Wednesday, January 27, 2010

ஹலோ ப்ளீஸ் உங்க வேலைய மட்டும் பாருங்க...

அட ஒரு மாசம் ஆகப்போகுதா பதிவெழுதி? நாள் எப்படித்தான் ஒடுதுன்னே தெரியலப்பா...!


பதிவுலகில் நடக்கும் காமெடியை முன்னிட்டு ஆண்களின் உரிமைக்காக குரல் கொடுக்க களத்தில் குதித்திருக்கும் சகோதரி ஹூசைனம்மாவை பாராட்டி ஒரு சட்டி பிரியாணி அனுப்பி வைக்கப்படும்.

அதே மாதிரி ஆண்களை அடிமைப்படுத்துற‌ ச‌ர்ச்சைக்குரிய‌ விஷ‌ங்க‌ளான‌ கோட்டு சூட்டு, டைய‌ ப‌த்தி எல்லாம் கூட‌ எழுதினா அவ‌ங்க‌ளுக்கும் பிரியாணி ச‌ட்டி அனுப்பி வைக்க‌ப்ப‌டும்..


***

நாம‌ பாட்டுக்கு ந‌ம்ம‌ வ‌ழியில‌ போயிக்கிட்டு இருக்கும்போது பெண் சுத‌ந்திர‌ம் பேசுறேன் பேர்வ‌ழின்னு வெட்டியா எழுதுற‌த‌ நினைச்சா சிரிப்பு தான் வ‌ருது.. இவ‌ங்க‌ளுக்கெல்லாம் விள‌க்க‌ம் சொல்லி மாளாது.


ஒவ்வொருத்த‌ருக்கும் த‌ங்க‌ளுடைய‌ த‌னிப்ப‌ட்ட‌ வாழ்க்கையில‌ சில‌ முன்னுரிமைக‌ள் இருக்கும் (ப்ரையோரிட்டீஸ்). அது தாங்க‌ள் பின்ப‌ற்றுகிற‌ மார்க்க‌மாக‌ இருக்க‌லாம், இல்லை ஒரு கொள்கையாக அல்லது லட்சியமாக அல்லது இது எல்லாமே கலந்ததாக‌ கூட‌ இருக்க‌லாம். அடுத்த‌வ‌ங்க‌ ச‌கிப்புத்த‌ன்மைய‌ சோதிக்காத‌ வ‌கையில‌ இருக்குற‌ வ‌ரைக்கும் ந‌ல‌ம். 

ஏன் என்ன மாதிரி ஒரு சில பேருக்கு தங்களுக்கு பிடித்த வேலையை மட்டுமே கேரியராக எடுத்துக்க பிடிக்கும். எனக்கு நம்பர்ஸே புடிக்காது. ஆனா நான் ஒரு ஃபைனான்ஸ் ஸ்பெஷலிஸ்ட். எவ்வளவு நாளானாலும் பொறுமையா எனக்கு பிடித்த வேலைய தேர்ந்தெடுத்தேன்.. எனக்கு பிடித்த வேலைய தேர்ந்தெடுக்க எவ்வளவு முனைந்தேனோ அதே அளவு என்னுடைய சில கொள்கைகளை மதிக்கும் நிறுவனத்தை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருந்தேன்.

என்னுடைய ஹிஜாபினால எனக்கு பல நன்மைகள் இருந்தாலும் அதுல முக்கியமானது என்னன்னா நிறைய பேர் என்னை நல்லா நினைவுல வெச்சிருப்பாங்க.. பின்ன க்ளாஸ்லயே ஒரு மண்டை மட்டும் தனியா தெரிஞ்சா அப்படித்தானே ஆகும். அதனால க்ரூப் டிஸ்கஷன்ல எல்லாம் நான் என்ன பேசுறேன் என்பதை அடுத்தவங்களை கவனிக்க வைக்கிறது ரொம்ப சுலபம். அதே போல‌ ஒரு சில‌ விரிவுரையாள‌ர்க‌ள் என்னை ரொம்ப‌வே ஊக்க‌ப்ப‌டுத்துவாங்க‌, நான் ப‌டிப்ப‌தை பெருமையாக‌வும் நினைப்பாங்க‌.

