Saturday, November 7, 2009

அரபி காரங்க மண்டையும், அதுல உள்ள கொண்டையும்..

அதாவது என்னன்னா, மேடம் இப்பல்லாம் ரொம்ப பிஸி மாதிரி.. இல்லத்தரசி இல்லையா? சமைக்கணும் இல்லையா? எல்லாரும் கேக்குறாங்க 'how was your cooking experience?' அப்படின்னு.. எனக்கு தானே தெரியும் அது experience இல்லை, experiment என்று! ஹிஹி... பாவம் எங்க வீட்டுல உள்ளவங்கதான்.. போன வாரம் ஒரு சொதப்பல் ரசம் வெச்சு அவங்களுக்கு கட்டி குடுத்துட்டேன்... பாவம் அவங்க அலுவலகத்துல கிட்டத்தட்ட மானம் போய்ட்டாம் (ஆனா பாருங்க, ரசம் மட்டும் தான் சொதப்பல், மத்த இதெல்லாம் நல்லா தான் செய்றேன்னு சொன்னாங்களாக்கும் ;) )

துபைக்கு கெளம்பறேன்னு எல்லார்கிட்டயும் பயணம் சொல்லும்போது, சொல்லி வெச்ச மாதிரி எல்லாரும் கேட்ட கேள்வி: "துபாய் ல எங்க, மெயின் ரோட்டுக்கு பக்கத்துலயா? பஸ் ஸ்டாண்ட ஒட்டியா?". இங்க வந்ததுல இருந்து துபாய் பஸ் ஸ்டாண்ட் எங்க இருக்குன்னு பாக்க ரொம்ப ஆவலா இருந்தது, நேத்துதான் காண கிடைச்சுது.. நேத்து தெரிஞ்சவங்க ஒருத்தவங்க வீட்டுக்கு ஷார்ஜாவுக்கு போனோம், அங்க அவங்க வீடு உண்மையாவே கொஞ்சம் பஸ் ஸ்டாண்டுக்கும், மெயின் ரோடு (அதாங்க அந்த பெரிய பிரிட்ஜ்) பக்கத்துல தான் இருந்துச்சு! :)

துபாய்  வந்து சேர்ந்த உடன கண்ணை ஸ்கேன் பண்ண வரிசைல நிண்டுட்டு இருந்தேன்... அரபிகாரங்களை தொலைக்காட்சியில பார்த்தாலும் நேர்ல பாக்குறது அது தான் முதல் தடவைன்னு நினைக்கிறேன்.. அவங்க தலைல இருந்த அந்த கருப்பு வட்டத்தை பார்த்ததும் எனக்கு எங்க வீட்டுல இருக்குற கலவடை நினைவுக்கு வந்துட்டு (அதான் அடுப்புல இருந்து இறக்கி வைக்க ஒரு ரிங் இருக்குமே, அது).. உடனே அவர் தலைல ஒரு சட்டிய வைச்சா எப்படி இருக்கும்னு நினைச்சிட்டு இருக்கும்போதே என் முறை வந்துட்டு.. போனா 'ஆங்கொன் , தேகோ' ன்னு  ஏதோ ஹிந்தியில சொல்றார்.. நமக்கு தான் ஹிந்தி வரதே, நான் சொன்னேன், 'i don't understand hindi', அப்புறம் அவர் கேட்டார் 'you're from India, you don't know Hindi?', அடுக்கு நான் 'no, I speak Tamil' அப்படின்னு சொன்னேன். அடுத்த கேள்வி தான் காமெடியே, அவரு "then what language you know" அப்படின்னு கேட்டப்போ எனக்கு வந்துச்சு பாருங்க, மனசுக்குள்ள "அடப்பாவி மனுசா, இவ்வளவு நேரம் எதுல பேசிட்டு இருந்தேனாம்னு நினைச்சிட்டே, English please" ன்னு சொல்லி தப்பிச்சேன்!

