Thursday, December 17, 2009

கம்மா..

ஒரு வாரமா ஒரே கவலை.. என்னுடைய கம்மாவுக்கு (அம்மாவை பெத்த பாட்டி) பைபாஸ் அறுவை சிகிச்சைன்னு சொன்னவுடன் எனக்கு இங்க கொஞ்சம் கூட ஓடவேயில்லை..எனக்கு முதல்ல கல்யாணம் பண்ணனும்னு வீட்டுல பேசினப்ப நான் முதல்ல போட்ட கண்டிசன் வெளிநாடு போக மாட்டேன்னு தான்.. ஏர்க்கெனெவே ரெண்டு வருசம் ஹாஸ்டல்ல இருந்து வீட்ட ரொம்ப தேடிட்டேன், இனியும் ம்மா வாப்பாவை விட்டுட்டு இருக்க முடியாது, அப்புறம் முக்கியமா ஊருல நடக்குற நல்லது கெட்டதுக்கு கலந்துக்க முடியாதுங்கறதால அந்த கண்டிசன்.

ஆனா இறைவன் நமக்கு ஒரு நல்ல வாழ்ககையை வெளிநாட்டில் தான் வெச்சிருக்கான் என்றால் நாம் அதை ஏற்றுக்க தானே செய்யனும்னு வந்தாச்சு (அவங்க கல்யாணத்துக்கு அப்புறம் லீவு முடிஞ்சு முதல்ல இங்க வந்ததும் எப்படா விசா வரும்னு காத்துட்டு இருந்தது தனி கதை. என் தம்பி கேட்டான் "எப்படி லாத்தா இப்படி தலகீழா மாறிட்ட). கிளம்பும்போதே கம்மாக்கு தாடை வலிக்குதுன்னு சொன்ன உடன் ரொம்ப கவலையா இருந்தது. முதல்ல டாக்ட‌ரை போய் பாருங்க‌ன்னு சொன்னேன்..உங்க‌ எல்லாருக்கும் இத‌ய‌ நோய் ச‌ம்ப‌த்த‌ப்ப‌ட்ட‌ மின்ன‌ஞ்ச‌ல் வ‌ந்திருக்கும்னு நினைக்குறேன்.. அதுல‌ தெளிவா போட்டிருக்கும், தாடை வ‌லிச்சா அது இத‌ய‌ நோய் அறிகுறியா இருக்கும் என்று. நீங்க‌ளும் உங்க‌ வீட்டுல‌ உள்ள‌ பெரிய‌வ‌ங்க‌கிட்ட‌ சொல்லி வைங்க‌.

க‌ம்மாக்கு அறுவை சிகிச்சை ந‌ல்ல‌படியா முடிஞ்ச‌து, அல்ஹ‌ம்துலில்லாஹ். இப்போ ஐ சி யூவில‌ தான் இருக்காங்க‌. இன்ஷா அல்லாஹ் நாளைக்கோ நாள‌ க‌ழிச்சோ ரூமுக்கு மாத்திடுவாங்க‌.

