Wednesday, November 4, 2009

பிடித்தவர்/பிடிக்காதவர்

ஒரு வழியா துபாய் வந்து சேர்ந்தாச்சு.. தனியா சமைக்கவும் பழகியாச்சு (சரி, சரி..என்ன செய்ய, எங்க வீட்ல உள்ளவங்க தல விதி அவ்வளவு தான்).. இப்ப பிரியாணி கடையையும் திறந்தாச்சு..

பீர் அண்ணே தொடர் விளையாட்டுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.. ரொம்ப நன்றி! ஹிஹி.. சரி ரொம்ப பேசாம விஷயத்துக்கு வாரேன்:

1. அரசியல் தலைவர்


பிடித்தவர்: ஜெயலலிதா

பிடிக்காதவர்: கலைஞர் (ஆட்டோ வருமோன்னு பயம்மா இருக்கு பா)

2. எழுத்தாளர்

பிடித்தவர்: கல்கி (பொன்னியின் செல்வன்!!!!!)

பிடிக்காதவர்: மதன்

3. கவிஞர்

பிடித்தவர்: தாமரை

பிடிக்காதவர்: பா. விஜய்  (கேவலமான
 குத்து பாடல்களுக்காக)

4. திரைப்பட இயக்குனர்

பிடித்தவர்: பாண்டியராஜன் (ஆண் பாவம் ஒரு படம் போதும்)

பிடிக்காதவர்: கே. பாலசந்தர்

5. நடிகர்/கை

பிடித்தவர்: பத்மினி 

பிடிக்காதவர்: விஜய் 

6. விளையாட்டு வீரர்

பிடித்தவர்: விசுவநாதன் ஆனந்த்

பிடிக்காதவர்: ஜோஷ்னா சின்னப்பா

7. தொழில் அதிபர்

பிடித்தவர்: சாந்தி துரைசாமி ( சக்தி மசாலா)

பிடிக்காதவர்: ராஜகோபால் (சரவணபவன்)

கேள்வின்னு வந்தாலே எல்லாமே மறந்து போகுது.. விளையாட்டின் விதிகள் இங்கே.

நான் அழைக்க விரும்புவது:
 
1. விக்னேஸ்வரி 
2. அன்புடன் மலிக்கா 
 
 

17 comments:

மணிகண்டன் said...

ஹலோ, ஏன் ஜோஷ்னாவை பிடிக்காது ? இது சரியில்லை சொல்லிட்டேன். மரியாதையா பதிலை மாத்துங்க. வேற யாராவது படிச்சா ரணகளம் ஆயிடும்.

நாஸியா said...

ஹிஹி.. அந்த பொண்ணு என் காலேஜ் ஜூனியர் தான்.. எல்லாமே காரணமா தான்! ஏன் ரணகளம் ஆவுது? :)

Yousufa said...

நாஸியா,

//பிடித்தவர்: பாண்டியராஜன் (ஆண் பாவம் ஒரு படம் போதும்)//

இதுபோல விரசமில்லாத சிரிப்புப் படங்கள் இப்போ வருவது அபூர்வம். அவர் மகனுடன் சிலகாலம் முன் வந்த படமும் ஓரளவு நல்லா இருந்தது.

Jawahar said...

மதன் ஒரு எழுத்தாளர் என்று அங்கீகரித்ததே அவருக்கு நீங்கள் செய்திருக்கும் பெரிய ஹானர்.

பாலச்சந்தரைப் பிடிக்காது என்று சொன்னது ஓக்கே. யாரோடு ஒப்பிட்டு என்பது கொஞ்சம் ஆச்சரியப் பட வைக்கிறது!

http://kgjawarlal.wordpress.com

பீர் | Peer said...

//பிடித்தவர்: ஜெயலலிதா//

நானும் பிடிக்காது என்று சொல்லமாட்டேன்.

அதுசரி.. சீனியர பிடிக்காம போகலாம், ஏன் ஜூனியர் பிடிக்கல?

சென்ஷி said...

:)))))))

நாஸியா said...

