Thursday, November 26, 2009

ஐ! இன்னொரு விருது!!

இந்த பக்கம் வந்தே ரொம்ப நாளாச்சே.. மேட்டர் என்னன்னா, எனக்கு கூகிள பயன்படுத்தியே பழக்கமாயிட்டதால மற்ற தமிழ் எழுதிகளை பயன்படுத்துறது கொஞ்சம் கஷ்டமா இருக்கு..அன்பு சகோதரிகள் ஜலீலாவும் ஹுஸைனம்மாவும் சொன்ன தமிழ் எடிட்டரை வைத்து தான் எழுதுறேன்..

முதல்ல எனக்கு விருது குடுத்த சகோதரி மேனகாவுக்கு ஒரு பெரிய சைஸ் நன்றி.. ஹி ஹி.. என்னோட மொக்கைக்கும் விருது குடுக்குறாங்கன்னா அது ரொம்ப பெரிய விஷயம்.. ரொம்ப நன்றி, சகோதரி!! :)




‍‍‍‍‍‍நாளைக்கு இன்ஷா அல்லாஹ் பெருநாள்...இன்னைக்கு அரஃபாத் நோன்பு.. அவுங்களுக்கு இன்னைக்கும் ஆஃபீஸ்.தனியாத்தான் நோன்பு திறக்கனும்.. ஹ்ம்ம்ம்..இப்ப வீட்டு நினைப்பு ரொம்ப வாட்டுது..வீட்டுல பெருநாள் வந்துட்டாலே,முதல்ல துணி, மணியெல்லாம் வேங்கிட்டு, அவசர அவசரமா தைக்க குடுத்துட்டு, அத வேங்க போகும்போது மருதாணி வேங்கிட்டு, வீட்டுக்கு வந்தா சாச்சிமார் எல்லாருக்கும் மருதாணி விட்டுட்டு, கதை பேசிட்டே இருக்கும்போது தூக்கம் கண்ண கட்டும், ஆனா தூங்க மனசு வராது..


சென்னையில எங்க வீடு இருக்குற இடம் நல்ல கல, கலன்னு இருக்கும். நல்ல மார்கெட் ஏரியா..பெருநாளப்போ தெருவே களை கட்டிடும்.. எங்க வீட்டுல இருந்து கூடுதலா ஃப்ளட் லைட்டெல்லாம் போடுவாங்க.. அதை பார்க்கவே அழகா இருக்கும்.. நானும் என் தம்பியும் இன்னும் சாச்சா புள்ளைங்க்ளும் சேர்ந்து மொட்டை மாடிக்கும் வீட்டுக்குமா அலைஞ்சிட்டு இருப்போம்..ம்மா, சாச்சிமார், வாப்சா எல்லாரும் முற்றத்துல உட்கார்ந்து இஞ்சி, பூண்டு உரிச்சிட்டு இருப்பாங்க.. மேல மாடியில பிரியாணி ஆக்க ஆட்க்ள் எல்லாம் வந்துகிட்டு இருப்பாங்க.. அப்போ அந்த சட்டிய பார்க்கவே ஆசையா இருக்கும்.. கொஞ்ச‌ம் நேர‌ஞ்சென்டு போனா, ஸ்வீட் செஞ்த‌ த‌ருவாங்க‌.. ஹ்ம்ம்ம்..
என‌க்கு பெருநாள் அன்னைக்கு செய்ற‌ பிரியாணிய‌ விட‌, காலைல‌ ப‌சியாற‌ செய்யும் இட்லி, க‌றி உருளைக்கிழ‌ங்கு ஆன‌ம், வ‌ட்ட‌ல‌ப்ப‌ம், பாயாச‌ம் தான் புடிக்குமே.. பெருநாள் தொழுகை முடிஞ்ச‌தும் ந‌ல்லா ஒரு புடி, புடிக்க‌லாம்..கையில‌ ம‌ருதாணி வாச‌த்தோட‌ சாப்ட்ற‌தே ஒரு த‌னி சுக‌ம் தான்.. :)

ஹ்ம்ம்...ச‌ரி ரொம்ப‌ சென்டியாகிட்டேன்.. ப‌ர‌வால்ல‌. இங்க‌ பெருநாள் கொண்டாட‌ அவுங்க சொந்த‌ கார‌வ‌ங்க‌ வீட்டுக்கு போறோம், இன்ஷா அல்லாஹ்.. :) க‌ல்யாண‌ம் முடிஞ்ச‌துக்கு அப்புற‌ம் இது தான் முத‌ல் பெருநாள்.. :) ஆவ‌லுட‌ன் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறேன்..



