Sunday, January 31, 2010

கொலைசெய்றபட்டினம்!

தீபா அவங்க சின்ன வயசில ஏமாந்த கதைய ரொம்ப அழகா சொல்லி இருந்தாங்க. அதை படிச்ச உடனே எனக்கும் கொசுவத்தி சுத்த ஆரம்பிச்சிட்டு..


அப்படியே ஒரு பதினைஞ்சு வருஷம் பின்னாடி போனா என்னுடைய அஞ்சாம் வகுப்பறை தெரியும். அப்போ தமிழ் வகுப்பு, நாங்க தான் ஏ செக்ஷனுக்கு போகனும். எப்பவும் போல மிஸ் ஏதோ சொல்லிட்டு இருக்க, நானும் அவளும் கதை அடிச்சிட்டு இருந்தோம். அப்போ நான் அவகிட்ட 'ஏய் உங்க ஊரு பேரு என்னடி'ன்னு கேட்டதுக்கு 'கொலசேரபட்டினம்'ன்னு சொன்னா. எங்கும்மா ஊரு பக்கத்து ஊருதானே அதனால கேள்விப்பட்டிருக்கேன்னு சொன்னேன். அதோட நிக்காம 'ஆமா ஏன்டி உங்க ஊரு பேரு கொலசேரபட்டினம்'?ன்னு கேட்டேன். அப்போ அவ ஒரு பெரிய கதைய சொல்ல ஆராம்பிச்சா.. "அடியேய் உனக்கு தெரியாதா டீ, எங்க ஊருல, அந்த காலத்துல தடியா, சுருட்ட முடியும், பெரிய மீசையும் வெச்ச‌ ஒரு ஆளு கையில‌ அருவாளோட‌ வ‌ர‌வ‌ங்க‌ போற‌வ‌ங்க‌ளையெல்லாம் வெட்டி கொலை செஞ்சிட்டே இருந்தானாம், அத‌னால‌த்தான் எங்க‌ ஊருக்கு கொல‌செய்ற‌ப‌ட்டின‌ம்ன்னு பேரு வ‌ந்துச்சு".

நானும் ந‌ம்ம‌ த‌மிழ் சினிமாவுல‌ வ‌ர்ற‌ வில்ல‌ன் க‌ண‌க்கா ஒரு உருவ‌த்த‌ க‌ற்ப‌னை ப‌ண்ணி (எக்ஸ்ட்ராவா க‌ன்ன‌த்துல‌ ஒரு ம‌ச்ச‌ம் வேற‌) ரொம்ப‌ பய‌ந்த்துட்டு இருந்தேன்.. ஒரு நாள் ரொம்ப‌ ஆர்வ‌ம் தாங்க‌ முடியாம‌ எங்கும்மாகிட்ட‌ போயி "ம்மா அந்த‌ கொலைசெய்ற‌ப‌ட்ன‌த்துல‌ இருந்த‌ கொலைகார‌ன‌ நீங்க‌ பார்த்திருக்கீங்க‌ளாம்மா"ன்னு கேட்டேன்.. உட‌னே எங்கும்மா "அட‌ போலா நீ வேற‌ எவ‌ளோ சும்மா சொல்லிருக்கா"ன்னு சொல்லிட்டு போயிட்டாங்க‌. ம‌றுநாள் ஸ்கூலுக்கு போயி "ஏன்டி எங்கிட்ட‌ பொய் சொன்ன‌"ன்னு கேட்ட‌துக்க்கு கேவ‌ல‌மா என்ன‌ பார்த்து ஒரு சிரிப்பு சிரிச்சா பாருங்க‌..

இப்ப‌ நாங்க‌ பேசினாலும் அதைப்ப‌த்தி சிரிச்சுக்குவோம்.