ஹுஸைனம்மா, ஆமா லாத்தா சரியா தான் சொன்னீங்க.. அந்த படம் எனக்கும் என் தம்பிக்கும் அவ்வளவு புடிக்கும். இப்போ நினைச்சாலும் சிரிப்பா வருது... :)

ஜவஹர் அண்ணே, முதல் கருத்துக்கு நன்றி.. இதுல ஒப்பீடுன்னு ஒன்னும் இல்லை.. பாண்டியராஜன் இயல்பா சிரிப்பா வரவழைச்சாரு, இரண்டாமவர் கொஞ்சம் புதுசா கருத்து சொல்றேன்னு கடுப்பேத்துவார்.. அவ்வளவு தான்.. :)

பீர் காக்கா, எல்லாம் உடை சமாசாரம் தான்.. :) சீனியர், ஜூனியர் என்றெல்லாம் இல்லை.. :)

நாஸியா said...

என்ன சிரிப்பு சென்ஷி சார்.... ஹிஹி :)

அன்புடன் மலிக்கா said...

நாஸியா நல்லபதிலுங்கோ,,
என்னை அழைத்தமைக்கு மிக்கநன்றி, இன்றுகாலையில்தான்
பதிவுபோட்டேன் என்னை நண்பர் தியா அழைத்திருந்தார் தோழி,

வந்து அங்குபாருங்களே..
http://niroodai.blogspot.com

வந்தாச்சா துபை, எந்த இடத்திற்க்கு?

S.A. நவாஸுதீன் said...

கலகலப்பா இருக்கு சகோதரி

எம்.எம்.அப்துல்லா said...

//5. நடிகர்/கை

பிடித்தவர்: பத்மினி
//

பத்மினி தில்லானா மோகனாம்பாள் படத்தில் நடித்தபோது அவருடைய மகன் வயது 7 :)

திருமணமானாலே இரசிகர்களிடம் ஈர்ப்பு போய்விடும் என்று நினைக்கும் இன்றைய நடிகைகள் மத்தியில் அவர் ஒரு ஆச்சர்யம்.

என்ன கொஞ்சம்...ஒரு ரூபாய் குடுத்தா ரெண்டு ரூபாய்க்கு நடிப்பாங்க :))

கவி அழகன் said...

நன்றாக உளது தொடர்ந்து எழுதுங்கள்

Menaga Sathia said...

பதில்கள் நன்றாகயிருக்கு நாஸியா!!

அப்துல்மாலிக் said...

எல்லாம் சரி, ஏன் பிடிக்கும்/பிடிக்காதுனு ஒரு வரிலே காரணத்தையும் சொல்லிருந்தால் இன்னும் சுவராஸ்யம் கூடிருக்கும்

நாஸியா said...

ரொம்ப தாமதமாக பின்னூட்டம் போடறதுக்கு முதல்ல எல்லாரும் என்னை மன்னிச்சிருங்க மக்களே..

மலீக்கா கா, பார்த்தேன், பார்த்தேன்.. :) உங்களுக்கு மெயில் அனுப்பி உடுறேன்.. துபைல, துபையே தான்.,,

நன்றி நவாஸ் காக்கா...

அப்துல்லா annae, அவங்க அழகு எனக்கு ரொம்ப பிடிக்கும் பாத்துட்டே இருப்பேன்.. அவங்க இறக்க முன்ன SS Music இல அவங்க பேட்டி பார்த்து அசந்துட்டேன்.. வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலும் மாறளங்னு அவங்கள பார்த்து சொல்லிருக்கணும்..

நன்றி கவிக்கிழவன் அவர்களே!

நன்றி மேனகாசதியா :)

ஹிஹி.. போட்டுட்டா போச்சு, அப்ஸர் அண்ணே

Prathap Kumar S. said...

கே. பாலசந்தரை ஏன் பிடிக்காதுங்கறதுக்கு ஒரு காரணம் சொல்ல முடியுமா?

மற்றவையெல்லாம் ஓகே.

//பிடிக்காத நடிகர்: விஜய் // டபுள் ஓகே.

நாஸியா said...

புன்னகை மன்னன் எனக்கும் பிடிச்ச படம் தான்,.. ஆனா அதுக்கு அப்புறம் வந்த கல்கி ஒரு படத்தால அவர எனக்கு பிடிக்காம போச்சு,.. :)

ஆமாங்க, விஜய அறவே பிடிக்காது.. என்னை பொறுத்த வரைக்கும் அவரு படத்துல பெண்களை கேவலப்படுத்தும் காட்சிகளும் பாடல்களும் நிறையவே உண்டு. போக்கிரியை என்னால் கொஞ்ச நேரத்துக்கு மேல பாக்க முடியல‌