எங்க‌ ம்மா வீட்டுல‌ நான்தான் முத‌ல் பேத்தி. நான் பிற‌ந்த‌ப்போ ந‌ட‌ந்த க‌தைக‌ளையும், கொஞ்ச‌ம் வ‌ள‌ர்ந்து பேச‌ ஆர‌ம்பிச்ச‌ப்போ நான் ப‌ண்ணின‌ குறும்புக‌ளையும் கொஞ்ச‌ம் கூட‌ ம‌ற‌க்காம‌ல் எங்க‌ க‌ம்மா சொல்லுவாங்க‌.. இன்ன‌னும் சின்ன‌ புள்ளைல‌ என் அள‌வுக்கு எந்த‌ பேத்தியும் பேசின‌தில்லைன்னு சொல்லுவாங்க‌.. (ரைமெஸ் சொல்ல‌ சொன்னா, "ஹாப் அ லிட்டில், ஜ‌ம்ப் அ லிட்டில்" என்று ஆர‌ம்பிச்சி, "ர‌ன் அ லிட்டில்"ன்னு சொல்லி அப்ப‌டியே விளையாட‌ ஓடிடுவேனாம்). ஸ்கூல் ப‌டிக்கும்போது எப்ப‌டா லீவு விடுவாங்க‌ன்னு வெயிட் ப‌ண்ணி க‌ம்மா வீட்டுக்கு போவேன்.. போனா க‌ம்மா சுட்ட‌ முறுக்கு ஒரு பெரிய‌ டின் முழுக்க‌ காத்துட்டு இருக்கும். அந்த ருசி வேறெந்த முறுக்குலயும் வாரதுங்க, உண்மையா.. அங்க‌ என்னை இடுக்கிட்டு ப‌ஜார்க்கு கூட்டிட்டு போவாங்க‌ (அப்ப‌வே ந‌ட‌க்க‌ சோம்ப‌ப்ப‌ட்ட‌ தில்லால‌ங்க‌டி நான்).

என‌க்கு அங்கிருந்து வீட்டுக்கு வ‌ர‌வே புடிக்காது. எரிச்ச‌ப்ப‌ட்டுட்டே தான் கிள‌ம்புவேன்..க‌ம்மாகிட்ட‌ நான் இங்க‌யே இருந்துக்குறேன் க‌ம்மா, இங்குள்ள‌ ஸ்கூல்ல‌யே ப‌டிக்கிறேன்னு சொல்லுவேன்.. நான் தூங்கும்போது என‌க்காக லா இலாஹா இல்லல்லாஹ்வும் தாலாட்டும் பாடுவாங்க. அந்த‌ பாட்டோட‌ வ‌ரிக‌ள் என‌க்கு நினைவில்லன்டாலும் அந்த‌ ராக‌ம் என‌க்கு ந‌ல்ல நினைவிருக்கு.


அதுக்க‌ப்புற‌ம் அவ‌ங்க‌ சென்னை வ‌ந்த‌ பிற‌கும் க‌ம்மா வீட்டுக்கு போற‌துன்டாலே ஜாலிதான்.. ஆனா க‌ல்லூரிக்கு வ‌ந்த‌ பிற‌கு நாட்கண‌க்கில‌ த‌ங்குற‌து குற‌ஞ்சிட்டு..அப்புற‌ம் எம்.பி.ஏ ப‌டிக்க‌ திருச்சி போன‌ பிற‌கு ம்மாவை ரொம்ப‌ தேடி க‌ல்யாண‌ம் வ‌ரைக்கும் அவ‌ங்க‌ள‌ பிரிஞ்சி இருக்க‌ ம‌னமே இல்லை.

இப்பொ க‌ம்மா நினைப்பு ரொம்ப‌ வாட்டுது. அவ‌ங்க‌ளுக்கு முடியாத‌ நேர‌த்துல‌ அவ‌ங்க‌ ப‌க்க‌துல‌ இருக்க‌ முடிய‌ல‌ன்னு நினைக்கும்போது ரொம்ப‌ கஷ்ட‌மா இருக்கு. என்னை எப்ப‌டியெல்லாம் வ‌ள‌ர்த்த‌வ‌ங்க‌ அவ‌ங்க‌ள‌ பாக்க‌ முடிய‌ல‌ன்னு நினைச்சா வ‌ருத்த‌ம் தாங்க‌ முடிய‌ல‌. ச‌ரி என்னாலான‌து என்னுடைய‌ துவா (பிரார்த்த‌னை) ம‌ட்டும்தான். இப்போ என் த‌ம்பி வ‌ந்த‌ப்போ கூட‌ அவ‌ன்கிட்ட‌ அவ‌ங்க‌ செஞ்ச‌ முறுக்கும் இட்லி பொடியும் குடுத்து விட்டுருக்காங்க. என‌க்கு எப்ப‌டா அவ‌ங்க‌ள‌ பாப்போம்னு இருக்கு..

22 comments:

S.A. நவாஸுதீன் said...