நான் கேம்பஸ்ல இன்டெர்வியூ வரைக்கும் போனது இரண்டு நிறுவனங்கள். அதில் முதல்ல போனது பெங்களூரில இருக்கும் ஒரு மென்பொருள் நிறுவனம். சின்ன‌ வ‌ய‌சுல‌ இருந்தே பேச்சுப்போட்டிகள்ல‌ ஆர்வ‌மா க‌ல‌ந்துக்கிட்ட‌தால‌ க்ரூப் டிஸ்க‌ஷ‌ன், ப்ரெசென்டேஷ‌ன்ல‌ எல்லாம் கொஞ்ச‌ம் ந‌ல்லாவே ப‌ண்ணுவேன்னு ந‌ண்ப‌ர்க‌ள் சொல்லுவாங்க‌. அப்ப‌டி ஜிடி முடிஞ்சு இன்ட‌ர்வியூ போன‌ப்போ அவ‌ங்க‌ளோட‌ கேள்விக‌ள் முக்கால்வாசி என்னுடைய‌ ச‌மூக‌த்தை சுத்தி தான் இருந்த‌து. அந்த‌ நாள் வ‌ரைக்கும் போன இடங்களில் எல்லாம் ஊக்க‌த்தையே பார்த்த‌ நான் கொஞ்ச‌ம் டிஸ்க‌ரேஜ் ப‌ண்ணுவ‌து போல் இருந்த‌து. டிஸ்கரேஜுன்னு சொல்வதை விட கொஞ்சம் எரிச்சப்படுத்துவது போலவே இருந்துச்சு. எதிர்ப்பார்த்த‌து போல‌வே செலெக்ட் ஆக‌ல‌.

அடுத்து போன‌து ஒரு புகழ்பெற்ற கார்மென்ட் நிறுவ‌ன‌ம். அந்த‌ இன்ட‌ர்வியூவை என் வாழ்க்கையில‌ ம‌ற‌க்க‌ முடியாது. போன‌ நிறுவ‌ன‌த்துல‌ கேட்ட ப‌ல‌ கேள்விக‌ள் என் குடும்ப‌த்தையும், ச‌மூக‌த்தையும் சார்ந்த‌துன்னா இந்த‌ முறை அது ம‌ட்டும்தான் கேள்வியே. ஆனா அவ‌ங்க‌ கேட்ட‌ வித‌ம் ரொம்ப‌ ந‌ல்லா இருந்துச்சு. திரும்ப‌ திரும்ப‌, "நாஸியா, நாங்க‌ உங்க‌ள‌ ம‌ட்டும் தான் நீங்க‌ போட்டிருக்குற‌ உடைய‌ பாத்து கேக்குறோம்னு நினைக்காதீங்க‌. இதே எங்க‌ முன்னாடி நெத்தி நிறைய‌ ப‌ட்டை போட்டுட்டு ஒருத்த‌ர் இருந்தாலும் இதைபோல‌ கேள்விக‌ளை நாங்க‌ நிச்ச‌ய‌மா கேட்டிருப்போம்"ன்னு சொன்னாங்க‌. கிட்ட‌த்த‌ட்ட‌ ஒரு ம‌ணி நேர‌ம் ந‌ட‌ந்த‌ அந்த‌ இன்டெர்வியூ முடிஞ்ச‌ பிற‌கு செல‌க்டான‌ விஷ‌ய‌ம் தெரிய‌ வ‌ந்த‌து. நான் கேட்ட லொகேஷன்ல கிடைக்காததால‌ அந்த‌ வேலைய‌ ஏத்துக்க‌ முடிய‌ல‌.

அதுக்க‌ப்புற‌ம் ந‌ம்ம‌ சென்னையில‌யே என‌க்கு பிடித்த‌ வேலை கிடைச்ச‌து வேற விஷ‌ய‌ம். ஆனா இங்க‌ இன்ட‌ர்வியூவில‌ முழுக்க‌ முழுக்க‌ ஃபைனான்ஸ் ச‌ம்ப‌த்த‌ப்ப‌ட்ட‌ கேள்விக‌ள் தான். ஒரு கேஸ் ஸ்ட‌டிய‌ குடுத்து அதை சால்வ் ப‌ண்ண‌ சொல்லி அதை சுத்தியே கேள்வி கேட்டாங்க‌. வேலைல‌ சேர்ந்த‌ப்போ நோன்பு கால‌ம்.  அப்போ எங்க ஆஃபீஸ்ல நான் ஒருத்தி தான் நோன்பு.. சேர்ந்த முதல் நாளே என்னுடைய பாஸே வ‌ந்து நீங்க‌ சீக்கிர‌ம் வீட்டுக்கு கிள‌ம்புங்க‌ன்னு சொல்லிட்டார். அதே போல‌ ஆஃபீஸ் பார்ட்டிக‌ளை எல்லாம் நான் அட்டென்ட் ப‌ண்ண‌ இய‌லாதுன்னு சொல்லும்போது ப‌ர‌வாயில்லை, நாங்க‌ எதுவும் நினைச்சுப்போமோன்னு நீங்க‌ ஃபீல் ப‌ண்ணாதீங்க‌ன்னு ரொம்ப‌ ஆறுத‌லா பேசினார்.

