Sunday, December 27, 2009

பிரியாணி சட்டி: 28.12.2009

இங்க வந்து ரெண்டு மாசம் ஆக போகுது.. வீட்ட ரொம்ப தேடினாலும் எனக்கென்னமோ வேற நாட்டுல இருக்குற மாதிரி இல்லை..எங்க பாத்தாலும் நம்ம ஊரு மக்கள்..சேட்டன்மார்கள் நம்ம ஊரு சாமான் ஒண்ணு விடாம இங்க கொண்டு வந்து விக்குறாங்க..எங்க ஆளுக்கு இருமல்ன்னதும் பனங்கற்கண்டு பாலில் காய்ச்சு குடுக்க சொன்னாங்க. கொண்டு வராம இருந்துட்டமேன்னு ரொம்ப ஃபீல் பண்ணினேன். சரி கேட்டுத்தான் பாப்போமேன்னு பாத்தா, அட, கிடைச்சுது!என்ன, நம்ம ஊரு துடைப்பம் இல்லாம தான் ரொம்ப கடுப்பா இருக்கு. அல் ஐனில் இருக்குன்னு சொன்னாங்க.. பாப்போம்!
***

நாங்க இருக்கும் ஏரியாவில் நம்ம ஊரு மக்கள் ரொம்பவே அதிகம்! அப்படித்தான் ஒரு நாள் நாங்க கடைக்கு போகும்போது ஒருத்த‌ர் ஃபோன்ல‌ த‌மிழ்ல‌ பேசிட்டே வ‌ந்தார். நானும் அப்போ எங்க வீட்டுக்காரர் கிட்ட‌"ஏங்க‌, துபாய்ல‌ த‌மிழாட்க‌ள் ஜாஸ்தில"ன்னு சொல்லிட்டே வ‌ந்தேன்.. கொஞ்ச‌ நேர‌த்தில‌ அந்த‌ ஆள் ஒரே கெட்ட‌ வார்த்தைக‌ளா பேச ஆர‌ம்பிச்சிட்டாரு.. என‌க்கு தூக்கி வாரி போட்டுருச்சு.. தெரியாத்த‌ன‌மா ச‌ந்தோச‌ப்ப‌ட்டுட்ட‌னோ.. :|
***

அதே மாதிரி இன்னொரு நாள் நாங்க‌ ந‌ட‌ந்து போயிட்டு இருந்தப்போ திடீர்ன்னு ஒருத்தர் பாய்ஞ்சு வந்த மாதிரி வந்து செய்கையால யாசகம் கேட்டார்.. அவர் பாகிஸ்தானி உடை போட்டுட்டு முக‌த்தையெல்லாம் மூடிட்டு ஒரு மாதிரி இருந்தார். செம்மையா ப‌ய‌ந்து, "அல்லாஹு அக்ப‌ர்"ன்னு ரோட்ல‌யே க‌த்திட்டேன்..எங்க‌ வீட்டுக்கார‌ர் இது தான் சான்ஸ்ன்னு ப‌ய‌ங்க‌ர‌மா என்னை ஓட்ட‌ ஆர‌ம்பிச்சுட்டாங்க‌. :(

***

இந்த‌ ஊரில் கூட‌ குப்பை பொறுக்குப‌வ‌ர்க‌ளை பார்க்கும்போது ஒரு மாதிரி இருக்கு. என‌க்கென்ன‌மோ ந‌ம்ம‌ ஊருல‌ குப்பை பொறுக்குற‌வ‌ங்க‌ குறைஞ்சிட்டாங்க‌ன்ற‌ மாதிரி ஒரு நினைப்பு. க‌ட‌ல் க‌ட‌ந்து வ‌ந்து இதைத்தான் செய்கிறார்க‌ள் என்று அவ‌ங்க‌ உற‌வின‌ர்க‌ளுக்கு தெரிந்தால் வ‌ருத்த‌ப்ப‌டுவாங்க‌ தானே? எங்க‌ தெருவில் ஒரு வ‌ய‌தான‌ பாகிஸ்தானி பெரிய‌வ‌ர் வ‌ந்து குப்பையில் இருக்கும் அட்டை, காலி டின்க‌‌ள் போன்ற‌வ‌ற்றை எடுப்பார். ஒரு நாள் பார்த்தா அதில‌ உள்ள‌ பெரிய‌ பெரிய‌ ரொட்டிக‌ளை எடுக்க‌ ஆர‌ம்பிச்சிட்டார்.. என‌க்கு ரொம்ப க‌ஷ்ட‌மா போச்சு..அப்புற‌ம் தான் கேள்விப்ப‌ட்டேன் அதெல்லாம் ஒட்ட‌க‌த்துக்கு போட‌ எடுக்குறாங்க‌ன்னு.. ஏதோ கொஞ்ச‌ம் நிம்ம‌தியா இருந்துச்சு..

