட்ட அடி போட்டுட்டு எஸ்கேப். நானும் நினைச்சேன், என்ன ஒரு அரை மணி நேரம்தான் எல்லாரும் பார்த்துக்குவோம்னு. லுலுவில் ஹூசைனம்மாவை பார்த்தவுடன், அவங்களா இவங்கன்னு ஒரே ஆச்சரியம். அவ்வளவு சாதுவா இருந்தாங்கப்பா! ஜலீலாக்காவும் வந்த பிறகு பேசிட்டு அப்படியே பார்க்குக்கு நடை போட்டோம்.. உள்ள காலத்தான் எடுத்து வைக்கிறேன், ஸாதிகாக்கா 'ஆ பிரியாணி சட்டி'ன்னு ஜோரா ஒரு வரவேற்பு குடுத்தாங்க. அப்படியே மலீக்காக்கா எல்லாரையும் அறிமுகப்படுத்த, மலீக்காக்காவை பார்த்து நீங்க யாருன்னு கேக்க, ஹிஹி.. ஆஸியாக்காவோட சமையல் பக்கம் போயி நான் முதல் நாள் செஞ்ச சுருட்டு கறி எங்க மாப்பிக்கு ரொம்ப பிடிச்சிட்டு..

ஜ‌லீலாக்கா கொண்டுட்டு வ‌ந்த‌ சூப்ப‌ர் ம‌சால் வ‌டைய‌ முத‌ல்ல‌ போணி ப‌ண்ணின‌து நானே! ம‌லீக்காகா டூடுல்ஸ் (கோதுமை தோசைக்குள்ள‌ நூடுல்ஸ் ஸ்ட‌ஃபிங்க்‍: பேரு வெச்சிட்டோம்ல‌) சூப்ப‌ரா இருந்துச்சு.. ந‌ல்ல‌ ப‌சி வேற‌, செம்மையா சாப்பிட்டேன்! ஹிஹி...

ச‌கோத‌ரிக‌ள் ஸாதிகா, ஹூசைன‌ம்மா, ஜ‌லீலா, ம‌லீக்கா, ம‌ல‌ர், ஆஸியா இவ‌ங்க‌ளையெல்லாம் முத‌ல்ல‌யே தெரிஞ்சாலும், ச‌ந்திப்பின் மூல‌மா அறிமுக‌மான‌ ச‌கோத‌ரிக‌ள் ம‌னோ ம‌ற்றும் அந‌ன்யாவை ச‌ந்திச்ச‌தில் ரொம்ப‌ சந்தோஷ‌ம். ச‌கோத‌ரி ம‌னோ அவ‌ங்க‌கிட்ட‌ ச‌ரியா பேச‌ முடிய‌ல‌. ஆனா ஜ‌லீலாக்கா சொன்னாங்க‌, அவ‌ங்க‌ ரொம்ப‌ அருமையா எழுதுவாங்க‌ன்னு. பிற‌கு தான் போயி பார்த்தேன்! அந‌ன்யாவின் கொஞ்சும் த‌மிழ் ரொம்ப‌வே ந‌ல்லா இருந்த‌து.. மலீக்காவின் மகன் மஃரூஃப் அப்படியே அம்மா சாடை.. ஜலீலாக்கவின் மகன் ஹனீஃபும் அப்படியே. மாஷா அல்லாஹ்.. பொறுமையான பிள்ளைகள். நேரம் ஆனதும் மாப்பு பார்க்குக்கு வந்துட்டாங்க, அப்படியே கிளம்புறேன்னு சொன்னதும், ஜலீலாக்கா எனக்குன்னு தனியா எடுத்து வெச்ச முர்தபாவும் மலீக்காகாவோட அன்பு பரிசாக எனக்கே பிடிச்ச பிங்க் கலர் பர்ஸும் தந்து அசத்திட்டாங்க.

நான் வீட்ட‌ பொறுத்த‌ வ‌ரைக்கும் பெரிய‌ சோம்பேறி. ம்மா வீட்டுல‌ இருந்தா ஒரு வேலையும் செய்ய‌ மாட்டேன், அதுவும் கிச்ச‌ன் ப‌க்க‌மெல்லாம் ந‌ல்ல வாச‌னை வ‌ரும்போது எல்லாருக்கும் முன்னாடியே ம்மா செஞ்ச‌தை ஆட்டைய‌ போட‌த்தான் போகுற‌து. அப்ப‌டி இருக்கும்போது க‌ல்யாண‌ம் ஆகி இங்க தனியா வந்த‌ பிற‌கு எப்ப‌டித்தான் ச‌மாளிக்க‌ப்போறேனோன்ற‌ கவ‌லை இருந்த‌து.