எல்லாருக்கும் ஹ‌ஜ்ஜு பெருநாள் ந‌ல்வாழ்த்துக்கள்.. இறைவ‌னின் அருட்கொடையை எண்ணி, அவ‌னுக்கு ந‌ன்றி செலுத்தி, சிற‌ப்பாக‌ கொண்டாடுவோம்..

14 comments:

செ.சரவணக்குமார் said...

இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.

எம்.எம்.அப்துல்லா said...

ஈத்முபாரக் நாஸியா.

தலைப் பெருநாளுக்கு ஸ்பெஷல் வாழ்த்துகள்.

அப்புறம் இங்க ஸ்கேனர் இல்லை. உங்க மெயில் ஐ.டி அனுப்புங்க. மெயிலில் அனுப்புறேன்.

pudukkottaiabdulla@gmail.com

Menaga Sathia said...

தலைப் பெருநாளுக்கு ஸ்பெஷல் வாழ்த்துகள்!!

ஸாதிகா said...

அட..நாசியாவின் பெருநாள் ..சுவாரஸ்யமாக இருந்தது.இன்னும் சற்று விரிவாக எழுதி இருக்கலாம்.சந்தோஷமாக பெருநாள் கொண்டாட வாழ்த்துக்கள்

சீமான்கனி said...

//ஹ்ம்ம்ம்..இப்ப வீட்டு நினைப்பு ரொம்ப வாட்டுது..//
என‌க்கும்தான்... ரொம்ப...

தலைப் பெருநாளுக்கு ஸ்பெஷல் வாழ்த்துகள்!!

சீமான்கனி said...

விருதுக்கு வாழ்த்துக்கள்....

ஹுஸைனம்மா said...

தனிமை முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். போகப் போகப் பழகிவிடும்.

இனிய பெருநாள் வாழ்த்துக்கள். அபுதாபி வருவீர்களா?

pudugaithendral said...

ஹஜ்ஜுக்கும், விருதுக்கும் வாழ்த்துக்கள்

SUFFIX said...

தலைப் பெருநாள் வாழ்த்துக்கள்!!

அப்துல்மாலிக் said...

இனிய ஹஜ் பெருநாள், தலைப் பெருநாளுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்

பித்தனின் வாக்கு said...

சகோதரி தக்கடிக்காக நான் தங்களுக்கு இதே விருதினை அளித்துள்ளேன், அதைப் பெற்றுக் கொண்டு என்னைச் சிறப்பிக்கவும். நன்றி

ஸாதிகா said...

http://shadiqah.blogspot.com/2009/11/blog-post_27.html

இந்த லின்க்கை பார்க்கவும்.
நானும் மீண்டும் தருகின்றேன் இந்த விருதினை.

நாஸியா said...

வாழ்த்துக்களுக்கு நன்றி, சரவணகுமார், அப்துல்லா, மேனகாசதியா , ஸாதிகா, சீமாங்கனி, ஹுஸைனம்மா புதுகைத் தென்றல் ஸஃபிக்ஸ்..

விருதுகளுக்கு நன்றி, சகோதர் & சாதிகா லாத்தா.. :)

ஹூசைனம்மா, அபுதாபிக்கு இன்னும் வரலை.. இன்ஷா அல்லாஹ் அடுத்த ப்ளேன் போட்டுடுவோம்.. ஆனா அபுதாபிக்க்கு கிட்ட வந்தோமே.. அல் ஐன் வந்தோம்.. :)

Jaleela Kamal said...

நாஸியா பெருநாளுக்கு நான் ஊருக்கு போய் விட்டேன், இந்த பதிவ இப்ப தான் பார்த்தேன். எனக்கும் ஹுஸைனாம்மா தான் சொன்னார்கள். தமிழ் எடிட்டர்.

ரொம்ப ஈசியா இருக்கு ஹுஸைனாம்மாவிற்கு நன்றி. இப்ப நான் எல்லோருக்கும் சொல்கீறேன்.

முதல் பெருநாள் வாழ்த்துக்கள்