சரி இங்க உள்ள அரபி பொண்ணுங்களுக்கும் தலை ரொம்ப வித்தியாசமா தான் இருக்குதுங்க.. ஆமா... தலைல ஏதோ ஸ்டாண்ட் அடிச்சு அதை சுத்தி துணிய போட்டுருக்குற மாதிரி இருக்கு... அது தான் இப்ப பேஷன் போல... ரொம்ப இருக்கமா உடை அணிஞ்சிட்டு பேருக்கு சும்மா தலைல துணிய சுத்தி இருக்காங்க.. என்னமோ... மேலை நாடுகள்ல ஹிஜாபை கடைபிடிக்க சாலைல வந்து போராட வேண்டி இருக்கு... இங்கு இவ்வளவு சுதந்திரம் இருந்தும் இப்படி இருக்குறாங்க.. அவங்க எங்க, இவங்க எங்க!

அல்லாஹ் தான் எல்லா மக்களையும் காப்பாத்தனும்..

35 comments:

சென்ஷி said...

துபாய் வந்து இறங்கினதுமே உங்க கலாட்டாவை ஆரம்பிச்சுட்டீங்களா :-)

எம்.எம்.அப்துல்லா said...

எனக்கு தானே தெரியும் அது experience இல்லை, experiment என்று//

//(அதான் அடுப்புல இருந்து இறக்கி வைக்க ஒரு ரிங் இருக்குமே, அது).. உடனே அவர் தலைல ஒரு சட்டிய வைச்சா எப்படி இருக்கும்னு நினைச்சிட்டு //

//ஆமா... தலைல ஏதோ ஸ்டாண்ட் அடிச்சு அதை சுத்தி துணிய போட்டுருக்குற மாதிரி இருக்கு... //

haa..haa..haa.. nonstop saravedi :))

எம்.எம்.அப்துல்லா said...

//மதுவின் மூலம் பொருளாதர சிந்தனைகளை தெரியப்படுதியுள்ளீர்கள்: அரசுக்கு வருவாய் என்றாலும் இது போன்ற இடங்களில் பணத்தை விரையம் செய்வது அடிமட்ட மக்கள்: அவர்களின் பணம் ஒரு பாட்டில் சரயதொடு முடிவதில்லை..remember the social cost of this drinking! குடியால் ஈரல் வேந்தவர்களுக்கு அரசு அந்த பணத்தை செலவளிக்குமா? ஒட்டுமொத்தமாக மது ஒழிப்பே ஒரு சமூகம் நல்ல முறையில் இருக்க உதவி செய்யும்.. இதில் no options!

//

நாஸியா நீங்கள் சொன்னதில் 101% நானும் உடன்படுகின்றேன். என் கருத்தும் அதுதான். பூரண மதுவிலக்கு என்பதுதான் என் ஆசையும்,முயற்சியும். ஆனால் அரசு அதை அறவே செய்யாது எனும்போது வேறு எந்த வழியில் அரசுக்கு வருவாய் இழப்பின்றியும், ’குடி’மக்களின் உடல்நிலை பெரிதும் பாதிப்படையாமலும் செய்வது என்ற நிலையில் அந்தக் கருத்தைத் தெரிவித்தேன். அதைவைத்து நான் மதுவிற்கு ஆதரவானவன் என்ற எந்த தவறான முடிவிற்கும் வரவேண்டாம் :)

சுந்தரா said...

//'you're from India, you don't know Hindi?',//

ஆறேழு வருஷத்துக்கு முந்தியே இதே கேள்வியைக் கேட்டு என்னைக் கேவலப்படுத்திடுச்சு ஒரு அரபிப்பொண்ணு...ஆனா, இன்னமும் இந்தி படிக்கலங்கிறதுதான் வருத்தமான விஷயம் :(

உங்களுக்கு ஹிந்தி தெரியாதமாதிரி, அரபிகளுக்குத் தமிழ் தெரியாதுன்னு தெரிஞ்சுகிட்டு, இவ்வளவு தைரியமா அவுங்கள வம்புக்கிழுத்திருக்கீங்க :)

Jaleela Kamal said...

நாஸியா ஹி ஹி துபாய் அனுபவம் என்றதும், எனக்கு ஞாபகம் வந்து விட்டது அப்போ அரை குறை ஹிந்தி கத்து கொண்டு வந்து இங்குள்ள டேக்சி காரரும், டாக்டரும் பட்ட பாட்ட்டை.

