Friday, October 23, 2009

வீராசாமி-The Man of Action!!

என்ன முழிக்கிறீங்க? எல்லாரும் எந்திரன்  படத்துக்கே விமர்சனம் எழுத தொடங்கிட்டதுக்கு அப்புறம் ரெண்டரை வருடம் முன்ன வந்த வீராசாமிய பத்தி இப்ப எழுத வாரேன்னு தானே?

அப்படி சாதரணமா விட்டுட முடியுமா? அந்த படத்தையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த நாளையும்? அது எந்த நாளுன்னு கேக்குறிங்களா? அது தான் நாங்க மூணு பேரு திருச்சி ரம்பா ஊர்வசி திரையரங்கத்துல தலைவர் படத்த பார்த்த நாளு!

ஹ்ம்ம்..நிறைய பேருக்கு நான்னா, TR நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு நான் அவர் ரசிகை.. ஆமாங்க..நம்புங்க.. அவரு படத்துல அவரு உதிர்த்த முத்துக்களை எல்லாம் சேகரிச்சு நிஜ வாழ்கையில பாவிக்கிற ஆளு நான்! எப்படின்னு யோசிக்கிறீங்களா? நல்லா யோசிங்க, அதை அப்புறமா இன்னொரு நாள் பொறுமையா போடுறேன்.. (பின்ன பதிவெழுத மேட்டர் வேணாமா?)

அப்படிப்பட்ட தலைவர் ரசிகையாகிய நான், அவரு படம் தியேட்டர்ல வரும்போது பார்க்காம சும்மா விடுவேனா?? ரம்பா ஊர்வசியில ஓடுதுன்னு தெரிஞ்சதும் முதல் வேலையா கிளாஸ்ஸ பங்க் பண்ணிட்டு நானும் கோகியும் ஸ்கூட்டிய BHEL ஸ்டாண்ட்ல விட்டுட்டு சத்ரதுக்கு பஸ் ஏறிட்டோம்.. அங்க ஒரு வேலை முடிஞ்சதும் Femina Shopping Mall (ஆமாங்க, அது தான் திருச்சியோட சிட்டி சென்டெர்.. எங்களுக்கு நல்லா பொழுது போகும்) போயிட்டு காயுக்கு போன் அடிச்சோம்.. அவ கெளம்பி வாரேன்னு சொன்னதும், அதுக்குள்ள லஞ்ச் சாப்டுட்டு பஸ் ஸ்டாண்ட்ல அவ வந்ததும் தியேட்டருக்கு நடக்க ஆரம்பிச்சோம்.. போற வழியில டிக்கெட் முன்பதிவு செய்யலையே, ஹவுஸ் புல் ஆகிடுமோன்னு ஒரே கவலை... அட உண்மையத்தாங்க சொல்றேன்..

அங்க வேர்த்து விறுவிறுத்து ஒரு வழியா போனா டிக்கெட் ஈசியா கிடைச்சிட்டு.. இருந்தாலும் நல்லா கூட்டம்..பின்ன தலைவர் படமாச்சே.. அங்கல்லாம் இங்க மாதிரி டிக்கெட் நம்பர் கிடையாது.. எங்க வேணும்னாலும் உட்காரலாம்.. அப்படி எங்க இருக்கலாம்னு யோசிச்சிட்டு இருந்தப்போ ரெண்டு பேரு பேசிட்டே வாராங்க:  "டேய் வடிவேல் படம் பாக்குற மாதிரி ஒரே காமெடியா   இருக்கும்டா, டைம் போறதே தெரியாது" ன்னு சொல்லிட்டே அவங்க சீட்ட தேட ஆரம்பிச்சுட்டாங்க.. சரி தலைவருக்கு இவ்வளவு கூட்டம் வருதேன்னு சந்தோஷமா ஸ்டார்டிங் சீன போட்டான் பாருங்க.....

