Monday, September 17, 2012

அவதூறை எதிர்கொள்ள..

பிற்சேர்க்கை:  http://muslimmatters.org/2012/09/16/39567/ ஆங்கிலத்தில் வெளிவந்த இக்கட்டுரையைக்கொண்டே இதை நான் எழுதினேன்.

மீண்டும் ஒரு முறை நமது அருமை நபி முஹம்மது ஸல் அவர்களைப்பற்றின அவதூறை கிளப்பும் ஒரு விஷயம் உலகம் முழுக்க வாழும் நம் சகோதரர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரத்தி நானூறு வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்து, ஒன்றுமே இல்லாத ஒரு பூமியில் ஒரு மிகப்பெரிய புரட்சியை வெறும் இருபது ஆண்டுகளில் ஏற்படுத்திய  அந்த மாமனிதர் செய்த ஒவ்வொரு செயலையும் நபிவழியென இன்றளவிலும் கடைப்பிடித்துக்கொண்டிருக்கும் மக்கள், அவரை தன்னுடைய தாய், தகப்பனை விட மேலான ஒரு இடத்தில் வைத்திருக்கிறார்கள். அப்பேர்பட்ட நம் நபி ஸல் அவர்களை சிறிதளவு இழிவாக பேசினாலும் நம்மால் தாங்க முடியாது தான். ஆனால் நபிவழியை வாழ்வின் எல்லா கட்டங்களிலும் கடைப்பிடிக்க வேண்டிய நாம் இத்தகைய அவதூறை சந்திக்கும்போதும் அதே அளவு கடைப்பிடிக்கிறோமா?

நபி ஸல் அவர்களுடைய வாழ்க்கையில், எத்தனையோ அவதூறுகளையும் அவமானங்களையும் சந்தித்திருக்கிறார்கள். பின்னர் ஒரு கட்டத்தில் அவர்களை மன்னித்தும் இருக்கிறார்கள். இஸ்லாம் பரவ தொடங்கிய கால்த்திலிருந்தே இத்தகைய அவதூறுகளும் ஏளனங்களும் அவர்களை சூழ்ந்து தான் இருந்திருக்கிறது . ஆனால் அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் அவர்களை அல்லாஹ்விடம் விட்டுவிடுவிடுவதேசாலச்சிறந்தது , ஏனெனில்


15:95உம்மை ஏளனம் செய்பவர்கள் சம்பந்தமாக நாமே உமக்குப் போதுமாக இருக்கின்றோம்.நபி ஸல் அவர்களை ஏளனம் செய்பவர்களை அல்லாஹ்வே பொறுப்பெடுத்துக்கொள்ளும்போது மனிதர்களாகிய நாம் தெருவில் இறங்கி, அமெரிக்க கொடியை எரித்து, கலவரம் உண்டாக்கி தேவையில்லாத உயிர் சேதமும் பொருள் சேதமும் ஏற்படுத்தி எதை சாதிக்க போகிறோம்?

சூரா அல் பகறாவில் ஏளனம் செய்வது அறிவீனர்களின் செயல் என மூஸா அலைஹிவஸல்லம் கூறுகிறார்கள்

2:67இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்) மூஸா தம் சமூகத்தாரிடம், “நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டும் என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்” என்று சொன்னபோது, அவர்கள் “(மூஸாவே!) எங்களை பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா?” என்று கூறினர்; (அப்பொழுது) அவர், “(அப்படிப் பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று கூறினார்.7:199. எனினும் (நபியே) மன்னிப்பைக் கைக் கொள்வீராக! நன்மையைக் கடைபிடிக்குமாறு (மக்களை) ஏவுவீராக மேலும் அறிவீனர்களைப் புறக்கணித்து விடும்.

அறிவீனர்களை அலட்சியம் செய்யுமாறு குர் ஆன் நமக்கு கட்டளையிட்ட பின்னும் அத்தகைய அறிவீனர்களிடம் நாம் ஏன் விவாதித்துக்கொண்டிருக்க வேண்டும்? குறிப்பாக பதிவர்களாகிய நாம் நிச்சயமாக நம்முடைய பொன்னான நேரத்தை இத்தகையோரிடம் வீணடிக்க வேண்டாமே!!

