Thursday, March 4, 2010

பதின்ம கால கொசுவர்த்தி!

*ரொம்ப‌ பெரிய‌ கொசுவ‌ர்த்தியா இருக்கேன்னு ஓடிடாதீங்க‌*

மறுபடியும் தீபா அவர்களின் அழைப்பின் பேரில் ஒரு பதிவு.. ரொம்ப சந்தோஷமா இருக்கு,.


எங்க பள்ளியில உள்ள விடுதியில சில வெளிநாட்டு பிள்ளங்க படிச்சாங்க. முக்கியமா தாய்லாந்து, சிங்கப்பூர், இலங்கை, என்.ஆர்.ஐ பசங்கன்னு ஒரு ரேஞ்சா இருக்கும். தாய்லாந்து புள்ளங்கல்லாம் ரொம்ப கோவக்கார புள்ளைங்களாவும் இருப்பாங்க. நாங்க‌ல்லாம் கொஞ்ச‌ம் த‌ள்ளியே இருப்போம்.. அதுல‌ ஒருத்தி தான் நூர்ஜ‌ஹான் (அது அவ‌ளோட‌ இஸ்லாமிய‌ பேர்.. தாய்லாந்து பேர் ம‌ன‌ஸ‌க்குல் சிரிலெர்ட்)..எப்ப‌டியோ நானும், ந‌ஸ் ரீன்னு இன்னொரு தோழியும் நூர்ஜ‌ஹானும் நெருங்கிய‌ தோழிக‌ளாயிட்டோம்..
நான் ப‌தின்ம‌ வ‌ய‌தில் அடியெடுத்து வைத்த‌ ப‌திமூணாவ‌து பிற‌ந்த‌ நாளை ம‌ற‌க்க‌வே முடியாது.. ஏன்னா நூர் என‌க்கு குடுத்த‌ வாழ்த்து அட்டை. அது அவ‌ளே த‌ன் கையால‌ செஞ்ச‌து. ஒரு க‌ருப்பு சார்ட் பேப்ப‌ரையும், வெள்ளை தாளையும் ஜிகினா பேனாவும், ஒரு சின்ன‌ நூலைக்கொண்டும் ரொம்ப‌ அழ‌கா செஞ்சிருப்பா.. அது வ‌ரைக்கும் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்ன்னு யாரும் இல்லாத‌ என‌க்கு, அந்த‌ அட்டைய‌ பார்த்தும் இவ‌தான் என் பெஸ்ட் ஃப்ரெண்டுன்னு நான் அடைஞ்ச‌ ச‌ந்தோஷ‌த்துக்கு அள‌வே இல்லை..இப்ப‌ நினைச்சாலும் இனிமையா இருக்கு.. அந்த‌ அட்டையும் ப‌த்திர‌மா இருக்கு.. :)

அப்ப‌ எங்க‌ ப‌ள்ளியில‌ புதுசா ஃப‌வுன்ட‌ன் பெப்சி வெச்சிருந்தாங்க‌. சின்ன‌ க‌ப் அஞ்சு ரூபா, பெருசு ப‌த்து ரூபா.. ந‌ம்ம‌கிட்ட‌ல்லாம் ஏது அவ்வ‌ள‌வு காசு.. ஆனா பெப்சிய‌ பார்த்தாலே வாய் ஊரும்.. நாங்க‌ல்லாம் ஒண்ணா சேர்ந்து காசு போட்டு ஒரு பெப்சிய‌ வாங்கி மாத்தி மாத்தி குடிப்போம். அதுக்கே எப்ப‌டா ப்ரேக் வ‌ரும்னு காத்துகிட்டு இருப்போம். பெப்சி மோக‌ம் போல‌வே அந்த‌ வ‌ய‌சில‌ ஆங்கில‌ப்பாட‌ல்க‌ள் கேக்குற‌து ரொம்ப‌ 'கூலா'னா விஷ‌ய‌மா இருந்துச்சு.. அப்ப வ‌ந்த‌ பேக்ஸ்ட்ரீட் பாய்ஸ், அக்வாவின் பார்பி கேர்ள் பாட்டெல்லாம் ம‌ன‌ப்பாட‌ம் ப‌ண்ணி முணுமுணுக்குற‌து பெரிய‌ விஷ‌ய‌ம்.. ந‌மெக்கெங்க‌ அந்த‌ அமெரிக்க‌ன் இங்கிலீஷ் புரிய‌ப்போகுது.. நூர்ஜ‌ஹான் தான் கேச‌ட் க‌வ‌ர்ல‌ இருந்து பாட்டோட‌ வ‌ரிக‌ள் எல்லாம் சொல்லித்த‌ருவா..