அப்படி ஒரு சர வெடி..ரவுடி பசங்களெல்லாம் கலாட்டா  பண்ண, அவங்கள அடிக்கிறதுக்கு அப்படியே ஒரு குடிசைக்குள்ள இருந்து வர்றார்: அப்படியே வெடிக்குது அந்த குடிசை... அந்த பைட் சீனுக்கு அப்புறம் என்ன இருக்கணும்? சரியா சொன்னா படத்துல அவரு பயன்படுத்தின சீப்பு உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்..

எல்லாரும் சரியா சொல்லிட்டீங்க.. உங்க வாசகதவ யாராச்சும் தட்டினா குரியர் காரரா இருக்கும். பொய் கையெழுத்து போட்டுட்டு சீப்ப வாங்கிக்கோங்க.

அந்த தங்கச்சி செண்டிமெண்ட் சீனுல தங்கச்சி ஜீன்ஸ் பேன்ட் வாங்கிக்கேட்டதும்  தலைவர் கண்கலங்கி திரும்பி பார்ப்பார் பாருங்க, அதுல தியேட்டரே சும்மா அதிர்ந்துதுங்க... அப்புறம் ஒரு டயலாக் விடுவார் "ஏம்மா, நம்மள வளர்த்தது ஒரு இட்லிகட ஆயா, அதனால நாம ஜீன்ஸ் எல்லாம் போடா கூடாதும்மா".. இப்படி ஒரு சமூக நீதிய நம்ம தலைவர தவிர வேற யாராச்சும் யோசிக்க முடியுமா?

அப்புறம் படத்தோட ஹீரோயின் மும்தாஸ்.. அவங்களுக்கு ரொம்ப வித்தியாசமான வேடம்னு டைட்டில்ல போட்டாங்க.. என்ன வித்தியாசமான நடிப்பு தெரியுமா அது? மும்தாசுக்கு வில்லனோட கல்யாணம் ஆயிட்டதுக்கு அப்புறம் தலைவர் எப்படிலாமோ பீல் பண்ணுவாரு.. அதுல முக்கியமானது: ஒரு நாள் தலைவர் தாடிய சீவுன சீப்பை அந்தம்மா மறைச்சு வெச்சிகிட்டு விளையாடும், தலைவர் அத புடிங்கிப்பார்.. அப்புறம் அந்த சீப்பா பார்த்து அழுது, பீல் பண்ணி, திரும்பவும் தாடிய சீவிக்குவாரு... என்னமா பீலிங்க்ஸ் ஒப் இந்தியா பாத்திங்களா? By the way, அந்த சீப்பு தான் உங்களுக்கு பார்சல்ல வந்துருக்கும்..

கதை எப்படி எல்லாமோ போயி, கடைசில சொன்ன வாக்க காப்பத்த முடியலயேன்னு தலைவர் நாற்காலியில உட்கார்ந்த மாதிரியே மண்டைய போட்டுருவாரு.. அவ்வளவு தான் முடிஞ்சுதுன்னு எல்லாரும் எந்திக்க, கொஞ்ச நேரத்துல மும்தாசும் மண்டைய போட்டுருவாங்க..எல்லாரும் அப்படியே சிலிர்த்து, கை தட்ட ஆரம்பிச்சுட்டாங்க.. பின்ன எப்படியாப்பட்ட காவியம் இது!

மறு நாள் கொல்லெஜுக்கு வந்து எல்லார் கிட்டயும் படத்த பார்த்த பெருமையும், கூடவே 'அகில உலக TR ரசிகர் மன்ற MBA பிரிவு தலைவி' ங்கற பட்டத்தையும் வாங்கிகிட்டு சந்தோஷமா பொழுத கழிச்சேன்!

Thursday, October 15, 2009

MBA படிக்க போறீங்களா?

