Monday, December 7, 2009

அளவுக்கு மிஞ்சினால்...

மக்களே..எல்லாரும் நல்லா இருக்கீங்களா? பார்த்து ரொம்ப நாளாச்சே.. என்ன பண்ணுறது? முதலில் வலைத்தளம் ஒண்ணு தொடங்கனும் என்று நினைத்த உடனே, துபை வந்து, செட்டில் ஆனதும் தொடங்கலாம்னு தான் நினைச்சேன்..ஆனா ஆசை யார விட்டுச்சு, ஆர்வக்கோளாறுல ஆரம்பிச்சாச்சு, ஆனா தொடர்ந்து எழுத தான் இயலல.. இன்னைக்கு ஹூசைனம்மா ரொம்ப அன்பா மெயில்ல விசாரிச்சாங்க.. அட, இனிமேலும் எழுதாம இருக்க கூடாதுன்னு வீராப்பா பழயபடி வந்த்தாச்சு..


தக்கடி போட்டதுக்காக எனக்கு விருது கொடுத்து சிறப்பித்த‌ சகோதரர் பித்தனின் வாக்கு அவர்களுக்கும், சகோதரி சாதிகா அவர்களுக்கும் நன்றி, நன்றி, நன்றி (எனக்கு சோடா பாட்டிலும், மைக்கும் நினைவுக்கு வருது..உங்களுக்கு?)

நமக்கு முன்ன பின்ன சொந்தமா சமைச்சு பழக்கமில்லாத்தால, பல நேரங்கள்ல செம்ம சொதப்பல்ஸ் ஆஃப் யு.ஏ.இ ஆகிடுது.. நேத்து ஒரு சேமியா செஞ்சேனே பார்க்கனும், எனக்கு உண்மயாகவே அவுங்கள கொடுமை படுத்துற மாதிரி ஒரு ஃபீலிங்.

அப்புறம் நம்ம நண்பர்கள் தொல்லை வேற தாங்க முடியல.. "ஏன்டி, நீதான் துபை வேர்ல்டுக்கு அட்வைஸ் கொடுத்தியா"ன்னு கேட்டு ஒரே தொல்லை..ஆனா துபை வேர்ல்ட விட, அதுக்கு கடன் கொடுத பிரிடிஷ் வங்கிக‌ளுக்கு அட்வைஸ் கொடுத்த‌வ‌ன‌ தான் முத‌ல்ல‌ உதைக்க‌னும்..சாத‌ர‌ண‌மா ஒரு அம்ப‌து ரூபா ஒருத்த‌வ‌ங்க‌ளுக்கு க‌ட‌ன் கொடுக்க‌னும்னாலே ஆயிர‌ம் த‌ட‌வை யோசிக்குற‌ ம‌னுச‌ன், அதெப்ப‌டி ஒரு நிறுவ‌ன‌ம் அர‌சு சார்பான‌துன்னு என்ற ஒரு விசயத்த மட்டும் வெச்சிட்டு, ஆயிர‌ம் ஆயிர‌மா கோடிகளைகொட்டி கொடுக்குறாங்க‌?

துபை வேர்ல்ட்டுக்கும், அத‌னுடைய‌ துணை நிறுவ‌ன‌மான‌ நகீலுக்கும் (அதாங்க‌, க‌ட‌ல்ல‌ பேரிச்ச‌ ம‌ர‌த்த‌ போல‌ தீவுக‌ளை க‌ட்டி, அதுல‌ ஹோடெல்க‌ளும், வீடுக‌ளும் க‌ட்டி விக்குறாங்க‌ளே) க‌ண்ண‌ மூடிட்டு, அதனுடைய‌ ஆடிட் செய்ய‌ப்ப‌ட்ட‌ க‌ண‌க்கு வ‌ழ‌க்குக‌ளை எல்லாம் பார்க்காம‌ எப்ப‌டித்தான் இவ்வ‌ள‌வு கொட்டி கொடுத்தாங்க‌ளோ..

எப்ப‌டியோ, கொஞ்ச‌ நாளைக்கு மீடியாக்க‌ளுக்கு ந‌ல்ல‌ தீனி தான்.. எப்ப‌டியும் அவ‌ங்க‌ இன்னும் க‌ட‌ன த‌ர‌ மாட்டேன்னு சொல்ல‌ல, ஆறு மாச‌ம் ஆர‌ப்போட‌த்தான் சொல்லிருக்காங்க‌.. அபு தாபியும் உத‌விக்க‌ர‌ம் நீட்டுது, பாப்போமே, என்ன‌ தான் ந‌ட‌க்க‌ போகுதுன்னு.ஒரு வேளை க‌ட‌ன‌ அடைக்காம‌ விட்டுட்டா, உல‌க‌ அள‌வுல‌ பெருசா பாதிப்பில்லைன்டாலும் இங்க‌ க‌ண்டிப்பா ஒரு க்ரெடிட் க்ரன்ச் (வ‌ங்கிக‌ள் க‌ட‌ன் மூல‌மா இருக்கும் ப‌ண‌ப்புழ‌க்க‌ம்) ந‌ட‌க்கும்னு நான் நினைக்குறேன்..

