Saturday, May 15, 2010

முஸ்லிம் பெண்கள் சம்பாத்தியம்!

சகோதரி சந்தனமுல்லை அவர்கள் முஸ்லிம் பெண்கள் சம்பாதிப்பது ஹராமா என்று ஒரு இடுகையெழுதி அதைப்பற்றி என்னுடைய கருத்தையும் (நம்மளையும் மதிச்சு!!) எழுத சொல்லிருந்தாங்க. நானே எழுதனும்னு நினைச்சிட்டு இருந்தேன், ஆனா எப்பவும் போல என்னுடைய சோம்பல் முடக்கிட்டு. இப்ப நல்லவேளை சகோதரி எழுத சொன்னாங்க. அதனால, சுடச்சுட இந்த பதிவு.


**
முதல்ல ஒரு விஷயம். இஸ்லாத்தை போலவும், நபி சல் அவர்களைப்போலவும் அதிகமான அளவு விமர்சனத்துக்குள்ளான விஷயங்கள் எதுவுமே இல்லைன்னு நினைக்குறேன். முஸ்லிம்கள் எது செய்தாலும் அது விவாதிக்கப்பட வேண்டிய விஷயமாகவே மீடியாக்கள் சித்தரிக்கின்றன என்பது என்னுடைய கருத்து. அதுவும் பெண்க‌ள் விஷ‌ய‌த்தில் பார‌ப‌ட்ச‌மாக‌வே ந‌ட‌க்குதுன்னு நாம கண் முன்ன பார்க்கிற விஷயம்.

ச‌ரி, விஷ‌ய‌த்துக்கு வ‌ருவோம். தாருல் உலூம் என்ற‌ இஸ்லாமிய‌ அமைப்பு, கொஞ்ச‌ நாள் முன்ன‌ 'முஸ்லிம் பெண்க‌ள் வேலைக்கு செல்வ‌து ஹ‌ராம்' அப்ப‌டின்னு ஒரு ஃப‌த்வா சொன்ன‌தாக‌ எங்க‌ பார்த்தாலும் செய்தி ப‌ர‌வி கிட‌ந்த‌து. முஸ்லிம் பெண்கள் ப‌டிப்ப‌தோ, வேலைக்கு செல்வ‌தோ எந்த‌ இட‌த்துல‌யும் ஹ‌ராம் என்று சொல்ல‌ப்ப‌டாத‌போது எப்ப‌டி இப்ப‌டி ஒரு ஃப‌த்வா வ‌ந்துச்சுன்னு ஒரே குழ‌ப்ப‌ம். பிற‌கு பார்த்தா தான் தெரியுது, இதுவும் மீடியாக்க‌ளின் கைங்க‌ரிய‌ம் தான். ச‌மீப‌மாக‌ வ‌ந்த‌ செய்திக‌ளில் அப்ப‌டி ஒரு 'ஃப‌த்வாவை சொல்ல‌வில்லை, பெண்க‌ள் வேலை செய்யுமிட‌த்தில் பேண வேண்டிய‌ ஹிஜாபை ப‌ற்றித்தான் சொல்லிருந்தோம்' என்று ம‌றுப்பு தெரிவிச்சிருக்காங்க‌.


**

ச‌ரி. இப்ப‌ முஸ்லிம் பெண்க‌ள் வேலைக்கு செல்ல‌லாமா? செல்ல‌க்கூடாதா? இஸ்லாம் இதைப்ப‌த்தி என்ன‌ சொல்லுது?


ஒருத்த‌ர் முஸ்லிம் என்று சொன்னால் அவ‌ர் எல்லாம் வ‌ல்ல‌ இறைவ‌னுக்கு முற்றிலும் அடிப‌ணிந்த‌வ‌ராவார். ஆங்கில‌த்துல‌ சொல்ல‌னும்னா 'டோட்ட‌ல் ச‌ப்மிஷ‌ன் டு அல்லாஹ்'. இதில் ந‌ம்ம‌ வாழ்க்கையோட‌ ஒவ்வொரு செய‌ல்க‌ளுமே இறைவ‌ண‌க்க‌ம் தான். காலையில‌ தூங்கி எழுவ‌திலிருந்து, இர‌வு தூங்க‌ செல்லும் வரை பல் துலக்குவதிலிருந்து சாப்பிட்ட பிறகு கை கழுவுவது வரை, வியாபாரம் செய்வதில் இருந்து ஒருத்தர் வீட்டு விருந்துக்கு நாம போன நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் வரை நாம‌ செய்ய‌க்கூடிய‌ ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ளை எப்படி ஒழுங்கோட‌ செய்வ‌துன்னு இஸ்லாத்தில் ந‌ம‌க்கு க‌ட்டளை/அறிவுரை இருக்கு. வெளிய‌ இருந்து பார்க்கும்போது இது ரொம்ப‌ பிற்போக்குத்த‌ன‌மா தெரிய‌லாம். ஆனா 1400 வருஷ‌ங்க‌ளாக‌ இறைத்தூத‌ர் முஹ‌ம்ம‌து ந‌பி (ச‌ல்) அவ‌ர்க‌ளை பின்ப‌ற்றுவ‌தில் இன்றிருக்கும் கோடிக்க‌ண‌க்கான‌ முஸ்லிம்க‌ளுக்கு எந்த‌ சிர‌ம‌மும் இல்லை.


அப்ப‌டி, ஆண்க‌ள், பெண்க‌ள் என‌ சேர்த்தியாக‌வும், த‌னித்த‌னியாக‌வும் ம‌னித‌ர்க‌ளுக்கு ப‌ல‌ க‌ட்டுபாடுக‌ள் இஸ்லாத்தில் இருக்கு.