இங்க‌ வ‌ந்து பார்த்தா தான் தெரியுது, வேலைக்கும் போயிட்டு, பிள்ளைக‌ளையும் பார்த்துட்டு, அட்ட‌காச‌மா ச‌மைய‌லும் செய்துட்டு, வேலைக்கு போனாலும் போக‌லைன்டாலும் க‌விதைக‌ள், அருமையான‌ க‌ட்டுரைக‌ள், யோசிக்க‌ வைக்கும் ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ளை த‌ங்க‌ள் அனுப‌வ‌ம் மூல‌ம் ப‌கிர்ந்துட்டு இருக்கும் எல்லாரையும் பார்த்த‌ப்போ என‌க்கு அவ‌ங்க‌ல்லாம் ஒரு இன்ஸ்பிரேஷ‌னாக‌வே தெரிஞ்சாங்க‌. உண்மையா.

அங்க‌ ச‌ந்திச்ச‌வ‌ங்க‌ள்ல‌ நான்தான் இளைய‌வ‌. இன்னும் பெருசா பொறுப்புக‌ள் எதுவும் வ‌ர‌லை. சாத‌ர‌ண‌மா செய்ய‌க்கூடிய‌ விஷ‌ய‌ங்க‌ளையே செய்ய‌ ச‌டையும் ஆளு நான். ஆனா இவ‌ங்க‌ல்லாம் நான் ம‌லை போல‌ நினைக்கும் ப‌ல‌ வேலைக‌ளை சாத‌ர‌ண‌மாக‌ செய்ய‌க்கூடிய‌வ‌ங்க‌. எல்லாரும் நினைப்ப‌து போல‌ ஒரு பெண் ச‌மைய‌ல் செய்வ‌தும், பிள்ளைக‌ளைக‌ளையும், க‌ண‌வ‌ரையும், அவ‌ர் குடும்ப‌த்தையும், த‌ன் குடும்ப‌த்தையும் பார்த்துக்கொள்வ‌து சாத‌ர‌ண‌ விஷ‌ய‌ம் கிடையாது.


பெண்க‌ள் நாங்க‌ல்லாம் சேர்ந்து ச‌ந்திச்ச‌தில் எல்லாருக்கும் ச‌ந்தோஷ‌ம்னா, என‌க்கு அதுக்கூட‌வே ந‌ல்ல‌ ப‌டிப்பினையும். ஒவ்வொருத்த‌வ‌ங்க‌கிட்ட‌ இருந்தும் க‌த்துக்க‌ நிறைய‌ விஷ‌ய‌ம் இருக்கு. உங்க‌ எல்லாரையும் மீண்டும் ச‌ந்திக்க‌ ஆவ‌லா இருக்கேன், இன்ஷா அல்லாஹ்!

40 comments:

SUFFIX said...

என்னாடா பிரியாணி சட்டி இன்னும் திறக்கலையேன்னு பார்த்தேன்.
//வேலைக்கும் போயிட்டு, பிள்ளைக‌ளையும் பார்த்துட்டு, அட்ட‌காச‌மா ச‌மைய‌லும் செய்துட்டு, வேலைக்கு போனாலும் போக‌லைன்டாலும் க‌விதைக‌ள், அருமையான‌ க‌ட்டுரைக‌ள்,//

ஆமாம்ப்பா ட்ரூலி இன்ஸ்ப்பைரிங், பாராட்டியே ஆகவேண்டும், ஆதரவு கொடுக்கும் எங்கள் ரங்க்ஸ் குழுவுக்கும் சேர்த்து!!

மின்மினி RS said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அருமையான சந்திப்பு; அல்ஹம்துலில்லாஹ். அனைவருக்கும் வாழ்த்துகள்

அப்துல்மாலிக் said...

சந்தோஷம். மேலும் சந்திப்புகளின் மூலம் புரட்சியை உருவாக்க வாழ்த்துக்கள், இதற்கு உறுதுணையாக இருக்கும் எங்க தங்கஸ்களுக்கும் நன்றிகள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

asathunga

ஹுஸைனம்மா said...

