Sunday, January 31, 2010

கொலைசெய்றபட்டினம்!

தீபா அவங்க சின்ன வயசில ஏமாந்த கதைய ரொம்ப அழகா சொல்லி இருந்தாங்க. அதை படிச்ச உடனே எனக்கும் கொசுவத்தி சுத்த ஆரம்பிச்சிட்டு..


அப்படியே ஒரு பதினைஞ்சு வருஷம் பின்னாடி போனா என்னுடைய அஞ்சாம் வகுப்பறை தெரியும். அப்போ தமிழ் வகுப்பு, நாங்க தான் ஏ செக்ஷனுக்கு போகனும். எப்பவும் போல மிஸ் ஏதோ சொல்லிட்டு இருக்க, நானும் அவளும் கதை அடிச்சிட்டு இருந்தோம். அப்போ நான் அவகிட்ட 'ஏய் உங்க ஊரு பேரு என்னடி'ன்னு கேட்டதுக்கு 'கொலசேரபட்டினம்'ன்னு சொன்னா. எங்கும்மா ஊரு பக்கத்து ஊருதானே அதனால கேள்விப்பட்டிருக்கேன்னு சொன்னேன். அதோட நிக்காம 'ஆமா ஏன்டி உங்க ஊரு பேரு கொலசேரபட்டினம்'?ன்னு கேட்டேன். அப்போ அவ ஒரு பெரிய கதைய சொல்ல ஆராம்பிச்சா.. "அடியேய் உனக்கு தெரியாதா டீ, எங்க ஊருல, அந்த காலத்துல தடியா, சுருட்ட முடியும், பெரிய மீசையும் வெச்ச‌ ஒரு ஆளு கையில‌ அருவாளோட‌ வ‌ர‌வ‌ங்க‌ போற‌வ‌ங்க‌ளையெல்லாம் வெட்டி கொலை செஞ்சிட்டே இருந்தானாம், அத‌னால‌த்தான் எங்க‌ ஊருக்கு கொல‌செய்ற‌ப‌ட்டின‌ம்ன்னு பேரு வ‌ந்துச்சு".

நானும் ந‌ம்ம‌ த‌மிழ் சினிமாவுல‌ வ‌ர்ற‌ வில்ல‌ன் க‌ண‌க்கா ஒரு உருவ‌த்த‌ க‌ற்ப‌னை ப‌ண்ணி (எக்ஸ்ட்ராவா க‌ன்ன‌த்துல‌ ஒரு ம‌ச்ச‌ம் வேற‌) ரொம்ப‌ பய‌ந்த்துட்டு இருந்தேன்.. ஒரு நாள் ரொம்ப‌ ஆர்வ‌ம் தாங்க‌ முடியாம‌ எங்கும்மாகிட்ட‌ போயி "ம்மா அந்த‌ கொலைசெய்ற‌ப‌ட்ன‌த்துல‌ இருந்த‌ கொலைகார‌ன‌ நீங்க‌ பார்த்திருக்கீங்க‌ளாம்மா"ன்னு கேட்டேன்.. உட‌னே எங்கும்மா "அட‌ போலா நீ வேற‌ எவ‌ளோ சும்மா சொல்லிருக்கா"ன்னு சொல்லிட்டு போயிட்டாங்க‌. ம‌றுநாள் ஸ்கூலுக்கு போயி "ஏன்டி எங்கிட்ட‌ பொய் சொன்ன‌"ன்னு கேட்ட‌துக்க்கு கேவ‌ல‌மா என்ன‌ பார்த்து ஒரு சிரிப்பு சிரிச்சா பாருங்க‌..

இப்ப‌ நாங்க‌ பேசினாலும் அதைப்ப‌த்தி சிரிச்சுக்குவோம்.


அந்த‌ ஊரோட‌ பேர் குல‌சேக‌ர‌ப்ப‌ட்டின‌ம். :)