ஒரு குடும்ப‌ம் என்றால், அதில் தாய்‍,த‌க‌ப்பனுக்கும், பிள்ளைக‌ளுக்கும் ப‌ல‌ கட‌மைக‌ள் இருக்கு. இஸ்லாத்தில் என்ன‌தான் ம‌னைவி ப‌ண‌க்காரியாக‌ இருந்தாலும், ச‌ம்பாதிப்ப‌வ‌ளாக‌ இருந்தாலும், குடும்ப‌த்தின் ப‌ராம‌ரிப்புக்கு ச‌ம்பாதிக்க‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம் க‌ண‌வ‌னுக்கு ம‌ட்டுமே இருக்கு. ம‌னைவி தான் ச‌ம்பாதிக்கிறாளேன்னு க‌ண‌வ‌ன் ஜாலியா இருக்க‌ முடியாது. அதே போல‌, ம‌னைவி ச‌ம்பாதிப்ப‌தில் அவ‌ள் குடும்ப‌த்திற்கு செல‌வு செய்ய‌ க‌ட‌மை இல்லை.
அதாவ‌து, ஒரு குடும்ப‌த்தில‌ க‌ண‌வ‌ன், ம‌னைவி இருவ‌ரும் ச‌ம்பாதிச்சாலும், ம‌னைவிக்கு குடும்ப‌த்துக்காக‌ செல‌வு செய்ய‌னும்கிற‌ அவ‌சிய‌மே இல்லை. அப்ப‌டிக்க‌ட்டாய‌ப்ப‌டுத்த‌ க‌ண‌வ‌னுக்கோ, இல்லை அவ‌ள் த‌க‌ப்ப‌னுக்கோ, பிள்ளைக‌ளுக்கோ இன்னும் வேறு யாருக்குமே உரிமை இல்லை.

இப்ப‌டி ஒரு க‌ட்ட‌ளை இருக்கும்போதே நாம‌ தெரிஞ்சுக்க‌லாம், பெண்க‌ள் வேலைக்கு போவ‌தையும், ச‌ம்பாதிப்ப‌தையும் இஸ்லாம் எந்த‌ வித‌த்திலும் த‌டுக்க‌வில்லை. இன்னும் சொல்ல‌ப்போனா இப்ப‌டி ஒரு க‌ட்ட‌ளை தான் எனக்கு க‌ண்டிப்பா ச‌ம்பாதிக்க‌னும்கிற‌ ஆசைய‌ தூண்டிச்சே. பின்ன‌, நாம‌ ச‌ம்பாதிச்ச‌த‌ ந‌ம்ம‌ இஷ்ட‌ப்ப‌டி செல‌வு செய்ய‌லாம்தானே? (ஆனா அதை நேர்வ‌ழியில் செல‌வு செய்வ‌து முக்கிய‌ம். ஏன்னா அதைத்தந்த‌ இறைவ‌னுக்கு நான் ப‌தில் சொல்ல‌னுமில்லையா?)

ச‌ரி, அப்ப‌ ஏன் பெண்க‌ள் வேலைக்கு போற‌த‌ ப‌த்தி எந்த‌ வித‌ க‌ட்டுப்பாடும் இல்லையா? இருக்கு. எப்ப‌டி ஒரு ஆணுக்கு குடும்ப‌த்திற்க்காக‌ ச‌ம்பாதிப்ப‌து க‌டைம‌யோ, அதே போல‌ ஒரு பெண்ணுக்கு குடும்ப‌த்தை பார்த்துக்கொள்வ‌து கட‌மையாகிற‌து. இரண்டையும் சமாளிக்க முடியும்னா தாராளமா வேலைக்கு போகலம்.

உடனே, பெண்கள் என்றால் சமையல் கட்டுதானா, அப்படித்தானா இப்படித்தானா என்று குதிப்போம். நமக்கு சமையல் போர் என்றால், அதே போல எத்தனை ஆண்கள் சம்பாதிச்சு தான் ஆக வேண்டும் என்று பிடிக்காத வேலையைக்கூட குடும்பத்திற்க்காக கஷப்படுறாங்க? துபாய் மாதிரி வளைகுடா நாடுகள்ல வீட்டு சாப்பாடு கூட கிடைக்காம அவங்க குடும்பம் நல்லா இருக்கனும் என்று எவ்வள்வு கஷ்டப்படுறாங்க? அதை பார்க்கும்போது வீடும், சமையலும் ஒண்ணுமில்லைன்னு தான் நான் சொல்லுவேன்.வேலை செய்யும் இட‌த்திலும் க‌ண்டிப்பாக‌ ஹிஜாபை பேண‌ வேண்டும். நான் கேம்ப‌ஸ் இன்ட‌ர்வியூக்க‌ளுக்கு போகும்போது ப‌ல‌ர் என்னிட‌ம் கேட்ட‌து, 'ஹிஜாப் போட‌க்கூடாதுன்னு சொன்னா என்ன‌டீ ப‌ண்ணுவே?' 'அப்ப‌டிப்ப‌ட்ட‌ வேலை என‌க்கு தேவையில்லைன்னு சொல்லுவேன்'. ஏன்னா, வேலைன்னு வ‌ந்துட்டா, ம‌ண்டைக்குள்ள‌ இருக்குற‌து தான் முக்கிய‌மே ஒழிய‌, ஆடைக்குள்ள‌ இருக்குற‌து இல்ல‌.அடுத்த‌தா, அள‌வுக்க‌திக‌மான‌ சோஷிய‌லைசிங் இருக்க‌க்கூடாது. ஆண்க‌ளிட‌ம் பேசும்போது ந‌ம்முடைய‌ பேச்சு வெறும் வேலையை ப‌ற்றி ம‌ட்டும் இருக்க‌ வேண்டுமே ஒழிய‌ வீண் அர‌ட்டைக‌ளுக்கு நோ. நான் என் அலுவ‌ல‌க‌த்தில் சேர்ந்த புதிதில் அவுட்டிங்க் எல்லாம் என‌க்கு வ‌ர‌ விருப்ப‌மில்லை என்று சொன்னேன். என்னை ம‌தித்தார்க‌ள். :)