ஏதோ நமக்கு தெரிஞ்சதை பகிர்ந்துக்கலாமேன்னு. இதுல நிறைய விஷயம் உங்களுக்கு ஏற்கெனெவே தெரிஞ்சிருக்கலாம், இருந்தாலும்:




MBA வை பொறுத்த வரைக்கும் இன்ன படிப்பு தான் படிச்சிருக்கனும்னு அவசியம் இல்லை. நீங்க UG எந்த துறைல செய்திருந்தாலும் MBA படிக்கலாம். ஆனா அக்கவுண்ட்ஸ், காமர்ஸ் படிச்சவங்களுக்கு தொடக்கத்துல கொஞ்சம் எளிதா இருக்கிற மாதிரி  இருக்கும். அதெல்லாம் முதல் வருஷம் மட்டும் தான், இரண்டாவது வருஷத்துல எல்லாருமே சமமா தான் இருப்பாங்க.


எந்த கல்லூரியில படிக்கிறதுன்னு முடிவு பண்ண முன்ன, எப்படிப்பட்ட MBA பண்ண போரோம்கிறது முக்கியம். எனக்கு தெரிஞ்சு இந்த படிப்ப நாலு வகையா பிரிக்கலாம்:


  • CAT, XAT, RAT (ஹிஹி,,, இது சும்மா தமாசுக்கு) எழுதி  B-Schools எனப்படும் பெரிய, பை நிறைய சம்பளம் கொடுக்கம் நிறுவனங்கள் வருகை தரும், பல முன்னணி ஏடுகள் தரவரிசை பட்டியலில் இடம்பெறும் IIM, XLRI, போன்ற கல்லூரிகள் 
  •  TANCET எழுதி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கீழ் இயங்கும் கல்லூரிகளில் சேர்வது (பெரும்பாலும் இன்ஜினியரிங் கல்லூரிகளில்)
  • All India Management Association (AIMA) நடத்தும் MAT எழுதி அந்த தேர்வை ஏற்கும் சில கல்லூரிகளில் படிப்பது
  • IGNOU, பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் தொலை தூர கல்வி பயில்வது
  • ஏற்கெனெவே வேலை செய்பவர்களுக்கு ஏற்ற வகையில் இருக்கும் ஒரு வருட Executive MBA வகுப்புகள். இதில் ISB- ஹைதராபாத் தான் இந்தியாவிலேயே முதலிடம். இன்னும் ஏன், உலகளவில் அங்கீகாரம் பெற்றதும் கூட. நம் சென்னையிலும் Great Lakes Institute of Management இத்தகைய பட்டத்தை வழங்குகிறது
மேற்கொண்டு செல்வதற்கு முன் ஒரு விஷயத்தை தெளிவு படுத்திக்கொள்கிறேன்: MBA விற்கும்  IIM போன்ற கல்லூரிகள் கொடுக்கும் PGDBM, PGDBA போன்ற பட்டத்திற்கும் ஒரு வித்தியாசம் தான்; பல்கலைக்கழகங்கள் பட்டம் கொடுத்தால் அது MBA, தன்னிச்சையாக ஒரு institute பட்டம் கொடுத்தால் அது PGDBA/PGDBM அவ்வளவே.

முதலில் நீங்க எந்த மாதிரி MBA படிக்க போறீங்கன்னு முடிவு செஞ்சுக்கோங்க. MBA வை பொறுத்த வரை நீங்க எந்த கல்லூரியில படிக்கிறீங்கன்றது ரொம்ப ரொம்ப முக்கியம். எப்பவும் B School Ranking என்று பல முன்னணி இதழ்கள், AC Nielsen போன்ற சர்வே நிறுவனங்கள் வெளியிடும். அதுல எப்பவும் முதல் இருபது-முப்பது கல்லூரிகளுக்கு நல்ல மதிப்பிருக்கிறது. இருந்தாலும் ஒரு விஷயத்த ஞாபகத்துல  வெச்சுக்கோங்க, இது போன்ற தர வரிசையில் கூட நிறைய சர்ச்சைகள் இருக்கு. அதனால எப்பவும் நம்மால முடிஞ்சா நல்ல ஆராய்ச்சி பண்ணின பிறகு தான் எந்த கல்லூரின்னு தேர்ந்தெடுக்கணும்.

