Thursday, October 15, 2009

MBA படிக்க போறீங்களா?

ஏதோ நமக்கு தெரிஞ்சதை பகிர்ந்துக்கலாமேன்னு. இதுல நிறைய விஷயம் உங்களுக்கு ஏற்கெனெவே தெரிஞ்சிருக்கலாம், இருந்தாலும்:




MBA வை பொறுத்த வரைக்கும் இன்ன படிப்பு தான் படிச்சிருக்கனும்னு அவசியம் இல்லை. நீங்க UG எந்த துறைல செய்திருந்தாலும் MBA படிக்கலாம். ஆனா அக்கவுண்ட்ஸ், காமர்ஸ் படிச்சவங்களுக்கு தொடக்கத்துல கொஞ்சம் எளிதா இருக்கிற மாதிரி  இருக்கும். அதெல்லாம் முதல் வருஷம் மட்டும் தான், இரண்டாவது வருஷத்துல எல்லாருமே சமமா தான் இருப்பாங்க.


எந்த கல்லூரியில படிக்கிறதுன்னு முடிவு பண்ண முன்ன, எப்படிப்பட்ட MBA பண்ண போரோம்கிறது முக்கியம். எனக்கு தெரிஞ்சு இந்த படிப்ப நாலு வகையா பிரிக்கலாம்:


  • CAT, XAT, RAT (ஹிஹி,,, இது சும்மா தமாசுக்கு) எழுதி  B-Schools எனப்படும் பெரிய, பை நிறைய சம்பளம் கொடுக்கம் நிறுவனங்கள் வருகை தரும், பல முன்னணி ஏடுகள் தரவரிசை பட்டியலில் இடம்பெறும் IIM, XLRI, போன்ற கல்லூரிகள் 
  •  TANCET எழுதி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கீழ் இயங்கும் கல்லூரிகளில் சேர்வது (பெரும்பாலும் இன்ஜினியரிங் கல்லூரிகளில்)
  • All India Management Association (AIMA) நடத்தும் MAT எழுதி அந்த தேர்வை ஏற்கும் சில கல்லூரிகளில் படிப்பது
  • IGNOU, பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் தொலை தூர கல்வி பயில்வது
  • ஏற்கெனெவே வேலை செய்பவர்களுக்கு ஏற்ற வகையில் இருக்கும் ஒரு வருட Executive MBA வகுப்புகள். இதில் ISB- ஹைதராபாத் தான் இந்தியாவிலேயே முதலிடம். இன்னும் ஏன், உலகளவில் அங்கீகாரம் பெற்றதும் கூட. நம் சென்னையிலும் Great Lakes Institute of Management இத்தகைய பட்டத்தை வழங்குகிறது
மேற்கொண்டு செல்வதற்கு முன் ஒரு விஷயத்தை தெளிவு படுத்திக்கொள்கிறேன்: MBA விற்கும்  IIM போன்ற கல்லூரிகள் கொடுக்கும் PGDBM, PGDBA போன்ற பட்டத்திற்கும் ஒரு வித்தியாசம் தான்; பல்கலைக்கழகங்கள் பட்டம் கொடுத்தால் அது MBA, தன்னிச்சையாக ஒரு institute பட்டம் கொடுத்தால் அது PGDBA/PGDBM அவ்வளவே.

முதலில் நீங்க எந்த மாதிரி MBA படிக்க போறீங்கன்னு முடிவு செஞ்சுக்கோங்க. MBA வை பொறுத்த வரை நீங்க எந்த கல்லூரியில படிக்கிறீங்கன்றது ரொம்ப ரொம்ப முக்கியம். எப்பவும் B School Ranking என்று பல முன்னணி இதழ்கள், AC Nielsen போன்ற சர்வே நிறுவனங்கள் வெளியிடும். அதுல எப்பவும் முதல் இருபது-முப்பது கல்லூரிகளுக்கு நல்ல மதிப்பிருக்கிறது. இருந்தாலும் ஒரு விஷயத்த ஞாபகத்துல  வெச்சுக்கோங்க, இது போன்ற தர வரிசையில் கூட நிறைய சர்ச்சைகள் இருக்கு. அதனால எப்பவும் நம்மால முடிஞ்சா நல்ல ஆராய்ச்சி பண்ணின பிறகு தான் எந்த கல்லூரின்னு தேர்ந்தெடுக்கணும்.

