Tuesday, December 22, 2009

பேனாவும் பேப்பரும்..

இருந்தா போதும்..நாமளும் கவிஞர் ஆகிடலாம்.
எப்படின்னு சொல்லுறேன். அதுக்கு முன்னாடி ஒரு சின்ன ஃப்ளேஷ்பேக்.

நாம பள்ளியில படிக்கும்போது மிஸ் பேச கூடாதுன்னு சொல்லுவாங்க, ஆனா க்ளாஸ் ரொம்ப மொக்கையா இருக்கும். வேற வழியில்லாம புத்தகத்தோட கடைசி பக்கத்துல எழுதி தோழிமாரோட பேசிட்டு இருப்போம் இல்லையா? எனக்கு இந்த கிறுக்குற பழக்கம் ரொம்பவே அதிகம். ஆனா ஸ்கூல்ல கடைசி நாலு வருஷம் நான் கொஞ்சம் 'படிக்கனும்'ங்கற 'பொறுப்புணர்ச்சி'யால அப்படி அவ்வளவா எழுதல.


காலேஜ் வந்த பிறகு முதல் வருசம் வெறும் மூணு மணி நேரம்தான் வகுப்புகள்.. அப்போவும் கொஞ்ச ஆர்வக்கோளாருல மேம் சொல்லுறத கவனிச்சிட்டு இருந்தேன். ஆனா கடைசி ரெண்டு வருஷம் முழுக்க படிப்ப தவிர காலேஜ்ல‌ என்ன‌ன்ன‌ ப‌ண்ண‌ முடியுமோ அத்த‌னையும் ப‌ண்ணிட்டு இருந்தேன் (அதாங்க‌, எக்ஸ்ட்ரா க‌ர்ரிகுல‌ர்). அதுவும் ஃபைன‌ல் இய‌ர் சொல்ல‌வே வேண்டாம், என்னை வேற‌ செக‌ர‌ட்ட‌ரியா போட்டு, நான் பெர்மிஷ‌ன் வாங்கி குடுத்தா ம‌த்த‌வ‌ங்க‌ளும் க‌ட்ட‌டிக்கலாம்ங்க‌ற‌ நிலைமை வேற‌.. அப்புற‌ம் என்னாகும், வ‌ருச‌ம் முழுக்க‌ மொத்த‌ம் ஒரே ஒரு நாள்தான் க்ளாஸ்ல‌ இருந்தேன்!


இப்ப‌டி இருந்த‌ புள்ளைய‌ போய் மேல்ப‌டிப்பு ப‌டிக்க‌ சொன்னா என்ன‌ ப‌ண்ணுவா (ஹி,ஹி, யாரும் சொல்ல‌ல‌, நானா எடுத்த‌ முடிவுதான்!). அங்க‌யும் போய் க‌ட்ட‌டிக்க‌லாம்னு நினைச்சிட்டு இருந்த‌ என் நினைப்புல‌ எல்லாம் ம‌ண்!


விடாம‌ தொட‌ர்ந்து நாலு ம‌ணி நேர‌ம் க்ளாஸ் ந‌ட‌க்கும், யாராச்சும் விசிட்டிங் வாத்தியார்க‌ள் வ‌ந்துட்டா போதும், இர‌வு ஒரு ம‌ணிக்கு கூட‌ க்ளாஸ‌ வெச்சு க‌ழுத்த‌றுப்பாங்க‌.  இதுல ஞாயிற்றுக்கிழ‌மை ஆனா போதும், காலைல‌ எட்டுல‌ இருந்து இர‌வு எட்டு வ‌ரைக்கும் ஒரே பாட‌ம் ந‌ட‌க்கும். அப்பல்லாம் எல்லாரும் சீக்கிரமா காலைல சாப்பிட்டுட்டு அவசர அவசரமா முதல் ஆளா க்ளாஸ்க்கு போக பெரும் போட்டியே நடக்கும். ஏன் தெரியுமா? கடைசி வரிசைய புடிக்கிறதுக்கு தான்.