அந்த‌ ஊரோட‌ பேர் குல‌சேக‌ர‌ப்ப‌ட்டின‌ம். :)

***


எங்க‌ அப்பாக்கு (த‌ந்தையின் தந்தை) பித்த‌ளைக்க‌டை வியாபார‌ம். ம‌த்த‌ பொருளுங்க‌ளோட‌ சேர்த்து சில‌ நேர‌ங்க‌ள்ல‌ பித்த‌ளையில‌ செஞ்ச‌ அழ‌கான‌ பூ ஜாடி, அல‌ங்கார‌ப்பொருட்க‌ள் எல்லாம் வ‌ரும். அப்ப‌டி நான் முத‌ல் வ‌குப்பு ப‌டிக்கும்போது பித்த‌ளையில‌ சொப்பு சாமானும் வந்த்துச்சு. எங்க‌ அப்பா என‌க்கு என் மாமி ம‌க‌ளுக்கும் கொடுத்து விளையாட‌ சொன்னாங்க‌. மாமி ம‌க‌ என்ன‌ விட‌ அஞ்சு வ‌ய‌சு பெரிய‌வ‌ங்க‌. அவ‌ங்க‌ளே எல்லாத்தையும் எடுத்து வெச்சுப்பாங்க‌. ஆனா விளையாடும்போது சேர்ந்து விளையாடுவோம். ஒரு நாள் அவ‌ங்க‌ எப்ப‌வும் போல‌ எடுத்துட்டு போயிட்டாங்க‌. 'ம‌ச்சி, அந்த‌ சொப்பு எங்க‌ ம‌ச்சி'ன்னு கேட்ட‌ப்ப‌ சுவற‌ காமிச்சு 'பாத்தியா இந்த‌ சுவ‌த்துக்குள்ள‌ தான் நான் அதை ஒளிச்சு வெச்சிருக்கேன். அப்புற‌மா எடுத்து த‌ர்றேன்"னு போய்ட்டாங்க‌. அந்த‌ சுவ‌ற்றையே எத்த‌னையோ நாள் ஆசையா பார்த்து பார்த்து எப்ப‌டித்தான் அதை ம‌ற‌ந்து போனேன்னே தெரிய‌ல‌. ஆனா அந்த‌ சொப்பை இன்னொரு த‌ட‌வை பாக்க‌ முடியுமாங்க‌ற‌ ஏக்க‌ம் ம‌ட்டும் இன்னும் போக‌வெ இல்லை.

****

Wednesday, January 27, 2010

ஹலோ ப்ளீஸ் உங்க வேலைய மட்டும் பாருங்க...

அட ஒரு மாசம் ஆகப்போகுதா பதிவெழுதி? நாள் எப்படித்தான் ஒடுதுன்னே தெரியலப்பா...!


பதிவுலகில் நடக்கும் காமெடியை முன்னிட்டு ஆண்களின் உரிமைக்காக குரல் கொடுக்க களத்தில் குதித்திருக்கும் சகோதரி ஹூசைனம்மாவை பாராட்டி ஒரு சட்டி பிரியாணி அனுப்பி வைக்கப்படும்.

அதே மாதிரி ஆண்களை அடிமைப்படுத்துற‌ ச‌ர்ச்சைக்குரிய‌ விஷ‌ங்க‌ளான‌ கோட்டு சூட்டு, டைய‌ ப‌த்தி எல்லாம் கூட‌ எழுதினா அவ‌ங்க‌ளுக்கும் பிரியாணி ச‌ட்டி அனுப்பி வைக்க‌ப்ப‌டும்..


***

நாம‌ பாட்டுக்கு ந‌ம்ம‌ வ‌ழியில‌ போயிக்கிட்டு இருக்கும்போது பெண் சுத‌ந்திர‌ம் பேசுறேன் பேர்வ‌ழின்னு வெட்டியா எழுதுற‌த‌ நினைச்சா சிரிப்பு தான் வ‌ருது.. இவ‌ங்க‌ளுக்கெல்லாம் விள‌க்க‌ம் சொல்லி மாளாது.


ஒவ்வொருத்த‌ருக்கும் த‌ங்க‌ளுடைய‌ த‌னிப்ப‌ட்ட‌ வாழ்க்கையில‌ சில‌ முன்னுரிமைக‌ள் இருக்கும் (ப்ரையோரிட்டீஸ்). அது தாங்க‌ள் பின்ப‌ற்றுகிற‌ மார்க்க‌மாக‌ இருக்க‌லாம், இல்லை ஒரு கொள்கையாக அல்லது லட்சியமாக அல்லது இது எல்லாமே கலந்ததாக‌ கூட‌ இருக்க‌லாம். அடுத்த‌வ‌ங்க‌ ச‌கிப்புத்த‌ன்மைய‌ சோதிக்காத‌ வ‌கையில‌ இருக்குற‌ வ‌ரைக்கும் ந‌ல‌ம். 

