Wednesday, February 2, 2011

பிரியாணி சட்டி 02.02.2011

ஹலோ எவிரிபடி! எல்லாரும் நல்லா இருக்கீங்களா? பார்த்து ரொம்ப நாளாச்சு... :) நிறைய சோம்பலும், கொஞ்சம் வேலைகளும் இருந்ததால பிரியாணி சட்டிய திறக்க கேப் விட்டுடுச்சு..

***
இறைவன் அருளால் ஒரு பாஸ்போர்ட்டோட ஊருக்கு போயி, இரண்டு பாஸ்போர்ட்டோட வந்து சேர்ந்தாச்சு. (வந்து சேர்ந்து மூணு மாசம் ஆவுது-எல்லாம் ஒரு சோம்பல் தான்) குட்டியோடவே இப்ப நேரம் சரியா இருக்கு. வயித்து புள்ளையோட எங்க வேணும்னாலும் போகலாம், கைப்புள்ளையோட பக்கத்துல போகக்கூட கஷ்டம்னு பெரியவங்க சொன்னது சரியாத்தான் இருக்கு. ஸ்கூல்ல, காலேஜுல, ஏன் ஆஃபீஸ் ல கூட அப்பப்பா டகால்டி வேலை செஞ்சு கட் அடிக்கலாம், ஆனா நம்ம ஜூனியர் கிட்ட ஒண்ணும் நடக்க மாட்டேங்குது. நானும் பையன் அவங்க வாப்பா மாதிரி சமர்த்தா வரனும்னு துவா கேட்டுட்டே இருந்தேன்.. ஆனா பாக்கத்தான் வாப்பா மாதிரி, ஆக்டிவிட்டீஸ் எல்லாம் ம்மா மாதிரின்னு மாப்பு சொல்றாங்கப்பா!

***

இங்க என் சமையல சகிக்காம காய்ஞ்சு போயி, அங்க வீட்டுக்கு போனா, அங்க‌யும் போய் ரொம்ப‌ ஃபீல் ப‌ண்ணினேன். எங்க‌ மாப்புக்காக‌.. பின்ன‌, இத்த‌னை நாளா இது தான் மீன் ஆன‌ம், இது தான் க‌றி ஆனம்னு சொல்லி அவ‌ங்க‌ள‌ ஏமாத்திட்டோமேன்னு தான்.
***

ஊருக்கு போற‌துக்கு ஜாலியா இருந்தாலும் க‌ர்ப்ப‌மா இருக்கும்போது எல்லாரும் ப‌ய‌ப்ப‌டுற‌து அட்வைஸுக்கு தான். நின்டா, ந‌ட‌ந்தா, உட்கார்ந்தா, தூங்கினா, எல்லாத்துக்கும் ஒரு மெத்ட‌லாஜி வெச்சிருப்பாங்க. பல விஷயங்களில் நமக்கு நன்மை இருந்தாலும் ஒரு சில‌ விஷ‌ய‌ங்க‌ள் ந‌ம்ம‌ளால‌ ப‌ண்ண‌வே முடியாது. உதார‌ண‌த்துக்கு தூங்கும்போது திரும்பி ப‌டுக்க‌னும் என்றால் எந்திச்சு உட்கார்ந்து தான் ப‌டுக்க‌னுமாம். இல்ல‌ன்டா புள்ளை குட‌லை சுத்திக்குமாம். இப்ப‌டி யாராச்சும் அட்வைஸ் ப‌ண்ணினா, நான், ஆமாமா, அப்ப‌டித்தான் செய்றேன்னு சொல்லிடுவேன். வேற‌ வ‌ழியில்லையே!
***


