Friday, November 13, 2009

ஒரு விருது, ஒரு தட்டு தக்கடி



நம்ம ஜலீலா லாத்தா ஒரு விருது குடுத்துருக்காங்க.. அபப்டியே புல்லரிச்சு போயிட்டேன்.. பின்ன நாம எழுதுற மொக்கைக்கு அவார்டெல்லாம் குடுக்குராங்கப்பன்னு தான்.. இருந்தாலும் ரொம்ப உற்சாகமா இருக்கு.... நன்றி லாத்தா..
எங்க ஊரு பக்கம் (அதான் நெல்லை சீமை- அருவாக்கும் அல்வாக்கும் பெயர் பெற்ற ஊரு!) பல உணவு பண்டங்கள் அரிசிய வெச்சு செய்வாங்க.. நிறைய பேருக்கு முஸ்லிமுன்னு சொன்னாலே பிரியாணி தான் நினைவுக்கு வரும்.. ஆனா சத்யமா எங்க வீட்டுல பிரியாணி செய்ய தெரிஞ்சவங்கள விரல் விட்டு எண்ணிடலாம்... எங்கும்மாக்கு சுத்தமா வரவே செய்யாது.. என் தம்பி சொல்லுவான் "ம்மா, நீ எது வேணும்னாலும் செய், ஆனா டிவி ல கண்டதையும் பாத்துட்டு பிரியாணி மட்டும் செய்யாதம்ம்மா"... அந்த அளவுக்கு தான் பிரியாணி.. ஆனா என்ன, பெருநாள், கல்யாண நேரங்கள்ல வெளிய ஆள் வெச்சு ஆக்கிட வேண்டியது தான்.. :)

நெய்சோறு, கரி ஆனம், வட்டலப்பம், இடியப்பம், ஆப்பம், புட்டு, அரிசிமா ரொட்டி, தக்கடி, வெள்ளை கஞ்சி இதெல்லாம் எங்க ஊர்ல ரொம்ப விசேஷம். .. எனக்கிதுல பிடிச்சது தக்கடி..

டைப் பண்ணும்போதே வாய் ஊறுதுங்க.. எனக்கு அவ்வளவு புடிக்கும்... ஆனா கொஞ்சம் செயற்முறை கஷ்டமா இருக்குற மாதிரி இருக்கும்.. என்கும்மா எது செஞ்சாலும் ரொம்ப எளிதா செஞ்சிடுவாங்க.. அதுல ஒன்னு தான் இந்த சாப்பாடும்..
நான் செஞ்ச தக்கடி:




செய்முறை (யப்பா... கடைசில நானும் சமையல் பதிவெல்லாம் போடுறேன் பா!)

தேவையான பொருட்கள்:

தக்கடிக்கு

- தேங்காய் துருவி போட்ட அரிசி மாவு- இரண்டு கப்

-பொடியாக அறிந்த வெங்காயம் சிறிதளவு

-பச்சை மிளகாய் சிறிதளவு

-உப்பு, தேவைக்கேற்ப

லேசா சுடுதண்ணிய தெளிச்சு சின்ன சின்னதா கொழுக்கட்டை புடிச்சி வெச்சுக்கோங்க.

ஆனத்திற்கு:

-இரண்டு தக்காளி

-மூன்று அல்லது நான்கு பெரிய வெங்காயம்

-பச்சை மிளகாய் சிறிதளவு (நறுக்கியது)

-இஞ்சி பூண்டு விழுது தேவையான அளவு

-மிளகாய், மல்லி, உப்பு தூள்- தேவையான அளவு

-ஆட்டிறைச்சி அரை கிலோ

எண்ணெய் காய்ஞ்சதும் இஞ்சி பூண்டு போட்டு வதக்கி, நறுக்கிய வெங்காயம் போட்டு அது வதங்கியதும் தக்காளியை சேத்துக்கோங்க.. அதுல எல்லா மசாலா தூளையும், உப்பையும் போட்டு, நல்ல வதங்குன பிறகு கறிய போட்டு நல்ல தண்ணி ஊத்தி குக்கரை மூடி, அஞ்சு விசில் வர வரைக்கும் வைங்க..

குக்கரை திறந்து, கறி வெந்துட்டான்னு பாத்துக்கோங்க. ஆனம் கொஞ்சம் தண்ணியா இருக்கணும்.. அதுல ஒவ்வொன்னா புடிச்சு வெச்ச தக்கடிய போடுங்க.. ஆனம் அதுல நல்லா இறங்கினதும் அப்படியே கெட்டியாகிடும்.. ஐயோ எனக்கு வாய் ஊறுதுங்க.. நான் எஸ்கேப்

22 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

mmm...செய்து பாக்கலாம்..

Thamiz Priyan said...

படிக்கும் போது எல்லாம் நல்லா தான் இருக்கு... :) ஆனா செஞ்சுப் பார்த்தால் நீங்க செய்ற மாதிரி டேஸ்ட் வர மாட்டுதே...

Menaga Sathia said...

படிக்கும்போதே சாப்பிட ஆசையா இருக்கு.செய்துடுவோம்..

சீமான்கனி said...

ம்ம்ம்ம்...ரெம்ப அருமையா இருக்கும் நான் அம்மாக்கு நெறைய ஹெல்ப் பண்ணிருக்கேன்...நாங்க இத திக்கடினு சொல்லுவோம்...உண்மையாவே ரெம்ப கஷ்ட்டம் தான்,,,,,

தெய்வசுகந்தி said...