இவ்வ‌ள‌வு குள‌றுப‌டிக‌ளுக்கும் கார‌ண‌ம், காசு தான் எளிதா கிடைக்குதேன்னு க‌ண்ட‌தையும் செய்ற‌து.. இதை நாம‌ த‌னிப்ப‌ட்ட‌ முறையில‌யும் செய்யுறோம், ஒரு கூட்டா பெரிய‌ நிறுவ‌ன‌ங்க‌ளும் செய்யுது..எப்ப‌வுமே ந‌ம்ம‌ தேவைக்கு மீறி எதை செய்தாலும், அதிலும் ஒரு வ‌ரைமுறை இருக்க‌னும்.. காசு இருக்கேன்னு ஊர‌ சுத்த‌லாம், ஆனா க‌ட‌னுக்கு வாங்கி சுத்த‌னுமா என்ன‌? இது ஒரு இட‌த்தோட‌ இருக்காது, ரிப்பிள் எஃப்க்ட் என‌ சொல்ல‌ப்ப‌டும் அது சார்ந்த‌ அதிர்வுக‌ள‌ ஏர்ப‌டுத்திட்டே தான் இருக்கும்..
க‌ட‌னை ப‌ற்றியும், வ‌ட்டியை ப‌ற்றியும், வியாபார‌த்தை ப‌ற்றியும் இஸ்லாம் என்ன‌ சொல்லுத்துன்னு பார்த்தா ரொம்ப‌ ஆச்ச‌ர்ய‌மா இருக்கு..ஒரு நிதி நிர்வாக‌ துறையை சேர்ந்த‌ என‌க்கு புரிஞ்ச‌த‌ கூடிய‌ சீக்கிர‌ம் உங்க‌ளிட‌மும் ப‌கிர்ந்துக்க‌றேன்..

14 comments:

சீமான்கனி said...

நல்லா பதிவு சகோ கடன் வாங்கிடாலே பிரச்சனை கூடவே வந்துரும்... உன்னமைதான்

அன்புடன் மலிக்கா said...

பாத்து நாஸியா பாத்து. இப்பாலவந்துட்டு இவுகலயே கலாய்க்கிறீங்க செமசூப்பருங்கோ

SUFFIX said...

Slow and Steady wins the race!! இத்தனை துரிதமாக அவங்க போகும்போதே எல்லொரும் கணித்தது, இப்போ ஒவ்வொன்றாக வெளியில் கிளம்புது. இனியாவது நிதானமா இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.

நாஸியா said...

ஆமா சகோதரர், சீமான்கனி அவர்களே..முன்னெல்லாம் நம்ம மக்கள் கடன் வாங்கவே அஞ்சுவாங்க.. ஆனா இப்ப எளிதா கிடைக்குதேன்னு இஷ்டத்துக்கு வாங்கி போட்டு கடந்த்து அல்லாடுறாங்க.. இந்த கண்ணு மண்ணு தெரியாம கடன் குடுக்குறது தான் உலக பொருளாதாரத்த இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கு...

மலீக்கா'கா, என்ன பண்ணுறது.. அவங்க விதி அவ்வளவு தான் .. ஹா ஹா..

ஷ‌ஃபிக்ஸ் சகோ, ஆமா, வளர்ச்சி நல்லது தான், ஆனா அதை அடைவதுக்கு வரைமுறை தெரியாமல் செலவிட்டால் இப்படி தான்.. இருந்தாலும் இதை இங்குள்ள அரசு சமாளிக்கும் விதம் நல்லாவே இருக்கு.ரொம்ப பாஸிட்டிவான அப்ரோச்!

S.A. நவாஸுதீன் said...

வரவு எட்டனா செலவு பத்தனா கதைன்னாலே இப்படித்தான்.

அது அரசா இருந்தாலும் சரி ஆண்டியா இருந்தாலும் சரி

S.A. நவாஸுதீன் said...

