Tuesday, April 13, 2010

ஈமான் என்னும் இறைநம்பிக்கை!

அட, தொடர்ந்து மூணாவது பதிவும் தீபா அவர்களின் அழைப்பால்!! ஹிஹி..


***

கொஞ்சம் சீரியஸாக, என்னுடைய நம்பிக்கை சார்ந்த விஷயங்களை பத்தி எழுதனும்.. நான் பதினாலு வருஷமும் படிச்சது முஸ்லிம்களால் நடத்தப்படும் பெண்கள் பள்ளியில், என் பிறந்த வீடும் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியில் தான்.. ஆனா எங்க வீட்டுல மட்டும் ஒரு ஸ்பெஷல்.. கீழ் விட்டில் வட இந்தியர்களும், முதல் மாடியில் கேரளத்தை சேர்ந்தவங்களும் இருந்தாங்க.. மார்வாடிகளோட அதிகம் பழக்கமில்லைன்டாலும் கேரளாக்காரங்களோட எங்களுக்கு நல்ல பழக்கம் இருந்தது.. அந்த அங்கிளும் ஆன்ட்டியும் எங்கும்மா மேல உயிரா இருப்பாங்க.. ஆனா என் வயசில யாருமே இல்லை.. அதனால விளையாட்டெல்லாம் தம்பி, மாமி, சாச்சாமார் மக்களோடத்தான்..


ப‌ள்ளியில‌யும் இர‌ண்டு, மூன்று மாண‌விக‌ளைத்த‌விற‌ மாற்று ம‌தத்தை சேர்ந்த‌வ‌ங்க‌ கிடையாது.. இப்ப‌டி இருந்த‌ என‌க்கு எங்க‌ க‌ம்மா (பாட்டி) வீடு ஒரு த‌னி உல‌க‌ம்.. அவ‌ங்க‌ அப்போ பொன்னேரியில‌ இருந்தாங்க‌.. அங்க‌ ஒரு கால‌னி மாதிரி இட‌ம்... அங்க‌ நாங்க‌ ம‌ட்டும்தான் முஸ்லிம்.. இதுல‌ காமெடி என்ன‌ன்னா, என் பேரே பாதி பேரு வாய்ல‌ நுழையாது.. என்னை சின்ன‌ வ‌ய‌சிலேயே பாய‌ம்மான்னு கூப்டு கிண்ட‌ல் பண்ணுவாங்க‌.. ஹிஹி..


அங்க‌ ஒரு பாம்பு புத்து இருந்த‌து.. அதை சுத்தி சுவ‌ர் எழுப்பி அதை ஒரு வ‌ழிபாட்டு த‌ல‌ம் மாதிரி க‌ட்டியிருந்தாங்க.. நாங்க‌ வாண்டுக‌ள்லாம் அங்க‌ தான் போயி விளையாடுவோமே.. முக்கிய‌மா சொப்பு சாமான் விளையாட‌ ஏத்த‌ இட‌ம் அது தான்.. ஒரு போதும் எங்க‌ க‌ம்மாவோ, எங்கும்மாவோ அங்க‌ல்லாம் போக‌க்கூடாதுன்னு என்னை த‌டுத்த‌தும் இல்ல‌, என்னை அங்க‌ சேர்த்துக்க‌ கூடாதுன்னு ம‌த்த‌வ‌ங்க‌ யாரும் சொன்ன‌தும் இல்லை.. என்ன‌, அவ‌ங்க‌ அந்த‌ புத்தை கும்பிடுவாங்க‌, நாம‌ அதை செய்ய‌க்கூடாதுங்குற‌து ம‌ட்டும் என‌க்கு தெரிஞ்சிது.

அதே கால‌னியில‌ தான் முத‌ன் முத‌ல்ல‌ என‌க்கு கிறிஸ்த‌வ‌ர்க‌ள் அறிமுக‌மும் கிடைச்ச‌து.. அங்க‌ கிறிஸ்தும‌ஸ் அப்போ ம‌ர‌த்தை அழகா அல‌ங்க‌ரிச்சுருப்பாங்க‌..எங்க‌ வ‌ய‌சு பிள்ளைங்க‌ யாரும் அங்க‌ இல்ல‌ன்டா கூட சும்மாவாச்சும் நாங்க‌ல்லாம் அவ‌ங்க‌ வீட்டுக்கு போவோம்..
இப்ப‌டித்தான் மாற்று ம‌த‌த்த‌வ‌ர்க‌ளைப் ப‌த்தின‌ விவ‌ர‌ம் என‌க்கு சின்ன‌ வ‌ய‌சில‌ தெரிஞ்ச‌து... எங்க‌ வீட்ட‌ பொறுத்த‌வ‌ரைக்கும் முஸ்லிம்க‌ள்னா ஆண்க‌ள் தொப்பி போடுவாங்க‌, பெண்கள் த‌லையில‌யும் சீலை போடுவாங்க‌, பெருநாள் கொண்டாடுவோம் (அப்ப‌மும் என்ன‌, பெருநா காசும் பிரியாணியும் தான்), க‌ல்யாண‌ம் இல்ல‌ க‌டை திற‌க்க‌னும்னா ஃபாத்தியா ஓதுவாங்க‌.. அவ்வ‌ள்வு தான்..