ஏன் என்ன மாதிரி ஒரு சில பேருக்கு தங்களுக்கு பிடித்த வேலையை மட்டுமே கேரியராக எடுத்துக்க பிடிக்கும். எனக்கு நம்பர்ஸே புடிக்காது. ஆனா நான் ஒரு ஃபைனான்ஸ் ஸ்பெஷலிஸ்ட். எவ்வளவு நாளானாலும் பொறுமையா எனக்கு பிடித்த வேலைய தேர்ந்தெடுத்தேன்.. எனக்கு பிடித்த வேலைய தேர்ந்தெடுக்க எவ்வளவு முனைந்தேனோ அதே அளவு என்னுடைய சில கொள்கைகளை மதிக்கும் நிறுவனத்தை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருந்தேன்.

என்னுடைய ஹிஜாபினால எனக்கு பல நன்மைகள் இருந்தாலும் அதுல முக்கியமானது என்னன்னா நிறைய பேர் என்னை நல்லா நினைவுல வெச்சிருப்பாங்க.. பின்ன க்ளாஸ்லயே ஒரு மண்டை மட்டும் தனியா தெரிஞ்சா அப்படித்தானே ஆகும். அதனால க்ரூப் டிஸ்கஷன்ல எல்லாம் நான் என்ன பேசுறேன் என்பதை அடுத்தவங்களை கவனிக்க வைக்கிறது ரொம்ப சுலபம். அதே போல‌ ஒரு சில‌ விரிவுரையாள‌ர்க‌ள் என்னை ரொம்ப‌வே ஊக்க‌ப்ப‌டுத்துவாங்க‌, நான் ப‌டிப்ப‌தை பெருமையாக‌வும் நினைப்பாங்க‌.

நான் கேம்பஸ்ல இன்டெர்வியூ வரைக்கும் போனது இரண்டு நிறுவனங்கள். அதில் முதல்ல போனது பெங்களூரில இருக்கும் ஒரு மென்பொருள் நிறுவனம். சின்ன‌ வ‌ய‌சுல‌ இருந்தே பேச்சுப்போட்டிகள்ல‌ ஆர்வ‌மா க‌ல‌ந்துக்கிட்ட‌தால‌ க்ரூப் டிஸ்க‌ஷ‌ன், ப்ரெசென்டேஷ‌ன்ல‌ எல்லாம் கொஞ்ச‌ம் ந‌ல்லாவே ப‌ண்ணுவேன்னு ந‌ண்ப‌ர்க‌ள் சொல்லுவாங்க‌. அப்ப‌டி ஜிடி முடிஞ்சு இன்ட‌ர்வியூ போன‌ப்போ அவ‌ங்க‌ளோட‌ கேள்விக‌ள் முக்கால்வாசி என்னுடைய‌ ச‌மூக‌த்தை சுத்தி தான் இருந்த‌து. அந்த‌ நாள் வ‌ரைக்கும் போன இடங்களில் எல்லாம் ஊக்க‌த்தையே பார்த்த‌ நான் கொஞ்ச‌ம் டிஸ்க‌ரேஜ் ப‌ண்ணுவ‌து போல் இருந்த‌து. டிஸ்கரேஜுன்னு சொல்வதை விட கொஞ்சம் எரிச்சப்படுத்துவது போலவே இருந்துச்சு. எதிர்ப்பார்த்த‌து போல‌வே செலெக்ட் ஆக‌ல‌.