***


எங்க‌ அப்பாக்கு (த‌ந்தையின் தந்தை) பித்த‌ளைக்க‌டை வியாபார‌ம். ம‌த்த‌ பொருளுங்க‌ளோட‌ சேர்த்து சில‌ நேர‌ங்க‌ள்ல‌ பித்த‌ளையில‌ செஞ்ச‌ அழ‌கான‌ பூ ஜாடி, அல‌ங்கார‌ப்பொருட்க‌ள் எல்லாம் வ‌ரும். அப்ப‌டி நான் முத‌ல் வ‌குப்பு ப‌டிக்கும்போது பித்த‌ளையில‌ சொப்பு சாமானும் வந்த்துச்சு. எங்க‌ அப்பா என‌க்கு என் மாமி ம‌க‌ளுக்கும் கொடுத்து விளையாட‌ சொன்னாங்க‌. மாமி ம‌க‌ என்ன‌ விட‌ அஞ்சு வ‌ய‌சு பெரிய‌வ‌ங்க‌. அவ‌ங்க‌ளே எல்லாத்தையும் எடுத்து வெச்சுப்பாங்க‌. ஆனா விளையாடும்போது சேர்ந்து விளையாடுவோம். ஒரு நாள் அவ‌ங்க‌ எப்ப‌வும் போல‌ எடுத்துட்டு போயிட்டாங்க‌. 'ம‌ச்சி, அந்த‌ சொப்பு எங்க‌ ம‌ச்சி'ன்னு கேட்ட‌ப்ப‌ சுவற‌ காமிச்சு 'பாத்தியா இந்த‌ சுவ‌த்துக்குள்ள‌ தான் நான் அதை ஒளிச்சு வெச்சிருக்கேன். அப்புற‌மா எடுத்து த‌ர்றேன்"னு போய்ட்டாங்க‌. அந்த‌ சுவ‌ற்றையே எத்த‌னையோ நாள் ஆசையா பார்த்து பார்த்து எப்ப‌டித்தான் அதை ம‌ற‌ந்து போனேன்னே தெரிய‌ல‌. ஆனா அந்த‌ சொப்பை இன்னொரு த‌ட‌வை பாக்க‌ முடியுமாங்க‌ற‌ ஏக்க‌ம் ம‌ட்டும் இன்னும் போக‌வெ இல்லை.

****

30 comments:

அன்புத்தோழன் said...

ஹ்ம்ம்.... இந்த பதிவுக்கு முதல்ல தீர்ப்பு சொல்ற நாட்டாம நா தானா.... ஹா ஹா.. ஆனாலும் ஏன் பித்தள சொம்ப விட்டுடீங்களே லிஸ்ட்ல,

சரி விளையாடாம seriousa சொல்றேன் கேட்டுகோங்க... எப்டி தான் 5 வயசுன்னு பேசரப்போ 5 வயசாவே மாறி எழுதறீங்களோ தெரில.... குழந்த பேசுன மாதரியே இருந்துச்சு.... நீங்கள் சொல்லும் விதம் ரொம்ப எழிமையா இருக்கு.... குறும்புகள் தொடரட்டும்....

Prathap Kumar S. said...

இருங்க... இருங்க... பேனை ஒருதடவை பார்த்துக்கறேன்...கொசுவத்திசுருள் பதிவுன்னா ஏதாச்சும் சுத்தறதை முதல்ல பார்த்துட்டு அப்புறம்தான் படிக்கனும்...

15 வருஷத்துக்கு முன்னாடி 5ம் கிளாஸ்னா....அப்ப... அட உங்க வயசை ஏங்க நீங்க காட்டிக்கொடுக்கறீங்க??? :):)

அந்த பித்தளை சொம்பு இல்லாம உங்கூரு நாட்டாமை எப்படிங்க தீர்ப்பு சொல்றாரு...:-)

Starjan (ஸ்டார்ஜன்) said...

உடன்குடியை என்னாலே மறக்க முடியல ..

குலசேகரபட்டினத்தையும் சேர்த்து தான் .

நல்லா ஏமாந்துறிக்கீங்க போல ...

பித்தளை சொப்பு கிடைச்சுதா ...

ஸாதிகா said...

ஹை..அப்போ அத்தனை அப்பாவியா இருந்த நாஸியா இப்போ??????

Deepa said...

நீங்களும் என்னைப் போல ரொம்ப அப்பாவியா இருந்திருக்கீங்க. சுகமான பிள்ளைப்பிராய நினைவுகள்.

கொலசேரப்பட்டினம்!!! :-)))
நல்லாவே இருக்கு வார்த்தை மருவல்.
//அந்த‌ சுவ‌ற்றையே எத்த‌னையோ நாள் ஆசையா பார்த்து பார்த்து எப்ப‌டித்தான் அதை ம‌ற‌ந்து போனேன்னே தெரிய‌ல‌. // அச்சோ பாவம்!

அப்துல்மாலிக் said...

ஹா ஹா நல்லதாப்போச்சு போங்க‌

ஜெய்லானி said...

///நான் முத‌ல் வ‌குப்பு ப‌டிக்கும்போது பித்த‌ளையில‌ சொப்பு சாமானும் வந்த்துச்சு.///
ஒன்னாவது படிச்சது இன்னுமும் நினைவு இருக்கா.!!!!!. (மாஷா அல்லாஹ் )

ஜெய்லானி said...

”இதயங்கள் இடமாறிய மர்மம் ஏனோ?
இரண்டு கலரால் ஆனதால் ,இல்லை
துபாய் வாழ்க்கை வெறுத்து விட்டதா.”
நான் வால் பேப்பரை சொன்னேன்........