நாங்க‌ எப்ப‌வும் எந்த‌ வ‌ரிசையில‌ உட்கார‌துன்னு ரொம்ப‌ டெக்னிக்கா யோசிப்போம். முத‌ல் வ‌ரிசையும் வேலைக்காவாது, க‌டைசி வ‌ரிசையில‌யும் எப்ப‌வும் வாத்தியாரோட‌ க‌ண்ணு இருக்கும். அத‌னால‌ ந‌டு வ‌ரிசையில‌, சுவ‌ரோர‌மாதான் உட்காருவோம். ஆனா என்ன‌ பிர‌ச்சினைன்னா அது ஏசிக்கு கீழ‌ இருக்குமா, காலைல‌ மெஸ்ல‌ பொங்க‌ல்னா போதும், அப்ப‌டியே துக்க‌ம் க‌ண்ண‌ க‌ட்டும். என்ன‌ ப‌ண்ணுற‌து, எல்லாருக்கும் வாய்க்காத‌ பாக்கிய‌ம் ஒண்ணு என‌க்கு வாய்ச்சிருக்கே, அதாங்க ஸ்கார்ஃப்! அப்ப‌டியே ஒரு ப‌க்க‌ம் க‌ண்ண‌த்துல‌ கையும் இன்னொரு ப‌க்க‌ம் ஸ்கார்ஃப‌ அட்ஜ‌ஸ்ட் ப‌ண்ணிட்டா போதும்! சார் கண்ணுல‌ ப‌டாம‌ தொட‌ர்ந்து ரெண்டு ம‌ணி நேர‌ம் தூங்கிருக்கேன்னா பாத்துக்கோங்க‌ளேன்!


ஒரு ச‌ம‌ய‌ம் அதுவும் வேலைக்காவாது.. தூங்கி மாட்டிக்கிட்டா மான‌ம் போய்டும், அத‌னால‌ ஸ்கூல்ல‌ ப‌ண்ணின‌ மாதிரி க‌டைசி ப‌க்க‌ கிறுக்க‌ல் தான் ந‌ம்மை காப்பாத்தும்.. அப்ப‌டி ஒருக்க‌ கிறுக்குன‌தை ப‌த்திர‌மா வெச்சிருக்கேன், அது உங்க‌ளுக்காக‌, இதொ!!


யாருக்காச்சும் ப‌டிக்க‌ க‌ஷ்ட‌மா இருந்தா, இதோ உங்க‌ளுக்காக‌வே!!


விஜ‌ய் ப‌ட‌ம் பேரு திருப்பாச்சி


அதை பாத்து என‌க்கு ரொம்ப‌ வெருப்பாச்சி


கீர‌ விக்குற‌ ஆயா பேரு மீனாச்சி


க்ளாஸ‌ விடாம‌ எடுக்குற‌வ‌ங்க‌ளுக்கு இல்லையா ம‌ன‌சாட்சி?????


***

ம‌யில் போல‌ பொண்ணு ஒண்ணு


உங்க‌ எல்லார் த‌லையில‌யும் ம‌ண்ணு
****

oligopoly, monopoly ங்க‌றான்,


என‌க்கு தெரிஞ்ச‌தெல்லாம் ம‌சால‌ போளி, கார‌ போளி தான்,


இருந்தாலும் தண்ணீர் எடுக்க‌ உத‌வும் வாளி,


கிண‌த்துல‌ த‌ண்ணி எல்லாம் காலி,


க்ளாஸ் இல்லைன்னு சொன்னா எங்க‌ளுக்கெல்லாம் ஜாலி

*****

28 comments:

அண்ணாமலையான் said...

”வ‌ருச‌ம் முழுக்க‌ மொத்த‌ம் ஒரே ஒரு நாள்தான் க்ளாஸ்ல‌ இருந்தேன்!”
வெரி குட்.. இதுக்கு ஏதாவது அவார்ட் கொடுத்தாங்களா?

சங்கர் said...

இப்படி ஒரு கவிஞர் இருக்கிறது இத்தனை நாளா தெரியாம போச்சே

சங்கர் said...

//க்ளாஸ் இல்லைன்னு சொன்னா எங்க‌ளுக்கெல்லாம் ஜாலி//

எப்படியும் தூங்கப்போறீங்க இதுல கிளாஸ் இருந்தா என்ன இல்லாட்டி என்ன

சென்ஷி said...

:-)))

நல்ல கருத்தாழம் மிக்க கவிதைகள். எப்படி இப்படில்லாம்!

Barari said...

ENNA SAKOTHARI T.RAJENDER PADAM ATHIKAM PAARPEERKALO?ATHAN PAATHIPPU THAAN INTHA KAVITHAIKAL.VAZTHUKAL.

நாஸியா said...

\\வெரி குட்.. இதுக்கு ஏதாவது அவார்ட் கொடுத்தாங்களா?\\

பின்ன? அந்த வருஷத்தோட outstanding student
நாந்தாங்கோ!! (நம்புங்கப்பா!)

\\இப்படி ஒரு கவிஞர் இருக்கிறது இத்தனை நாளா தெரியாம போச்சே\\

இப்ப தெரிஞ்சிருச்சில்ல.. ஒரு பாராட்டு விழா எடுக்கலாம்தானே..