அதோட‌ ரொம்ப‌ முக்கிய‌ம், ந‌ம்முடைய‌ க‌டமையான‌ தொழுகையையும் பேண‌ அனும‌திக்க‌னும். இது ஆண்க‌ளுக்கும் பொறுந்தும். நாம் இதை கேட்ப‌து கொஞ்சம் ஓவ‌ர் தான். இருந்தாலும் ச‌மாளிப்ப‌து ந‌ம்முடைய‌ க‌ட‌மை. ஒரு நாளைக்கு எத்த‌னையோ டீ ப்ரேக் எடுக்கும்போது ஐந்து நிமிட‌ங்க‌ள் தொழுவ‌த‌ற்கு எடுப்ப‌து ஒன்றும் பெரிய‌ விஷ‌ய‌மில்லை. இந்த விஷயத்தில் புத்திசாலித்தனமாக இருப்பது நம் கடமை


என்னைப்பொறுத்த வரைக்கும், நான் இஸ்லாத்தின் எல்லைக்குள் என்னால் இயன்ற வரை நான் நினைத்ததை செய்துக்கொண்டு தான் இருக்கிறேன்.முன்பே சொன்னது போல, ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விஷயத்தில் எந்த சமரசமும் செய்துக்கொள்ள மாட்டார்கள். என்னைப்பொறுத்த வரைக்கும் இறைவன் எனக்கிட்ட கட்டளைகளை நான் எந்த விதத்திலும் காசு, பணத்துக்காக விட்டுக்கொடுக்க மாட்டேன். அதனால, என்னுடைய இத்தனை கட்டுபாடுகளையும் புரிந்துக்கொள்ளும் நிறுவனத்தில் சேர பொறுமையாகவே இருந்தேன்.


இப்பல்லாம் காலையில் ஒன்பது மணிக்கு போயி, ஐந்து மணிக்கு வீட்டுக்கு வரும் வேலை கிடைப்பது குதிரைக்கொம்பு. ஆனா, நாம நம்ம பாஸிடம் எடுத்து சொன்னால் கண்டிப்பாக புரிந்துக்கொள்வார்கள். வேலை அதிகமா இருந்தா வீட்டுக்கு போய் செய்ய சொல்லுவாங்க. என் விஷ‌த்தில் இது ந‌ட‌ந்திருக்கு.
ஒரு குடும்பம் என்றால் அதில் கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் புரிந்துக்கொண்டு, ஒருத்தர் கடமைய இன்னொருத்தர் செய்ய உதவனும். இதற்கு அழகிய உதாரணம் இறைத்தூதர் முஹம்மது நபி சல் அவர்களுடைய மனைவிமார்களிடம் வீட்டு வேலைகளில் எவ்வளவு உதவியாக இருந்தார்கள் என்பது. வேலை செய்யலன்னா கூட வீட்டு வேலைகளில் உதவி செய்யும்போது வேலை செய்யும் மனைவிக்கு உறுதுணையாக இருப்பதுதான் ஒரு நல்ல கணவனின் அடையாளம்.

வேலை செய்வது மட்டுமில்லாம சொத்துரிமை (குடும்பத்திற்காக செலவு செய்யும் கட்டாயம்/கடமை இல்லைன்னா கூட நமக்கெல்லாம் சொத்தில் பாதி பங்கு இருக்குங்கோவ்!), திருமணம், விவாகரத்து, இன்னும் பல விஷயங்களில் பெண்களுக்கு எத்தனையோ உரிமைகளும் சலுகைகளும் இஸ்லாத்தில் இருக்கு. இஸ்லாத்தை சரியா புரிந்துக்கொள்ளாதவர்களும், ஒழுங்கா கடைப்பிடிக்காதவர்களும் இஸ்லாத்தின் பேரால் செய்யும் தவறுகளுக்காக மீடியாக்களுக்கு தீனியாகின்றனர் என்பது தான் வருத்தம்.

66 comments:

எம்.எம்.அப்துல்லா said...

//அதே போல எத்தனை ஆண்கள் சம்பாதிச்சு தான் ஆக வேண்டும் என்று பிடிக்காத வேலையைக்கூட குடும்பத்திற்க்காக கஷப்படுறாங்க? //

:)

Dr.Rudhran said...

interesting ஆனால் இன்னும் எழுதியிருக்கலாம்.

SUFFIX said...

தங்களைப் போன்றோர்களின் விளக்கம் மேலும் தெளிவை தருகின்றது. வாழ்த்துக்கள்!!

Ahamed irshad said...

தெளிவான கருத்து.. புரியாதவர்களுக்குகூட புரிந்திருக்கும்..

Barari said...

சகோதரி நாஜியா உங்களை போன்ற சகோதரிகள் மார்க்க விசயத்தில் இருக்கும் தெளிவு அறிந்து மனம் மகிழ்ச்சி அடைகிறது.அன்னை ஆயிஷா போன்று தங்களுக்கு மார்க்க அறிவை அளித்திட இறைவனிடம் வேண்டுகிறேன்.ஆண்டவன் தங்களுக்கு அருள் செய்திடுவானாக.ஆமீன்.

ஜெய்லானி said...

நமக்கு வேதனை என்னன்னா ? இஸ்லாத்தை பத்தி தெரியாமலேயே , இல்ல படிக்காமலேயே வீண் தர்கம் பண்ணுறவங்களை பத்திதான். இஸ்லாத்தில பெண்களுக்குள்ள சலுகை மாதிரி வேற எங்குமே இல்லை.

இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம்.( மாசத்துக்கு ரெண்டுன்னு கணக்கு வச்சிருக்கீங்க போல ஹி..ஹி..)

அன்புத்தோழன் said...

//வளைகுடா நாடுகள்ல வீட்டு சாப்பாடு கூட கிடைக்காம அவங்க குடும்பம் நல்லா இருக்கனும் என்று எவ்வள்வு கஷ்டப்படுறாங்க?//

// 'ஹிஜாப் போட‌க்கூடாதுன்னு சொன்னா என்ன‌டீ ப‌ண்ணுவே?' 'அப்ப‌டிப்ப‌ட்ட‌ வேலை என‌க்கு தேவையில்லைன்னு சொல்லுவேன்'. ஏன்னா, வேலைன்னு வ‌ந்துட்டா, ம‌ண்டைக்குள்ள‌ இருக்குற‌து தான் முக்கிய‌மே ஒழிய‌, ஆடைக்குள்ள‌ இருக்குற‌து இல்ல‌//

//ஆண்க‌ளிட‌ம் பேசும்போது ந‌ம்முடைய‌ பேச்சு வெறும் வேலையை ப‌ற்றி ம‌ட்டும் இருக்க‌ வேண்டுமே ஒழிய‌ வீண் அர‌ட்டைக‌ளுக்கு நோ.//


//ஒரு நாளைக்கு எத்த‌னையோ டீ ப்ரேக் எடுக்கும்போது ஐந்து நிமிட‌ங்க‌ள் தொழுவ‌த‌ற்கு எடுப்ப‌து ஒன்றும் பெரிய‌ விஷ‌ய‌மில்லை//

//வேலை செய்யும் மனைவிக்கு உறுதுணையாக இருப்பதுதான் ஒரு நல்ல கணவனின் அடையாளம்//

//இஸ்லாத்தின் பேரால் செய்யும் தவறுகளுக்காக மீடியாக்களுக்கு தீனியாகின்றனர்//

On top of all, these are the most impressive points you made.

Masha Allah..

ரவி said...

ஆனால் ஒரு வரையறை வகுத்து அதில்தான் பெண் இருக்கவேண்டும் என்று கட்டளையிட அவர்கள் யார் என்பதே கேள்வி ?

ரவி said...

&&இஸ்லாத்தில பெண்களுக்குள்ள சலுகை மாதிரி வேற எங்குமே இல்லை.
^^^

ஏன் சலுகை தரவேண்டும் ? அவர்களும் மனிதர்கள் தானே ? சலுகை தர நீங்கள் யார் ?

ரவி said...

&&&'ஹிஜாப் போட‌க்கூடாதுன்னு சொன்னா என்ன‌டீ ப‌ண்ணுவே?' 'அப்ப‌டிப்ப‌ட்ட‌ வேலை என‌க்கு தேவையில்லைன்னு சொல்லுவேன்'. ஏன்னா, வேலைன்னு வ‌ந்துட்டா, ம‌ண்டைக்குள்ள‌ இருக்குற‌து தான் முக்கிய‌மே ஒழிய‌, ஆடைக்குள்ள‌ இருக்குற‌து இல்ல‌&&&&

ஒரு அடிமை தான் அடிமை என்று உணரும்வரை பகுத்தறிவை புகட்டுவது கடினம். ஏற்கனவே அடிமைத்தனத்தால் கோப்பை நிரம்பி வழிகிறதே ?

ரவி said...

&&இஸ்லாத்தின் பேரால் செய்யும் தவறுகளுக்காக மீடியாக்களுக்கு தீனியாகின்றனர்^^

அப்போ முல்லாக்கள் பெண்களை கல் எறிவதை பின்னால் அடிப்பதை மீடியாக்கள் காட்டக்கூடாதா ?

Asiya Omar said...

அருமையான விளக்கம் நாஸியா.பாராட்டுக்கள்.நிறைய எழுதுங்கள்.தெளிவாக இருக்கும் உங்களப்போன்ற பெண்களின் எழுத்து இஸ்லாத்திற்கு தேவை.தேவையற்ற குழப்பம் விளைவிக்கும் விசாலமற்ற மனதுடையவர்களை நினைத்து வருந்துகிறேன்.

சீமான்கனி said...

மாஷால்லாஹ்...
நிச்சயம் நிறைய பேருக்கு தெளிவு பிறந்திருக்கும்...சிறப்பான பதிவு...வாழ்த்துகள்...

நாஸியா said...

நன்றி அப்துல்லாஹ் காக்கா

நன்றி சகோதரர் ருத்ரன்

நன்றி சஃபிக்ஸ் பாய்

நன்றி சகோதரர் இர்ஷாத்

ஜஸகல்லாஹு க்ஹைர் சகோ பராரி. இறைவன் நம் அனைவருக்கும் ஹிதாயத் தருவானாக.

நன்றி சகோதரர் ஜெய்லானி.. ஹ்ம்ம் இன்ஷா அல்லாஹ் முயற்ச்சி பண்றேன்

நன்றி சகோதரர் அன்புத்தோழன்

நாஸியா said...

சகோதரர் செந்தழல் ரவி,

\ஆனால் ஒரு வரையறை வகுத்து அதில்தான் பெண் இருக்கவேண்டும் என்று கட்டளையிட அவர்கள் யார் என்பதே கேள்வி \

\ஏன் சலுகை தரவேண்டும் ? அவர்களும் மனிதர்கள் தானே ? சலுகை தர நீங்கள் யார் ?\

கட்டளை நான் நம்பும் இறைவனிடம் இருந்து வந்தது.. அவன் தந்த அருளின் மீதும் சலுகைகள், சோதனைகள் மீதும் நான் நம்பிக்கை வைத்துள்ளேன்.