அதுக்க‌ப்புற‌ம் பத்தாவ‌துன்னு ப‌டிப்புல‌ கொஞ்ச‌ம் க‌வ‌ன‌மா இருக்க‌னும்னு அப்ப‌டி, இப்ப‌டின்னு போயிட்டு..ப‌தினோராம் வ‌குப்பில‌ என் தோழிக‌ள் அறிவிய‌ல் பிரிவுல‌ சேர, வ‌ணிக‌விய‌ல்ல‌ சேர்ந்தேன். அப்போ விடுதியில தங்கும் இன்னும் ரெண்டு பேர்‍: ஃபரா, ஃபரீனா எனக்கு நெருக்கமானாங்க.

தோழிக‌ள் நாங்க‌ இடைவேளைய‌ப்போ ஒண்ணா சேர்ந்துக்குவோம். ஒரு ப‌த்து நிமிஷ‌ம் கேப் கிடைச்சாலும் நாங்க‌ அடிக்கிற‌ லூட்டிக்கு அள‌வே இருக்காது. ப‌ல‌ அட்வென்ச‌ர்க‌ளை நிக‌ழ்த்திய‌தும் அப்ப‌தான். வீட்டுல‌ இருந்து வ‌ர்ற‌ டே ஸ்கால‌ர்க‌ள் எல்லாம் விடுதிக்குள்ள‌ போக‌ கூடாது. ஆனா நாங்க‌ ஸ்போர்ட்ஸ் ப்ராக்டீஸ் ந‌ட‌க்கும் சம‌ய‌த்துல‌ நைசா போயி தோழிமாரோட‌ ஒண்ணா அர‌ட்டை அடிக்க‌ ஆர‌ம்பிச்சுடுவோம்.. அப்ப‌ திடீர்னு வார்ட‌ன் வ‌ர‌வும் நாங்க‌ல்லாம் ப‌ய‌ந்துட்டு க‌ட்டிலுக்க‌டியில‌ ஒளிஞ்ச‌தெல்லாம் நினைச்சா சிரிப்பா வ‌ருது..

அப்புற‌ம் மூணாரு, ம‌று வ‌ருஷ‌ம் ஊட்டி, பொள்ளாச்சின்னு ரொம்ப‌ இனிமையா க‌ழிஞ்ச‌து ப‌ள்ளி நாட்க‌ள்..ப‌ன்னிரெண்டாம் வ‌குப்பு முடியும்போது எங்க‌ கேண்டீன் ஸ்பெஷலான‌ சிக்க‌ன் பிரியாணி மூணு வாங்கி, ஒரு நேர‌த்துல‌ ஒண்ண‌ ம‌ட்டும் திற‌ந்து நான், நூர், நஸ் பேரும‌ ஒண்ணா சாப்பிட்டோம்..இனி இவ‌ங்க‌ள‌ எல்லாம் எப்ப‌ பார்க்க‌ போறோம்னு ரொம்ப‌ க‌ஷ்ட‌த்தோட‌வே பிரிஞ்சு போனோம்..

ந‌ஸ் ரீன் வ‌ண்ட‌லூரில‌, நூர் ஊட்டி, ஃப‌ரா சிங்க‌ப்பூர், ஃப‌ரீனா நாக‌ர்கோயில், நான் அதே ஊருலயும் இப்ப‌டி ஆளுக்கு ஒரு ப‌க்க‌மா போயிட்டோம்.