தலைப்பைப் பாத்து கொஞ்சம் டெரராயிட்டேன்.

//ஹூசைனம்மாவை பார்த்தவுடன், அவங்களா இவங்கன்னு ஒரே ஆச்சரியம். அவ்வளவு சாதுவா இருந்தாங்கப்பா! //

அட ஏங்க எல்லாரும் இதயே சொல்றீங்க. நான் நெசமாவே நல்லப்புள்ளைதான்!!

(ஹூம் வடிவேலு “நானும் ரவுடிதான், ரவுடிதான்னு சொல்றமாதிரியே இருக்குதே!)

ஹுஸைனம்மா said...

//நான் வீட்ட‌ பொறுத்த‌ வ‌ரைக்கும் பெரிய‌ சோம்பேறி. ..க‌ல்யாண‌ம் ஆகி இங்க தனியா வந்த‌ பிற‌கு எப்ப‌டித்தான் ச‌மாளிக்க‌ப்போறேனோன்ற‌ கவ‌லை இருந்த‌து.//

இப்புடித்தான் நாங்களும் ஆரம்பத்துல இருந்தோம்!! (நீங்களும் சில வருஷங்கள் கழிச்சு இதையும் சொல்லுவீங்க பாருங்க, இன்ஷா அல்லாஹ்)

சந்தனமுல்லை said...

hmm..interesting! :-)

ஷாகுல் said...

//இன்னைக்கு வெளிய சாப்பிடலாம்னு நைசா மாப்புக்கிட்ட அடி போட்டுட்டு எஸ்கேப்.//

யாரு எஸ்கேப் நீங்களா இல்ல உங்க மாப்ஸா? :)))

ஷாகுல் said...

அகில உலக ஐக்கிய அரபு அமீரக பெண் பதிவர்கள் முன்னணி கண்ட புரட்ச்சி தலைவியே வாழ்க வளர்க

கிளியனூர் இஸ்மத் said...

//ஜ‌லீலாக்கா கொண்டுட்டு வ‌ந்த‌ சூப்ப‌ர் ம‌சால் வ‌டை
ம‌லீக்காகா டூடுல்ஸ்//

இது கொஞ்சம் ஓவராத் தெரியல...

அகில உலகம்னு சொல்லி இப்படி ஏமாத்தீட்டீங்களே..

பெண்பதிவர்களாக நீங்கள் அனைவரும் சந்தித்தது ஆண்பதிவர்களுக்கு சந்தோசம்ங்க....வாழ்த்துக்கள்...(நாங்களும் பிரியாணி நியூடுல்ஸ் வடை போடுவோம்ல)

Menaga Sathia said...

வாழ்த்துக்கள்!! நல்லா எஞ்சாய் பண்ணிருக்கிங்கன்னு உங்க பதிவிலே தெரியுது..

அன்புடன் மலிக்கா said...

அகில உலக ஐக்கிய அரபு அமீரக பெண் பதிவர்கள் முன்னணி..

ஆகா சொன்னதுபோலவே [சங்கம் வச்சிடலாமுன்னு சொன்னத்தச்சொல்லுறேன்]சங்கத்தலைவியாக்கிரலாம் நாஸியா

அனுபவங்கள் பாடமாக அமையும் நிச்சயமாக.

//ஹூசைனம்மாவை பார்த்தவுடன், அவங்களா இவங்கன்னு ஒரே ஆச்சரியம். அவ்வளவு சாதுவா இருந்தாங்கப்பா! //

அட ஏங்க எல்லாரும் இதயே சொல்றீங்க. நான் நெசமாவே நல்லப்புள்ளைதான்!!//

நம்பிட்டோம் நம்பிட்டோம்

அனைவரும் சந்திச்சதில் மகிழ்ச்சியிலும் மகிழ்ச்சியே.

Jaleela Kamal said...

நாஸியா முதலில் நீங்க வந்ததும் அறிமுகபடுத்தும் போது, அவஙக் அவங்க பிளாக் பேர சொல்லும் போது நீங்க பிரியாணி என்றதும் பிரியாணி பற்றி தெரியாதவஙக் பே பே ந்னு முழித்தது இன்னும் நினைத்து நினைத்து சிரித்து கொண்டே பதிவு போடுகிறேன்.ஆமாம் வந்த புதிதில் கண்ணை கட்டி காட்டில் விட்டா மாதிரி தான் வந்தோம். அப்பரம் எல்லாமே ஒரு படிப்ப்பினை தான்.