\\எப்படியும் தூங்கப்போறீங்க இதுல கிளாஸ் இருந்தா என்ன இல்லாட்டி என்ன\\

க்ளாஸ் இல்லன்டா அப்படியே படம் பார்க்கலாம், இல்லை வெளிய போய் அஜீஸ் பிரியாணிய நல்லா மொக்கலாம்ல?

\\நல்ல கருத்தாழம் மிக்க கவிதைகள். எப்படி இப்படில்லாம்!\\

ரொம்ப நன்றி.. எப்படி இப்படில்லாம்னா நா என்ன சொல்றது? அப்போ ரொம்ப மொக்கையா க்ளாஸ் இருந்தா ப்ரெஷர்ல மொக்கை கவிதை வரும்னு என்னோட ஆராய்ச்சி சொல்லுது!

நாஸியா said...

ஆமாங்க சகோதரி/சகோதரரே! எப்படியும் நாம டி ஆருடைய ரசிகைன்றதை நிரூபிக்க வேணாமா?

ஜீவன்பென்னி said...

கவித கவித.

Anonymous said...

//வ‌ருச‌ம் முழுக்க‌ மொத்த‌ம் ஒரே ஒரு நாள்தான் க்ளாஸ்ல‌ இருந்தேன்!”//

ஏன் அன்னிக்கு வாத்தியார் வரலியா ?

Anonymous said...

ஏன் அன்னிக்கு வாத்தியார் வரலியா ?

ஹுஸைனம்மா said...

எனக்குப் போட்டியா நீங்களுமா?

கவித எழுதறதச் சொன்னேன்!!

அப்துல்மாலிக் said...

உங்க வாத்தியாருங்களூக்கு இந்த கவிதையை படிச்சி காண்பிச்சிருக்கலாம் இல்லேனா அவரு அட்ரஸ்க்கு ஒரு போஸ்ட் செய்திருக்கலாம், அதுக்குபிறகு உங்க கிளாஸ் இருக்கும் பக்கத்தையே மறந்திடுவாரு

ஹுஸைனம்மா said...

அதில வரைந்திருக்கிற உதயசூரியன், இரட்டை இலை படங்கள் உங்களுக்குள் இருக்கும் அரசியல்வியாதியையும் காட்டுகிறது. கட்சி ஆரம்பிச்சீங்கன்னா மறந்துறாதீங்க ப்ளீஸ்.

இந்த வரலாற்று ஆவணத்தையும் பத்திரமா வச்சுருக்கிறதுக்கே ஒரு அவார்டு தரணும்!!

S.A. நவாஸுதீன் said...

கவிதை கலக்கல்னு சொன்னா நீங்க நம்பவா போறிங்க சகோதரி

ஷாகுல் said...

டீ ஆர்க்கு போட்டியா? சரி நடக்கட்டும்.

எம்.எம்.அப்துல்லா said...

:))

ஸாதிகா said...

//அதாங்க ஸ்கார்ஃப்! அப்ப‌டியே ஒரு ப‌க்க‌ம் க‌ண்ண‌த்துல‌ கையும் இன்னொரு ப‌க்க‌ம் ஸ்கார்ஃப‌ அட்ஜ‌ஸ்ட் ப‌ண்ணிட்டா போதும்! சார் கண்ணுல‌ ப‌டாம‌ தொட‌ர்ந்து ரெண்டு ம‌ணி நேர‌ம் தூங்கிருக்கேன்னா பாத்துக்கோங்க‌ளேன்!//பயங்கரமான டெக்னிக்தான்.காலேஜில் படிக்கப்போனீர்களோ இல்லையோ நன்றாக என் ஜாய் பண்ணி இருக்கின்றீர்கள்.:-)

நாஸியா said...

ஆமா ஜீவன்பென்னி சகோதரரே!! நீங்களாச்சும் ஒத்துக்கிட்டீங்களே

\\ஏன் அன்னிக்கு வாத்தியார் வரலியா ?\\

ஹா ஹா.. வந்தாங்களே.. அன்னைக்கு ஒரு நாளைக்குத்தான் எங்களுக்கு டிமிக்கி குடுக்க எந்த வழியுமே தெரியல..

ஹூசைனம்மா, ஆமா இனி எல்லா மக்களையும் இறைவன் தான் காப்பாத்தனும்

அபு அஃப்சர், ஆமால்ல,, நல்லா ஐடியா..மிஸ் பண்ணிட்டேனே

\\அதில வரைந்திருக்கிற உதயசூரியன், இரட்டை இலை படங்கள் உங்களுக்குள் இருக்கும் அரசியல்வியாதியையும் காட்டுகிறது. கட்சி ஆரம்பிச்சீங்கன்னா மறந்துறாதீங்க ப்ளீஸ்.