இப்ப நினைத்தாலும் சிரிப்பு வருது,

அந்த அரபிகள் தலையில் உள்ள வண்டு, அரபி காரர் கள் ரொம்ப சூடு ஜாஸ்தி பொசுக்குன்னு கோபம் வந்துடும், கோபம் வந்தா அந்த தலையில் உள்ள வண்டை கழட்டி அடிச்சிடுவாங்களாம், அந்த காலத்தில் ஒட்ட்கம் மேய்க்கவும் அந்த தலையில் உள்ள கயிறு தானாம்.

Jaleela Kamal said...

இப்ப அரபிகள் சூப்பரா, ஹிந்தியும்,மலையாளமும் பேசுகிறார்கள்

SUFFIX said...

துபாய் பிரியாணியா? அது சரி வந்திறங்கியவுடனேயே அரபிங்களுக்கு காரசாரமான விருந்து வச்சாச்சா? இனி அம்புட்டுத்தேன்!!

S.A. நவாஸுதீன் said...

துபாய் வந்ததும் ஆரம்பிச்சாச்சா?.

haa..haa..haa.. nonstop saravedi :)) - அதேதான் அதேதான்

நாஸியா said...

ஹி ஹி.. சென்ஷி அண்ணே, ஆமா பின்ன என்ன பண்றது?

அப்துல்லாஹ் காக்கா, சரவெடியா... யப்பா....

உங்களுடைய நோக்கம் தெரிகிறது, ஆனா ஒரு சொட்டுகானு விஷம் தான் என்றாலும் விஷம், விஷம் தான்.. ஹராமான ஒரு விஷயத்தை முற்றிலுமாக வெறுத்து ஒதுக்குவதே நன்மை.. :)

உங்கள் கருத்துக்கு நன்றி சகோதரி சுந்தரா.. :) நிங்களும் துபாய் இல்லத்து அரசியா? சூப்பர்! இனி டிப்ஸ்/ ஐடியா எல்லாம் உங்ககிட்டையும் கேட்டு தெரிஞ்சுக்கலாம்..


\\அந்த அரபிகள் தலையில் உள்ள வண்டு, அரபி காரர் கள் ரொம்ப சூடு ஜாஸ்தி பொசுக்குன்னு கோபம் வந்துடும், கோபம் வந்தா அந்த தலையில் உள்ள வண்டை கழட்டி அடிச்சிடுவாங்களாம், அந்த காலத்தில் ஒட்ட்கம் மேய்க்கவும் அந்த தலையில் உள்ள கயிறு தானாம்.\\
ஜலீலா லாத்தா...இப்படி பயங்காட்டுறீங்களே....நான் அவங்கள பார்த்து அடிச்சா நக்கலக்கு அவ்வளவு தான் என் கதி. :(

நாஸியா said...

ஷபிக்ஸ் அண்ணே, இன்னும் விருந்து எதுவும் வைக்கல.. :)

ஹிஹி.. ஆமா நவாஸ் காக்கா... இதே நம்ம ஊரா இருந்தா பாக்குறவங்க எல்லார்கிட்டயும் சொல்லிருப்பேன்.. :)

எம்.எம்.அப்துல்லா said...

//ஹராமான ஒரு விஷயத்தை முற்றிலுமாக வெறுத்து ஒதுக்குவதே நன்மை.. :)

//

ஐ யாம் சரண்டர் :)

Menaga Sathia said...

//அவங்க தலைல இருந்த அந்த கருப்பு வட்டத்தை பார்த்ததும் எனக்கு எங்க வீட்டுல இருக்குற கலவடை நினைவுக்கு வந்துட்டு (அதான் அடுப்புல இருந்து இறக்கி வைக்க ஒரு ரிங் இருக்குமே, அது)..// ஆஹா செம காமெடியான பதிவு!!

ஹுஸைனம்மா said...

//'you're from India, you don't know Hindi?', //

அலுவலகத்தில் நானும் சக வட இந்தியரும் ஆங்கிலத்தில் பேசும்போது பார்க்கும் மற்ற நாட்டவர் எல்லாரும் கேட்கும் கேள்வி “Why u people dont speak in your language?".