பேரே புதுசா இருகுதுங்க. கேள்விப்பட்டதே இல்ல. செஞ்சு பாக்கனும்னு நினைக்கர லிஸ்ட் பெரிசாயிட்டேயிருக்கு.

Tech Shankar said...

குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்

எம்.எம்.அப்துல்லா said...

இது வேறயா

:)

அப்துல்மாலிக் said...

முடியலே!!!!!

S.A. நவாஸுதீன் said...

தக்கடி எல்லாம் 15 வருஷத்துக்கு முன்னாடி எங்க அம்மா செஞ்சது. இப்பெல்லாம் யாருக்கும் அது பேர் கூட தெரியலை.

SUFFIX said...

நீங்களுமா............? எல்லொருக்குள்ளேயும் ஒரு சமையல் ராணி ஒழிஞ்சுக்கிட்டு இருக்காங்க போல!!

Jaleela Kamal said...

நாஸியா தக்கடி சூப்பர்,

மேலபாளையத்தில் போடுவார்கள் அந்த தக்குடி போல் இன்னும் செய்ய வரவில்லை.
பெரிய ஆட்டேபார்ம் என்று அதற்கு ஒரு மறுபெயரும் உண்டு.

வாழ்த்துக்கள் அப்ப அப்ப இப்படி ஏதாவது போடுஙக்ள் அசத்தலா?

ஹுஸைனம்மா said...

நாஸியா,

தக்கடி நீங்களே செஞ்சீங்களா? அவ்வளவு தேறிட்டீங்களா?

எங்க வீட்டுக்காரருக்கு தக்கடி ரொம்பப் பிடிக்கும்கிறதாலயோ என்னவோ எனக்குச் செய்ய வராது!!

Admin said...

நல்லாருக்கும்போல இருக்கு

நாஸியா said...

செய்து பாருஙகளேன் வசந்த் அண்ணே

அதெப்படி வரும் தமிழ் பிரியன் அண்ணே? கை மணம் என்று அல்லாஹ் சும்மாவா குடுத்திருக்கான்... :)

செய்து பாருஙக சகோதரி மேனகா.... ரொம்ப நல்லா இருக்கும்

எந்த ஊருல திக்கடின்னு சொல்லுவாஙக? நாங்க நெல்லை, தூதுக்குடி பக்கம்.. :)

தெய்வசுகந்தி, சீக்க்ரம் செய்யுங்க.. ரொம்ப நல்லா இருக்கும்... :)

நன்றி தமிழ் நெஞ்சம்.. :)உங்களுக்கும் வாழ்த்துக்கள்.. :)

நாஸியா said...

ஆமா அப்துல்லாஹ் அண்ணே... :)

என்ன முடியலே அஃப்சரண்ணே?

அபப்டியா நவாஸ் காக்கா? ஹ்ம்ம்,... எப்பவும் ம்மா செய்யும் சாப்பாட்டுக்கு ஈடு இணையே இல்லை.. ம்மாவை பாக்கனும் போல இருக்கு.. :(

\\ஒழிஞ்சுக்கிட்டு இருக்காங்க போல\\ ஐயோ எங்க ஒழிஞ்சு போக சொல்ரீஙக?

ஜலீலா லாத்தா.. உங்க லெவலுக்கு வர முடியுமா?

ஆமா ஹூஸைனம்மா... என்னாலயே நம்ப இயலல..

ஆமா சன்ரு.. நல்லா இருக்கும் :)

பித்தனின் வாக்கு said...

நல்லா இருக்குங்க நானும் தலைப்பில் இருந்து நாக்கை சப்புக் கொட்டிக்கிட்டுதான் படிச்சேன், ஆனா அந்த ஆட்டுக்கறி அரைக்கிலோன்னதும் ஒரு பிரோக் போட்டு உங்க இந்த பதிவு எனக்கு இல்லைனு ஜீட் விட்டுட்டேன். இன்னைக்கி நான் லீவு வரட்டுங்களா.

பாவா ஷரீப் said...

//என் தம்பி சொல்லுவான் "ம்மா, நீ எது வேணும்னாலும் செய், ஆனா டிவி ல கண்டதையும் பாத்துட்டு பிரியாணி மட்டும் செய்யாதம்ம்மா"... //

தம்பிக்கு ரொம்ப காமெடி சென்ஸ்

pudugaithendral said...

எங்க வீட்டுக்காரருக்கு தக்கடி ரொம்பப் பிடிக்கும்கிறதாலயோ என்னவோ எனக்குச் செய்ய வராது!!//

ennatha solla :))

அ.மு.செய்யது said...

நண்பர் வீட்டில ஒருமுறை தக்கடி சாப்பிட்டு பாத்துருக்கேங்க !!! நல்லா தான் இருக்கும்.!!!

Asiya Omar said...

தக்கடி அருமையாக செய்து காட்டியிருக்கீங்க.நாஸியா நலமா?மகன் நலமா?

நாஸியா said...

Thank you Asiya akka.. blog pakkam varave neram irukuradhilla. alhamdhulillah naanga nalam.. unga recipes adikadi paakuradhu thaan.

திண்டுக்கல் தனபாலன் said...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…
Follower ஆகி விட்டேன்… இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் (இந்தப் பதிவு) வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_21.html) சென்று பார்க்கவும்...

நேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க... நன்றி…

எனது துணைவியாருக்கு மேலும் ஒரு தளம் கிடைத்து விட்டது...