\ஒரு அடிமை தான் அடிமை என்று உணரும்வரை பகுத்தறிவை புகட்டுவது கடினம். ஏற்கனவே அடிமைத்தனத்தால் கோப்பை நிரம்பி வழிகிறதே \

ஹிஹி.. ஒரே ஜோக்கு போங்க! தன்னுடைய மதிப்பும் கவுரவமும் தன் அகத்தோற்றத்தைக்கொண்டே பிற மனிதர்களால் தீர்மானிக்கப்படுகிறது என்று நம்புவதே அடிமைத்தனம்! இந்த‌ ச‌மூக‌த்தில் என‌க்கு கிடைத்த‌ ம‌ரியாதை என் அறிவைக்கொண்டே என்று சொன்னால் உங்க‌ளுக்கு அடிமைத்த‌ன‌மாக‌ தெரிகிற‌தோ?

இன்னொன்றும் சொல்கிறேன். நான் இறைவ‌ன் ஒருவ‌னுக்கு அடிமை. எல்லா முஸ்லிம்க‌ளும் அப்ப‌டித்தான். இதை நாங்க‌ள் பெருமையாக‌வே நினைக்கிறோம்.

\அப்போ முல்லாக்கள் பெண்களை கல் எறிவதை பின்னால் அடிப்பதை மீடியாக்கள் காட்டக்கூடாதா ? \

ஒருவ‌ர் த‌வ‌று செய்தால் அதை மீடியாக்க‌ள் தார‌ள‌மாக‌ வெளிச்ச‌ம் போட்டுக்காட்ட‌ட்டும். நான் வேண்டாம் என்று சொல்ல‌வில்லையே. ஆனால் மீடியாக்க‌ளின் பார‌ப‌ட்ச‌த்தை ப‌ற்றி நான் ஒன்றும் சொல்வ‌த‌ற்கில்லை.

இஸ்லாத்தில் த‌வ‌று செய்தால் ஆண், பெண் என்ற‌ பார‌ப‌ட்ச‌ம் இல்லை.

*ச‌கோத‌ர‌ரே, உங்க‌ள் கொள்கை உங்க‌ளுக்கு, என் கொள்கை என‌க்கு.*

நாஸியா said...

நன்றி சகோதரி ஆசியா

நன்றி சகோதரர் சீமான் கனி

பாத்திமா ஜொஹ்ரா said...

ரொம்ப நல்ல கருத்துள்ள கட்டுரை அக்கா

அரபுத்தமிழன் said...

Maashaa ALLAH and JazaakiLLAH.

சகோதரி! தெளிவான கருத்துக்கள். இடுகை மட்டுமல்ல பதிலளிப்பதிலும்.

May ALLAH Bless You.

நட்புடன் ஜமால் said...

நல்ல தெளிவு, நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது.

நன்று - நன்றி.

Anonymous said...

alhamdulillah.......arumaiyaana padhivu......ellarkum nalla reminders kuduthadhukku nanri......

ஷாகுல் said...

சகோதரி! தெளிவான கருத்துக்கள். இடுகை மட்டுமல்ல பதிலளிப்பதிலும்.

May ALLAH Bless You.//

வழிமொழிகிறேன்

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

தெளிவான - சரியான பதில் இடுகை.
மிக்க நன்றி.
தங்களுக்கு அல்லாஹ் மென்மேலும் பறக்கத் செய்வானாக. ஆமீன்.

nagoreismail said...

ஸலாமலைக்கும்..
வேலைக்கு போகும் தீன் குலப் பெண்மணியாகிய நீங்கள் எழுதிய இந்த பதி்வு என்பதாலும் வேலைக்கு போவதே ஹராம் என்ற அபத்தமான பத்வாவுக்கு நல்ல பதிலாக அமைந்த வகையிலும் உங்களது இந்த பதிவு மிகவும் முக்கியம் வாய்ந்தது

ரவி said...

விளக்கங்களுக்கு நன்றி !!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி நாஸியா..

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்லதொரு தெளிவான விளக்கங்கள் நாஸியா.

ஹுஸைனம்மா said...

நாஸியா, நல்ல பதிவு. ஆடம்பர மோகத்துக்கு அடிமைப்பட்டு கிடப்பதைவிட, ஆண்டவனுக்கு அடிமைப்படுவது தவறு இல்லை!! தெளிவான விளக்கத்திற்கும், பொறுமையான பதில்களுக்கும் வாழ்த்துக்கள்!!

மின்மினி RS said...

நல்லா சொல்லிருக்கீங்க நாஸியா.

சிநேகிதன் அக்பர் said...

நல்ல பகிர்வு. நன்றி நாஸியா.

Anisha Yunus said...

நாஸியாக்கா...

நானும் அந்த பதிவை இப்போதான் படிச்சு வேகமா பதில் பதிவும் ஒன்னு போட்டுட்டு உங்க‌ பதிலை படிக்க வந்தேன். அல்ஹம்துலில்லாஹ். மார்க்கத்தை தெளிவாக புரிபவர்கள் மத்தியில் இருப்பது இன்ப மயம். :)

அது சரி(18185106603874041862) said...

இப்போதைக்கு இந்த இடுகைக்கு நன்றி.

ஆனால் செந்தழல் ரவியின் கருத்துக்களை முழுவதுமாக வழிமொழிகிறேன். இது பற்றி இன்னமும் நிறைய சொல்ல வேண்டியிருப்பதால் இன்னொரு நாள் இடுகை இடலாம்..

மங்குனி அமைச்சர் said...

அருமையான , தேவையான பதிவு

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

சகோதரி நாஸியா அவர்களுக்கு,

நான் உங்களுடைய கருத்துக்கு என்ன எழுதலாம் என்று நினைத்தால், நான் நினைத்தெல்லாம் நம் சகோதர சகோதரிகள் தெளிவாக எழுதி விட்டார்கள்.