//ரசம் மட்டும் தான் சொதப்பல், மத்த இதெல்லாம் நல்லா தான் செய்றேன்னு சொன்னாங்களாக்கும்//

இப்ப இப்படித்தான் சொல்வாங்க...


//எனக்கு தானே தெரியும் அது experience இல்லை, experiment என்று! //

என்னோட experiments இன்றும் தொடர்கின்றன :-(

நாஸியா said...

அல்ஹம்துலில்லாஹ்! ஜஸகல்லாஹ் க்ஹைர், அப்துல்லாஹ் காக்கா!!!

\\செம காமெடியான பதிவு!!\\ நன்றி சகோதரி! :) என் சமையல் தான் அதை விட காமெடியே..

ஹுஸைனம்மா... அப்படியா??இப்போ அப்படி தான் சொல்லுவாங்களா??? சே நானும் என் சமையல் பரவல்ல போலன்னு லோ நினைச்சேன்!

ப்ரியமுடன் வசந்த் said...

தலைப்பே நகைச்சுவை வரவழைத்தது...

ஆயில்யன் said...

//நமக்கு தான் ஹிந்தி வரதே, நான் சொன்னேன், 'i don't understand hindi', அப்புறம் அவர் கேட்டார் 'you're from India, you don't know Hindi?', அடுக்கு நான் 'no, I speak Tamil'///


அதே கேள்விகள் :)

சூப்பரூ குண்டானை தூக்கி தலையில வைக்க ப்ளான் போட்ட உங்கக்கிட்ட பதிலுக்கு நல்லா கேள்வி கேட்டு அட்டாக் பண்ணிடாங்க :))))

ஆயில்யன் said...

அரபி பெண்களின் பெரிய கூலிங் கிளாஸ்களை பத்தி சொல்லவேயில்ல கவனிக்கலயா ? :)

குப்பன்.யாஹூ said...

துபாய் பஸ் ஸ்டாண்ட் (பர் துபாய்) இன்னும் நீங்க பார்க்க வில்லையா.

நம் சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டை விட கொடுமையாக சுகாதாரம் அற்ற முறையில் இருக்கும் பர் துபாய் பஸ் ஸ்டாண்ட்.

அதுவும் துபாய் டு ஷார்ஜா செல்ல கூட்ட்ம் வரிசையில் வெய்யிலில் நிற்குமே, பாவம்

பர் துபாய் பஸ் ஸ்டாண்ட் பற்றியும் எழுதுங்கள்.

லெமூரியன்... said...

தலைப்புல இருந்து கடைசி வரைக்கும் கலக்குறீங்க...! நல்ல இருக்கு நாஸியா :-) உங்க முதற் அரேபியா அனுபவம்.

வோட்டும் போட்டாச்சுங்க.! :-)

நாஸியா said...

ஹி ஹி.. அப்படியா வசந்த அண்ணே? நன்றி... :)

ஆயில்யன் அண்ணாச்சி, ஆமா நம்ம பிளான் அவருக்கு தெரிஞ்சிருக்குமோ? \\அரபி பெண்களின் பெரிய கூலிங் கிளாஸ்களை பத்தி சொல்லவேயில்ல கவனிக்கலயா ? :)\\ நான் இது வரைக்கும் இரவு நேரத்துல தான் வெளிய போய்ருக்கேனா. அதனால கவனிக்கல.. ஆக மொத்ததுல அவங்க வெளிப்புற தோற்றத்துல நிறைய நேரம் செலவழிக்கிறாங்க..

குப்பன் அண்ணே, அப்படியா? நான் இது வரைக்கும் போனதில்ல.. ஆனா இங்கு கூலித்தொழிலாளிகளாக வேலைப்பாற்பவர்களை கண்டால் மனசுக்கு கஷ்டமா இருக்கு. நம்ம ஊர்ல ஆறுதலுக்கு வீடாச்சும் இருக்கும்.. இங்கு அது கூட இல்லை.. :(

நன்றி லெமூரியன்.. ரொம்ப நன்றி :) உங்க பேரு கூட ஏழாம் வகுப்பு முதல் தமிழ் பாடம் நினைவுக்கு வருது..

ஸாதிகா said...