***
ஒரு ப‌க்க‌ம் வேட்டைக்கார‌ன், இன்னொரு ப‌க்க‌ம் க‌ந்த‌கோட்டை. சன் டிவி சார்ந்த‌ சேன‌ல்க‌ளில் வேட்டைக்கார‌ன் தொல்லைன்னா, ம‌த்த‌ எல்லா சேன‌ல்க‌ளிலும் க‌ந்த‌கோட்டை தொல்லை.. தாங்க‌ முடிய‌லை!! ப‌த்தாத‌த‌ற்க்கு இந்த‌ ரியாலிட்டி ஷோக்க‌ள் வேற‌. என்ன‌ கொடுமை சார்..

***
ச‌ரி நானும் க‌ல‌வை ப‌திவு போட‌ ஆர‌ம்பிச்சிட்டேன்! ஒகே ரைட், ரைட்!

35 comments:

அண்ணாமலையான் said...

அப்ப ஒகே ரைட், ரைட்!

சென்ஷி said...

/"ஏங்க‌, துபாய்ல‌ த‌மிழாட்க‌ள் ஜாஸ்தில"ன்னு சொல்லிட்டே வ‌ந்தேன்.. கொஞ்ச‌ நேர‌த்தில‌ அந்த‌ ஆள் ஒரே கெட்ட‌ வார்த்தைக‌ளா பேச ஆர‌ம்பிச்சிட்டாரு.. என‌க்கு தூக்கி வாரி போட்டுருச்சு.. தெரியாத்த‌ன‌மா ச‌ந்தோச‌ப்ப‌ட்டுட்ட‌னோ.. :|
***//

நல்லவேளை நாங்க ஷார்ஜாவுக்கு போயிட்டோம் :)

பதிவு நல்லாருக்குது

pudugaithendral said...

நானும் க‌ல‌வை ப‌திவு போட‌ ஆர‌ம்பிச்சிட்டேன்//

நடத்துங்க

ஷாகுல் said...

ச‌ரி நானும் க‌ல‌வை ப‌திவு போட‌ ஆர‌ம்பிச்சிட்டேன்!//

சரி OK

Prathap Kumar S. said...

இவ்வளோ வெள்ளந்தியா இருக்கீங்க... துபாய்ல இது வேலைக்கே ஆகாதே...
நடத்துங்க...நடத்துங்க...

நாஸியா said...

சகோதரர்கள் அண்ணாமலையான், ஷாகுல் மற்றும் சகோதரி தென்றல்.. அப்போ தொடர்ந்து நடத்தலாம்ங்கிறீங்க..

நன்றி சகோதரர் சென்ஷி! அப்போ அங்க நம்மாட்கள் இல்லையா?

நாஞ்சில் அண்ணே, அதெப்படி சொல்றீங்க? :(

S.A. நவாஸுதீன் said...

கலவையும் நல்லாத்தான் இருக்கு. இது ஒரு தனி டிராக்ல போகட்டும். தொடருங்க

creativemani said...

நல்ல பதிவு சகோதரி..

Barari said...

sila nanmaiyaana pathivukalukku idaiye ippadiyulla kalavaikalum thevai thaan.vazthukal sakothari.

ஜீவன்பென்னி said...