எங்க‌ க‌ம்மா (அம்மாவின் அம்மா) வீட்டுல‌ தொழுகை எல்லாம் பார்க்க‌ முடியும்.. ஆனா அவ‌ங்க‌ளும் ச‌ரியான‌ த‌ர்கா பார்ட்டி.. அதாவ‌து ஒரு ம‌னித‌ரின் அட‌க்கஸ்த‌ல‌த்துக்கு ப‌ச்சை போர்வை போட்டு அங்க‌ ஒரு தாத்தா ம‌யிலிற‌குல‌ செஞ்ச‌ துடைப்ப‌த்தால‌ ந‌ம்ம‌ முக‌த்த பெருக்கி விடுவாரு.. அதுக்கு பேரு தான் த‌ர்கா.. வெள்ளிக்கிழ‌மையானா த‌வ‌றாம‌ எங்க‌ க‌ம்மா என்னை அங்க‌ கூட்டிட்டு போயிடுவாங்க‌.. நானும் அங்க‌ இருக்குற‌ குட்டி குட்டி த‌வ‌ளைங்க‌ள‌ பாக்க‌ ஆசையா போவேன்.. (கூட‌வே பூந்திக்காக‌வும்.. ஹிஹி).. ஆனா இதெல்லாம் தவறுங்கறது கொஞ்ச லேட்டாதான் தெரிஞ்சது..

அந்த‌ வ‌ய‌ச‌ பொறுத்த‌ வ‌ரைக்கும் நாம‌ அல்லாஹ் ஒருவ‌னைத்தான் வ‌ண‌ங்க‌ வேண்டும் என்ப‌து எப்ப‌டியோ ஓர‌ள‌வுக்கு எங்க‌ ப‌ள்ளியில‌ சொல்லிக்கொடுத்த‌ வ‌ரைக்கும் தெரியும்... அது போல மாற்று மத நண்பர்கள் "உங்க அல்லாஹ் எப்படி இருப்பாரு"ன்னு கேட்டா "அல்லாஹ்வை நாம பாக்க முடியாது, ஒரு நபி (மூஸா/மோசஸ்) அல்லாஹ்வை பாக்கனும்னு கேட்டப்போ அல்லாஹ்வோடைய ஒளி மட்டும் பட்டு ஒரு மலையே தூள் தூள் ஆயிடுச்சாம்" ங்கற அளவுக்கு தான் தெரியும்..


நான் ஆறாவ‌து ப‌டிக்கும்போது எக்ஸ்க‌ர்ஷ‌னுக்கு போக‌னும், திங்க‌ எதாச்சும் வாங்கி குடுங்க‌ வாப்பான்னு கேட்ட‌ப்போ என்னை வெளிய‌ கூட்டிட்டு போனாங்க‌.. போகும்போது வாப்பா, "நாம யார‌ வ‌ண‌ங்க‌னும்?" அப்ப‌டின்னு கேட்டாங்க‌.. நானும் "அல்லாஹ்வைத்தான் வ‌ண‌ங்க‌னும்"னு சொன்னேன்.. "அப்போ, அந்த‌ த‌ர்காவில‌ யாரோ ஒரு ம‌னித‌ரைத்தானே அட‌க்க‌ம் செஞ்சிருக்கு, அப்ப‌ ஏன் அதுகிட்ட‌ போயி என‌க்கு அது செய், இது செய்னு கேக்குறீங்க‌"ன்னு வாப்பா கேட்ட‌தும் தான் நான் யோச‌னை ப‌ண்ணினேன்..

அதே கேள்விய‌ எங்க‌ க‌ம்மாகிட்ட‌ கேட்ட‌ப்போ அவ‌ங்க‌ என‌க்கு ச‌ரியா ப‌தில் சொல்லலை.. எப்ப‌டியோ இறைவ‌ன் அருளால் இஸ்லாமிய‌ க‌ல்வி மூல‌மா இஸ்லாத்தில் இடைத்த‌ர‌க‌ர்க‌ள் கிடைய‌வே கிடையாது, இறைவ‌னுக்கு இணை வைத்த‌ல் மிக‌ப்பெரிய‌ பாவ‌ம்னு விள‌ங்கிய‌து...