சீமான்கனி said...

நீங்க வாங்குன பல்பு நல்லா எரிஞ்சுச்சு......
//அப்போ அத்தனை அப்பாவியா இருந்த நாஸியா இப்போ??????//

8-I....

கிச்சான் said...

உங்களோட இந்த பதிவு
என்னையும் என்னுடைய 5 ம் வகுப்புக்கு
.....அந்த இனிமையான பருவத்துக்கு இழுத்து சென்று விட்டது

S.A. நவாஸுதீன் said...

ஹா ஹ ஹா ஹா. கொலைசெய்றபட்டினம் சூப்பர்.

பித்தளை சொம்பு - சந்தோசமாவும் இருக்கு, நெகிழ்வாவும் இருக்கு.

UNIVERSAL said...

Nasiya,

Your post sounds good,keep it up.

SHAHUL,
M # +966 568 200 276

SUFFIX said...

இப்படித்தாங்க ஊருல உள்ளவங்கல பார்த்தா நல்லவங்களா இருப்பாங்க, ஆனா அந்த‌ ஊரு பெயர பார்த்திங்கன்னா பயமுறுத்தும்!!

Jaleela Kamal said...

நாஸியா உங்கள் பதிவு என்னையும் சின்ன வயதில் நாங்க வைத்து விளையாடிய குட்டி குட்டி பித்தளை சாமான் கள், சின்னதா கண்ணாடி வைத்த மர பீரோ சாவியுடன்,நகை பெட்டி. இதேல்லாம் எங்க வீட்டில் கடைசி என்பதால் பத்திர படுத்தி நாங்களும் விளையாடினோம்.அதெல்லாம் இப்ப நினைக்கும் போதும் ரொம்ப பசுமையா இருக்கு....


கொல‌சேக‌ர‌ப்ப‌ட்டின‌ம் , நானும் அப்ப‌டி தான் நினைத்து கொள்வேன்.

பித்தனின் வாக்கு said...

நல்ல பதிவு.எனக்கு மிகவும் பிடித்த ஆழ்வார்களில் ஒருவரான சேரமான் குலசேகர ஆழ்வாரின் பெயரால் அமைந்த நகரின் பெயரை கொலசெய்யற பட்டினமாக மாற்றியது நல்ல நகைச்சுவை.
எல்லாரும் மரப்பாச்சிகளில் இருக்கும் சொப்பில் தான் விளையாடுவார்கள்.பித்தளையில் இருப்பது புதுமை,அருமை. அதைப் போயி குடுத்து விட்டீர்களே. பரவாயில்லை மாமி மகளுக்குத்தான் கொடுத்தீர்கள் அல்லவா.

நாஸியா said...

நாட்டாமை அன்பு தோழன்!! அது சொப்பு, சொம்பு இல்லை... ஹிஹி.. அப்புறம் நன்றி நமக்கின்னும் குழந்தை மனசு தான்.. ;)

நாஞ்சிலாரே என்ன கொடும சார்.. தெரியாம ஒளரிட்டோமோ.. :)

நன்றி அண்ணாமலையான்.. எதுக்கு வாழ்த்துக்கள், ஏமாந்ததுக்கா

ஸ்டார்ஜன், நீங்க உடன்குடியா? ஐ!!!
செப்பு எங்க‌ கிடைச்ச‌து? :(

த‌மிழ் பிரிய‌ன் :)

ஸாதிகா அக்கா.. இப்ப‌வும் அப்பாவி தான். என்ன‌ நாம‌ சொன்னா ஊரு ந‌ம்ப‌ மாட்ருக்கு

ந‌ன்றி தீபா! நீங்க‌ தான் சின்ன‌ வய‌சு நினைவுக‌ளையெல்லாம் கிள‌ரி விட்டுட்டீங்க‌.. :))

நாஸியா said...

அபு அஃப்சர், நன்றி!

ஜைலானி, என்னை முதல்ல ஸ்கூல்ல சேர்த்ததே இன்னும் நல்லா நினைவுல இருக்கு. அல்ஹம்துலில்லாஹ்.. :)

இதயங்கள் இடம் மாறுச்சா? அட நீங்க வேற நீட்டா ஒரு டெம்ப்ளேட் தேடினேன், எனக்கு பின்க் கலர் பிடிக்கும் அதனால் போட்டுட்டேன்.. துபாய் வாழ்க்கையோ சென்னை வாழ்க்கையோ எல்லாமே அல்லாஹ்வின் அருள்.. நிச்ச‌ய‌ம் வெறுக்க‌ மாட்டேன் இன்ஷா அல்லாஹ்

சீமாங்க‌னி!! ஆமா பல்ப் வாங்குற‌து எல்லாம் ந‌ம‌க்கு ப‌ன்னு வாங்குற‌ மாதிரி

ந‌ன்றி கிச்சான் :)

ந‌வாஸ் காக்கா அது சொம்பு இல்லை சொப்பூ!!!!! ந‌ன்றி :)

ந‌ன்றி யூனிவ‌ர்ச‌ல்!