இஸ்லாத்தில் இருப்பவர்களை பிற்போக்குவாதிகள் என்று கூறும் தெளிவான(?) குழப்பவாதிகள், தங்களுடைய மனைவியோ, அல்லது சகோதரிகளோ வேலை செய்யும் இடத்தில் நடக்கும் பாலியல் பிரச்சனைகளை சந்தித்தால் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்று தெரியவில்லை. அப்படி நடக்காமல் இருக்கும் வழிகளைத்தான் மார்க்கம் சொல்கிறது.

அவர்கள் வேலை செய்யும் இடத்தில் என்ன மாதிரி பிர்ச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் என்று zee தொலைக்கட்சியில் சமீபத்தில் பார்த்தேன் (தேதி நினைவில் இல்லை). இதை பற்றி நிறைய கலந்துரையாடல்கள், நிறைய குற்றங்கள் காவல் நிலையத்தில் பதிவாகியிருக்கிகிறது. இன்னும் சில கேஸ்கள் குடும்ப கவுரவத்திற்க்காக வாபஸ் வாங்கப்படுகிறது.

இப்போது இருக்கும் கால் செண்டர் கலாச்சாரம் பல பெண்களின் வாழ்க்கையில் விளையாண்டு விட்டது.

போங்கப்பா. வேறு ஏதாவது இஸ்லாத்தின் பிரச்சினைகளை சொல்லுங்கப்பா, ஆரோக்கியமாக விவாதிக்கலாம்.

Unknown said...

செந்தழல் ரவி அவர்களே எதை பகுத்தறிவு என்று கூறுகிறிர்கள். ஆணுக்கு இணையாக செய்ய கூடிய அனைத்தும் பகுத்தறிவா? அதிகமாக வேலைக்கு செல்லும் பெண்கள் கேரளா பெண்கள் தான். அவர்களிடம் அவர்கள் படும் வேதனையை கேட்டு பாருங்கள் ,சிலவற்றை கூற நாக்கு கூசுகின்றது.

நாஸியா said...

நன்றி சகோதரி ஜொஹ்ரா

நன்றி சகோதரர் அரபுத்தமிழன்

நன்றி ஜமால் காக்கா

நன்றி மொஃபி தங்கச்சி

நன்றி ஷாகுல் பாய்

வ அலைக்கும் அஸ்ஸலாம் வரஹ். நன்றி சகோதரர் இஸ்மாயில்

நன்றி சகோதரர் செந்தழல் ரவி

நன்றி சகோதரி முத்துலட்சுமி

நாஸியா said...

நன்றி சகோதரர் ஆஷிக்

நன்றி ஸ்டார்ஜன் பாய்

நன்றி ஹூசைனம்மா

நன்றி சகோதரி மின்மினி

ந‌ன்றி அக்ப‌ர் பாய்

ந‌ன்றி ச‌கோத‌ரி அன்னு

ந‌ன்றி 'அது ச‌ரி'

ந‌ன்றி ச‌கோத‌ர‌ர் அபு நிஹான். பெண்க‌ளை ஆண்க‌ளுக்கு நிக‌ராக‌ ந‌ட‌த்துவ‌து என்று நேர‌ங்கால‌ம் பார்க்காம‌ல் வேலை வாங்குவ‌து ப‌ர‌வ‌லாக‌ ந‌ட‌க்க‌த்தான் செய்கிற‌து.

ஸாதிகா said...

அருமையான இடுகை நாஸியா! ஜசகல்லாஹ் கைரன்

அப்துல்மாலிக் said...

இஸ்லாம்தான் பெண்களுக்கு அதிகமான சுதந்திரம் கொடுத்திருக்கிறது என்பது வெளிச்சம் போட்டு காட்டிட்டீங்க‌

தெளிவான விளக்கம்

கவி அழகன் said...

வாழ்த்துக்கள்

தாஜ் said...

assalamualaikkum

அருமையான பதிவு

இஸ்லாத்திற்காக எதையும் விட்டு கொடுக்கலாம்

எதற்காகவும் இஸ்லாத்தை விட்டு கொடுக்க கூடாது

ஹிஜாப் என்பது அடிமைதனம் என்று போடும் நாங்கதான் சொல்லனும் நாங்களே சந்தோஷமா போடுகிறோம்
நாங்கள் அதை மதிக்கிறோம்

லக்கும் தீனுக்கும் வலியதீன்

Aashiq Ahamed said...

அன்பு சகோதரி நாஸியா அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்,

அருமையான பதிவு. பதிவுலகில் உங்களைப் போன்ற சகோதரிகள் இஸ்லாத்திற்கு எதிரான வாதங்களுக்கு மிக பொறுமையாக, அற்புதமாக விளக்கம் அளிக்கிறீர்கள். அல்ஹம்துலில்லாஹ். இறைவன் உங்களுக்கு மென்மேலும் உடல் நலத்தையும், மன பலத்தையும் அருள்வானாக. ஆமின்.

//ஹிஜாப் போட‌க்கூடாதுன்னு சொன்னா என்ன‌ ப‌ண்ணுவே?' 'அப்ப‌டிப்ப‌ட்ட‌ வேலை என‌க்கு தேவையில்லைன்னு சொல்லுவேன்//

சாட்டையடி பதில். ஒரு முறை சகோதரி யுவான் ரிட்லியிடம் ஒரு கேள்வி, "இந்த நாடுதான் வெப்பமாக இருக்கிறதே. இங்கேயும் ஏன் ஹிஜாப் அணிந்திருக்கிறீர்கள்?"

அதற்கு சகோதரி யுவான் ரிட்லி சொன்னார், "நரகம் இதை விட வெப்பமாக இருக்கும் பரவாயில்லையா ?"