குரானை அர‌பியில சரியான உச்சரிப்போட‌ ஓத‌வும், ஓர‌ள‌வுக்கு இஸ்லாத்தை ப‌த்தியும் தெரிஞ்சுக்க‌ என் ப‌ள்ளி மிக‌வும் உத‌விய‌து... அது போல‌ ப‌ள்ளி இறுதி நாட்க‌ள்ல‌ நானே குரானை த‌மிழாக்க‌த்தோடு ப‌டிக்க‌த்தொட‌ங்கினேன்.. அப்ப‌த்தான் தெரிஞ்ச‌து, எவ்வ‌ள‌வு பெரிய‌ அற்புத‌த்தை ந‌ம்ம‌ கையில‌ வெச்சிருக்கொம்னு..

க‌ல்லூரிக்கு போன‌தும்தான் "ஆமா, நீ ஏன் இந்த‌ முக்காடு போடுற‌"ன்னு ஒவ்வொருத்த‌ரா கேக்க‌ ஆர‌ம்பிச்சாங்க‌.. ஒரு சில‌ர் ஒரு மாதிரி இர‌க்க‌த்தோடும் ஒரு சில‌ர் கிண்ட‌லாக‌வும் கேப்பாங்க‌..

என்னுடைய‌ இறைந‌ம்பிக்கையும், இஸ்லாத்தை ப‌த்தின‌ அறிவும் வ‌ள‌ர‌ ஆர‌ம்பிச்ச‌து இப்படிப்பட்ட கேள்விகளை எதிர்கொள்ள ஆரம்பிச்ச பிறகு தான்.. மேலாண்மை படிக்கும்போது அங்குள்ள‌ விடுதி மெஸ்ல‌ போடுற‌ கோழிக்க‌றி ஹ‌லால் கிடையாது, அதனால‌ அங்க‌ நான் கிட்ட‌த்த‌ட்ட‌ ஒரு வெஜிடேரிய‌ன்.. ந‌ண்ப‌ர்க‌ளெல்லாம் ஏன்னு கேக்குற‌ப்போ, ஹ‌லால்னா என்னன்னு விளக்குவேன்.. அதே மாதிரி ஏதாச்சும் நல்ல உடை போட்டுட்டு, வெளிய கிளம்பும்போது நான் துப்பட்டாவைக்கொண்டு முழுசா மறைச்சதும் 'ஏன்டி, இவ்வளவு நல்ல ட்ரெஸ் போட்டுட்டு இப்படி மறைக்கிற'ன்னு கேப்பாங்க.. நல்லா ட்ரெஸ் பண்ணிக்கிறது எனக்காக தான்டி, ரோட்ல போறவங்களுக்காக இல்லன்னு ஒவ்வொரு தடவையும் விளக்கனும்.. ஹிஹி...அதே போல நான் நிதி நிர்வாகவியல்ல (அதாம்பா ஃபைனான்ஸ்) சேர்ந்ததும் வட்டி என்பது இஸ்லாத்தில் மிகப்பெரிய பாவங்களில் ஒன்று, அதற்கு மாற்றாக இஸ்லாமிய வங்கிமுறை பத்தி மத்தவங்களுக்கு விளக்க அதை பத்தி படிச்சேன்.. 'அதெப்படி வட்டி இல்லாம வியாபாரம் சாத்தியம்'ன்னு கேக்குறவங்களுக்கு விளக்கவே இன்னும் நிறைய இஸ்லாத்தை பத்தி தெரிஞ்சிகிட்டேன்...

இப்ப‌டி நேர‌டியா கேள்வி கேட்ட‌வ‌ங்க‌ ஒரு ப‌க்க‌ம்னா, வ‌லைத்த‌ள‌ங்க‌ளில் இஸ்லாத்தை ப‌த்திய‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளை ப‌டிச்சு அதை தெளிவு ப‌டுத்திக்க‌ நான் இஸ்லாத்தை இன்னும் அதிக‌மா க‌த்துக்கிட்டேன்..


இப்ப‌டி இறைந‌ம்பிக்கை என்ப‌து இறைவ‌ன் ஒருவ‌னேங்குற‌ கோட்பாடுல‌ தொட‌ங்கி, நாம் வாழும் வ‌ழிமுறைக‌ள் இறைத்தூத‌ர் முஹ‌ம்ம‌து ந‌பி ச‌ல் அவ‌ர்க‌ள் வாழ்ந்த்த‌ அடிப்ப‌டையில் என்ப‌து வ‌ரைக்கும் என்னுடைய‌ ந‌ம்பிக்கை ஆழ‌மா வ‌ள‌ர்ந்துட்டே இருக்கு.. பொறுமையும், மன்னிக்கும் மனமும் நம் வாழ்க்கையை எவ்வளவு எளிதாக்கிடும்கிறது குரானை படிச்சா விளங்கும்.. கொஞ்சம் யோசிச்சு பார்த்தா என்னதான் மனிதன் எப்பேர்ப்பட்ட சாதனைகளை செய்திருந்தாலும் ஒரு அளவுக்கு மேல சில விஷங்கள் நம்ம கையில் இல்லை.. இதை உணர்ந்தவங்க பொறுமையோட இருப்பாங்க, உணராதவங்க நிம்மதியை தொலைச்சிடுவாங்க..