Jaleela Kamal said...

அப்பாடா ரொம்ப நாளா மூடி கிடந்த பிரியாணி கட சந்திப்பூ மூலம் திறக்கப்பட்டது. சந்தோஷம்

செ.சரவணக்குமார் said...

படிக்கும்போதே சந்தோஷமா இருக்கு. கலக்கல் நாஸியா.

சிநேகிதன் அக்பர் said...

சந்திப்புக்கு வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...

//(ஹூம் வடிவேலு “நானும் ரவுடிதான், ரவுடிதான்னு சொல்றமாதிரியே இருக்குதே!) //

:))!

வாழ்த்துக்கள் எல்லோருக்கும்.

Madumitha said...

அடிக்கடி சந்தியுங்கள்.
எங்களுக்கு விஷயம் கிடைக்கும்.

Chitra said...

இங்க‌ வ‌ந்து பார்த்தா தான் தெரியுது, வேலைக்கும் போயிட்டு, பிள்ளைக‌ளையும் பார்த்துட்டு, அட்ட‌காச‌மா ச‌மைய‌லும் செய்துட்டு, வேலைக்கு போனாலும் போக‌லைன்டாலும் க‌விதைக‌ள், அருமையான‌ க‌ட்டுரைக‌ள், யோசிக்க‌ வைக்கும் ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ளை த‌ங்க‌ள் அனுப‌வ‌ம் மூல‌ம் ப‌கிர்ந்துட்டு இருக்கும் எல்லாரையும் பார்த்த‌ப்போ என‌க்கு அவ‌ங்க‌ல்லாம் ஒரு இன்ஸ்பிரேஷ‌னாக‌வே தெரிஞ்சாங்க‌. உண்மையா.


...... true! நீங்கள் எல்லோரும் பலருக்கு நல்ல inspiration தான்.

BY the way, அடிக்கடி, பிரியாணி போடுங்க. :-)

சாந்தி மாரியப்பன் said...

பிரியாணி இன்னிக்கு வாசனை தூக்குதே :-))

ஜெய்லானி said...

@@@ Jaleela--//அப்பாடா ரொம்ப நாளா மூடி கிடந்த பிரியாணி கட சந்திப்பூ மூலம் திறக்கப்பட்டது. சந்தோஷம் //


ஜலீலாக்கா வாழ்க!! நான் கேக்க நெனச்சேன் கேட்டுடீங்க!!!

சீமான்கனி said...

சங்கத்துக்கு வாழ்த்துகள்...சந்திப்பை பதிந்து எங்களுக்கும் அந்த உணர்வை கொடுத்துடீங்க...

Ananya Mahadevan said...

ஆஹா நாஸியா,
அதிகம் பேசாட்டியும் கமுக்கமா டெரர் பதிவு அண்டு டைட்டில் போட்டுட்டீங்களே? சூப்பர் போங்க!
யெஸ் இவங்க எல்லாம் எனக்கும் தீவிர ரோல் மாடல்ஸ்.(பின்னே, நாங்களும் யூத்து தானே?)

நாஸியா said...

ஷ‌ஃபிக்ஸ், உங்கள் ஆதரவுக்கு எங்கள் சங்கம் பாராட்டு தெரிவிக்கிறது (யப்பா!!)

வ அலைக்கும் அஸ்ஸலாம் வரஹ்.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.. மாஷா அல்லாஹ் ரொம்பவே அருமையான சந்திப்பு அது!

நன்றி அபு அஃப்ஸர்.. :)

நன்றி முத்துலெட்சுமி.. :)

ஹூசைனம்மா... ஆமா நீங்க நிஜம்மாவே ரொம்ம்ம்பா நல்ல புள்ளைதான்.. ஹிஹி.. (பின்ன எனக்கு 'பார்சல்' ஏற்பாடு பண்ணி குடுத்தீங்களே)

\இப்புடித்தான் நாங்களும் ஆரம்பத்துல இருந்தோம்!! (நீங்களும் சில வருஷங்கள் கழிச்சு இதையும் சொல்லுவீங்க பாருங்க, இன்ஷா அல்லாஹ்)\

இன்ஷா அல்லாஹ் ஆமீன்..

Jaleela Kamal said...