இன்ஷா அல்லாஹ் விரைவில் அவர்கள் உடல்நலம் தேறி வீட்டுக்கு வருவதற்கு வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.

ஹுஸைனம்மா said...

வெளிநாட்டு வாழ்க்கையின் விளைவுகளை அனுபவிக்க ஆரம்பிச்சிட்டு இருக்கீங்க. நல்லவைகளும் இருக்கு. இதுமாதிரி சங்கடத்தில் ஆழ்த்துபவையும் உண்டு. அவங்க உடல்நலம் தேறி வருவது அறிந்து மகிழ்ச்சி.

//முதல்ல போட்ட கண்டிசன் வெளிநாடு போக மாட்டேன்னு தான்..//

என் வாப்பா வெளிநாட்டில இருந்ததால நானும் இப்படித்தான் என்னவர்ட்ட கல்யாணம் ஆனவுடனே சொன்னேன். வெளிநாட்டுக்கு மட்டும் போயிரவே கூடாதுன்னு... ஆனா இப்ப 15 வருஷம் ஆச்சு...

அதென்ன கம்மா - முதன்முதல் கேள்விப்படுகிறேன். நன்னி, தாதி, உம்மும்மா, மாமும்மா - இப்படித்தான் கேட்டிருக்கிரேன். இது புதுசா இருக்கு.

pudugaithendral said...

எங்க அம்மம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாம இருந்தப்போ உங்களை மாதிரி ரொம்ப விசனப்பட்டேன். அம்மம்மா நல்லா இருக்காங்க. அம்மம்மாவுக்கு நான் பேத்தி இல்ல இன்னொரு பொண்ணு மாதிரி. உங்க கம்மாவுக்கு உடம்பு சரியாகிடும். ஆண்டவன் இருக்கான். கவலைப்படாதீங்க

கண்மணி/kanmani said...

சகோதரி உங்க கம்மா [கிரண்ட்மா] நல்லபடியா வீட்டுக்கு வந்ருவாங்க.நீங்களும் அடுத்த்முறை ஊருக்குப் போகும் போது பார்க்கலாம்.

ப்ரியமுடன் வசந்த் said...

பாட்டியம்மா நல்லபடியா உடல் நலம் தேறி நீண்ட காலம் வாழ்வாங்க...

நாஸியா said...

நவாஸ் காக்கா, நன்றி. இன்ஷா அல்லாஹ்.

ஹூசைனம்மா,\\வெளிநாட்டு வாழ்க்கையின் விளைவுகளை அனுபவிக்க ஆரம்பிச்சிட்டு இருக்கீங்க. நல்லவைகளும் இருக்கு. இதுமாதிரி சங்கடத்தில் ஆழ்த்துபவையும் உண்டு. அவங்க உடல்நலம் தேறி வருவது அறிந்து மகிழ்ச்சி.\\

ஹ்ம்ம்ம். என்ன பண்ணுறது. துவா செய்ங்க. எனக்கு எங்க கம்மாவ ரொம்ப புடிக்கும்.

\\அதென்ன கம்மா - முதன்முதல் கேள்விப்படுகிறேன். நன்னி, தாதி, உம்மும்மா, மாமும்மா - இப்படித்தான் கேட்டிருக்கிரேன். இது புதுசா இருக்கு.\\

கன்மாங்கறத தான் நான் கம்மான்னு சொல்றேன்.. கன்மா, வாப்மா கேள்விபட்டதில்லையா?

\\புதுகைத் தென்றல் said...
எங்க அம்மம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாம இருந்தப்போ உங்களை மாதிரி ரொம்ப விசனப்பட்டேன். அம்மம்மா நல்லா இருக்காங்க. அம்மம்மாவுக்கு நான் பேத்தி இல்ல இன்னொரு பொண்ணு மாதிரி. உங்க கம்மாவுக்கு உடம்பு சரியாகிடும். ஆண்டவன் இருக்கான். கவலைப்படாதீங்க\\

ரொம்ப‌ ந‌ன்றி ச‌கோத‌ரி. நீங்க‌ளும் என்னைபோல‌த்தானா..