அவ‌ர் ம‌ட்டும் இல்லை, இது வ‌ரைக்கும் நான் க‌ட‌ந்து வ‌ந்த‌ இட‌ங்க‌ள் ப‌ல‌வ‌ற்றிலும் நான் ச‌ந்தித்த‌ ம‌னித‌ர்க‌ள் ப‌ல‌ர் என்னை க‌ண்ணிய‌மாக‌வே ந‌ட‌த்தினாங்க‌. அவங்க பார்த்தது என் அறிவை மட்டும்தான்.  ஒரு பெண்ணாக‌ நான் விரும்பிய‌ ப‌டிப்புகளை ப‌டிக்க‌ முடிந்த‌து, நான் விரும்பிய‌ வேலையை செய்ய‌ முடிந்த‌து‍: அத்த‌னையும் என் ஹிஜாபோடு.
இப்ப‌ சொல்லுங்க‌, நாம‌ இய‌ல்பா அணியுற‌ உடைய‌ வெச்சு இவ்வ‌ள்வு பெரிய‌ ச‌ர்ச்சைய‌ உண்டு ப‌ண்ண‌னுமா? அப்ப‌டி ப‌ண்ணுற‌வ‌ங்களுக்கெல்லாம் ப‌தில் சொல்லி மாளாது. ஆனா அமைதியா இருந்தா ஒருவேளை அதெல்லாம் உண்மை போல‌ ஆகிடுமோன்னு தான் இந்த‌ ப‌திவு..

26 comments:

Barari said...

neththi adi pathivu en anbu sakotharikku en nenjaarntha vazthukal.

Prathap Kumar S. said...

/அதே மாதிரி ஆண்களை அடிமைப்படுத்துற‌ ச‌ர்ச்சைக்குரிய‌ விஷ‌ங்க‌ளான‌ கோட்டு சூட்டு, டைய‌ ப‌த்தி எல்லாம் கூட‌ எழுதினா அவ‌ங்க‌ளுக்கும் பிரியாணி ச‌ட்டி அனுப்பி வைக்க‌ப்ப‌டும்.. //


சூப்பர் மேனுக்கு குரல் கொடுக்க யாராவது இருக்காங்களா??? அவரு பாவம் எத்தனை வருஷமா மாத்திப்போட்டுட்டா இருக்காரு...

பிரதாப்புக்கு ஒரு (மட்டன்) பிரியாணி சட்டி பார்சல்ல்ல்ல்ல்ல்..

பி.ஏ.ஷேக் தாவூத் said...

வினவு என்ற முற்போக்கு வேடமிட்ட மாவோயிஸ்ட்டு மரமண்டைகளின் இணையதளத்தின் வேஷம் கலைகின்றது.
தொடர்ந்து முற்போக்கு வேஷம் போட முயற்சிக்கும் இவர்களை மக்கள் முன் அம்பலப்படுத்துவதற்கான முதல் முயற்சி.
http://athikkadayan.blogspot.com/2010/01/blog-post_6141.html

சீமான்கனி said...

100/100....

ஜெய்லானி said...

///நாம‌ பாட்டுக்கு ந‌ம்ம‌ வ‌ழியில‌ போயிக்கிட்டு இருக்கும்போது பெண் சுத‌ந்திர‌ம் பேசுறேன் பேர்வ‌ழின்னு வெட்டியா எழுதுற‌த‌ நினைச்சா சிரிப்பு தான் வ‌ருது..///
சிலப்பேரோட வேலையே இதுதானே..

SUFFIX said...

விமர்சிப்பவர்கள் எப்படி வேண்டும் என்றாலும் விமர்சிக்கலாம், தாங்கள் கூறியது போல நமக்கென ஒரு கொள்கை, விருப்பம் என சில இருக்கும், அதனை பின்பற்றுவதால் மற்றவர்களுக்கு எந்த தொந்தரவோ, பிரச்ணையோ இல்லையெனில் நாம் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும். தாங்கள் சந்தித்த நிறுவன‌ங்கள், அதன் மேலாள்ர்கள், அவர்களின் மனமுதிர்ச்சியை பாராட்டியே ஆகவேண்டும்!! பக்குவமாக சமைத்த பிரியாணி. வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா said...