பள்ளி நாட்கள்ல பேச்சுப்போட்டி, நாடகம்னு சுத்திட்டு இருந்த நான் கல்லூரியில முதன்முதலா வீதி நாடகங்கள் மேல ஒரு ஈர்ப்பு வந்துச்சு.. முதல் வருஷம் போபால் கேஸ் ட்ராஜடி பத்தி தலைப்பு.. நாங்க பயங்கரமா சொதப்பினாலும் மத்த டிபார்ட்மென்ட்ல உள்ளவங்க பண்றதை பாத்து அசந்து போயிட்டேன்.. அதுவும் அந்த தலைப்ப பத்தி இன்னும் படிக்க தோணிச்சு, அமெரிக்க ஆதிக்கம் மேல முதன்முதல்ல கோவம் வர ஆரம்பிச்சுது.
பிறகு ஈராக் போர். இனி அமெரிக்க பொருட்களையே பாவிக்க கூடாதுன்னு முடிவெடுத்து ரொம்ப முனைப்பா இருந்தேன்.. முக்கியமா பெப்சி, கோக்.. முற்றிலுமாக முடியலன்னாலும் முடிஞ்ச அளவு கடைப்பிடிச்சேன்.. மறு வருஷம் வீதி நாடக போட்டிக்கு தலைப்பே அப்ப பரபரப்பா இருந்த பெப்சி, கோக் பூச்சிக்கொல்லி மருந்து மேட்டர் தான்.. கிடைச்சுதுடா அல்வான்னு, நானே ஸ்க்ரிப்ட் எழுதி, முதல் வருஷம் சேர்ந்த பொண்ணோட உதவியோட அசத்தலா ஒரு நாடகம் போட்டோம்.. கிடைச்சது முதல் பரிசு.. ஏற்கெனவே பள்ளியில நாடகம் எழுதின அனுபவம் இருந்தாலும் எங்க கல்லூரியில போட்டிங்கறது சாதரணம் கிடையாது.. ரொம்ப ச‌ந்தோஷ‌மா இருந்த‌ த‌ருண‌ங்க‌ள் அது..

ம‌று வ‌ருஷ‌ம் வீதி நாட‌க‌ங்க‌ளை ப்ர‌ஃப‌ஷ‌ன‌லா செய்ற‌வ‌ங்க‌ளோட‌ ப‌யிற்ச்சி எடுத்துட்டு மீண்டும் முத‌ல் ப‌ரிசு வாங்கினோம்.. எங்க‌ டீம் ரொம்ப‌வும் பிர‌ப‌ல‌ம‌டைய‌, சென்னையில் உள்ள‌ ப‌ல‌ க‌ல்லூரிக‌ள்ல‌ நாங்க‌ போட்டிக‌ள்ல‌ க‌ல‌ந்துட்டு முத‌ல் ப‌ரிசுக‌ளா வாங்கி குவிச்சோம்.. அதுல‌ முக்கிய‌மான‌து, ஐஐடி சென்னையில‌ ந‌ட‌ந்த்த‌ 'சார‌ங்' அப்போ.. சமூகத்துல நடக்குற அவலங்கள்னு பல விஷயங்கள கலவையா சொன்னோம்.. கிட்ட‌த்த‌ட்ட‌ க‌ல்லும் முள்ளுமா இருந்த‌ த‌ரையில‌ போட்டிய‌ வெச்சாங்க‌.. ப‌தினைந்து நிமிட‌ங்க‌ள் என்ன‌ ந‌ட‌ந்ததுன்னே தெரியாம‌ நாட‌க‌த்தை முடிச்சோம்.. கைத்த‌ட்ட‌ல்க‌ள்ல‌, கால் வ‌லி தெரிய‌ல‌..போட்டிக்கு ந‌டுவ‌ரா வ‌ந்த‌வ‌ர் வீதி நாட‌கங்க‌ளுக்கு குருவான‌ முத்துசாமி ஐயா.. கொஞ்சம் கூட‌ எதிர்ப்பார்க்காத‌ முத‌ல் ப‌ரிசு.. அந்த‌ வெற்றிய‌ நினைச்சா எதையோ பெரிசா சாதிச்ச‌ திருப்தி இன்னும் இருக்கு..
ச‌த்ய‌ம், ஸ்பென்ச‌ர்னு சுத்தினாலும் எங்க‌ க‌வ‌ன‌மெல்லாம் போட்டிக‌ள்ல‌ தான் அதிக‌மா இருந்த‌தை நினைச்சா ஆச்ச‌ரியமா இருக்கு.. சினிமாவுல‌ வ‌ர்ற‌ மாதிரி எங்க‌ டிபார்ட்மென்ட்டுக்கும் பிகாம் டிபார்ட்மென்டுக்கும் ஆக‌வே ஆகாது.. இதுல‌ ப‌ல‌ வ‌ருஷ‌ங்க‌ளா அவ‌ங்க‌ வாங்கிட்டு இருந்த க‌ல்ச்சுர‌ல் ஷீல்டை நான் செக்ர‌ட‌ரியா இருக்கும்போது எங்க‌ டிபார்ட்மென்ட் வாங்கின‌துல‌ செம்ம‌ க‌டுப்பா இருந்தாங்க‌..எப்ப‌ பார்த்தாலும் ஒரு கோல்ட் வார் இருந்துட்டே இருக்கும்.. :))