என்ன்ன தான் நம்ம மெட்ராஸ், நம்ம சென்னைன்னு வாய்கிழிய சப்போர்ட் பண்ணினாலும், ஒரு விஷயத்துல நம்ம ஊரு பயங்கரமா அடி வாங்கும். அது கூவாருன்னு நீங்க நினைசீங்கன்னா அது தப்பு. அது நம்ம ஊரு ஆட்டோ டிரைவர்கள் தாங்க. சே! ஒரு பக்கம் அநியாய கொள்ளைன்னா, இன்னொரு பக்கம் பொறுப்பில்லாம ஓட்டுறது.  எப்ப ஆட்டோவில ஏறினாலும், வயிதுமேல கைய வெச்சிட்டு, கொஞ்சம் மெதுவா ஓட்டுங்க சார்ன்னு சொல்லிட்டே தான் ஏறுவேன். ஆனா கேட்டா தானே? ஒரு தடவை ஸ்பென்சர் சிக்னல் கிட்ட, மெயின் ரோடுல இருந்து அப்படியே சர்வீஸ் லேனுக்கு ஒரு ஆட்டோவை எதிட்டாருன்னா பாத்துக்கோங்க. இப்ப நினைச்சாலும் கடுப்பா இருக்கு. ஆனா பாருங்க, டாக்டர் குறிச்ச பிரசவ நாள் தாண்டியும் புள்ளை வெளிய வர மாற்றுக்குன்னு தெரிஞ்சதும் ஆட்டோவுல இன்னும் நல்லா ரவுண்டு அடிக்கலாம்னு தோணிச்சி.. ஹிஹி..

***

எப்படியோ, நல்லபடியா எங்களுக்கு ஒரு குட்டிபாப்பா வந்துட்டான்.. அல்ஹம்துலில்லாஹ்.. சார் தூங்குற டைம் தான் நம்ம வேலைய பாக்க முடியும்.. அதான் உங்களை எல்லாம் பாத்துட்டு போகலாம்னு வந்தேன்!


25 comments:

Jaleela Kamal said...

a\அப்பாடா பிரியானி கட ஓப்பன் ஆகிவிட்டது இனி கூட்டம் கியுல தான் நிக்கனும்

பதிவ படிக்கல \\

பிறகு ...

அரபுத்தமிழன் said...

அஸ்ஸலாமு அலைக்கும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

ச‌கோ, இவ்வளவு நாளாப் பதுங்குனது இந்தக் குட்டி(ப்பையன்) பாயத்தானா. :)

//இத்த‌னை நாளா இது தான் மீன் ஆன‌ம், இது தான் க‌றி ஆனம்னு சொல்லி அவ‌ங்க‌ள‌ ஏமாத்திட்டோமேன்னு தான்.//

ஆனா பிரியாணி நல்லாருக்கே இது எப்பூடி :)

//தெரிஞ்சதும் ஆட்டோவுல இன்னும் நல்லா ரவுண்டு அடிக்கலாம்னு தோணிச்சி.. ஹிஹி.. // LoLs :)

எப்படியோ வந்ததுதான் வந்தீட்டிங்க, இனி அடிக்கடி பதிவிக்க வேண்டுமென‌
நீண்ட நாட்கள் காத்திருந்த சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்(ல்)கிறோம்.

Asiya Omar said...

வாங்க நாஸியா,zayed நலமா?பிரியாணி சட்டி வாசம் அலைன் வரை வந்துட்டுதே!மிக்க மகிழ்ச்சி.

அஸ்மா said...

அஸ்ஸலாமு அலைக்கும். வாங்க நாஸியா, ஒரு பாஸ்போர்ட்டோட போய் இரட்டை பாஸ்போர்ட்டா வந்ததுக்கு முதலில் வாழ்த்துக்கள் :) கிடைக்கும் நேரத்தில் இப்படி ஏதாவது சொல்லிட்டு போங்க. முடிந்தா அப்படியே இங்கேயும் வந்து எட்டிப்பாருங்க.

ஹுஸைனம்மா said...

//இது தான் மீன் ஆன‌ம், இது தான் க‌றி ஆனம்னு சொல்லி அவ‌ங்க‌ள‌ ஏமாத்திட்டோமே//

அதெல்லாம் ஃபீல் பண்ணாதீங்க. சுவையா இல்லைனாலும், சுத்தமா, சுகாதாரமா செஞ்சுக் கொடுக்கிறோமே, அதுக்காக அவங்கதான் சந்தோஷப்படணும்!! :-)))))

ஹுஸைனம்மா said...