இந்த வரலாற்று ஆவணத்தையும் பத்திரமா வச்சுருக்கிறதுக்கே ஒரு அவார்டு தரணும்!!\\

ஹிஹி..அதெல்லாம் ஒரு ஃப்லோல வரைஞ்சது.. சரி இன்ஷா அல்லாஹ் ஆரம்பிச்சா உங்களை மைன்ட்ல வெச்சுக்றேன்!! அவார்டோட நாலு டப்பா ஹல்திராம்ஸ் ரசகுல்லாவையும் கொடுத்தா நல்லா இருக்கும்

நாஸியா said...

உண்மையாவே கலக்கலா நவாஸ் காக்கா? ரொம்ப நன்றி! இப்படி ஊக்கப்படுத்தினா தானே பல கவிதைகளை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்க முடியும்?

\\டீ ஆர்க்கு போட்டியா? சரி நடக்கட்டும்\\

தலைவ‌ர் ரேஞ்சுக்கு போட்டி போடுற‌து க‌ஷ்ட‌ம். இருந்தாலும் முய‌ற்ச்சி ப‌ண்ணுவோம்

***

நீங்க‌ அழுவாம‌ இருக்குற‌தே ரொம்ப‌ ச‌ந்தோச‌ம் அப்துல்லாஹ் காக்கா!

**

ஆமா ஸாதிகா லாத்தா, ந‌ல்லா என்ஜாய் ப‌ண்ணினேன்! இப்ப‌ கூண்டுக்குள்ள‌ அடைப‌ட்ட‌ கிளி!!!!

மணிகண்டன் said...

நாசியா - கலக்கி இருக்கீங்க :)- அதை விட புத்தகத்துல மயிலிறகு வச்சி காவல் காத்தா மாதிரி இவ்வளவு நாள் கழிச்சும் பேப்பர் வச்சி இருக்கீங்க பாருங்க :)- அது தான் சூப்பர்.

&&
இப்ப‌ கூண்டுக்குள்ள‌ அடைப‌ட்ட‌ கிளி
&&

யாரு உங்க அன்பானவரா ? :)- இந்த டகால்டி வேலை தான வேண்டாம்குது. பாவம் அவரு மற்றும் அனைவரும் !

ப்ரியமுடன் வசந்த் said...

ம்ம் டீ ஆர் பரம விசிறின்னு நிரூபிக்கிறீக சகோ...!

பித்தனின் வாக்கு said...

நல்ல கவிதைகள். வருங்கால சகோதரிகளுக்கு டிப்ஸ்கள். நல்ல கட்டுரை நஸியா. ஆமா கையெழுத்து நல்லா இருக்கு. கவிதைகள் சூப்பரு.

நாஸியா said...

நன்றி சகோதரர் மணிகண்டன்! நா இப்படி மொக்கையா கிறுக்கினத மட்டும் பத்திரமா வீட்டுக்கு எடுத்துட்டு வந்து அதை ஸ்கேன் பண்ணி வெச்சிக்கிட்டேன்! :)

\\யாரு உங்க அன்பானவரா ? :)- இந்த டகால்டி வேலை தான வேண்டாம்குது. பாவம் அவரு மற்றும் அனைவரும் !\\

ஹி ஹி.. டகால்டின்னு கரெடக்டா கண்டுபுடிச்சிட்டீங்களே! இருந்தாலும் நீங்கல்லாம் இப்ப நினைச்சாலும் டக்குன்னு கிளம்பி உங்க நண்பர்களை சந்திச்சுக்கலாம், ஆனா எங்களுக்கெல்லாம் அப்படி இல்லை..

‍‍‍‍***
\\பிரியமுடன்...வசந்த் said...
ம்ம் டீ ஆர் பரம விசிறின்னு நிரூபிக்கிறீக சகோ...!\\

ஹிஹி.. :))
\\பித்தனின் வாக்கு said...
நல்ல கவிதைகள். வருங்கால சகோதரிகளுக்கு டிப்ஸ்கள். நல்ல கட்டுரை நஸியா. ஆமா கையெழுத்து நல்லா இருக்கு. கவிதைகள் சூப்பரு\\

ந‌ன்றி ச‌கோத‌ர‌ரே! கையெழுத்து ந‌ல்லா இருக்கா? என் த‌மிழ் கையெழுத்து ரொம்ப‌ சுமார் தான்.. :(

Jaleela Kamal said...