ரொம்ப‌ ந‌ன்றி ச‌கோத‌ரி க‌ண்ம‌ணி, ச‌கோத‌ர‌ர் வ‌ச‌ந்த்..

ஹுஸைனம்மா said...

அட, கண்ணும்மாவா? அதைத்தான் இப்படி சொன்னியளாக்கும்.

//என் அள‌வுக்கு எந்த‌ பேத்தியும் பேசின‌தில்லைன்னு//

செரியாத்தான் சொல்லிருக்காங்க. இப்பவே இப்படி பேசுறீங்க...

ஹுஸைனம்மா said...

தலைப்புல பிரியாணியைக் காணோம்? செய்ய வரலைன்னு அதையே எடுத்துச் சாப்பிட்டுட்டீங்களா?

எம்.எம்.அப்துல்லா said...

இறைவன் போதுமானவன்.

எம்.எம்.அப்துல்லா said...

தலைப்புல பிரியாணியைக் காணோம்? செய்ய வரலைன்னு அதையே எடுத்துச் சாப்பிட்டுட்டீங்களா?

//

என்னா அப்சர்வேஷன் :))

சீமான்கனி said...

இறைவன் அருளால் கம்மா பூரண குணம் ஆய்டுவாங்க...

ம்ம்ம்ம்
லாஸ்ட் எக்ஸாம் எப்படா முடியும் எப்படா பாட்டி வீட்டுக்கு போவோன்னு நாள் பார்த்துட்டே இருக்கும் அந்த நாள் நியாபகம் எனக்கும் வந்துருச்சு..

நாஸியா said...

\\அட, கண்ணும்மாவா? அதைத்தான் இப்படி சொன்னியளாக்கும்\\

ஆமா.. நான் வாப்சாவை சுருக்கமா "ஆச்சா"ன்னு தான் கூப்பிடுவேன்.. வாப்பா பக்கமும் மகன் புள்ளை வகைல முதல் பேத்திங்கறதால எனக்கப்புறம் உள்ள எல்லா குட்டீஸும் ஆச்சாதான்.. :)

\\செரியாத்தான் சொல்லிருக்காங்க. இப்பவே இப்படி பேசுறீங்க...\\

ஹூசைனம்மா, இன்னும் நான் பேசி நீங்க கேக்கவேயில்ல.. :)

‍‍‍‍‍
\\தலைப்புல பிரியாணியைக் காணோம்? செய்ய வரலைன்னு அதையே எடுத்துச் சாப்பிட்டுட்டீங்களா\\

ஹீ ஹீ.. :) இல்லை அது எதோ டெம்ப்ளேட் பிரச்சினை..

அப்துல் காக்கா, ஆமா, அல்ஹம்துலில்லாஹ்... இப்பொ ந‌ல்ல‌ப‌டியா பேசுறாங்க‌ளாம்.. இன்னைக்கு ரூமுக்கு மாத்திட்டாங்க‌.. :)

\\seemangani said...
இறைவன் அருளால் கம்மா பூரண குணம் ஆய்டுவாங்க...

ம்ம்ம்ம்
லாஸ்ட் எக்ஸாம் எப்படா முடியும் எப்படா பாட்டி வீட்டுக்கு போவோன்னு நாள் பார்த்துட்டே இருக்கும் அந்த நாள் நியாபகம் எனக்கும் வந்துருச்சு..\\

ரொம்ப நன்றி சகோதரரே..

SUFFIX said...

விரைவில் உங்க கம்மா அவர்கள் குணமடைய எமது பிராத்தணைகளும்.

ஸாதிகா said...

நாஸியா,உங்களுடன் சேர்ந்து உங்கள் கம்மாவிற்காக நானும் பிரார்த்தனை செய்கின்றேன்.ஊருக்குப்போய் கண்ணுமாவுடன் இருந்த அனுபவத்தையும் விரைவில் பதியுங்கள்.

நாஸியா said...