எப்ப‌டியோ க‌ல்லூரி ப‌டிப்பு முடிஞ்சுது, ந‌ம‌க்கு 19 வ‌ய‌சாயிட்டு, நாம‌ இப்ப‌ ஒரு டிகிரி ஹோல்ட‌ர்ங்க‌ற‌ எண்ண‌த்தோட‌ க‌ல்லூரியில‌ அடியெடுத்து வெச்சா...என் நினைப்புல‌ எல்லாம் ம‌ண்! என்னால‌ ஹாஸ்ட‌ல் வாழ்க்கையும், அங்குள்ள‌ க‌ஷ‌ட‌மான‌ பாட‌த்திட்ட‌ங்க‌ளையும் ச‌கிச்சுக்க‌வே முடிய‌ல‌.. எப்ப‌ பார்த்தாலும் ஒரே அழுகை தான்.. அங்க‌ ப‌ல‌ பேர் பொறியிய‌ல் ப‌டிப்பும் கூட‌வே வேலை பார்த்த‌ அனுப‌வ‌த்தோடும் தான் வ‌ருவாங்க‌.. அப்போ என்னை ஆற்த‌ல் ப‌டுத்த‌ ப‌ல‌ தோழிக‌ள் சொன்ன‌து ஒரே விஷ்ய‌ம் தான்: "உன‌க்கு வ‌ய‌சு ப‌த்தாது!!"...


என்ன‌ ப‌ண்ண‌, ந‌ம‌க்கெப்போதும் குழ‌ந்தை ம‌ன‌சு தான்.. :))


நான் இந்த‌ ப‌திவை தொட‌ர‌ அழைப்ப‌து ச‌கோத‌ரி ம‌லீக்கா & ஜ‌லீலா

29 comments:

அண்ணாமலையான் said...

நல்லா சுவாரஸ்யமா இருக்கு

சந்தனமுல்லை said...

சுவாரசியமா இருக்கு.வித்தியாசமாவும்! :-)

Prathap Kumar S. said...

அவ்ளோதானா...என்னங்க ஆரம்பிச்ச உடனேய முடிஞ்சுடுச்சு...ஹீஹீ

ஹுஸைனம்மா said...

ஒரு வழியா ஐஸ் பிரேக் பண்ணிட்டீங்களா?

நாஸியா, நஸ்ரின், நூர்ஜஹான் - எல்லாம் ’ந’னாவுக்கு ‘ந’னாவா இருக்கே?