நல்ல பதிவு.
தொடருங்கள் கலவைய.

SUFFIX said...

பிரியாணி சட்டி நல்ல தொடக்கம்!!

ஸாதிகா said...

//அப்புற‌ம் தான் கேள்விப்ப‌ட்டேன் அதெல்லாம் ஒட்ட‌க‌த்துக்கு போட‌ எடுக்குறாங்க‌ன்னு.. ஏதோ கொஞ்ச‌ம் நிம்ம‌தியா இருந்துச்சு.. //
நாஸியா உங்கள் மனிதநேயத்திற்கு ஒரு சல்யூட்.

அப்புறம் பிரியாணி சட்டி என்று தலைப்பிட்டு பிரியாணியைப்பற்றி ஒன்றையுமே காணோம்?

பீர் | Peer said...

//க‌ட‌ல் க‌ட‌ந்து வ‌ந்து இதைத்தான் செய்கிறார்க‌ள் என்று அவ‌ங்க‌ உற‌வின‌ர்க‌ளுக்கு தெரிந்தால் வ‌ருத்த‌ப்ப‌டுவாங்க‌ தானே?//

நாங்கதான் ஊருக்கு போகும் போது ஸ்டிக்கர் பிரிக்காத ரேபானும், ஃபைபர் கவர் போட்ட நோக்கியாவும் வச்சுக்குவோம்ல... அப்படியும் தெரிஞ்சுடுச்சுன்னா, ரெண்டு ராயல் மிரேஜ் கொடுத்து கரெக்ட் பண்ணிடுவோம். :)

Jokes apart... வருத்தப்பட வேண்டிய விஷயம், நாஸியா.

என்ன செய்ய.. 10வது முடித்ததும் பாஸ்போட் ஆஃபிஸ் வாசல்ல போய் காத்துக்கெடக்கானே. கல்வியறிவு இல்லாததே காரணம்.

சமுதாயத்தில் கல்வி விழிப்புணர்வுக்கு ஏதாவது செய்யணும். இறைவன் நாடுவான்...

ஹுஸைனம்மா said...

பிரியாணிச் சட்டி: அட, பேர் நல்லாருக்கே.

துபாயில் இருக்கும் தமிழ்ப் பொருட்கள் கிடைக்கும் "ஆதில் ஸ்டோர்ஸ்" போன்ற கடைகளில் கேட்டுப் பாருங்கள், துடைப்பம் நிச்சயம் கிடைக்கும்.

//சென்ஷி! அப்போ அங்க நம்மாட்கள் இல்லையா?//

நல்லவேளை, நீங்க ஷார்ஜாவில இல்லை. சென்ஷி & கோ மட்டுமே போதும் உங்களை நடுங்க வைக்க!!

அப்புறம் ஒரு சந்தேகம்: நீங்க பதிவுல 28ந்தேதின்னு போட்டிருக்கீங்க. ஆனா, 27ந் தேதியே கமெண்ட்லாம் வந்திருக்குது. கமெண்ட் போட்டவங்க அமெரிக்காவுல இருக்காங்களா இல்லை இது ஓட்டல் (பழைய) பிரியாணியா? :-D

ப்ரியமுடன் வசந்த் said...

நல்ல கலவையா எழுதுறீங்க தொடரவும்...!

வேட்டைக்காரனை இழுக்காம இருக்கமாட்டீங்களே...!

இருக்கட்டு இருக்கட்டும் டீ ஆர் பத்தி நானும் எழுதுறேன்...!

சீமான்கனி said...

ஆஹா இந்த புது பிரியாணி சட்டியும் நல்லாத்தான் இருக்கு ஓ.கே ரைட்...ரைட்...

வசந்த் மாப்ளே...வேட்டைக்காரன் பயமே இன்னும் தெளியல இதுல நீ.. டி.ஆர். க்கு எழுத போறியா???... :)))))

பித்தனின் வாக்கு said...

ஆகா பிரியானி சட்டினு படித்தவுடன் எதாவது ஒட்டியிருக்கும் என்று வந்தேன். ஆனால் நிறைய பலசரக்கு உள்ளது. எனக்கும் துடைப்பம் பிரச்சனைதான். நல்ல பதிவு. நன்றி.