ஒரு வேளை நீங்க CAT, XAT போன்ற தேர்வுகளை எழுதிட்டு, IIMs ல இருந்து அழைப்பு வர காத்துகிட்டு இருக்கலாம். அல்லது நீங்க தேர்ந்தெடுத்த கல்லூரிகள்ல இருந்து அழைப்பு வர காத்துகிட்டு இருக்கலாம். நீங்க இந்த தேர்வு எழுதினத  வெச்சிட்டு உங்களுக்கு நிறைய உப்புமா கல்லூரிகள்ல இருந்து தானாகவே அழைப்பு வரலாம். எந்தெந்த கல்லூரிகள்ல சேர ஐடியா இருக்கோ, அதை பத்தி நம்மாலான ஆராய்ச்சிய தொடங்கணும். அது ரொம்ப ரொம்ப முக்கியம். அங்க படிச்ச மாணவர்களிடம் இது போன்ற கேள்விகளை கேட்கலாம்:

  •  Specialization: MBA வில் கண்டிப்பா நமக்கென்ன துறை பிடிக்குதோ, அந்த துறையில் அந்த கல்லூரி பெயர் பெற்றிருக்கான்னு பார்க்கும். சில கல்லூரிகள்ல சில துறைகளுக்கு மதிப்பே இருக்காது. அங்க நீங்க அந்த துறை எடுத்த, கரை செற்றது கஷ்டமா போய்டும்.
  • Placements: எனக்கு தெரிஞ்சு யாரும் அறிவை வளர்க்குரதுக்கு MBA படிக்கலை. முக்கால்வாசி பேர் தங்களுடைய சம்பள அளவு உயரனும்னு தான் படிக்கிறாங்க. அதனால நீங்க படிக்கச் போற இடத்துல நூறு சதம் placemens இருக்கான்னு பாக்கணும். அதே போல மாணவர்கள் கட்டாயம் எதுவும் இல்லாம தங்களுக்கு பிடித்த நிறுவனங்களுக்கு மட்டும் apply பண்ணும் வசதி இருகான்னும் பாக்கணும்
  • Faculty: எத்தனை பேர் நிரந்தர விரிவுரையாளர்கள், எத்தனை பேர் அப்பப்போ வரும் visiting faculty என்று பாக்கணும். பொதுவா பெரிய பெரிய பொறுப்புகளள இருக்குற சில பேர் தங்களுடைய ஆர்வம் காரணமாக வந்து சொல்லி கொடுப்பாங்க, அது நம்மளுக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும். எந்தெந்த நிறுவனங்கள்ல இருந்து வாரங்கன்றத நாம கண்டிப்பா தெரிஞ்சிகிட்டா  நல்லது
  • Infrastructure: எல்லாம் ஒழுங்க இருந்தா தான் நமக்கும் படிக்கச் வசதியா இருக்கும். விடுதியில இன்டர்நெட் வசதி தங்கு தடையில்லாம வருதா, நாம ஆராய்ச்சி பண்ண வசதியா database களுக்கு சந்தா செளுதியிருகா, போன்றவைகளை கவனிச்சிக்கணும்
சரி, எல்லாத்தையும் சொல்லி இதையும் சொல்லிடறேன். B School களில் படிச்சா ஒரு பாஸ்போர்ட் மாதிரி, அவ்வளவு தான். அதுக்கப்புறம் ஒவ்வொருதர் உயர்வை அடையறதும் அவரவர் திறமையை பொறுத்தே. எங்களுக்கு சொல்லி கொடுத்தவர்கள்ள, IIM-A ல படிச்சிட்டு வந்து கேவலமா சொல்லி கொடுத்தவங்களும்  இருந்தாங்க, நம்ம Madras University ல படிச்சிட்டு சூப்பரா சொல்லி கொடுத்தவங்களும் இருக்காங்க.

அடுத்த பதிவில் தமிழ் நாட்டில் உள்ள நல்ல கல்லூரிகள், எந்தெந்த துறைய தேர்ந்தெடுப்பதுன்னு பாப்போம்.

20 comments:

வடுவூர் குமார் said...

நல்ல பதிவு.
உபயோகமான பதிவு.

ப்ரியமுடன் வசந்த் said...

தங்களின் நல்லதொரு முயற்சிக்கு வாழ்த்துக்கள் சகோதரி...

நாஸியா said...

நன்றி, வடுவூர் குமார், பிரியமுடன்...வசந்த்.. தொடர்ந்து ஊக்கப்படுத்தவும்... :)

பீர் | Peer said...

என்னை மாதிரி வூட்ல இருந்தே எம்.பி.ஏ படிக்க நினைக்கிறவங்களுக்கு?

நாஸியா said...

நீங்க இந்தியாவில இருக்கும் IGNOU, Symbiosis, சென்னை பல்கலைக்கழகம் பாரதிதாசன் பல்கலைக்கழகம் போன்ற இடங்களில் முயற்சி செய்யலாம். ஆனா இதைவிட ஒரு நல்ல institute இல ஒரு வருட executive MBA பண்ணலாம்.

Unknown said...

அய்யய்யோ IGNOU வேண்டாம் பீர், MBA syllabus ரெம்ப கஷ்டமா இருக்கும்...

அப்பறம் நாஸியா, நல்ல சொல்லீருந்தீங்க! அதில் இருக்குற குருப்பை பற்றியும் சொன்ன வசதியா இருக்கும், ஆமா ISB- ஹைதராபாத் இந்தியாவிலே டாப்பா இருக்கா?