/ஹூசைனம்மாவை பாராட்டி ஒரு சட்டி பிரியாணி அனுப்பி வைக்கப்படும்//

நீங்களே செஞ்ச பிரியாணியா? :-(

/அவ‌ங்க‌ளுக்கும் பிரியாணி ச‌ட்டி அனுப்பி வைக்க‌ப்ப‌டும்.. //

பாத்திரம் மட்டுந்தானா? பாவம்!! யப்போ பிரதாப்பு, நல்லா கவனிச்சுக்கோங்க!!

//நாம‌ இய‌ல்பா அணியுற‌ உடைய‌ வெச்சு இவ்வ‌ள்வு பெரிய‌ ச‌ர்ச்சைய‌ உண்டு ப‌ண்ண‌னுமா?//
சுப்ரமண்யசாமி தெரியுமா? திடீர்னு வருவார்; எங்கிட்ட திஸ் ஆதாரம் இருக்கு; தட் சாட்சி இருக்கும்பார்; மீடியாவெல்லாம் பரபரப்பாகும். அப்புறம் ஆளே மாயமாகிடுவார். அதே மாதிரி நிறையபேர் உண்டு.

வெள்ளிநிலா said...

mam, pls read my blog and if you have interst pls let me know your postal address-thanking you

ஸாதிகா said...

//இப்ப‌ சொல்லுங்க‌, நாம‌ இய‌ல்பா அணியுற‌ உடைய‌ வெச்சு இவ்வ‌ள்வு பெரிய‌ ச‌ர்ச்சைய‌ உண்டு ப‌ண்ண‌னுமா? அப்ப‌டி ப‌ண்ணுற‌வ‌ங்களுக்கெல்லாம் ப‌தில் சொல்லி மாளாது. ஆனா அமைதியா இருந்தா ஒருவேளை அதெல்லாம் உண்மை போல‌ ஆகிடுமோன்னு தான் இந்த‌ ப‌திவு.//ம்ம்..நடத்துங்க நாஸியா

Menaga Sathia said...

//இப்ப‌ சொல்லுங்க‌, நாம‌ இய‌ல்பா அணியுற‌ உடைய‌ வெச்சு இவ்வ‌ள்வு பெரிய‌ ச‌ர்ச்சைய‌ உண்டு ப‌ண்ண‌னுமா? அப்ப‌டி ப‌ண்ணுற‌வ‌ங்களுக்கெல்லாம் ப‌தில் சொல்லி மாளாது. ஆனா அமைதியா இருந்தா ஒருவேளை அதெல்லாம் உண்மை போல‌ ஆகிடுமோன்னு தான் இந்த‌ ப‌திவு.//ம்ம்ம்ம் 100/100....

Pebble said...

பிரியாணியின் சுவையை; ஒன்று பிரியாணி செய்பவர்களிடம் கேட்க வேண்டும், இல்லையெனில் பிரியாணி சாப்பிடுபவர்களிடம் கேட்க வேண்டும். பிரியாணியை எட்ட நின்று வேடிக்கை பார்த்து கொண்டு சாப்பிடாமல், பிரியாணியா அது நல்லா இருக்கது என்று கூறுபவர்களை பார்த்தால் சிரிக்கத்தான் தோன்றுகிறது ......ஹிஜாபை பற்றி, ஹிஜாப் அணியும் பெண்களிடம் கேட்க வேண்டும்.........இன்னும் எழுதலாம்......மரமண்டைகளுக்கு புரிந்தால் சரி.

Chitra said...

இது வ‌ரைக்கும் நான் க‌ட‌ந்து வ‌ந்த‌ இட‌ங்க‌ள் ப‌ல‌வ‌ற்றிலும் நான் ச‌ந்தித்த‌ ம‌னித‌ர்க‌ள் ப‌ல‌ர் என்னை க‌ண்ணிய‌மாக‌வே ந‌ட‌த்தினாங்க‌. அவங்க பார்த்தது என் அறிவை மட்டும்தான். ஒரு பெண்ணாக‌ நான் விரும்பிய‌ ப‌டிப்புகளை ப‌டிக்க‌ முடிந்த‌து, நான் விரும்பிய‌ வேலையை செய்ய‌ முடிந்த‌து‍: அத்த‌னையும் என் ஹிஜாபோடு.
.................பட பட என்று யோசிக்க வைக்கிற விஷயங்களை பகிர்ந்து கொள்கிறீர்கள்.