உங்களைப் போன்றவர்களை பார்க்கும் போது சஹாபிய பெண்மணிகள் தான் நினைவுக்கு வருகிறார்கள்.

இனி இஸ்லாமிய பெண்களைப் பற்றி வாதத்திற்காக எவரும் கேள்வி எழுப்பினால், "போய் எங்கள் சகோதரிகளிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்" என்று உங்களைப் போன்றவர்களிடம் அனுப்பி விடுகிறோம். நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள். இன்ஷா அல்லாஹ்...

உங்கள் பணி தொடர இறைவன் அருள் புரிவானாக...ஆமின்.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பு சகோதரி நாஸியா,
/* வேலைன்னு வ‌ந்துட்டா, ம‌ண்டைக்குள்ள‌ இருக்குற‌து தான் முக்கிய‌மே ஒழிய‌, ஆடைக்குள்ள‌ இருக்குற‌து இல்ல‌.*/
/* ஒரு குடும்ப‌த்தில‌ க‌ண‌வ‌ன், ம‌னைவி இருவ‌ரும் ச‌ம்பாதிச்சாலும், ம‌னைவிக்கு குடும்ப‌த்துக்காக‌ செல‌வு செய்ய‌னும்கிற‌ அவ‌சிய‌மே இல்லை. அப்ப‌டிக்க‌ட்டாய‌ப்ப‌டுத்த‌ க‌ண‌வ‌னுக்கோ, இல்லை அவ‌ள் த‌க‌ப்ப‌னுக்கோ, பிள்ளைக‌ளுக்கோ இன்னும் வேறு யாருக்குமே உரிமை இல்லை.*/
அல்ஹம்துலில்லாஹ். நிதர்சனமான வரிகள் சகோதரி. பெண்ணுரிமை , முற்போக்கு என்று படம் காட்டும் அறிவுசீவிகள் அறிந்து கொள்ள வேண்டிய வரிகள் இது. வார்த்தைகளில் மட்டுமல்ல வாழ்க்கையினில் இவற்றையெல்லாம் உங்களைப் போன்ற பல முஸ்லிம் சகோதரிகள் பின்பற்றிக் கொண்டிருக்கின்றனர் என்பதே பல முற்போக்கு வயிற்றுப் போக்காளர்களுக்கு அளிக்கின்ற நல்ல பதிலாகும். இந்த தளத்தை எனக்கு அறிமுகம் செய்து வைத்த எதிர்க்குரல் ஆஷிக் அஹமதுக்கு எனது நன்றிகள். நல்லதொரு கருத்துகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் சகோதரி நாஸியா.
குறிப்பு: பிரியாணி பண்ண சீக்கிரம் கத்துக்குங்க. பிரியாணி செய்ய தெரியாத பாயம்மானு கெட்ட பெயரை சம்பாதிக்காதிங்க சகோதரி.

Unknown said...

Jazakhallahu Khairan...

mohamedali jinnah said...

நல்ல கட்டுரை .இறைவனது அருள் கிட்டட்டும் .

Riyas said...

சகோதரி நாஸியா... நான் வலையுலகிற்கு புதுசு உங்கள் பதிவுகளை இப்போதே கண்டேன்.. எல்லா பதிவுமே அருமை.. உங்களை நான் 50 வது நபராக பிந்தொடர்கிறேன்.. பொன்விழா கொண்டாடுங்கள், நேரம் கிடைத்தால் எனது பிளாக்கையும் கொஞ்சம் எட்டிப்பாருங்கள். riyasdreams.blogspot.com

Asiya Omar said...

நாஸியா உங்களுக்கு சன்ஷைன் விருது அன்பாக கொடுத்திருக்கிறேன்.பெற்றுக்கொள்ளவும்.

ப்ரியமுடன் வசந்த் said...

மிக நல்லதொரு விளக்க பகிர்வு

ப்ரியமுடன் வசந்த் said...

ஆணும் பெண்ணும் சமம்ன்னு பெரும்பாலும் வந்த பின்னும் இன்னும் பிரித்து பார்ப்பது தவறாய் படவில்லையா சகோ?

நாஸியா said...

நன்றி ஸாதிகா அக்கா, வ இய்யாகும்

நன்றி அபு அஃப்சர் பாய்

நன்றி யாதவன்

நன்றி தாஜ்..

நன்றி சகோ ஆஷிக் அஹமத். \இனி இஸ்லாமிய பெண்களைப் பற்றி வாதத்திற்காக எவரும் கேள்வி எழுப்பினால், "போய் எங்கள் சகோதரிகளிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்" என்று உங்களைப் போன்றவர்களிடம் அனுப்பி விடுகிறோம். நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள். இன்ஷா அல்லாஹ்...\ இன்ஷா அல்லாஹ்.. ஜஸகல்லாஹு க்ஹைர்

நன்றி சகோ ஷேக் தாவூத்

நன்றி சகோ நசீர். வ இய்யாகும்

ந‌ன்றி ச‌கோ நீடுர் அலி

ஆஸியாக்கா விருதுக்கு ந‌ன்றி.. :)

நாஸியா said...

நன்றி சகோ வசந்த். ஆணும் பெண்ணும் சமம் என்ற புரிதலில் எனக்கு கருத்து வேறுபாடு இருக்கு. என்னை பொறுத்த வரைக்கும் இருவருக்கும் வேறு, வேறு, ஆனால் சமமான உரிமைகளும் பொறுப்புகளும் இருக்கின்றன. உதாரணத்துக்கு சொல்லனும்னா மனித உடலில் இதயமும், மூளையும் போலன்னு நான் சொல்லுவேன். :)

ஹுஸைனம்மா said...