தலைப்பைப்பார்த்தால் என்னடா "இது அரபிக்காரன் மணடையும்,அதில உள்ள கொண்டையும் "வித்தியாசமாக இருக்கின்றதே என்று பார்த்தால்..
//அவங்க தலைல இருந்த அந்த கருப்பு வட்டத்தை பார்த்ததும் எனக்கு எங்க வீட்டுல இருக்குற கலவடை நினைவுக்கு வந்துட்டு (அதான் அடுப்புல இருந்து இறக்கி வைக்க ஒரு ரிங் இருக்குமே, அது).. உடனே அவர் தலைல ஒரு சட்டிய வைச்சா எப்படி இருக்கும்னு நினைச்சிட்டு இருக்கும்போதே//
சிரிப்புத்தான் வந்தது.சகோதரி நாசியாவுக்கு எப்படிஎல்லாம் கறபனை பிராவகம் எடுக்கின்றது!
:-)

சிநேகிதன் அக்பர் said...

நகைச்சுவையான பதிவு.

இங்கும் அதே கதைதான் (இந்தி தெரியாததால்)

அப்துல்மாலிக் said...

//'you're from India, you don't know Hindi?', //

என் க‌ம்பெனி டிரைவ‌ர் பாகிஸ்தானி இதை கேட்டு கேவ‌ல‌ப்ப‌டுத்தினார், அவ‌ர் சொன்ன‌ நேர‌ம் புரியாம‌ல் ப‌ஸ்ஸ கோட்டைவிட்டு, க‌ம்பெனிலே க‌ப்ளெயின்ட்ப‌ண்ணி க‌ம்பெனி அவ‌ரை வார்ன் ப‌ண்ணிய‌வுட‌ன் வ‌ந்த‌ க‌டுப்புலே இதை கேட்டார். அந்த‌ வெரிலே ச‌மாளிக்கும் அள‌விற்கு ஹிந்தி தெரிந்துக்கொண்டேன்

ந‌ல்லா காமெடியா எழுதிருக்கீங்க‌.. இது மாதிரி நிறைய‌ எதிர்ப்பார்க்கிறேன்

UNIVERSAL said...

Hi Nashia,

How r u? I read ur post it is really nice,I am in Riyadh you are welcome at any time.

Thanks,

Shhaul @ +966 568 200 276

Toto said...

நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌கு "க‌ல‌வ‌டை" வார்த்தையைப் பார்த்து சிரிச்சிட்டேன்.. ந‌ல்ல‌ உவ‌மை. ந‌ல்ல் ப‌திவு.

-Toto
www.pixmonk.com

சீமான்கனி said...

அட அருமையா இருக்கே....அருமையா எழுதி இருக்கீங்க ...
தூள்...துபாய் அனுபவம் கிச்சு கிச்சு மூட்டுன மாதிரி இருந்துச்சு...அனால் என்னோட அனுபவம் ரெம்ப கொடுமையானது...ஒரு நாள் வழி தெரியாம...6 மணி நேரம் நடந்ததுதான் நியாபகத்துக்கு வருது....
பார் துபாய் போகும்போது அந்த போட் சவரிய மிஸ் பண்ணிடதிங்க...

நாஸியா said...

ஸாதிகா லாத்தா... :) நன்றி

நன்றி சகோதரர் அக்பர்.. :)

நன்றி சாகுல் சகோதரர்!

ஹிஹி.. அப்படியா "டோடோ" :) நீங்களும் நெல்லை சீமையா?

நன்றி சீமாங்கனி அவர்களே.. ஆறு மணி நேரம் என்றால் கொஞ்சம் மோசமான அனுபவம் தான்... too bad
போட் சவாரியா? இன்ஷா அல்லாஹ் அடுத்த முறை போய்ட வேண்டியது தான்

Jaleela Kamal said...

www.tamileditor.org
ithil pooy type paNNungkaL

Jaleela Kamal said...

அதுவும் வொர்க் ஆகலன்னா

www.arusuvai.com



கிளிக் பண்ணி அதில் ஓவ்வொரு பேஜிலும் கீழே எழுத்துதவி என்று இருக்கும்.

அதை பார்த்து டைப் பண்ணுங்கள்.