ப‌டிக்கும் கால‌ங்க‌ளில் விளையாட்டுப்போக்கா இருந்தாலும், இறைந‌ம்பிக்கை என‌க்கு என்றும் உறுதியாக‌ இருந்திருக்கு, இறைவ‌னின் அருளால்.. ஈமான் என்னும் இறைந‌ம்பிக்கை என‌க்கு வாழ்க்கைய‌ ரொம்ப‌ எளிதா ஓட்ட்க்க‌த்துக்கொடுத்திருக்கு..


அல்ஹ‌ம்துலில்லாஹ்! எல்லா புக‌ழும் இறைவ‌னுக்கே!!


****

34 comments:

Thamiz Priyan said...

உங்களது நம்பிக்கை எங்களுக்க்கும் நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கின்றது.

ஜெய்லானி said...

//கொஞ்சம் யோசிச்சு பார்த்தா என்னதான் மனிதன் எப்பேர்ப்பட்ட சாதனைகளை செய்திருந்தாலும் ஒரு அளவுக்கு மேல சில விஷங்கள் நம்ம கையில் இல்லை.. இதை உணர்ந்தவங்க பொறுமையோட இருப்பாங்க, உணராதவங்க நிம்மதியை தொலைச்சிடுவாங்க.. //


நச்.... நெத்தியடி பதில்...இது எப்போ புரியுதோ அப்ப தான் வாழ்க்கை இனிக்க ஆரம்பிக்கிறது. அதுவரை..........

Starjan (ஸ்டார்ஜன்) said...

வாவ் என்ன ஒரு ஈமானை பற்றிய விளக்கங்கள்..

ரொம்ப நல்லா சொல்லிருக்கீங்க நாஸியா.. அல்ஹம்துலில்லாஹ்.

உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டது சிறப்பு

சீமான்கனி said...

ஈமானை பற்றி உங்க வாழ்க்கையோடு ஒட்டி அருமையா பகிர்ந்தமைக்கு நன்றி...ஆமா...பதிவு குறைஞ்சு கிட்டே போகுது வாரத்துக்கு ஒரு பதிவாவது முயற்சி பண்ணுங்க...அடிக்கடி உங்க பிரியாணி கிடைக்காம ஏமாற்றத்தோடு திரும்புகிறேன்...

Anonymous said...

தமிழ்ப்பெண்கள்
TAMIL PENKAL - www.tamilpenkal.co.cc

sheik.mukthar said...

AsSalamu Alaikkum

Excellent Nazia.Keep it up.

malar said...

''''ஏன்டி, இவ்வளவு நல்ல ட்ரெஸ் போட்டுட்டு இப்படி மறைக்கிற'ன்னு கேப்பாங்க.. நல்லா ட்ரெஸ் பண்ணிக்கிறது எனக்காக தான்டி, ரோட்ல போறவங்களுக்காக இல்லன்னு ஒவ்வொரு தடவையும் விளக்கனும்.. ஹிஹி...''''


இதை சொல்லி நானும் மாய்ந்து போனேன் .என் மகளுக்கும் இதே கற்று கொடுத்துள்ளேன்..


நல்ல பதிவு...

இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் இறைவனுக்கு இணை வைத்தல் கூடாது...

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

ஹுஸைனம்மா said...

மாஷா அல்லாஹ், முஸ்லிம் பள்ளியில் படித்ததால் உங்களுக்குச் சிறுவயதிலேயே விளக்கங்கள் பெற வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

//என்னுடைய‌ இறைந‌ம்பிக்கையும், இஸ்லாத்தை ப‌த்தின‌ அறிவும் வ‌ள‌ர‌ ஆர‌ம்பிச்ச‌து இப்படிப்பட்ட கேள்விகளை எதிர்கொள்ள ஆரம்பிச்ச பிறகு தான்..//

உண்மை நாஸியா, விமர்சனங்கள் வரும்போதுதான் ஏன் இப்படி என்ற கேள்வியும் எழுந்து தெளிவு பெற முடிகிறது.

அன்புத்தோழன் said...

ரொம்ப நாளைக்கப்புறம் பிரியாணியா?!?!? இருங்க உள்ள போய்ட்டு ஒரு வெட்டு வெட்டிட்டு வந்து கமென்ட் போடுறேன்......

அன்புத்தோழன் said...

//நல்லா ட்ரெஸ் பண்ணிக்கிறது எனக்காக தான்டி, ரோட்ல போறவங்களுக்காக இல்லன்னு//

ச... நச்சுனு நாலு வார்த்த சொல்லிருக்கீங்க நாஸியா.... இது புரிஞ்சு நடந்துகிட்டா eveteasing பிரச்சன நிறைய குறையும்....

அன்புத்தோழன் said...