நன்றி சகோதரரே..

ஜலீலாக்கா, இன்ஷா அல்லாஹ் நானும் கன்மாவை பாக்க ரொம்ப ஆவலா இருக்கேன்.. இபோ நல்லபடியா இருக்காங்களாம், மாஷா அல்லாஹ்.. உங்க எல்லாருடைய பிரார்த்தனைகளுக்கும் நன்றி.. :)

Prathap Kumar S. said...

//இன்ஷா அல்லாஹ் விரைவில் அவர்கள் உடல்நலம் தேறி வீட்டுக்கு வருவதற்கு வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.//

இதை என்னோட கருத்தாவும் எடுத்துக்கோங்க...

ஷாகுல் said...

இன்ஷா அல்லாஹ்! சீக்கிரம் அவர்கள் குணமடைய துவா செய்வோம்.

நாஸியா said...

நன்றி சகோதரர்களே!! கம்மா நல்லபடியாக இருக்காங்க..

ஸாதிகா said...

நாஸியா ,ஆனாலும் ஜலீலா அக்கவின் மேலுள்ள பாசம் உங்களுக்கு அதிகம்தான்.:-)

நாஸியா said...

ஆகா.. சே ரொம்ப சொதப்பிட்டேனே... மன்னிச்சுக்கோங்க ஸாதிகா லாத்தா.. இது மாதிரி எனக்கு அடிக்கடி நடக்கும். அதை வெச்சு ஒரு பதிவே போடலாம்..

ஒரு வாட்டி அப்படிதான் ஃப்ரென்டோட சாப்பிட ரெஸ்டாரென்ட் போனப்போ சாம்பார் சாதம் ஆர்டர் செய்யலாம்னு முடிவு செஞ்சோம், பேரர் வந்தப்போ நான் தான் ஆர்டர் செஞ்சேன்.. ஆனா அவர் கொண்டு வந்தது தயிர் சாதம். எனக்கு ஒரே கோவம்.. சொன்னது சாம்பார் சாதம், கொண்டு வர்றது தயிர் சாதமான்னு, அப்புறம் தான் என் ஃப்ரென்டு சொன்னா "இல்லைடி, நீதான் தயிர் சாதம் ஆர்டர் பண்ணினே".. இப்படி அடிக்கடி பேர மாத்தி குழப்பிக்குவேன்.. தப்பா நினைச்சுக்காதிங்க லாத்தா!

Jaleela Kamal said...

நாஸியா நான் இங்கு பதிவு போடல மெயிலில் விசாரித்ததால்.

ரொம்ப சந்தோஷம். என் பெயர் நினைவில் நிற்பதற்கு.


நான் தான் அல்லா ராகத்தாக்கி வைப்பான் என்று சொன்னேனே.

உங்க கம்மா நல்லபடியாக இருக்கிறார்களே அதே ரொம்ப சந்தோஷம்.

//வெளிநாட்டு வாழ்க்கை இபப்டிதான் நல்லது கெட்டதில் கலந்து கொள்ள முடியாது.//


நானும் என் கிரான்மா வும் இனை பிரியா தோழி மாதிரி இருந்தோம்., எல்லா பேத்திமாரிலும் என் மேல் பாசம் அதிகம்.

நாஸியா said...

ஆமா ஜலீலா லாத்தா!! உங்களையும் ஸாதிகா லாத்தாவயும் ரொம்ப குழப்பிக்குறேன்! :)

அல்ஹம்துலில்லாஹ்.. ஜசகல்லாஹு க்ஹைர், நல்ல ஆறுதலான வார்த்தைகளுக்கு. கம்மா நல்லபடியா இருக்காங்க.. இன்னும் மூணு மாசத்துக்கு பெட் ரெஸ்ட்ல இருக்கனுமாம்.. இன்ஷா அல்லாஹ் அவங்க நல்ல கெதியாகி அவங்கள நான் பார்க்கனும்..

நீங்களும் உங்க க்ரான்மாவோட செல்லமா? சோ ஸ்வீட்