25:63இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் “ஸலாம்” (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள்.


இஸ்லாம் மிக மிக எளிமையான ஒரு மார்க்கம். நாம் தான் அதை தேவையில்லாமல் கடினமாக்கிக்கொண்டிருக்கிறோம். அப்படி குர் ஆனிலும்  ஹதீஸிலும் இல்லாத வேறு எந்த முறையை கடைப்பிடித்தாலும் நாம் வெற்றியடைய போவதில்லை. அதனால் எதற்கு  இந்த தேவையில்லாத ஆர்ப்பாட்டங்களும் கோஷங்களும்? இதனால் யாருக்கு என்ன பயன்? இப்படிபட்ட ஆர்ப்பாட்டங்களில், அது எவ்வளவு அமைதியான முறையில் நடைப்பெற்றாலும் அது நிச்சயமாக கலவரங்களை பரப்பக்கூடியவை. இப்படிபட்ட கலவரங்களில் அநியாயமாக கொல்லப்படும் அப்பாவி மக்களா அந்த படத்தை எடுத்தார்கள்? அவர்களுக்கும் அந்த படத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? 

செய்திகளில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தை காண்பிக்கும்போது ஒரு பெண்மணி சிரித்துக்கொண்டே கோஷம் எழுப்பினார். நிச்சயமாக இதைவிட வேதனைக்குரிய விஷயம் வேறெதுவும் இல்லை. 

அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஆண்கள் பாதி பேர் யாரும் தாடி வைத்தவர்களாக தெரியவில்லை. நபி ஸல் அவர்களின் மீது நாம் கொண்டிருக்கும் அன்பை இப்படி வீதியில் வந்து காட்ட வேண்டும் என எந்த அவசியமும் இல்லை. நம் வாழ்வில் அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய நபிவழியை பேணாமல் அவர்கள் மீது எவ்வாறு அன்பு வைக்க முடியும்? முதலில் நம்மை நாமே நபி ஸல் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை அதிகமளவு படித்து, அவர்களுடைய வழிமுறைகளை நம் வாழ்விலும் கடைப்படிக்க வேண்டும். இதை எனக்கும் ஒரு படிப்பினையாக்கிக்கொள்கிறேன். அல்லாஹ் நம் அனைவரையும் மரணிக்கும் வரையில் அவன் ஒருவனை வணங்கி, அவனுக்கே அடிமையாக தவிற வேறெந்த நிலையிலும் மரணிக்காமல் இருக்க உதவி புரிவானாக. ஆமீன். 9 comments:

ஹுஸைனம்மா said...

ரொம்ப நாள் கழிச்சு பிரியாணி - அதுவும் படு சூடாக!!

//மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் “ஸலாம்” (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள்.//

:-)))))

ஹுஸைனம்மா said...

அனிஷாவும் இதையொட்டி ஒரு பதிவு எழுதிருக்காங்க, பாருங்க.

http://mydeartamilnadu.blogspot.com/2012/09/blog-post_17.html
________________________________

சில நிகழ்ச்சிகளில் பெண்களைப் படம் பிடிக்க வேண்டாம்னு சொல்றோம். ஆனா பத்திரிகைகளில் எங்கும் பெண்களின் படங்கள்தான்!! :-((((

ஷர்மிளா ஹமீத் said...

மாஷா அல்லாஹ் எண்ண ஒரு தெளிவான ஆணித்தரமான கருத்துக்கள்.. :) வாழ்த்துக்கள் சகோதரி..!

அஸ்ஸலாமு அலைக்கும்..

இந்த பதிவின் லிங்கை என் பதிவில் இணைத்து உள்ளேன்.! ஜசாக்கல்லாஹு க்ஹைர் :)

சிராஜ் said...

சலாம் சகோ நாஸியா...