//மன்னிக்கும் மனமும் நம் வாழ்க்கையை எவ்வளவு எளிதாக்கிடும்கிறது குரானை படிச்சா விளங்கும்//

மாஷா அல்லா... இவ்வளவு சின்ன வயசுல இப்புடி ஒரு ஞானமா... :-)...

நீங்க தர்கா வழிபாடுகளில் இருந்து மீண்டு வந்ததில் உங்களுடைய வாப்பாவுடைய பங்கு கிரேட்... வாப்பவா தன்னோட கடமையை சரியாக செஞ்சுருக்காங்க...

அன்புத்தோழன் said...

//கொஞ்சம் யோசிச்சு பார்த்தா என்னதான் மனிதன் எப்பேர்ப்பட்ட சாதனைகளை செய்திருந்தாலும் ஒரு அளவுக்கு மேல சில விஷங்கள் நம்ம கையில் இல்லை..//

இத தானே யோசிக்க மாட்டேங்குறாங்க....

//உணர்ந்தவங்க பொறுமையோட இருப்பாங்க, உணராதவங்க நிம்மதியை தொலைச்சிடுவாங்க//


அடடா... என்ன ஒரு பன்ச்.... வாழ்கையின் தத்துவத்தை ஒரு வரில சொல்லிபுட்டீங்களே நாஸியா...

அன்புத்தோழன் said...

//ப‌டிக்கும் கால‌ங்க‌ளில் விளையாட்டுப்போக்கா இருந்தாலும், இறைந‌ம்பிக்கை என‌க்கு என்றும் உறுதியாக‌ இருந்திருக்கு, இறைவ‌னின் அருளால்///

அல்ஹம்துலில்லாஹ்.... இந்த அருள் கிடைக்கபெற்ற பாக்கியசாளிகளில் நானும் ஒருவன்.... இன்றும் என்னதான் விளையாட்டாக இருந்தாலும், இறைவன் மீதுள்ள நம்பிக்கையால்... என் தேவைகளனைத்தும் நான் சற்றும் எதிர்பாராத திசைகளில் இருந்து நிறைவேறி கொண்டிருப்பதற்கு.... இறைவன் என்மீது காட்டும் கருணையும், அவனின் எல்லை இல்லா அருளுமே... எப்படி நன்றி செலுத்த போகிறேனோ???

Unknown said...

assalam alaikum nazia sister,
keep writing always. your word's are more joyfull....

Anitha Manohar said...

நல்ல பயனுள்ள பதிவு.

இணை வைத்தல் பற்றி எனக்கு விளக்குங்களேன்.

நன்றி

எம்.எம்.அப்துல்லா said...

ஜியாரத்திற்கும், வழிபாட்டிற்கும் வித்யாசம் தெரியாது தர்ஹாக்களில் வழிபாடு செய்வதை இன்றும் பலரும் செய்கின்றனர். தர்ஹாக்களைத் தவிர்ப்பதைவிட அங்கு என்ன செய்யக்கூடாது என்பதை அறிந்து அதைத் தவிர்ப்பது இன்னும் நலம் இல்லையா??


(உங்க கணக்கில் போனமாசம் ஒரே ஒரு இடுகை. இந்த மாசமும் இதுவரை ஒன்னே ஒன்னு. உலகத்துலயே நாந்தான் பெரிய சோம்பேறின்னு நினைச்சேன். உங்களைப் பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு )

:))

எம்.எம்.அப்துல்லா said...

//இறைவ‌னின் அருளால்.. ஈமான் என்னும் இறைந‌ம்பிக்கை என‌க்கு வாழ்க்கைய‌ ரொம்ப‌ எளிதா ஓட்ட்க்க‌த்துக்கொடுத்திருக்கு..


//

எனக்கு உங்களை மாதிரி சின்ன வயசில் எல்லாம் ஈமான் வரலை. இப்போதான் சில வருடமா. better late than never ன்னு தேத்திக்கிறேன்.

அப்துல்மாலிக் said...

விளக்கம் கொடுப்பதற்க்காவேனாலும் நிறைய அதை பற்றி தெரிந்துக்கொள்வது அவசியம், அதை நல்ல செய்திருக்கீங்க..

மேலும் அதிக ஈமான் பற்றி அறிவை தந்து அதை பிறருக்கு தெளிவுப்படுத்த‌ பிரார்த்திக்கிறேன்

நட்புடன் ஜமால் said...

நல்ல இடுக்கை சகோதரி.

ஈமானும் தக்வாவும் பலமாகட்டும் நம் அனைவருக்கும்.

ஹுஸைனம்மா said...

//எம்.எம்.அப்துல்லா said...
எனக்கு உங்களை மாதிரி சின்ன வயசில் எல்லாம் ஈமான் வரலை. இப்போதான் சில வருடமா. better late than never ன்னு தேத்திக்கிறேன்.//

அப்ப உங்க அனுபவத்துலருந்து படிச்சிக்க வேண்டியது நிச்சயம் நிறைய இருக்கும்; நீங்க அதையும் எழுதுங்களேன்.