நட்புடன் ஜமால் said...

அதே மாதிரி ஆண்களை அடிமைப்படுத்துற‌ ச‌ர்ச்சைக்குரிய‌ விஷ‌ங்க‌ளான‌ கோட்டு சூட்டு, டைய‌ ப‌த்தி எல்லாம்]]

ஆமாங்க என்னா கொடுமைங்க இதெல்லாம்.

தமிழ்ன்னு நான் சொல்லிக்கிடறேன் - தமிழ்ல்ல தட்டச்சவும் பழகுறேன் - ஆனா பாறுங்க பேண்ட், கோர்ட்டு ஜூட்டுன்னு தான் போடுறேன், ஆபிஸுக்கு போகும் போது போடுறேன் அங்க ஒத்துகிட மாட்டாங்க - சரி - அது மட்டுமா - ஸ்பென்ஜர் பிளாஜா போனாலும் பேண்டு தான், ஜினிமாவுக்கு போனாலும் பேண்டு தான் - இந்த கலாச்சாரமெல்லாம் எங்கிருந்து எனக்கு வந்துச்சுன்னே பிர்லீங்க - எதுனா வைத்தியம் இருக்குங்களா ...

நாஸியா said...

நன்றி பராரி, சீமான் கனி, ஜைலானி, ஷஃபிக்ஸ், ஸாதிகா, மேனகாசத்தியா, அனானி
, சித்ரா

நாஞ்சிலாரே உங்க அப்ரோச் எனக்கு புடிச்சிருக்கு... உங்களுக்கு ஒரு சட்டி பார்சல் (நான் செஞ்சதுன்டா பரவாயில்லையா? )

ஹூசைனம்மா நான் செஞ்ச பிரியாணி தான்.. வேற வழியே இல்லை

வெள்ளிநிலா: நன்றி.. உங்கள் முயற்ச்சி பாராட்டுக்குரியது

ஆமா ஜமாலண்ணே.. உங்களுக்கும் ஒரு சட்டி......

குடுகுடுப்பை said...

இந்த கலாச்சாரமெல்லாம் எங்கிருந்து எனக்கு வந்துச்சுன்னே பிர்லீங்க - எதுனா வைத்தியம் இருக்குங்களா ...
//
All are Man Made, Change and amendments should be there on anything based on needs.

செ.சரவணக்குமார் said...

அருமையா எழுதியிருக்கீங்க நாஸியா. நிறைய எழுதுங்கள்.

நாஸியா said...

குடுகுடுப்பை‍, நீங்க எந்த கலாச்சாரத்தை சொல்றீங்கன்னு தெரியலையே சகோதரரே..

Whatever man made may require change. But not what we believe as God made.. :)

நன்றி சரவணகுமார் அவர்களே!

அன்புத்தோழன் said...

ஹ்ம்ம்... பிரியாணி என்னங்க.... ஆப்பம், இடியாப்பம், வட்லாப்பம், ஊத்தப்பம், இப்டி எது வந்து சொன்னாலும் இவிங்க திருந்தவே மாட்டனுங்க.... சம்மந்த பட்டவங்களே சந்தோசமா ஏத்துக்றாங்க.... இவிங்களுக்கு எதுக்கு வெட்டி வேல.... இன்னும் நல்லா நாக்க புடின்கிற மாத்ரி கேளுங்க நாஸியா...

ஷாகுல் said...

ஆமாங்க! பொன்னுங்க எல்லாம் டிசர்ட் ஜீன் போட்டுகிடுதான் ஆபீசுக்கு வருதுக. நாங்க அப்படி வந்த டேமேஜர் கூப்டு வார்ன் பன்றாரு.இதுக்காக நிங்க போராடுறத நெனச்சா.நன்றி சொல்ல உங்களுக்கு வார்த்தை இல்லை எனக்கு ஆவ்வ்வ்வ்வ்வ்.

S.A. நவாஸுதீன் said...

தலைப்பை பார்த்துட்டு எங்க ஆஃபிஸ்ல மேனேஜர்தான் சொல்றாரோன்னு நினைச்சிட்டு நான் பாட்டுக்கு பதிவ படிக்காம வேலை பார்த்துகிட்டு இருந்திட்டேன்.