//பள்ளி நாட்கள்ல பேச்சுப்போட்டி, நாடகம்னு சுத்திட்டு//

அதான் இங்க வெளுத்து வாங்குறீங்களா?

//ந‌ம‌க்கெப்போதும் குழ‌ந்தை ம‌ன‌சு தான்.//

அட, அட, கொழந்த என்னமாப் பேசுது!!

எல்லாம் எழுதுனீங்க, ஆனா முக்கியமானதப் பத்தி எழுதவேயில்லியே?

ஸாதிகா said...

கொசுவத்தி சுவாரஷ்யம்.அதென்ன நாசியா எப்பவும் உங்களை பச்சைப்பிள்ளையாகவே காட்டிப்பதில் அவ்ளோவ் ஆர்வம்...?///என்ன‌ ப‌ண்ண‌, ந‌ம‌க்கெப்போதும் குழ‌ந்தை ம‌ன‌சு தான்.. :))///

எம்.எம்.அப்துல்லா said...

அதுவும் அந்த தலைப்ப பத்தி இன்னும் படிக்க தோணிச்சு, அமெரிக்க ஆதிக்கம் மேல முதன்முதல்ல கோவம் வர ஆரம்பிச்சுது.
பிறகு ஈராக் போர். இனி அமெரிக்க பொருட்களையே பாவிக்க கூடாதுன்னு முடிவெடுத்து ரொம்ப முனைப்பா இருந்தேன்..

//அவர்களின் பொருளாதார மாதிரி தகிடுதத்தங்களையெல்லாம் எழுதுங்கன்னு முன்னாடியே ஒருமுறை உங்ககிட்ட சொன்னேன்.

(ஏன் நீ எழுதேன்னு என்னையக் கேக்கக்கூடாது) :)

pudugaithendral said...

//ந‌ம‌க்கெப்போதும் குழ‌ந்தை ம‌ன‌சு தான்.//


நம்பிட்டோம்..

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

மிக அருமை

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

Chitra said...

முதல் பரிசு தொடர்ந்து பெற்றதுக்கு வாழ்த்துக்கள். உங்கள் பதிவு அருமை. இன்னும் அந்த கலைத்தாகம் அணையாமல் நாடகம் எழுதுங்கள்.

ஜெய்லானி said...

/// ஹுஸைனம்மா said...எல்லாம் எழுதுனீங்க, ஆனா முக்கியமானதப் பத்தி எழுதவேயில்லியே?///

அதானே!!!!

நாஸியா said...

நன்றி அண்ணாமலையான், சந்தனமுல்லை..

நாஞ்சிலாரே அப்படிங்க்றீங்க? இது தெரியாம போச்சே.. :(
\\ஒரு வழியா ஐஸ் பிரேக் பண்ணிட்டீங்களா\\

ஹிஹி...

\\அட, அட, கொழந்த என்னமாப் பேசுது!!

எல்லாம் எழுதுனீங்க, ஆனா முக்கியமானதப் பத்தி எழுதவேயில்லியே?\\

வாட் ஈஸ் தட் முக்கியமானது?

ஸாதிகாக்கா, ஹிஹி.. உண்மையத்தானே சொன்னேன்..

அப்துல்லாண்ணே, இன்ஷா அல்லாஹ் ஒரு நாள் எழுதனும்.. நீங்க சொன்ன பட்ஜெட் பத்தி கூட எழுதனும் இன்ஷா அல்லாஹ்..

புதுகை தென்றல்... நம்புங்க ப்ளீஸ்...


நன்றி உலவு.காம்

சித்ரா... நன்றி.. இன்ஷா அல்லாஹ் எனக்கும் அந்த ஆசை இருக்கு.. கண்டிப்பா வ‌ருங்கால‌ங்க‌ள்ல‌ எழுத‌னும்.. இப்ப‌டி ப‌ல‌ ஆசைக‌ள் இருக்கு.. என்ன‌ ப‌ண்ண‌ ப‌டிச்சு முடிச்ச‌துமே எங்க‌ருந்து தான் அந்த‌ சோம்பேறித்த‌ன‌ம் வ‌ருதோ தெரிய‌ல‌..