நாஸியா said...

நன்றி தமிழ்பிரியன்

நன்றி ஜெய்லானி

நன்றி ஸ்டார்ஜன்

நன்றி சீமான் கனி.. ஹிஹி.. எல்லாம் சோம்பேறித்தனம் தான் .. இன்ஷா அல்லாஹ் வாரம் ஒரு பதிவாச்சும் போடுறேன்

நன்றி தமிழ்பெண்கள்..

நன்றி சேக் முக்தார்...

நன்றி மலர்.. நீங்க சொல்வது ரொம்ப சந்தோஷமாக இருக்கு

நன்றி போகி.. உங்களுக்கும் வாழ்த்துக்கள்

ஹூசைனம்மா... ஆமா எப்படி பார்த்தாலும் இஸ்லாத்தை பத்தி கேள்வி எழுப்புவ‌தும் தாக்குவ‌தும் ஒரு டெம்ப்ளேட்டில் அட‌க்கிட‌லாம்.. ஆனா எவ்வ‌ள‌வு ப‌தில் சொன்னாலும் மாளாது.. ஒரு சிலர் அரைகுறையா தெரிஞ்சிட்டு அவ‌ங்க‌ளே ஒரு முடிவுக்கு வ‌ந்து இது தான் இஸ்லாம்னு வெறுப்பை ப‌ர‌ப்புவாங்க‌..

ந‌ன்றி அன்புத்தோழ‌ன்.. ஞான‌மெல்லாம் ஒண்ணும் இல்லைங்க‌.. இப்ப‌ல்லாம் ஒழுங்காக‌வே ஓத‌ மாட்ருக்கேன்.. ந‌ம‌க்கு இருக்கும் க‌ணினி போன்ற‌ வ‌ச‌திக‌ளால‌ ந‌ம்மால‌ எவ்வ‌ள‌வோ க‌த்துக்க‌ முடியும், ஆனா நேர‌த்தையும் சோம்ப‌லையும் கை காட்டி க‌ட‌மைய‌ செய்யாம‌ விட்டுட‌றோம்..

நிச்ச‌ய‌மா அல்லாஹ்வுக்கு, அவ‌ன் த‌ந்த‌ நேர்வ‌ழிக்காக‌ நாம‌ ஒவ்வொரு நொடியும் ந‌ன்றி செலுத்த‌னும்.. ஆனா எங்க‌ செய்றோம்! அல்லாஹ் உத‌வி செய்வானாக‌!

ந‌ன்றி செய்ய‌து

ந‌ன்றி ஜிஜி..இஸ்லாம் என்பது ஓரிறை கோட்பாட்டின் அடிப்படையில் இயங்குகிறது... ஒருவர் முஸ்லிமாக வேண்டும் என்றால், வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத்தவிர யாரும் இல்லை என்றதை ஏற்க வேண்டும்.. அல்லாஹ் என்றால் அரபியில் இறைவன்.. இறைவனின் தன்மைகளாக இறைவனே குரானில் கூறியிருப்பது:

நன்றி தமிழ்பிரியன்

நன்றி ஜெய்லானி

நன்றி ஸ்டார்ஜன்

நன்றி சீமான் கனி.. ஹிஹி.. எல்லாம் சோம்பேறித்தனம் தான் .. இன்ஷா அல்லாஹ் வாரம் ஒரு பதிவாச்சும் போடுறேன்

நன்றி தமிழ்பெண்கள்..

நன்றி சேக் முக்தார்...

நன்றி மலர்.. நீங்க சொல்வது ரொம்ப சந்தோஷமாக இருக்கு

நன்றி போகி.. உங்களுக்கும் வாழ்த்துக்கள்

ஹூசைனம்மா... ஆமா எப்படி பார்த்தாலும் இஸ்லாத்தை பத்தி கேள்வி எழுப்புவ‌தும் தாக்குவ‌தும் ஒரு டெம்ப்ளேட்டில் அட‌க்கிட‌லாம்.. ஆனா எவ்வ‌ள‌வு ப‌தில் சொன்னாலும் மாளாது.. ஒரு சிலர் அரைகுறையா தெரிஞ்சிட்டு அவ‌ங்க‌ளே ஒரு முடிவுக்கு வ‌ந்து இது தான் இஸ்லாம்னு வெறுப்பை ப‌ர‌ப்புவாங்க‌..

ந‌ன்றி அன்புத்தோழ‌ன்.. ஞான‌மெல்லாம் ஒண்ணும் இல்லைங்க‌.. இப்ப‌ல்லாம் ஒழுங்காக‌வே ஓத‌ மாட்ருக்கேன்.. ந‌ம‌க்கு இருக்கும் க‌ணினி போன்ற‌ வ‌ச‌திக‌ளால‌ ந‌ம்மால‌ எவ்வ‌ள‌வோ க‌த்துக்க‌ முடியும், ஆனா நேர‌த்தையும் சோம்ப‌லையும் கை காட்டி க‌ட‌மைய‌ செய்யாம‌ விட்டுட‌றோம்..