நாஸியா said...

syllabus கஷ்டமா? எனக்கு தெரியலீங்க, .. ஆனா IGNOU விற்கு கொஞ்சம் நல்ல பெயர் இருக்கு..

இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில் தமிழ் நாட்டில் உள்ள நல்ல கல்லூரிகளை பற்றியும் துறைகளை பற்றியும் எழுதுறேன் இன்ஷா அல்லாஹ்

செ.சரவணக்குமார் said...

அன்புள்ள நாஸியா..

நல்லா எழுதுறீங்க. தீபாவளி வாழ்த்துக்கள்.

சென்ஷி said...

தேவையான பதிவு.. தொடரவும்!

நாஸியா said...

நன்றி, செ.சரவணக்குமார், சென்ஷி... தொடர்ந்து ஊக்கப்படுத்தவும் :)

S.A. நவாஸுதீன் said...

நல்ல பகிர்வு. தேவையான இடுகை. ரொம்ப நன்றி

S.A. நவாஸுதீன் said...

நண்பர்கள் அனைவருக்கும் தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!!

நாஸியா said...

S.A. நவாஸுதீன், நன்றி, தொடர்ந்து ஊக்கப்படுத்தவும். .

அனைவருக்கும் என்னுடைய தீபாவளி வாழ்த்துக்கள்!

Yousufa said...

நாஸியா,
கலகலன்னு ஆரம்பிச்சீங்க, இப்ப என்ன சீரிய‌ஸா படிப்ஸ் பத்தி பதிவு போடறீங்க? உங்களுக்குள்ள இருக்க "படிப்பாளி" விடமாட்டேங்கிறாளா? நல்லாருக்கு, பலருக்கும் வழிகாட்டியா இருக்கும்; வாழ்த்துக்கள்!!

ஆதித்தன் said...

நல்லா எழுதி இருக்கிறிங்கள்! இன்னும் விரிவா எதிர்பார்க்கிறேன்.

நாஸியா said...

ஹுஸைனம்மா

//கலகலன்னு ஆரம்பிச்சீங்க, இப்ப என்ன சீரிய‌ஸா படிப்ஸ் பத்தி பதிவு போடறீங்க? உங்களுக்குள்ள இருக்க "படிப்பாளி" விடமாட்டேங்கிறாளா? நல்லாருக்கு, பலருக்கும் வழிகாட்டியா இருக்கும்; வாழ்த்துக்கள்!!//

ஹா ஹா.. படிப்பாளியா.. சரி சரி.. ஏதோ நமக்கு தெரிஞ்ச உருப்படியான மொக்கை.. :)

ஆதித்தன்
\\நல்லா எழுதி இருக்கிறிங்கள்! இன்னும் விரிவா எதிர்பார்க்கிறேன்\\
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள்! இன்ஷா அல்லாஹ் விரைவா அடுத்த பதிவு போடுறேன்

SUFFIX said...

//ஏற்கெனெவே வேலை செய்பவர்களுக்கு ஏற்ற வகையில் இருக்கும் ஒரு வருட Executive MBA வகுப்புகள். இதில் ISB- ஹைதராபாத் தான் இந்தியாவிலேயே முதலிடம். இன்னும் ஏன், உலகளவில் அங்கீகாரம் பெற்றதும் கூட. நம் சென்னையிலும் Great Lakes Institute of Management இத்தகைய பட்டத்தை வழங்குகிறது//

ஆகா நமக்கு தேவையான பதிவு!! நானும் 2 வருடங்கள் யோசிச்சு யோசிச்சு, இத்தனை யோசனைக்கு காரணம் அலுவலக பணி, குழந்தைகள் படிப்பிற்க்கு உதவி, வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் எப்படி ச்மாளிக்க போறோமென்னு தான். ஒரு வழியா சென்ற மே மாதம் NIBM ல் EMBA-Supply Chain Management சேர்ந்து முதல் செமஸ்டரும் எழுதியாச்சு, இன்ஷா அல்லாஹ் பிப்ரவரி மாசம் கோர்ஸ் முடிச்சுடலாம்.

நாஸியா said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரரே

\\ஒரு வழியா சென்ற மே மாதம் NIBM ல் EMBA-Supply Chain Management சேர்ந்து முதல் செமஸ்டரும் எழுதியாச்சு, இன்ஷா அல்லாஹ் பிப்ரவரி மாசம் கோர்ஸ் முடிச்சுடலாம்.\\

SCM ரொம்ப நல்ல கோர்ஸ் ல.. இன்ஷா அல்லாஹ் நல்லபடியா முடிங்க.. வாழ்த்துக்கள்.. :)

விக்னேஷ்வரி said...

நல்ல பதிவு. அப்புறமா ரிலாக்ஸ்டா வந்து படிக்கிறேன்.

நாஸியா said...

சரி சகோதரி!