//புள்ளை குட‌லை சுத்திக்குமாம்//

அப்படித்தான் பயங்காட்டுவாங்க. ஆக்சுவலி, அப்படிப் படுத்தா குழந்தையின் வெயிட் முதுகெலும்பில் அழுத்தி, பின்னாட்களில் முதுகுவலி வருமென்பதால் இப்படிப் பயங்காட்டுவாங்க. (எப்படித் தெர்யும்னா, ஆராச்சி செஞ்சு கண்டுபிடிச்சது!!) நமக்குன்னா கேக்கமாட்டோம், புள்ளைக்குன்னா பயந்து ஒழுக்கா இருப்போமில்ல, அதனாலத்தான்!!

ஹுஸைனம்மா said...

ஆமா, இப்ப பிரியாணி, மீன் ஆனம், கறி ஆனம்லாம் எப்படி? நம்ப்ப்பி வரலாமா வீட்டுக்கு?

Chitra said...

WELCOME BACK!!!!!

Congratulations!!

May God bless your little prince. :-)

நாஸியா said...

ஜலீலாக்கா.. சீக்கிரம் படிச்சிட்டு ஒரு வழி சொல்லுங்க. தலைய பிச்சிட்டு இருக்கேன், என் குட்டிய வெச்சிட்டு

வ அலைக்கும் அஸ்ஸலாம் வரஹ் அரபுதமிழன் சகோதரரே!\ஆனா பிரியாணி நல்லாருக்கே இது எப்பூடி :)\ நீங்க‌ வேற‌.. நேத்து தான் சிக்க‌ன் பிரியாணி செய்ய‌லாம்னு செஞ்சு, தீச்சு வெச்ச‌து தான் மிச்ச‌ம்! :((

அல்ஹ‌ம்துலில்லாஹ்.. ஸாய‌த் குட்டி ரொம்ப‌ ந‌ல‌ம்.. அடுத்த‌ வாட்டி அலைன் வ‌ரும்போது சொல்றேன் ச‌ரியா.. இன்ஷா அல்லாஹ்

வ‌ அலைக்கும் அஸ்ஸ‌லாம் அஸ்மா ச‌கோத‌ரி.. துவா செய்யுங்க‌. க‌ண்டிப்பா வாரேன் இன்ஷா அல்லாஹ்

\நமக்குன்னா கேக்கமாட்டோம், புள்ளைக்குன்னா பயந்து ஒழுக்கா இருப்போமில்ல, அதனாலத்தான்!!\

முதுகு வ‌லி நேரா ப‌டுத்தா தானே வ‌ரும்னு சொல்லுவாங்க‌.. என்ன‌மோ இப்போ என‌க்கு முதுகு வ‌லி, கை, கால், ஆல் பார்ட்ஸ் வ‌லி சும்மா பிச்சு உத‌றுது!

க‌ண்டிப்பா நம்ப்பி வீட்டுக்கு வாங்க‌, இன்ஷா அல்லாஹ்! ஏன்னா ந‌ம்பிக்கை தான் வாழ்க்கை ஹூசைன‌ம்மா

ந‌ன்றி சித்ரா!!! :))

ஜெய்லானி said...

இப்பதான் பயனிக்கும் பாதையில் //ரொம்ப நாளைக்கி பிறகு மீன் பதிவில் ‘பிரியாணியின்’ வாசம் தெரிகிறதே..!! :‍)//ன்னு நினைச்சிகிட்டே வந்தேன் ...அட உண்மைதான் ..!! :-))

இனி சட்டி களைகட்டும்ன்னு நினைக்கிறேன் :-))

பீர் | Peer said...

மப்ரூக்...

Menaga Sathia said...

உங்களுக்கும்,குட்டி செல்லத்துக்கும் வாழ்த்துக்கள்!! மகன் பெயர் என்ன??

செ.சரவணக்குமார் said...