நிச்ச‌ய‌மா அல்லாஹ்வுக்கு, அவ‌ன் த‌ந்த‌ நேர்வ‌ழிக்காக‌ நாம‌ ஒவ்வொரு நொடியும் ந‌ன்றி செலுத்த‌னும்.. ஆனா எங்க‌ செய்றோம்! அல்லாஹ் உத‌வி செய்வானாக‌!

ந‌ன்றி செய்ய‌து

ந‌ன்றி ஜிஜி..இஸ்லாம் என்பது ஓரிறை கோட்பாட்டின் அடிப்படையில் இயங்குகிறது... ஒருவர் முஸ்லிமாக வேண்டும் என்றால், வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத்தவிர யாரும் இல்லை என்றதை ஏற்க வேண்டும்.. அல்லாஹ் என்றால் அரபியில் இறைவன்.. இறைவனின் தன்மைகளாக இறைவனே குரானில் கூறியிருப்பது:

Quran 112:

1) (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. (2) அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். (3) அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. (4) அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை


இணை வைத்த‌ல் என்ப‌து எல்லாவ‌ற்றையும் ப‌டைத்து ப‌ரிபாலித்துக்கொண்டிருக்கும் இறைவ‌ன் ஒருவ‌னாகிய‌ அல்லாஹ்விற்கு இணையாக‌ சிலையையோ, க‌ற்ப‌னைக் கட‌வுள்க‌ளையோ, ம‌னித‌ர்களையோ வைப்ப‌து.. இது இஸ்லாத்தின் மாபெறும் பாவ‌ம்..இணை வைத்த‌ல் என்ப‌து எல்லாவ‌ற்றையும் ப‌டைத்து ப‌ரிபாலித்துக்கொண்டிருக்கும் இறைவ‌ன் ஒருவ‌னாகிய‌ அல்லாஹ்விற்கு இணையாக‌ சிலையையோ, க‌ற்ப‌னைக் கட‌வுள்க‌ளையோ, ம‌னித‌ர்களையோ வைப்ப‌து.. இது இஸ்லாத்தின் மாபெறும் பாவ‌ம்..

ஷாகுல் said...

Exclent keep writting

ஸாதிகா said...

//இறைந‌ம்பிக்கை என‌க்கு என்றும் உறுதியாக‌ இருந்திருக்கு, இறைவ‌னின் அருளால்.. ஈமான் என்னும் இறைந‌ம்பிக்கை என‌க்கு வாழ்க்கைய‌ ரொம்ப‌ எளிதா ஓட்ட்க்க‌த்துக்கொடுத்திருக்கு..//அழகிய வரிகள்.அவசியமானதொருப்பதிவை உங்களுக்கே உரிய நகைச்சுவையுடன் கூறி இருக்கின்றீர்கள் நாஸியா.என் மக்களும் ஈமானில் சிறுவயது முதலே பிடிமானமாக இருக்க நான் பற்பல கதைகள் கூறி இருக்கிறேன்.அக்கதைகளில் ஒன்று என் பிளாக்கில் வந்து பாருங்கள்.

Deepa said...

உங்கள் அனுபவங்களை அழகாக எழுதி இருக்கீங்க. நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள் முடிந்தது. நன்றி சகோதரி.

சிநேகிதன் அக்பர் said...

பகிர்வுக்கு நன்றி சகோதரி.

நாஸியா said...

அப்துல்லாஹ் காக்கா, முஸ்லிம்களா நம்முடைய கடமை இறை வேதமாகிய குரானையும் நபி சல் அவர்களுடைய வாழ்க்கை முறையையும் மட்டுமே கடைப்பிடிக்கிறது தான்.. இதுல ஜியாரத் எங்க வந்ததுன்னு தெரியல.. கட்டடம் போல எழுப்பப்பட்ட கல்லறைகளையும் உருவ படங்களையும் அழிக்கவே நபி சல் அவர்களுடைய சஹாபாக்களை அனுப்பினாங்க.. இதுல முக்கியமான விஷயம் என்னன்னா இந்த தர்கான்றது ஷிர்க் (இணை வைத்தல்) சம்பத்தப்பட்டது.. நாம தெரிஞ்சும் தெரியாமலும் எவ்வளவோ பாவம் செய்றோம், இதுல ஷிர்க் பக்கமே தலை வெச்சு படுக்க கூடாதுங்கறது முக்கியம் இல்லையா?