நாஸியா நீங்க தூங்கி வழிந்ததா அழகா நாசூக்கா சொல்லிட்டீங்க சுதாகர் சார் சொன்ன மாதிரி வருங்கால சகோத்ரிகலுக்கு நல்ல டிப்ஸ்கள்.


நீஙக்ளும் என்ன மாதிரியா ஒரு துண்டு பேப்பர் விடாம சேர்த்து வைத்து இருக்கீங்க.


கையெழுத்தா பார்த்தா கண்ணில் ஒத்திக்கொள்ளனும் எழுதினா அப்ப்டி இருக்கனும் என்று சொல்வார்கள், அப்ப்டி தான் இருக்கு..


விஜய் காமடி கவிதை ம்ம்ம்ம் சூப்பர் கலக்குங்க கலக்க்குங்க பிரியாணியில அடுத்து என்ன போடுவீங்க...

நாஸியா said...

ஆஹா.. அதான் அந்த டிப்ஸா? நானும் ரொம்ப நேரமா முழிச்சிட்டு இருந்தேன், என்ன டிப்ஸு சொன்னோம்னு.. :)

ஆமா, எனக்கும் சில 'பொக்கிஷங்களை' சேத்து வைக்கிறது பிடிக்கும்.. ஆனா இப்ப நிறைய காணாம போய்ட்டு.. கையெழுத்து நல்லா இருக்கா.. ஆகா ஆனா எனக்கு என் கையெழுத்தாலதான் தமிழ்ல மார்க் குறையுமே :(

\\விஜய் காமடி கவிதை ம்ம்ம்ம் சூப்பர் கலக்குங்க கலக்க்குங்க பிரியாணியில அடுத்து என்ன போடுவீங்க\\

ஹிஹி.. பிரியாணி செஞ்ச பிறகு அதை எடுத்து வாய்ல தான் போடனும் ;)

(ரொம்ப மொக்கையா.. அடிக்க வர்றாதீங்க ப்ளீஸ்)

சீமான்கனி said...

பதிவு அருமை சகோ
நியாபகம்....வருதே....நியாபகம்....வருதே....

அந்த குறள் சரியாய் தெரியல அதையும்... போடுங்க....சலாம் வரட்டா....

Prathap Kumar S. said...

//நாம பள்ளியில படிக்கும்போது//

இந்த இடத்துலேருந்து சிரிக்க ஆரமபிச்சேன். கடைசி வரை சிரிச்சேன்.
சரவெடி பதிவு. பல அரிய கருத்தாழமிக்க விசயங்களை புத்தகத்தோட கடைசிபக்கத்துல எழுதியிருக்கீங்க.. அருங்காட்சியத்துல வைக்க வேண்டிய விசயத்தை இப்படி அப்பட்டமா வெளியுவிட்டுட்டீங்களே... ஆனா ஒண்ணு மட்டும் தெரியுது உங்க கையெழெுத்து ரொம்ப நல்லாருக்கு...

நாஸியா said...

நன்றி சகோதரர் சீமான் கனி! ஹிஹி.. அந்த குறள போடனுமா? :)

ஃபிகர் ஒன்று எக்ஸாம் தனில் வரைந்து விட்டால்
மாற்றாங்கே தானாய் வந்து விழும் மார்க்ஸ்

அதே ஃபிகர் வாழ்க்கையில் வந்துவிட்டால்
பர்ஸ் காலியாகும் நன்று

:)

****

\\இந்த இடத்துலேருந்து சிரிக்க ஆரமபிச்சேன். கடைசி வரை சிரிச்சேன்.
சரவெடி பதிவு. பல அரிய கருத்தாழமிக்க விசயங்களை புத்தகத்தோட கடைசிபக்கத்துல எழுதியிருக்கீங்க.. அருங்காட்சியத்துல வைக்க வேண்டிய விசயத்தை இப்படி அப்பட்டமா வெளியுவிட்டுட்டீங்களே... ஆனா ஒண்ணு மட்டும் தெரியுது உங்க கையெழெுத்து ரொம்ப நல்லாருக்கு...\\

ரொம்ப நன்றி சகோதரரே! ஆமா இப்படிப்பட்ட கருத்துக்கள் எல்லாம் மக்கள சென்றடைய இந்த வலையுலகம் பயன்படுதேன்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோச‌மா இருக்கு!
என் கையெழுத்து ந‌ல்லாருக்கா? ரொம்ப‌ ந‌ன்றி.. என‌க்கென்ன‌மோ அப்ப‌டி தோண‌லை.. :(