வாழ்த்துகள் சகோதரி. நேரம் கிடைக்கும்போது அவசியம் பதிவுகள் எழுதுங்கள்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//இத்த‌னை நாளா இது தான் மீன் ஆன‌ம், இது தான் க‌றி ஆனம்னு சொல்லி அவ‌ங்க‌ள‌ ஏமாத்திட்டோமேன்னு தான்.***//

எல்லா பத்திகளையுமே நகைச்சுவையாய்
எழுதியிருக்கீங்க.
குட்டிப் பையனுக்கு வாழ்த்துக்கள்!
குட்டி, தூங்கிக்கிட்டிருக்கும்போது
சத்தம்போடாமல் வலையுலகம்
வந்து, வந்து போங்க!

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் சகோ நாஸியா,

ரொம்ப நாள் கழிச்சு,புது வரவோட,அமீரகம் வந்துருக்கீங்க..வாழ்த்துக்கள் தாய் சேய் இருவருக்கும்..
அனுபவத்த அழகா,சுவாரஸ்யமா பகிர்ந்து இருக்கீங்க..

அன்புடன்
ரஜின்

சீமான்கனி said...

அக்கா பிரியாணி சட்டி தாமதம் ஆனாலும் ஸ்பெசலா தான் வந்திருக்கு புது வாசனை மனசுக்கு மகிழ்ச்சியா இருக்கு குட்டிப்பையன சமத்தா பாத்துகோங்க...வாழ்த்துகள்....

நாஸியா said...

\\ஜெய்லானி said...
இப்பதான் பயனிக்கும் பாதையில் //ரொம்ப நாளைக்கி பிறகு மீன் பதிவில் ‘பிரியாணியின்’ வாசம் தெரிகிறதே..!! :‍)//ன்னு நினைச்சிகிட்டே வந்தேன் ...அட உண்மைதான் ..!! :-))

இனி சட்டி களைகட்டும்ன்னு நினைக்கிறேன் :-))\\

இன்ஷா அல்லாஹ்!

ந‌ன்றி பீர்!

\S.Menaga said...
உங்களுக்கும்,குட்டி செல்லத்துக்கும் வாழ்த்துக்கள்!! மகன் பெயர் என்ன??\

ந‌ன்றி மேன‌கா ச‌கோத‌ரி! ம‌க‌ன் பெய‌ர் ஸாய‌த் ஹ‌ம்தான்.. :))

\செ.சரவணக்குமார் said...
வாழ்த்துகள் சகோதரி. நேரம் கிடைக்கும்போது அவசியம் பதிவுகள் எழுதுங்கள்.\

ந‌ன்றி ச‌கோத‌ர‌ரே! இன்ஷா அல்லாஹ்.. க‌ண்டிப்பா எழுதுறேன்!

\ NIZAMUDEEN said...
//இத்த‌னை நாளா இது தான் மீன் ஆன‌ம், இது தான் க‌றி ஆனம்னு சொல்லி அவ‌ங்க‌ள‌ ஏமாத்திட்டோமேன்னு தான்.***//

எல்லா பத்திகளையுமே நகைச்சுவையாய்
எழுதியிருக்கீங்க.
குட்டிப் பையனுக்கு வாழ்த்துக்கள்!
குட்டி, தூங்கிக்கிட்டிருக்கும்போது
சத்தம்போடாமல் வலையுலகம்
வந்து, வந்து போங்க!\

இன்ஷா அல்லாஹ்! க‌ண்டிப்பா!

வ அலைக்கும் அஸ்ஸ‌லாம் வ‌ர‌ஹ்ம‌துல்லாஹி வ‌ப‌ர‌க்காத்துஹு RAZIN ABDUL RAHMAண்

ந‌ன்றி த‌ம்பி சீமான்கனி...
!

ஸாதிகா said...

நாஸியா,இப்ப குழந்தை ஒண்ணும் ஆயாச்சு.இன்னும் சமைக்கத்தெரியலே சமைக்கத்தெரியலே சமைக்கத்தெரியலே என்று புலம்பிகொண்டிராமல் பிலாக்குகளை பார்த்து சமைக்க ஆரம்பித்து விரைவில் ஒரு சமையல் பிளாக் ஆரம்பித்து விடுங்கள்.

ஆயிஷா said...