ஜெய்ல்லானி நீங்க வந்து சொல்லுவீங்கன்னு தெரியும் , அதான் முந்தி கொண்டேன்.


நாஸியா டெரரா பதிவு போட்டதுல , உடனே யுத் ஃபுல் விகடனிலும் பிரியாணி பதிவு வந்துடுச்சி ஹிஹி


அநன்யா என்ன் யெஸ் இவங்க எல்லாம் எனக்கும் தீவிர ரோல் மாடல்ஸ்.(பின்னே, நாங்களும் யூத்து தானே?)

(எல்லா கேட்டுக்கங்க யுத்தாமா//

நாஸியா said...

நன்றி சந்தனமுல்லை :)

ஷாகுல் பாய், நாந்தான் எஸ்கேப்பு.. அன்னைக்கு தக்கடி போடுறதா ப்ளான்.. ஆனா நைசா சரவண பவன் உசார் பண்ணிட்டோம்ல‌.. புர‌ட்சி த‌லைவியா, என்ன‌டா துபாய்ல‌ போயி ஆட்டோ வ‌ருதேன்னு பார்த்தேன்.. உங்க‌ வேலை தானா?

இஸ்ம‌த் பாய், என்ன‌ ஓவ‌ரு? நீங்க‌ளும் எல்லா ர‌ங்க்ஸுக்கும் பிரியாணி போட‌ க்ளாஸ் எடுங்க‌..

ந‌ன்றி மேன‌கா.. :)

ந‌ன்றி ம‌லீக்கா.. நிச்ச‌ய‌மா நீங்க‌ல்லாம் என‌க்கு இன்ஸ்பிரேஷ‌ன்.

ஜ‌லீலாக்கா..ஹிஹி.. ஆமா ஆசியாக்கா முழிச்ச‌து இன்னும் நினைவுல‌ இருக்கு..ஹிஹி.. :) பிரியாணி ச‌ட்டிய‌ ஒரு வ‌ழி திற‌ந்தாச்சு! :)

நாஸியா said...

நன்றி சரவணக்குமார் :)

நன்றி அக்பர் :)

நன்றி ராமலக்ஷ்மி :)

நன்றி மதுமிதா :)

ந‌ன்றி சித்ரா.. க‌ண்டிப்பா! :)

ந‌ன்றி அமைதிச்சார‌ல்.. :)

ஜெய்லானி... என்ன‌ ப‌ண்ற‌து.. இனி அடிக்க‌டி பிரியாணி போட‌ வேண்டிய‌து தான்

ந‌ன்றி சீமான் க‌னி.. :)

அந‌ன்யா.. நெக்ஸ்ட் டைம் பாருங்க‌, ஃபுல் ஃபார்ம்ல‌ வாரேன், இன்ஷா அல்லாஹ்!

☀நான் ஆதவன்☀ said...

ஆஹா.... அமீரகத்துல பெண்கள் சங்கமும் ஆரம்பிச்சாச்சா :))) கலக்குங்க :)

ஸாதிகா said...

பிரியாணிசட்டியை திறந்தாச்சா?வாசனை யூத்ஃபுல் விகடன் வரைக்கும் போய்டுச்சு.ரொம்ப சந்தோஷம்.பதிவில் உங்களை பச்சைபிள்ளை பச்சைப்பிள்ளைன்ன்னு எழுதி எழுதியே நேரிலும் எல்லோருக்கும் செல்லமாகிட்டீங்க.ஆனால் இது இன்னும் ஓரிரு மாதங்கள் வரைதான்.

நட்புடன் ஜமால் said...

ஒரு நல்ல காரியம் செய்தீங்க, பிரியாணி ’கிண்டி’ எடுத்துட்டு போகாம இருந்தீங்களே தப்பிச்சாங்க எல்லோரும்.

ஒரே கூதாகலம் போங்க - இதை வைத்து ’ஆக்க’ப்பூர்வமா எதுனா செய்யுங்க.

நாஸியா said...