நாஸியா said...

நவாஸுதீன் , அன்புடன்-மணிகண்டன் , பராரி, ஜீவன் பென்னி, சஃபிக்ஸ் நன்றி சகோதரர்களே!

ஸாதிகா லாத்தா, இன்ஷா அல்லாஹ் பிரியாணிய பத்தி அடுத்த சட்டியில போடுறேன்! (என்னைக்குத்தான் நான் உருப்படியா பிரியாணி செய்யபோறேனோ)

\\நாங்கதான் ஊருக்கு போகும் போது ஸ்டிக்கர் பிரிக்காத ரேபானும், ஃபைபர் கவர் போட்ட நோக்கியாவும் வச்சுக்குவோம்ல... அப்படியும் தெரிஞ்சுடுச்சுன்னா, ரெண்டு ராயல் மிரேஜ் கொடுத்து கரெக்ட் பண்ணிடுவோம். \\

காலங்காலமா இது தானே நடக்குது.. இன்ஷா அல்லாஹ் ஒரு நல்ல மாற்றம் கூடிய சீக்கிரம் ஏற்படும். முன்னை விட‌ இப்ப‌ ந‌ம்ம‌ ஊருல‌ க‌ல்வியை ப‌ற்றிய‌ விழிப்புண‌ர்வு கொஞ்ச‌ம் ப‌ர‌வாயில்லை.. ஆனா இது போதாது

நாஸியா said...

பேர் நல்லா இருக்கா? உங்க ட்ரங்கு பெட்டி இன்ஸ்பிரேஷன் தான் :)

\\நல்லவேளை, நீங்க ஷார்ஜாவில இல்லை. சென்ஷி & கோ மட்டுமே போதும் உங்களை நடுங்க வைக்க!!\\

இது வேறயா?

எனக்கு தெரியலயே.. நேத்து தான் பிரியாணி போட்டேன்.. எதோ குழப்பம்

நன்றி வசந்த் சகோ! உண்மையா வேட்டைக்காரன் ஒரு பெரிய டார்ச்சர். ஏற்கெனெவே சன் டிவி அட்டூழியம் தாங்காது. இதுல நாலு ரவுடி பயல்களையும் பஞ்சு டயலாக் பேசுற விஜயும்.. தாங்கல!!தலைவர் டீ ஆரை பத்தி புகழ்ந்து தான் பதிவு போடனும் ஆமா

நன்றி சகோதரர் சீமான் கனி!

நன்றி சகோதரர் சுதாகர் (அதானே உங்க பேரு?)

அன்புடன் மலிக்கா said...

அப்புறம் ஒரு சந்தேகம்: நீங்க பதிவுல 28ந்தேதின்னு போட்டிருக்கீங்க. ஆனா, 27ந் தேதியே கமெண்ட்லாம் வந்திருக்குது. கமெண்ட் போட்டவங்க அமெரிக்காவுல இருக்காங்களா இல்லை இது ஓட்டல் (பழைய) பிரியாணியா? :-D/

அய்யோடா நம்ம ஹுசைன்னாம்மாவுக்கு வந்ததே இந்த சந்தேகம் வாழ்க வளமுடன்

நிஜாம் கான் said...

நல்லாயிருக்கு தொடருங்க நாஸியா.

நட்புடன் ஜமால் said...

வாசனையாக வரட்டும்

மசாலா மிக்ஸிங் மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்க சகோதரி.

மற்றபடி வாழ்த்துகள்.

Jaleela Kamal said...

அப்புறம் ஒரு சந்தேகம்: நீங்க பதிவுல 28ந்தேதின்னு போட்டிருக்கீங்க. ஆனா, 27ந் தேதியே கமெண்ட்லாம் வந்திருக்குது. கமெண்ட் போட்டவங்க அமெரிக்காவுல இருக்காங்களா இல்லை இது ஓட்டல் (பழைய) பிரியாணியா


ஹுஸைன்னாமாவுக்கு குசும்பு தான் பழைய பிரியாணியா ?