அஸ்ஸலாமு அழைக்கும் நாசியா
இப்பதான் உங்கள் பிளாக் பக்கம்
வந்தேன். பையன் எப்படி இருக்கான்.எல்லாபதிவும் அருமையா எழுதி இருக்கீங்க.
வாழ்த்துக்கள்.எங்க ஊரைபத்தியும் பதிவு போட்டு இருக்கீங்க.அது கொலைசெய்ற பட்டினம் அல்ல
குலசேகரப்பட்டினம். நம்மளும் பிறந்தது,வளந்தது அங்கதான்.
இப்ப இருப்பது சென்னையில். உங்களுக்கு பக்கத்து ஊரு
உடன்குடியா ? நெருங்கிவிட்டோம்.
என் பிளாக் பக்கம் வருகை தாருங்கள்.
http :// puthiyavasantham.blogspot.com
http :// iniyavasantham.blogspot.com

Pranavam Ravikumar said...

I am here for the first time... Enjoyed readind your lovely post.! My wishes

Unknown said...

உங்கள் குழந்தை சுகத்தோடும் நலத்தோடும் வாழ வாழ்த்துக்கள்.

Anisha Yunus said...

//எங்க‌ மாப்புக்காக‌.. பின்ன‌, இத்த‌னை நாளா இது தான் மீன் ஆன‌ம், இது தான் க‌றி ஆனம்னு சொல்லி அவ‌ங்க‌ள‌ ஏமாத்திட்டோமேன்னு தான்.//

ஆஹா... நீங்களும் நம்ம கேஸ்தானா... நானும் இப்படித்தான் பல சமையல்களை ஒரியாக்காரருக்கு தமிழ்நாட்டு பாரம்பரிய உணவுன்னு நம்ப வெச்சிருக்கேன்... ஹி ஹி ஹி

//ஆனா பாக்கத்தான் வாப்பா மாதிரி, ஆக்டிவிட்டீஸ் எல்லாம் ம்மா மாதிரின்னு மாப்பு சொல்றாங்கப்பா!///
சரி விடுங்க நாஸியா... எவ்வளவோ செஞ்சுட்டோம்.. இதை மட்டும் ஜீரணிச்சுக்கற மாட்டோமா.. ஹெ ஹெ ஹெ

//இப்ப‌டி யாராச்சும் அட்வைஸ் ப‌ண்ணினா, நான், ஆமாமா, அப்ப‌டித்தான் செய்றேன்னு சொல்லிடுவேன். வேற‌ வ‌ழியில்லையே!//
அதே அதே... குழந்தை பிறப்புக்கு அப்புறமும் இப்படி பாத்துக்கணும், அப்படி பாத்துக்கணும்பாங்க... அப்படியே மெயிண்டெயின் செய்யுங்க.. ஹெ ஹெ ஹே..

//சார் தூங்குற டைம் தான் நம்ம வேலைய பாக்க முடியும்.. அதான் உங்களை எல்லாம் பாத்துட்டு போகலாம்னு வந்தேன்! //
தூங்காதே தம்பி தூங்காதே... பதிவுலக நோய் (அம்மாக்கு) ஜாஸ்தியாயிடும் தூங்காதே... ஹெ ஹெ ஹெ..

A warm welcome back, dear sis :)

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

அல்ஹம்துலில்லாஹ். குழந்தை எல்லா வழமும் பெற்று ஈருலகில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த பதிவை பார்க்கிறேன், அடிக்கடி பது எழுதவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

//ஆனா பாக்கத்தான் வாப்பா மாதிரி, ஆக்டிவிட்டீஸ் எல்லாம் ம்மா மாதிரின்னு மாப்பு சொல்றாங்கப்பா!///

உணமி ஒத்துக்கிட்டிங்க, உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சகோ

Jaleela Kamal said...

பிரியாணி சட்டிய ஓப்பன் செய்துடு அப்பரம் கடை மூடிட்டிங்களா?

வாங்க இப்ப திறந்து தான் ஆகனும்,

அவார்டு காத்து கொண்டு இருக்கு என் பக்கம் வாங்க

பாத்திமா ஜொஹ்ரா said...

அக்கா ரொம்ப அருமை.ரொம்ப நாளாச்சு.எப்படி இருக்கீங்க. பிரியாணி சூப்பர்.