அடுத்து போன‌து ஒரு புகழ்பெற்ற கார்மென்ட் நிறுவ‌ன‌ம். அந்த‌ இன்ட‌ர்வியூவை என் வாழ்க்கையில‌ ம‌ற‌க்க‌ முடியாது. போன‌ நிறுவ‌ன‌த்துல‌ கேட்ட ப‌ல‌ கேள்விக‌ள் என் குடும்ப‌த்தையும், ச‌மூக‌த்தையும் சார்ந்த‌துன்னா இந்த‌ முறை அது ம‌ட்டும்தான் கேள்வியே. ஆனா அவ‌ங்க‌ கேட்ட‌ வித‌ம் ரொம்ப‌ ந‌ல்லா இருந்துச்சு. திரும்ப‌ திரும்ப‌, "நாஸியா, நாங்க‌ உங்க‌ள‌ ம‌ட்டும் தான் நீங்க‌ போட்டிருக்குற‌ உடைய‌ பாத்து கேக்குறோம்னு நினைக்காதீங்க‌. இதே எங்க‌ முன்னாடி நெத்தி நிறைய‌ ப‌ட்டை போட்டுட்டு ஒருத்த‌ர் இருந்தாலும் இதைபோல‌ கேள்விக‌ளை நாங்க‌ நிச்ச‌ய‌மா கேட்டிருப்போம்"ன்னு சொன்னாங்க‌. கிட்ட‌த்த‌ட்ட‌ ஒரு ம‌ணி நேர‌ம் ந‌ட‌ந்த‌ அந்த‌ இன்டெர்வியூ முடிஞ்ச‌ பிற‌கு செல‌க்டான‌ விஷ‌ய‌ம் தெரிய‌ வ‌ந்த‌து. நான் கேட்ட லொகேஷன்ல கிடைக்காததால‌ அந்த‌ வேலைய‌ ஏத்துக்க‌ முடிய‌ல‌.

அதுக்க‌ப்புற‌ம் ந‌ம்ம‌ சென்னையில‌யே என‌க்கு பிடித்த‌ வேலை கிடைச்ச‌து வேற விஷ‌ய‌ம். ஆனா இங்க‌ இன்ட‌ர்வியூவில‌ முழுக்க‌ முழுக்க‌ ஃபைனான்ஸ் ச‌ம்ப‌த்த‌ப்ப‌ட்ட‌ கேள்விக‌ள் தான். ஒரு கேஸ் ஸ்ட‌டிய‌ குடுத்து அதை சால்வ் ப‌ண்ண‌ சொல்லி அதை சுத்தியே கேள்வி கேட்டாங்க‌. வேலைல‌ சேர்ந்த‌ப்போ நோன்பு கால‌ம்.  அப்போ எங்க ஆஃபீஸ்ல நான் ஒருத்தி தான் நோன்பு.. சேர்ந்த முதல் நாளே என்னுடைய பாஸே வ‌ந்து நீங்க‌ சீக்கிர‌ம் வீட்டுக்கு கிள‌ம்புங்க‌ன்னு சொல்லிட்டார். அதே போல‌ ஆஃபீஸ் பார்ட்டிக‌ளை எல்லாம் நான் அட்டென்ட் ப‌ண்ண‌ இய‌லாதுன்னு சொல்லும்போது ப‌ர‌வாயில்லை, நாங்க‌ எதுவும் நினைச்சுப்போமோன்னு நீங்க‌ ஃபீல் ப‌ண்ணாதீங்க‌ன்னு ரொம்ப‌ ஆறுத‌லா பேசினார்.

அவ‌ர் ம‌ட்டும் இல்லை, இது வ‌ரைக்கும் நான் க‌ட‌ந்து வ‌ந்த‌ இட‌ங்க‌ள் ப‌ல‌வ‌ற்றிலும் நான் ச‌ந்தித்த‌ ம‌னித‌ர்க‌ள் ப‌ல‌ர் என்னை க‌ண்ணிய‌மாக‌வே ந‌ட‌த்தினாங்க‌. அவங்க பார்த்தது என் அறிவை மட்டும்தான்.  ஒரு பெண்ணாக‌ நான் விரும்பிய‌ ப‌டிப்புகளை ப‌டிக்க‌ முடிந்த‌து, நான் விரும்பிய‌ வேலையை செய்ய‌ முடிந்த‌து‍: அத்த‌னையும் என் ஹிஜாபோடு.
இப்ப‌ சொல்லுங்க‌, நாம‌ இய‌ல்பா அணியுற‌ உடைய‌ வெச்சு இவ்வ‌ள்வு பெரிய‌ ச‌ர்ச்சைய‌ உண்டு ப‌ண்ண‌னுமா? அப்ப‌டி ப‌ண்ணுற‌வ‌ங்களுக்கெல்லாம் ப‌தில் சொல்லி மாளாது. ஆனா அமைதியா இருந்தா ஒருவேளை அதெல்லாம் உண்மை போல‌ ஆகிடுமோன்னு தான் இந்த‌ ப‌திவு..