\\எனக்கு உங்களை மாதிரி சின்ன வயசில் எல்லாம் ஈமான் வரலை. இப்போதான் சில வருடமா. better late than never ன்னு தேத்திக்கிறேன்\\

மாஷா அல்லாஹ்.. எனக்கும் ஈமான் போக போகத்தான் அதிகமாச்சே.. அல்லாஹ் நாடினான்னா, மரணப்படுக்கையில் கூட ஹிதாயத் கிடைக்கலாம்.. அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லுங்க சகோதரரே!! உங்க‌ளுக்கும், என‌க்கும், எல்லா ந‌ம்பிக்கையாள‌ர்க‌ளுக்கும் அல்லாஹ் ஈமானை அதிக‌ரிக்க‌ துவா செய்வோம், இன்ஷா அல்லாஹ்.. ஹூசைனம்மா சொல்ற மாதிரி நீங்களும் இதை பத்தி எழுதுங்களேன்!

ஜ‌ஸ‌க‌ல்லாஹ் அபு அஃப்ஸ‌ர்

\ஈமானும் தக்வாவும் பலமாகட்டும் நம் அனைவருக்கும்.\ ஆமீன்

ந‌ன்றி ஷாகுல்

ஸாதிகாக்கா, உங்க‌ கிட்ட‌ இருந்தெல்லாம் நாங்க‌ நிறைய‌ க‌த்துக்க‌னும்...என‌க்கு வீட்டில‌ இபாதா க‌த்துக்குற‌ சான்ஸ் ரொம்ப‌ ரொம்ப‌ குறைச்ச‌லாத்தான் இருந்த‌து.. மாஷா அல்லாஹ் உங்க‌ பிள்ளைங்க‌ளுக்கு அந்த‌ ர‌ஹ்ம‌த் கிடைச்சிருக்கு..

ந‌ன்றி தீபா
எனக்கு ரொம்ப பிடித்த பதிவை எழுத தூண்டியதற்க்கு.. :)

SUFFIX said...

மிக்க மகிழ்ச்சி, இறை நம்பிக்கை எமக்கும் உங்களுக்கும் என்றும் நிலைத்திட இறைவன் அருள் புரியட்டும்.

எல் கே said...

kelvigal irunthaalthan vidaigal kidaikkum

Anonymous said...

சகோதரி, ரொம்ப நாளா நான் ருசித்துக்கொண்டிருந்த பிரியாணி திடீரென்று மறைந்து விட்டதால் கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன்.......இன்று அதை மீண்டும் கண்டுபிடித்தத்தில் மகிழ்ச்சி........பெயர் மாறினாலும் சுவை மாறவில்லை........பயணம் தொடரட்டும்.....வாழ்த்துக்கள்.......

தாஜ் said...

சலாம் சகோதரி

//அதே மாதிரி ஏதாச்சும் நல்ல உடை போட்டுட்டு, வெளிய கிளம்பும்போது நான் துப்பட்டாவைக்கொண்டு முழுசா மறைச்சதும் 'ஏன்டி, இவ்வளவு நல்ல ட்ரெஸ் போட்டுட்டு இப்படி மறைக்கிற'ன்னு கேப்பாங்க.. நல்லா ட்ரெஸ் பண்ணிக்கிறது எனக்காக தான்டி, ரோட்ல போறவங்களுக்காக இல்லன்னு //

சபாஷ் சுரீரென்ற சாட்டை வரிகள்

ஹிஜாபென்பது நம்மை பாதுகாக்கும் கேடயம் என்பது நம் மக்கள் பல பேருக்கு புரிவதில்லை

Asiya Omar said...

நல்ல பகிர்வு நாஸியா ,அருமையாக எழுதறீங்க.நல்ல தெளிவு உங்கள் எழுத்துக்களில் மிளிர்கிறது.

எம் அப்துல் காதர் said...

பரவைல்லையே.. ஒரே பதிவில் சின்ன சின்னதாய் நிறைய விசயங்களை போகிற போக்கில் சொல்வது போல் சொல்லிக்கொண்டே போகிறீர்களே!! அருமை . புதிதாய் படிப்பவர்களுக்கும், புரியாதவர்களுக்கும் சட்டென்று விளங்கிவிடும். ஜசாகல்லாஹைர்

Anisha Yunus said...

ஸலாம் அலைக்கும்.

அருமையா எழுதி இருக்கீங்க. நானும் காலேஜ் முடிக்கறவரை பாதி முஸ்லிம்தான். அதாவது பாதி தெரியும். பாதி தெரியாது. ஆனால் கேட்டு தெரிஞ்சுக்கணும்னும் இல்லாம போயிடுச்சு. அதன் பின் பெங்களூர்ல ஒரு தடவை Peace Convention-by IRF வந்தது. அதுதான் என் வாழ்க்கையையே மாற்றியது. அல்ஹம்துலில்லாஹ். அதன்பின் தான் வாழ்வின் அர்த்தமே புரிஞ்சது. மீண்டும் அந்த ஞாபகங்கள் உங்கள் பதிவு மூலம் கிடைத்தது. நன்றி.

வ ஸலாம்.