ஜெய்லானி.. இதென்ன வ‌ம்பா போச்சு

சீமான்கனி said...

ஃபரா, ஃபரீனா நூர்ஜஹான்...
இப்பொ எனக்கும் நன்பர்களாய் ஆய்ட்டாங்க..எல்லொருக்கும் சலாம் சொல்லிடுங்க...
அவர்களின் சுபாவம் பட்டபெயர் எல்லாம் பொட்டு இருந்தா இன்னும் நல்லா இருக்கும்...
எனக்கும் நிறைய நியாபகம் வருது
படிப்பை தவிர எல்லாமே நியாபகம் வருது...கொசுவத்தி சுத்த எனக்கும் ஆசை வருது....

எல் கே said...

nalla pathivu..sirugathai elutha muyarchikalame?

அன்புத்தோழன் said...

எங்கங்க ஆளையே காணோம் கொஞ்ச காலமா...? சொந்தங்கள் எல்லாம் நலம் தானே... ரொம்ப நல்லாருக்கு நாஸியா... நானும் hostel தான் படிச்சேன்.... உங்க பதிவ படிக்க படிக்க நாங்க செஞ்ச வால் தனமெல்லாம் மண்டைல படம் மாதுரி ஒடிச்சு.... தேங்க்ஸ்...

வீட்டுலேந்து visitors வர்றபோ ஹாஸ்டலையே ஒரு கலக்கு கலக்குறது... நிக்ஹ்ட்ல என்ன நடுல உக்கார வெச்சு பாட சொல்லி சுத்தி பசங்க உக்காந்து கேட்டது (குயில புடிச்சு பாட்டு தான் ஹி ஹி ) முதல் தடவ வர்புரத்தலின் பேருல தம்ம ஒரு இழு இழுத்து பாத்தது... chemistry classla மிஸ்க்கு தெரியாம பிப்பட் பியூரட்டு ஒடச்சுட்டு எஸ்கேப் ஆனது (அதுக்கப்றம் அதுக்கு மொத்தமா fine போட்டதுலாம் வேற விஷயம்).... திடீர் hostel inspections.... மொபைல் போன் ஒளிச்சு வெச்சு பேசுனது...

ஒர்ருபா காயின் போனுக்காக கால் கடுக்க கியூல நின்னது.... வீட்லேந்து போன் வந்து announce பண்ணத கேட்டு அடிச்சு புடிச்சு ஓடி வந்து போன் எடுத்து காதுல வெச்ச பீன் பீன் னு சவுண்ட் கேட்டு கடுப்புல அடுத்து அடிக்ற எல்லா காலும் இது நமக்கா இருக்காதான்னு ஆ -னு வாய பொளந்து

பாத்துட்டு நின்னது... வம்பு, சண்ட, அன்பு , பாசம், நட்பு இப்டி எழுத்துக்களால் வருணிக்க முடியாத எல்லாம் ஒரு கலவையா.... வாவ்.... முடிலங்க.... ரொம்ப தேங்க்ஸ்... கிண்டுனதுக்கு......

SUFFIX said...

பிரியாணி வழக்கம் போல நல்லா இருக்கு. லூட்டி, ஜாலிகளுக்கிடையே சமூக சிந்த்னையும் சேர்ந்தே இருந்திருப்பது மகிழ்ச்சியே!!

//ஹுஸைனம்மா said...

எல்லாம் எழுதுனீங்க, ஆனா முக்கியமானதப் பத்தி எழுதவேயில்லியே?//

ஆரம்பிச்சுட்டேளா...:)

சுந்தரா said...

சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க நாஸியா. விடுதி வாழ்க்கையின் ஞாபகங்கள் திரும்பியது எனக்கும்.

thiyaa said...

நன்றாக இருக்கிறது வாழ்த்துகள்

Jaleela Kamal said...