////அதே மாதிரி ஆண்களை அடிமைப்படுத்துற‌ ச‌ர்ச்சைக்குரிய‌ விஷ‌ங்க‌ளான‌ கோட்டு சூட்டு, டைய‌ ப‌த்தி எல்லாம் கூட‌ எழுதினா அவ‌ங்க‌ளுக்கும் பிரியாணி ச‌ட்டி அனுப்பி வைக்க‌ப்ப‌டும்..////

ஆமா. பிரியாணி சாப்பிட்டுட்டு சட்டி மட்டும் அனுப்பி வைக்கப்படும். நல்லா கழுவி அனுப்புறதுதான் தண்டனை.

////ஆனா அமைதியா இருந்தா ஒருவேளை அதெல்லாம் உண்மை போல‌ ஆகிடுமோன்னு தான் இந்த‌ ப‌திவு..////

தெளிவா, வெளிப்படையா சும்மா நச்சுன்னு எழுதிட்டீங்க. அப்புறம் மாசக்கணக்குல கடைய பூட்டி வைக்காதீங்க. வெளிய நல்ல பிரியாணி கிடைக்க மாட்டேங்குது. இங்கதான் வரவேண்டியிருக்கு. வாரம் ஒரு தடைவையாவது கடையை தொறங்க.

Jaleela Kamal said...

நானும் இந்த பிரியாணி கடைக்கு வந்து வந்து திரும்பி போய்விட்டேன்.

எல்லாரும் சொல்ல வேண்டியத சொல்லிட்டாங்க.

அவங்க அவங்களும், உங்கள் வேலைய பாருங்க என்பதே ஒரு நச் பதிவு தான். நீங்க சொல்லிருக்கும் விழியத்துக்கு, நானே ஒரு படி பிரியாணி செய்து அனுப்பிடுறேன். இது டேஸ்டி பிரியாணிய விட சூப்பரா இருக்கும்.

Jaleela Kamal said...

( தலைப்பை பார்த்துட்டு எங்க ஆஃபிஸ்ல மேனேஜர்தான் சொல்றாரோன்னு நினைச்சிட்டு நான் பாட்டுக்கு பதிவ படிக்காம வேலை பார்த்துகிட்டு இருந்திட்டேன்)haa haahaa

நாஸியா said...

சகோதரர் அன்புத்தோழன், என்ன பண்ணுறது? தூங்குறவங்கள எழுப்பலாம், தூங்கிட்டு இருக்குற மாதிரி நடிச்சிட்டு இருக்குறவங்கள எப்படி எழுப்ப இயலும்?

ஐயோ ஷாகுல் பாய் ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க. உங்களுக்கும் ஒரு காலம் வரும்

\\தலைப்பை பார்த்துட்டு எங்க ஆஃபிஸ்ல மேனேஜர்தான் சொல்றாரோன்னு நினைச்சிட்டு நான் பாட்டுக்கு பதிவ படிக்காம வேலை பார்த்துகிட்டு இருந்திட்டேன்.\\

லொள்ளு.. அப்படியே வேலை பாத்துட்டாலும் ;)

\\ஆமா. பிரியாணி சாப்பிட்டுட்டு சட்டி மட்டும் அனுப்பி வைக்கப்படும். நல்லா கழுவி அனுப்புறதுதான் தண்டனை\\

சரியா சொன்னீங்க!

\\தெளிவா, வெளிப்படையா சும்மா நச்சுன்னு எழுதிட்டீங்க. அப்புறம் மாசக்கணக்குல கடைய பூட்டி வைக்காதீங்க. வெளிய நல்ல பிரியாணி கிடைக்க மாட்டேங்குது. இங்கதான் வரவேண்டியிருக்கு. வாரம் ஒரு தடைவையாவது கடையை தொறங்க.\\


ஹிஹி.. இன்ஷா அல்லாஹ்.. :)

ஜலீலாக்கா சொல்லிட்டே இருக்கேன், ஆனா கண்டிப்பா உங்க வீட்டுக்கு ஒரு நாள் வரத்தான் போறேன்.. இன்ஷா அல்லாஹ்..

எம்.எம்.அப்துல்லா said...

ஹிஜாப்... பலமுறை பலருக்கும் விளக்கம் சொல்லி அலுத்துப்போய் விட்டது :(

S.A. நவாஸுதீன் said...

///ச‌ர்ச்சைக்குரிய‌ விஷ‌ங்க‌ளான‌ கோட்டு சூட்டு////

விஷங்களான - தெரியாமலே சரியா எழுதிட்டீங்களா. இல்லே தட்டச்சுப் பிழையோ எதுவா இருந்தாலும் இதுதான் சரி.

Unknown said...

Very good article sister...
by
syed rahman, KSA