//உடலில் இதயமும், மூளையும் போல//

நிறைய விளக்கங்கள் எனக்கு உங்ககிட்ட இருந்துதான் கிடைக்குது!! ரொம்ப மகிழ்ச்சி!!

இவ்வளவு நல்லா எழுதுற நீங்க, தொடர்ந்து எழுதாம இருக்கிறதுதான் வருத்தம். வாரத்துக்கு ஒண்ணாவது எழுதப்பாருங்களேன், ப்ளீஸ்!!

ஜெய்லானி said...

@@@ஹுஸைனம்மா//
இவ்வளவு நல்லா எழுதுற நீங்க, தொடர்ந்து எழுதாம இருக்கிறதுதான் வருத்தம். வாரத்துக்கு ஒண்ணாவது எழுதப்பாருங்களேன், ப்ளீஸ்!!//

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

ஆமாங்க ஏழு நாளைக்கு ஒன்னாவது எழுதப்பாருங்க!! இன்ஷா அல்லாஹ்..

:-))

Vijiskitchencreations said...

நீண்ட நாட்களுக்கு பின் இங்கு வருகிறேன். நல்ல கட்டுரை.

Unknown said...

"வேலை செய்யும் இட‌த்திலும் க‌ண்டிப்பாக‌ ஹிஜாபை பேண‌ வேண்டும். நான் கேம்ப‌ஸ் இன்ட‌ர்வியூக்க‌ளுக்கு போகும்போது ப‌ல‌ர் என்னிட‌ம் கேட்ட‌து, 'ஹிஜாப் போட‌க்கூடாதுன்னு சொன்னா என்ன‌டீ ப‌ண்ணுவே?' 'அப்ப‌டிப்ப‌ட்ட‌ வேலை என‌க்கு தேவையில்லைன்னு சொல்லுவேன்'. ஏன்னா, வேலைன்னு வ‌ந்துட்டா, ம‌ண்டைக்குள்ள‌ இருக்குற‌து தான் முக்கிய‌மே ஒழிய‌, ஆடைக்குள்ள‌ இருக்குற‌து இல்ல‌".

அறிவுபூர்வமாக சிந்திக்ககூடிய ஆக்கபூர்வமான வரிகள்.
வாழ்த்துக்கள் சகோதரி. தொடர்ந்து இதுபோன்ற பதிவுகளை தாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஜெய்லானி said...

################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html

அன்புடன் > ஜெய்லானி <
################

அரபுத்தமிழன் said...

எங்கே அடுத்தப் பதிவு, ரொம்ப நாளா வெயிட்டிங், இந்தப் பதிவுக்குக் கண் ரொம்ப பட்டுடுச்சோ :-)

அஸ்மா said...

அஸ்ஸலாமு அலைக்கும், நாஸியா!

//என்னைப்பொறுத்த வரைக்கும், நான் இஸ்லாத்தின் எல்லைக்குள் என்னால் இயன்ற வரை நான் நினைத்ததை செய்துக்கொண்டு தான் இருக்கிறேன்.//

நானும் என் இஸ்லாமிய தோழிகளும் அப்படிதான். இஸ்லாத்தின் எல்லை மீறாமலே சுதந்திரமாக நாம் வாழும் சுகமே தனி! இறைவனுக்கே எல்லாப் புகழும்! தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள்!

Unknown said...

பேசி தீராத பிரச்சனையும் இல்லை!. எழுத்து தராத தீர்வுகளும் இல்லை !.
உங்கள் வெற்றியின் திறவுகோல் உங்களிடமே இருக்கிறது - மடை திறவுங்கள் !!
www.jeejix.com இல் இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் பரிணாமங்களை
எழுதுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் !!!

புல்லாங்குழல் said...

தெளிவான சிந்தனை. கண்ணியமான, அற்புதமான பதிவு. அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் செய்வானாக!

Anisha Yunus said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நெஞ்சம் நிறைந்த ஈத் முபாரக்!!

வ ஸலாம்
அன்னு

ஜெய்லானி said...

http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_25.html

Anisha Yunus said...

நாஸியாக்கா, உங்களை ஒரு மெகா தொடருக்கு அழைத்துள்ளேன். எந்த வேலையிருந்தாலும் தவறாமல் வந்து கலந்து கொண்டு சிறப்பிக்கவும். ப்ளீஸ். :)

http://mydeartamilnadu.blogspot.com/2010/09/blog-post_28.html

அன்புடன் மலிக்கா said...

நன்றி சகோ வசந்த். ஆணும் பெண்ணும் சமம் என்ற புரிதலில் எனக்கு கருத்து வேறுபாடு இருக்கு. என்னை பொறுத்த வரைக்கும் இருவருக்கும் வேறு, வேறு, ஆனால் சமமான உரிமைகளும் பொறுப்புகளும் இருக்கின்றன. உதாரணத்துக்கு சொல்லனும்னா மனித உடலில் இதயமும், மூளையும் போலன்னு நான் சொல்லுவேன். :)//

இத இததான் நானும் சொல்கிறேன்.
http://niroodai.blogspot.com/2010/10/2.html. இப்பதிவில்

மிக அருமையான தெளிவான கருத்தும் பதிவும். வல்ல இறைவன் நம் அனைவருக்கும் நல்வழியை காட்டுவானாக..


நீண்ட நாளைக்குப்பின்வருகிறேன் நாஜியா. எப்படி இருக்கீங்க. பிள்ளை நல்லாயிருக்கா..

ஏம்.ஷமீனா said...

Assalamualeykum dear sister,
what a great article !!
You made me understand a lot of things in this topic.
Thanks to learn us this :)
Jazakkalaahu khair...

Unknown said...

வாழ்த்துக்கள். தொடருங்கள்.

எம் அப்துல் காதர் said...

உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கிறேன். பெற்றுக்கொள்ளவும். நன்றி!!
http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html