ஷ‌ஃபிக்ஸ் கா நீங்க‌ அந்த‌ ஊரா?

சின்ன‌தா க‌ண்ணாடி வைத்த‌ ம‌ர‌பீரோவா? என‌க்கு அது வேணும் ஜலீல்லாக்கா........ என‌க்கு இப்ப‌வும் குட்டி குட்டி சாமான் சேக‌ரிக்குற‌துல‌ ஒரு பெரிய‌ ஆர்வம்.. எந்த‌ ஊருக்கு போனாலும் குட்டி குட்டி டப்பாக்க‌ள் வாங்கி வெச்சுப்பேன்

ந‌ன்றி ச‌கோத‌ர‌ர் சுதாக‌ர்..த‌மிழ்நாட்டுல‌யே த‌ச‌ரா கொண்டாட‌ப்ப‌டுற‌ ஒரே ஊரும் அது தானாமே!

அன்புத்தோழன் said...

/அது சொப்பு, சொம்பு இல்லை/

அட அதுக்கு பேரு சொப்பா... சொல்லவே இல்ல எவனும்... சரி விடுங்க.... lighta ஸ்பெல்லிங் மிஸ்டேக்கு, அத சொல்லி காட்டி அசிங்க படுத்தறீங்க பாத்தீங்களா... இதுக்கெல்லாம் அசர்ர ஆள் நா இல்ல.... அரசியல்ல இதுலாம் சாதாரணமப்பா...

ஹுஸைனம்மா said...

//அதோட நிக்காம 'ஆமா ஏன்டி உங்க ஊரு பேரு கொலசேரபட்டினம்'?ன்னு கேட்டேன்.//

அதானே, நமக்கெல்லாம் இந்த காரணகாரியம் தெரிஞ்சுக்கலைன்னா தலை வெடிச்சுருமே!! சேம் பிளட்!!

//சொப்பை இன்னொரு த‌ட‌வை பாக்க‌ முடியுமாங்க‌ற‌ ஏக்க‌ம்//

மச்சியைப்ப் பிடிச்சு ஒரு உலுக்கு உலுக்கினா வந்துடப்போவுது. இதுக்கெல்லாமா ஏக்கப்பட்டுகிட்டிருக்கது?

எம்.எம்.அப்துல்லா said...

:)

Chitra said...

அந்த மச்சி, சொப்பு விஷயத்துல இப்படி ஆப்பு வச்சுட்டாங்களே. அப்புறம், கிடைச்சுதா?
ஊரு பேரு மருவி வந்து சிரிப்பை தந்தது.

ஷாகுல் said...

:)

ஷாகுல் said...

:)

Sakthi said...

ennavo nadakkuthu marmama irukkuthu

Sakthi said...

கேவ‌ல‌மா என்ன‌ பார்த்து ஒரு சிரிப்பு சிரிச்சா பாருங்க‌.. //

enakku munnadiye yaaro sirichuttanga pola......

நட்புடன் ஜமால் said...

நல்லா வாங்கியிருக்கியளே பல்பு

அந்த சொப்பு கிடைக்கட்டும் உங்களுக்கு மீண்டும்.

நாஸியா said...

அன்பு தோழன் அவர்களே, பாருங்க நீங்க சொம்புன்னு சொல்ல எல்லாரும் அதையே ஃபாலோ பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.. :))

ஹிஹி.. ஹூசைனம்மா.. நம்மள சரியா புரிஞ்சு வெச்சிருக்கீங்களே.. மச்சிக்கு இன்னும் நினைவிருக்கான்னே தெரியலயே...

அப்துல்லாஹ் & ஷாகுல் :))

நன்றி சித்ரா.. அது எங்க கிடைச்சது?


ச‌க்தி சார் என்ன‌ சார் ந‌ட‌க்குது இங்க‌?

ஜ‌மால‌ண்ணே.. இன்ஷா அல்லாஹ்.. பார்ப்போம் கிடைக்குதான்னு

அன்புடன் மலிக்கா said...

ஆகா நடந்தது கண்முன்னாலே தெரியுதே! மச்சிக்கு நினைவிருக்கும் ஒரு போனப்போட்டு கேட்போமா?

Deepa said...

தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.
:)
http://deepaneha.blogspot.com/2010/02/few-pages-from-my-teenage-diary.html

ஜெய்லானி said...

ஊரில் தான் இருக்கீங்களா ???? ஆளையே கானோமே!!! ஏதாவது எழுதுங்க