ஹுஸைனம்மா said...

நாஸியா, நான் சொல்லவந்ததை ஜலீலாக்கா சொல்லிட்டாங்க.

நாளை நடக்க இருக்கும் தமிழ்ச்சங்க விழாவிற்கு வருவீங்களா? மெயில் அனுப்புங்களேன்: hussainammaa@gmail.com

ஷாகுல் said...

//'you're from India, you don't know Hindi?//

இப்படி கேட்ட உடனே குச் குச் ஹோத்தா ஹே!
தில்மோங்கே தில்வாலி அப்படினு நீங்க அடிச்சி விட்டீங்கனா அரபியே மிரண்டுருப்பான்.

//ரொம்ப இருக்கமா உடை அணிஞ்சிட்டு பேருக்கு சும்மா தலைல துணிய சுத்தி இருக்காங்க.. என்னமோ... மேலை நாடுகள்ல ஹிஜாபை கடைபிடிக்க சாலைல வந்து போராட வேண்டி இருக்கு... இங்கு இவ்வளவு சுதந்திரம் இருந்தும் இப்படி இருக்குறாங்க//

இன்னும் நீங்க ஷாப்பிங் மால்ஸ்லாம் போயி ஹிஜாப் பாக்கலியா. ரொம்ப கொடுமையா இருக்கும். ஹிஜாப்பின் அர்த்தமே அதில் இருக்காது.

உங்கட்ட இருந்து இன்னும் எதிர்பாக்குறோம். :-)

நாஸியா said...

ரொம்ப நன்றி ஜலீலா லாத்தா... இது நல்லா தான் இருக்கு.. :)

தமிழ் சங்க விழாவா? இது எப்பொ? எங்க நடக்குது?

இன்னும் துபாய் மால் போய் பாக்கல.. பயஙகர அதிர்ச்சி காததுட்டு இருக்கு போல.. /உங்கட்ட இருந்து இன்னும் எதிர்பாக்குறோம். :-)
/ ரொம்ப நன்றி சகோதரரே

பித்தனின் வாக்கு said...

ஆகா கலாட்டாவை ஆரம்பிச்சுட்டாங்கப்பா, பார்த்துங்க. கொஞ்சம் மோசமான ஊரு அப்பிடினு கேள்விப் பட்டேன். நன்றி.

Prathap Kumar S. said...

// கொஞ்சம் பஸ் ஸ்டாண்டுக்கும், மெயின் ரோடு (அதாங்க அந்த பெரிய பிரிட்ஜ்) பக்கத்துல தான் இருந்துச்சு! :)//

விவேகானந்தர் தெரு இருந்துச்சா?

//அவங்க தலைல இருந்த அந்த கருப்பு வட்டத்தை பார்த்ததும்//

எனக்கென்னவோ தலையிலுள்ள வளையத்தைப்பார்த்தா தலைல போட்டுருக்கற துணி பறக்காம இருக்க போட்டுருக்காங்கன்னு தோணுது.

பதிவு முழுவதும் சிரிப்புவெடிகள். உங்களுக்குள்ள ஒரு கோவைசரளா ஒளிஞசுட்டு இருக்கறது உங்க பதிவு மூலம் தெரிகிறது :-)

நாஸியா said...

மோசமான ஊரா? யார் சொன்னது?


நாஞ்சில் பிரதாப் said...


விவேகானந்தர் தெரு இருந்துச்சா?

அதை தான் இன்னும் தேடிட்டு இருக்கேன்..


எனக்கென்னவோ தலையிலுள்ள வளையத்தைப்பார்த்தா தலைல போட்டுருக்கற துணி பறக்காம இருக்க போட்டுருக்காங்கன்னு தோணுது.

பதிவு முழுவதும் சிரிப்புவெடிகள். உங்களுக்குள்ள ஒரு கோவைசரளா ஒளிஞசுட்டு இருக்கறது உங்க பதிவு மூலம் தெரிகிறது :-)

ஆகா.. க‌டைசியில‌ கோவை ச‌ர‌ளாவாக்கிட்டீங்க‌ளா.. :) முத‌ல் வ‌ருகைக்கு ந‌ன்றி ச‌கோத‌ர‌ரே