அருமையான கோணத்தில் அலசி உள்ளீர்கள்.... ஒரு சின்ன சந்தேகம்... அமைதியான வழியில் போராடலாம் தானே??? வன்முறை இல்லாமல்....

உங்கள் கட்டுரை போராடவே வேண்டாம் என்று சொல்வது போல் இருக்கிறது...
அமைதியாக போராடாலாம் என்பது என் கருத்து..உதாரணத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நடத்தியது போல்..

மற்ற கருத்துக்கள் அனைத்தும் ஏற்புடையவையே....

சிராஜ் said...

// சில நிகழ்ச்சிகளில் பெண்களைப் படம் பிடிக்க வேண்டாம்னு சொல்றோம். ஆனா பத்திரிகைகளில் எங்கும் பெண்களின் படங்கள்தான்!! :-(((( //

ஹுஸைனம்மா...

குட் கொஸ்டின்... இயக்கங்கள் தான் பதில் சொல்லணும்...பட் இது பொது போராட்டம் சோ அனுமதி உண்டு... தனிப்பட்ட விழாக்களில் கூடாது என்று பதில் வரலாம்... பாஸ்தாட்ட கேட்டுடுவமா???? பேஸ்புக்ல ஸ்டேடஸ் போட்றேன்...

rifath a.r said...

Assalamu Alaikum,

Essential article on right TIME.

plzz change the font color of AL-Quran verses from GREEN to some other color which more legible to read.

rifath a.r said...

Al-quran>41:34-35

>நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார்.

>பொறுமையாக இருந்தார்களே அவர்கள் தவிர வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள் மேலும், மகத்தான நற்பாக்கியம் உடையவர்கள் தவிர, வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்.

rifath a.r said...

அல்ஹம்துலில்லாஹ், தெளிவான சிந்தனைகள் கொண்ட பதிவு.

போராட்டத்தில் கலந்துக் கொண்ட மக்களைப் பற்றி என் பார்வை:

அவர்களின் ஈடுபாடும், உழைப்பும் பாராட்டுக்குரியது. மாற்று கருத்தை அவர்களிடம் கூறி... அவர்களை ஈடுபாட்டை குறைத்துவிட கூடாது.

ஆனால் இப்பேர்ப்பட்ட மனித வளத்தை, இவர்களின் உழைப்பை ஆற்றல் மிக வழியில் பயன்படுத்த வழிகள் உண்டு என்று நம்புகிறேன்.
----------------------------------

நான் சொல்ல வருவது ... போராட்டமே கூடாது என்று அல்ல.

ஒரு இயக்கம் போராட்டம் நடத்தினால், மற்ற இயக்கம் வேறு வழிகளில் செயல் படனும்.

சிராஜ் >>//அமைதியாக போராடாலாம் என்பது என் கருத்து.// i agree.

enrenrum16 said...

நானும் யோசித்திருக்கிறேன்... (அட...அப்பப்ப யோசிக்கவும் செய்வேன் பா...ஹி..ஹி)... அதுவும் பாகிஸ்தானில் இது சம்பந்தப்பட்ட போராட்டத்தில் ஒரே நாளில் 15 பேர் கொல்லப்பட்டார்கள்ன்ற செய்தி வாசித்ததும் மிகவும் வருத்தப்பட்டேன்... இன்னும் எத்தனையோ பேர்..... இவர்களால் ஏற்கனவே நொந்து போயிருக்கும் நமக்கு இந்த நிகழ்வுகள் இன்னும் நமக்குத்தானே இழப்பைத் (அவர்களுக்கு மகிழ்வையும்) தருகின்றன... இவ்வனைத்திற்கும் காரணமானவர்கள் இம்மையிலும் மறுமையிலும் தோல்வியடைய நாம் துஆ செய்ய வேண்டும்.... அவர்களுடைய வீழ்ச்சிக்கு நமது பள்ளிகளில் கூட்டு பிரார்த்தனை நடத்தப்படலாம். பகிர்வுக்கு நன்றி நாஸியா.