ஒரு வேளை நீங்க CAT, XAT போன்ற தேர்வுகளை எழுதிட்டு, IIMs ல இருந்து அழைப்பு வர காத்துகிட்டு இருக்கலாம். அல்லது நீங்க தேர்ந்தெடுத்த கல்லூரிகள்ல இருந்து அழைப்பு வர காத்துகிட்டு இருக்கலாம். நீங்க இந்த தேர்வு எழுதினத  வெச்சிட்டு உங்களுக்கு நிறைய உப்புமா கல்லூரிகள்ல இருந்து தானாகவே அழைப்பு வரலாம். எந்தெந்த கல்லூரிகள்ல சேர ஐடியா இருக்கோ, அதை பத்தி நம்மாலான ஆராய்ச்சிய தொடங்கணும். அது ரொம்ப ரொம்ப முக்கியம். அங்க படிச்ச மாணவர்களிடம் இது போன்ற கேள்விகளை கேட்கலாம்:

  •  Specialization: MBA வில் கண்டிப்பா நமக்கென்ன துறை பிடிக்குதோ, அந்த துறையில் அந்த கல்லூரி பெயர் பெற்றிருக்கான்னு பார்க்கும். சில கல்லூரிகள்ல சில துறைகளுக்கு மதிப்பே இருக்காது. அங்க நீங்க அந்த துறை எடுத்த, கரை செற்றது கஷ்டமா போய்டும்.
  • Placements: எனக்கு தெரிஞ்சு யாரும் அறிவை வளர்க்குரதுக்கு MBA படிக்கலை. முக்கால்வாசி பேர் தங்களுடைய சம்பள அளவு உயரனும்னு தான் படிக்கிறாங்க. அதனால நீங்க படிக்கச் போற இடத்துல நூறு சதம் placemens இருக்கான்னு பாக்கணும். அதே போல மாணவர்கள் கட்டாயம் எதுவும் இல்லாம தங்களுக்கு பிடித்த நிறுவனங்களுக்கு மட்டும் apply பண்ணும் வசதி இருகான்னும் பாக்கணும்
  • Faculty: எத்தனை பேர் நிரந்தர விரிவுரையாளர்கள், எத்தனை பேர் அப்பப்போ வரும் visiting faculty என்று பாக்கணும். பொதுவா பெரிய பெரிய பொறுப்புகளள இருக்குற சில பேர் தங்களுடைய ஆர்வம் காரணமாக வந்து சொல்லி கொடுப்பாங்க, அது நம்மளுக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும். எந்தெந்த நிறுவனங்கள்ல இருந்து வாரங்கன்றத நாம கண்டிப்பா தெரிஞ்சிகிட்டா  நல்லது
  • Infrastructure: எல்லாம் ஒழுங்க இருந்தா தான் நமக்கும் படிக்கச் வசதியா இருக்கும். விடுதியில இன்டர்நெட் வசதி தங்கு தடையில்லாம வருதா, நாம ஆராய்ச்சி பண்ண வசதியா database களுக்கு சந்தா செளுதியிருகா, போன்றவைகளை கவனிச்சிக்கணும்
சரி, எல்லாத்தையும் சொல்லி இதையும் சொல்லிடறேன். B School களில் படிச்சா ஒரு பாஸ்போர்ட் மாதிரி, அவ்வளவு தான். அதுக்கப்புறம் ஒவ்வொருதர் உயர்வை அடையறதும் அவரவர் திறமையை பொறுத்தே. எங்களுக்கு சொல்லி கொடுத்தவர்கள்ள, IIM-A ல படிச்சிட்டு வந்து கேவலமா சொல்லி கொடுத்தவங்களும்  இருந்தாங்க, நம்ம Madras University ல படிச்சிட்டு சூப்பரா சொல்லி கொடுத்தவங்களும் இருக்காங்க.

அடுத்த பதிவில் தமிழ் நாட்டில் உள்ள நல்ல கல்லூரிகள், எந்தெந்த துறைய தேர்ந்தெடுப்பதுன்னு பாப்போம்.