சகோதரர் ஆதவன் , சங்கமெல்லாம் ஒண்ணுமில்லீங்க. எல்லாம் ஒரு பில்ட் அப்பு தான். :)

ஸாதிகாக்கா, ஆமா காலைல தான் ஹூசைனம்மா சொன்னாங்களே. ஹிஹி.. மொக்கைக்கு ஒரு அங்கீகாரம்.. :) ஓரிரு மாதம் வரை தானா.. :(

ஜமால் காக்கா, 'ஆக்க'பூர்வமா, சத்தியமா இன்னும் கொஞ்ச வருஷத்துக்காவது எதுவும் நடக்காது.. ஹிஹி

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி எங்க இருக்க? உடனே என் ப்ளாக் வா ,

ஒன்னு கூடிடான்கப்பா , ஒன்னுகூடிட்டாங்க , ஜெய்லானி நம்மக்கு தெரியாம , மகளிர் பிரிவு தனி ஆலோசனை நடத்தி உள்ளது , நாம சீக்கிரம் ஆலோசனை செய்து அவர்களை நம்மிடம் சரணடைய செய்வோம் .

வெற்றி வேல் , வீர வேல்
................................................
..............................................\

இல்லன்னா நாம சரண்டர் ஆகிடுவோம்
(சே.. லீவுல கூட நிம்மதியா இருக்க விடமாட்டேன்குறான்கப்பா)

மேடம்ஸ் , வாழ்த்துக்கள் , எல்லாரும் ஒன்றாக சந்தித்து இருக்கிறீர்கள் , மீண்டும் வாழ்த்துக்கள்

Asiya Omar said...

நாஸியா அசத்திட்டே செல்லம்,இப்ப நேரில் பார்த்தால் ஒரு சட்டி இல்லை,ஒன்பது சட்டி பிரியாணி போட்டு தருவேன்,...அவ்வளவு மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.

எம் அப்துல் காதர் said...

எல்லாம் சரி, கடைசி கடைசியா என்ன தீர்மானம் நிறை
வேற்றினிங்க. அதை சொல்லவே இல்லையே. அல்லது எல்லாமே ரகசிய உடன்படிக்கையா
ஆல் தி பெஸ்ட் moms...

Mrs.Mano Saminathan said...

நம் சந்திப்பை ரொம்பவும் அழகாக விவரித்திருக்கிறீர்கள்! ரொம்பவும் நன்றி, நாஸியா!
எனக்கும் உங்கள் எல்லோரையும் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நேரம்தான் போதவில்லை!

Starjan (ஸ்டார்ஜன்) said...

அல்ஹம்துலில்லாஹ்.. அனைவருக்கும் வாழ்த்துகள்.

நாஸியா said...

ஹலோ.. இந்த கதையெல்லாம் ஆவுறதுக்கில்ல சரியா?

\இல்லன்னா நாம சரண்டர் ஆகிடுவோம்
(சே.. லீவுல கூட நிம்மதியா இருக்க விடமாட்டேன்குறான்கப்பா\

அது! நல்லது..

நன்றி அமைச்சரே!!

ஆஸியாக்கா... ரொம்ப ஸ்வீட்.. எப்படியாச்சும் உங்க ஏரியாப்பக்கம் வந்தா சட்டிய காலி பண்ணிட வேண்டியது தான்.. :)) வாரேன் வாரேன் இன்ஷா அல்லாஹ்

அப்துல் காதர் பாய்,

தீர்மானமானமா? சரி அதை பத்தி அடுத்த பதிவில போடுறேன் சரியா..

ந‌ன்றி ச‌கோத‌ரி ம‌னோ.. நாம‌ இன்னொரு நாள் அதிக‌ நேர‌ம் ச‌ந்திக்க‌னும்.. :)

ஸ்டார்ஜ‌ன் பாய், ந‌ன்றி. அல்ஹ‌ம்துலில்லாஹ்..

அன்புடன் மலிக்கா said...

நேரம்கிடைக்கும்போது பார்க்கவும்
http://fmalikka.blogspot.com/2010/05/10.html

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

சகோதரிகள் அனைவரும் சந்தித்துக் கொண்டது நல்ல விஷயம்.

கடல் கடந்து வந்தாலும், நம் சகோதரிகள் சங்கம் ஆரம்பிப்பது நல்ல விஷயமே (வருத்தப்படாதோர் வாலிப சங்கம் மாதிரி இல்லாமல் இருந்தால் சரி).

mkr said...

பிர்யானி என்றதும் உள்ளே வந்தால் பெண் பதிவர்கள் சந்திப்பை தான் படிக்க முடிந்தது.மற்ரவர்களை போல் எழுதுதை போல் சமையலில் பிரகாசிக்க வாழ்த்துகள்