நாஸியா நானும் பிரியாணி சட்டி என்றதும் கடைசியா வறொமே ஏதாவது மிஞ்சுமான்னு பார்க்கிறென்.

கலவை மிக்ஸ் ம்ம் சூப்பர்
துடைப்பம் வந்த புதிதில் நானும் தேடி, கிடைச்சு இப்ப பிரஷிலேயே பழகியாச்சு (உடனே டூத் பிரஷான்னு கேட்காதீங்க) நீஙக்ளும் நெருக்கமான தோழிதான் ....

ஜெய்லானி said...

பிரியானி சட்டி என்றஉடன் ஆர்வமுடன் தேடினேன். பிரியானியும் கிடைக்கவில்லை சட்டியும் கிடைக்கவில்லை

நாஸியா said...

மலீக்கா அக்கா! ஆமா ஹூசைனம்மாவுக்கு மட்டும் டிசைன் டிசைனா டவுட் வருது..

நன்றி சகோதரர்கள் நிஜாம், ஜமால்..

\\துடைப்பம் வந்த புதிதில் நானும் தேடி, கிடைச்சு இப்ப பிரஷிலேயே பழகியாச்சு (உடனே டூத் பிரஷான்னு கேட்காதீங்க) நீஙக்ளும் நெருக்கமான தோழிதான் \\

ஜலீல்லா அக்கா! பழக எனக்கு இன்னும் எவ்வளவு நாளாகும்னு தெரியல.. :(

சகோதரர் ஜைலானி, நீங்க எதிர்ப்பார்த்த பிரியாணி இங்க இல்லையோ? :(

அன்புடன் மலிக்கா said...

http://fmailkka.blogspot.com/

நேரம் கிடைக்கும் போது இதையும் கொஞ்சம் பாருங்கள்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சகோதரி..
பதிவு நல்லா இருக்கு...

நாஸியா said...

சகோதரி மலீக்கா என்னாச்சு அந்த அட்ரஸ்க்கு போனா எர்ரர் வருதே!

நன்றி சகோதரர் பட்டாபட்டி

Sakthi said...

இனிய பொங்கல் திருநாள்
வாழ்த்துகள்

பித்தனின் வாக்கு said...

நஸியா நான் இந்த பிரியாணி சட்டியை வச்சு என் பதிவில் ஒரு நகைச்சுவை போட்டுள்ளேன். படித்துவிட்டுத் திட்டவும். நன்றி.
பதிவர்கள் வீட்டு சமையல் அறையில் பதிவு படிக்கவும். நன்றி.

ஜெய்லானி said...

///பிரியானியும் கிடைக்கவில்லை சட்டியும் கிடைக்கவில்லை///
அதனால நாஸியா மேடம், எழுதாமல் இருக்கவேண்டாம். தொடர்ந்து எழுதுங்கள், அப்போதுதான் பித்தனின் வாக்கு பொய்ன்னு புரியும்.keep it up.

//துடைப்பம் இல்லாம தான் ரொம்ப கடுப்பா இருக்கு//
ஒருவேளை அதுதான் காரணமோ!!!!!

Chitra said...

இன்னைக்குதான் பிரியாணி கடை பக்கம் வந்தேன். சூப்பர்!

ஹுஸைனம்மா said...

நாஸியா, என்னாச்சு பதிவுகள்? எதாவது எழுதுங்க. பதிவுலயாவது பிரியாணியைப் பாத்துக்கிறோம் நாங்க!!

மலிக்காவின் அட்ரஸ் தவறாகக் கொடுத்துள்ளார். அது fmalikka.blogspot.com

அன்புத்தோழன் said...

Briyaani Satti Bramaadham... ha ha....

Variety rice kelvi patruken.... variety Birrriyaani idhan first time.... hmm... nallathaankeedhu....

அன்புடன் மலிக்கா said...

நேரம்கிடைக்கும்போதுவந்து பாருங்கள்

http://fmalikka.blogspot.com/