நாஸியா இந்த அக்காவை முதலில் திட்ட கூடாது, படித்து விட்டேன ஆனா பதில் போட வந்த போதெல்லாம் வேறு ஏதாவது டைவட் ஆகிவிட்டது.

இதிலிர்ந்து உங்கள் குழந்த மனசு ரொம்ப நல்ல புரியுது, சுவாரஸியாமா இருக்கு. சந்தடி சாக்குல சீமான் நூல் விடுற மாதிரி இருக்கு.

என்னை அழைத்து இருக்கீங்க, முடிந்த போது போடுகிறேன்.

ஜெய்லானி said...

#####
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/03/blog-post_27.html.

########

பித்தனின் வாக்கு said...

கொசுவத்தி நல்லா சுத்தியிருக்கீங்க. நல்ல கல்லூரி நாட்கள். பகிர்தலுக்கு நன்றி.

அன்புடன் மலிக்கா said...

அச்சோ நான் இப்பத்தானே பார்க்கிறேன். நாஸியா இப்ப எப்படியிருக்கு. நீங்க பதிவு இப்ப போட்டிருக்கமாட்டிகன்னு நெனச்சி இந்தப்பக்கம் வரலையா.

இப்ப எதாச்சையா வந்தேனா ..என்னையும் மாட்டிவிட்டுடீகளே .
ஓகே எவ்வளோ பண்ணிட்டோம் இதபண்ணமாட்டமா இன்னும் இரு தினங்களில் சுடச்சுட எழுத முயச்சிக்கிறேன்பா.

//ந‌ம‌க்கெப்போதும் குழ‌ந்தை ம‌ன‌சு தான்.. :))//

நம்ம்பிட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏன்ன்ன்ன்

நாஸியா said...

சீமான் கனி: என்னது உங்களுக்கும் ஃப்ரென்டாயிட்டாங்களா? ரொம்ப சந்தோசம்.. :)

எல்கே: முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரரே! கதை எழுதனுமா???? தாங்குமா இந்த வலையுலகம்?

நன்றி சஃபிக்ஸ் பாய்!

நன்றி சுந்தரா :)

நன்றி தியா :)

ஜலீலாக்கா சீக்கிரம் போடுங்க! ஆர்வமா இருக்கேன், படிக்க‌

நன்றி ஜெய்லானி சகோதரரே!! ஹிஹி.. எனக்கும் விருது குடுத்து புல்லரிக்க வெச்சுட்டீங்களேப்பா

நன்றி சுதாகர் அண்ணே

மலீக்காக்கா... இன்னும் பார்ட் பார்டா போடுங்க,.. உங்கட இருந்து நிறைய எதிர்ப்பார்க்கிறேன், ஆமா!

எல் கே said...

@nasiya

engalye thanguthu ungalai thangatha

Ahamed irshad said...

சூப்பர்...

ஜெய்லானி said...

################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்று செல்லவும் .நன்றி

http://kjailani.blogspot.com/2010/04/blog-post_5104.html
################

சாமக்கோடங்கி said...

நல்லா எழுதி இருக்கீங்க சகோதரி..

தொடருங்கள்.. உங்களைப் போன்ற சகோதரிகள் கட்டாயம் தேவை..

நன்றி...

ஸாதிகா said...

சகோதரி உங்களுக்கு விருது வழங்கி உள்ளேன் .அன்புடன் நான் அளித்த விருதினை பெற்றுக்கொள்ளவும்.நன்றி! http://shadiqah.blogspot.com/2010/04/blog-post_10.html

நாஸியா said...

Thank you AKKA!! :)

Asiya Omar said...

நாஸியா உங்கள் பதின்ம வயது அனுபவங்கள் படிக்க விறுவிறுப்பாக இருக்கே.அப்ப அப்ப பிரியாணி நாஸியான்னு பெயர் பார்த்து இருக்கேன்,சமையல் ப்ளாக் பக்கம் அதிகம் போனதால் இதுவரை இங்கு வர முடியாமல் போய்விட்டது.உங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.