//நேத்து ஒரு சேமியா செஞ்சேனே பார்க்கனும், எனக்கு உண்மயாகவே அவுங்கள கொடுமை படுத்துற மாதிரி ஒரு ஃபீலிங்.//

மச்சானை நெனச்சாதான் ரொம்ப கவலையா இருக்கு

நாஸியா said...

\\வரவு எட்டனா செலவு பத்தனா கதைன்னாலே இப்படித்தான்.

அது அரசா இருந்தாலும் சரி ஆண்டியா இருந்தாலும் சரி\\

சரியா சொன்னீங்க காக்கா...

\\மச்சானை நெனச்சாதான் ரொம்ப கவலையா இருக்கு\\

என் தம்பியும் இதே டயலாக்க தான் சொல்றான்... :)

ஷாகுல் said...

//நேத்து ஒரு சேமியா செஞ்சேனே பார்க்கனும், எனக்கு உண்மயாகவே அவுங்கள கொடுமை படுத்துற மாதிரி ஒரு ஃபீலிங்.//

சித்திரமும் கைப்பழக்கம்னு சொல்லுவாங்க அதனால கவலை படாதீங்க.

ஹுஸைனம்மா said...

//எனக்கு சோடா பாட்டிலும், மைக்கும் நினைவுக்கு வருது..உங்களுக்கு?//

அழுகின தக்காளியும், முட்டையும்!! ;-)

நல்லா எழுதியிருக்கீங்க. இரண்டு பக்கமும் தப்பிருக்கு: ஆழம் பார்க்காம காலை விட்டது அவங்க தப்புன்னா, அகலக்கால் வச்சது இவங்க தப்பு!

மீண்டு வரவேண்டும், அதுதான் எல்லாருக்கும் நல்லது.

வீட்ல சாப்பிடும்போது என்ன கமெண்ட் வந்துது?

ஸாதிகா said...

நக்கலாக எழுதினாலும் நச் என்று எழுதி இருக்கீங்க நாஸியா.இனி பிளாக்கில் எழுதுவதற்கு மட்டும் நீங்கள் சோம்பல் படவே கூடாது.ஏன்னா ஒவ்வொரு முறையும் இன்னிக்கு பிரியாணியில் புது பதிவு என்ன வந்திருக்குன்னு உங்கள் பிளாக்கை ஓப்பன் செய்தால் மிஞ்சுவது ஏமாற்றம் தான்.

நாஸியா said...

ஷாகுல் பாய், இன்ஷா அல்லாஹ்.. கூடிய சீக்கிரம் தேறுவதற்க்கு கொஞ்சம் துவா செய்ங்க.. :)

\\அழுகின தக்காளியும், முட்டையும்!! ;‍)\\

அட்றா சக்கை.. ஆனா என் மேல வீசிறாதீங்கப்பா..

\\நல்லா எழுதியிருக்கீங்க. இரண்டு பக்கமும் தப்பிருக்கு: ஆழம் பார்க்காம காலை விட்டது அவங்க தப்புன்னா, அகலக்கால் வச்சது இவங்க தப்பு!

மீண்டு வரவேண்டும், அதுதான் எல்லாருக்கும் நல்லது.\\

இன்ஷா அல்லாஹ்.. அதெல்லாம் மீண்டு வந்துருவாங்க.. :)

வீட்ல சாப்பிடும்போது என்ன கமெண்ட் வந்துது?

அவங்க ரொம்ப அமைதியா சாப்பிட்டு எந்திரிச்சுட்டாங்க.. பாவம் அப்போ அவங்களுக்கு அவ்வளவு பசி வேற..

நாஸியா said...

ஆஹா.. ஸாதிகா லாத்தா.. இன்ஷா அல்லாஹ்.. தொடர்ந்து எழுதுறேன்.. என்னமோ தெரியல இங்க வந்த பிறகு டைம் மேனேஜ்மென்ட் ரொம்ப கஷ்டமா இருக்கு

Jaleela Kamal said...

ஆகா நாஸியா சேமியாவ நினைத்து நவாஸ்க்கு மச்சான பற்றின கவலை வந்து விட்டது. நல்ல பக்ரிவு, தொடந்து எழுதுங்கள்,

Unknown said...

நாசியா

ஜலீலக்கா நீங்கல்லாம் மீட் பன்னிகிட்டதா சொன்னதிலயிருந்து உங்கள் ப்லாகுக்கு வரனும்னு நெனச்சுட்டே இருந்தேன்..இப்ப தான் நேரம் அமைந்தது என்ன அழகா எழுதறீங்க...படிக்கவெ ரொம்ப நல்லா இருக்கு..நிறைய எழுதுங்களேன்.எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சு போச்சு

தளிகா