Monday, October 19, 2009

MBA படிக்க போறீங்களா? பாகம் 3

மூன்றாம் பாகம் வரைக்கும் இவ்வளவு சீக்கிரம் வருவேன்னு நினைக்கல.. உங்கள் ஆதரவுக்கு நன்றி!

MBA சார்ந்த துறைகளை  பற்றி தெரிஞ்சாச்சு, அடுத்து என்ன, இந்தியாவிலுள்ள சிறந்த கல்லூரிகளைப்பற்றி தெரிஞ்சுக்கணும்.

முதல்ல ஒரு எச்சரிக்கை மணி அடிச்சிட்றேன்.. மக்களே, ஆங்கில நாளிதழ்கள்ள பக்கம் பக்கமா விளம்பரம் கொடுக்கற உப்புமா கல்லூரிகளை எல்லாம் அப்படியே ஒதுக்கி தள்ளிடுங்க. இலவசமா மடிக்கணினி குடுக்றேன்னுவான், வெளிநாட்டு டூர்னு சொல்லுவான், கோட்டு சூட்டெல்லாம் போட்டு கட்டை விரல உயர்த்தி காமிக்கற பசங்க போட்டோ போட்டு நம்மள அப்படியே கவுத்திடுவான்.. போதாத குறைக்கு  நீங்க அங்க படிச்சா வெளிநாட்டு நிறுவனங்கள் எல்லாம் அப்படியே உங்கள லட்டு மாதிரி தூக்கிட்டு போய்டுவாங்கன்னு  நம்ப வைப்பான்.. நீங்களும்  சரி என்ன அந்த institute போயி பாத்துடுவுமேன்னு  போவிங்க, அங்க முழுக்க முழுக்க குளிர்சாதன வசதி செய்யப்பட்ட, wi fi enabled கட்டடத்த பார்த்து வாய பிளந்து, பீஸ் பத்தின விவரங்களை கேட்டா, அப்படியே ரெண்டு வருசத்துக்கு ஏழெட்டு லட்சம் வரும்.. கொஞ்சம் மண்ட காஞ்சு receptionist எ பார்த்தா, அவங்க கவலைபடமா லோன் இருக்குறத பத்தி சொல்லுவாங்க.

எல்லாத்தையும் நம்பி, உள்ள போயி சேர்ந்ததுக்கு அப்புறம் தான் தெரியும், இவங்கல்லாம் நம்பர் ஒன் டுபாகூர்னு. இந்திய முழுக்க ஒரு institute அதனுடைய பல கிளைகளை நிறுவி, இப்படிதான் ஊர ஏமாத்திட்டு இருக்கு...

இந்நேரம் கண்டுபிடிச்சிருப்பீங்க, இல்லாண்டாலும் சொல்றேன், IIPM-Indian Institute of Planning and Management. பேரெல்லாம் பந்தாவா தான் இருக்கு, ஆனா அவங்களோட விளம்பரத்துல கிளைம் பண்றது எல்லாமே பச்சை பொய்.. மாணவர்களை ஏமாற்றி இவ்வளவு எளிதா கோடி கொடியா பகல் கொள்ளை அடிக்குற இந்த நிறுவனத தடை செய்யாம நம்ம அரசு என்ன பண்ணிட்டு இருக்குன்னு தான் தெரியல.

இந்த கல்லூரிய பத்தின முழு விவரங்களையும் Outlook பத்திரிக்கை வெளியிட்டு இருக்கு.. இதை பாருங்க, இன்னும் நிறைய பேருக்கு சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்துங்க. நன்றி!

இது போல இன்னும் பல கல்லூரிகள் சரியான அங்கீகாரம் பெறாமலேயே நடந்துட்டு தான் இருக்கு.. நம்மளோட வருங்காலம், அதனால நாம தான் கேக்குறவங்க கிட்ட கேட்டு, ஒழுங்கான கல்லூரியா தேர்ந்தெடுக்கணும்.

ஓகே, இப்போ சிறந்த கல்லூரிகளோட பட்டியலுக்கு வருவோம். திரும்பவும்
 இன்னொரு எச்சரிக்கை மணி: இதெல்லாம் நாம ஒரு ஐடியா வுக்கு தான் பார்க்கணுமே ஒழிய இதை வெச்சு முடிவு செய்ய கூடாது. எப்பவுமே இந்த மாதிரி பட்டியல்களோட நம்பத்தன்மை பத்தி ஒரு சர்ச்சை இருந்துகிட்டே இருக்கும், அதே போல அதுல சொல்றதெல்லாம் உண்மையா இல்லாம இருக்கவும் வாய்ப்பு இருக்கு. இதை ஒரு கருவியா பயன்படுத்தி நாம சுயமா முடிவெடுக்கறது தான் முக்கியம்:

1. Wall Street Journal Ranking: Wall Street Journal பத்தி சொல்வதற்கு ஒண்ணுமில்லை.  ரொம்பவே புகழ்பெற்றவங்க. அவங்களோட பட்டியல் இது.  இந்திய அளவுல அரசுதவி பெற்ற கல்லூரிகள்ல, நம்ம தமிழ்நாட்டில் உள்ள  Bharathidasan Institute of Management 14 வது இடத்தில இருக்கு,,  அதே போல, சென்னையில் உள்ள IFMR, கோவையில் உள்ள PSG, Amirtha School of Business போன்ற தனியார் கல்லூரிகளும் புகழ்பெற்றவை. நான் கேள்விபட்ட வரைக்கும் PSG, ASB யில் placements நல்லா இருக்கும்

2. Outlookindia.com Survey: இன்னொரு பெரிய பட்டியல். இந்தியாவிலுள்ள எழுபத்தி ஐந்து MBA கல்லூரிகளை பற்றியது. இதுல தமிழ்நாட்டில் உள்ள பல கல்லூரிகள் இடம்பெற்றிருக்கு. ஆனா இந்த பட்டியலில் எனக்கு முழுக்க உடன்பாடில்லை. பல நல்ல கல்லூரிகள் பின் தள்ளப்பட்டிருக்கு..அந்த பக்கத்தில் உள்ள பின்னூட்டங்களை பார்த்தால் தெரியும். இருந்தாலும், இந்த பட்டியல் நிச்சயமா ஒரு ஐடியா கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

3. Pagalguy.com Rankings: pagalguy.com குறிப்பா MBA மாணவர்களுக்கான வலைத்தளம். இங்க உங்களுடைய கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் விடை கிடைக்கலாம். முயற்சி செஞ்சு பாருங்க. சென்னையில புதுசா நிறுவப்பட்டிருக்குற Great Lakes Institute of Management இந்த பட்டியல்ல இடம் பெற்றிருக்கு.

இப்போ ஓரளவுக்கு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும், நம்ம நாட்டுல உள்ள நல்ல கல்லூரிகளைப்பற்றி. இந்த கல்லூரிகளெல்லாம் எந்த மாதிரி நுழைவு தேர்வு எடுப்பாங்க என்பத விசாரிச்சிட்டு, அதுக்கேத்த மாதிரி படிங்க.

MBA படிப்ப பத்தி சொல்லனும்னா சொல்லிட்டே இருக்கலாம், அதெல்லாம் அப்பப்போ தோணும்போது பதிவா போடுறேன், இறைவன் நாடினால்,  இப்பதைக்கு இந்த தொடர முடிச்சிக்கறேன். உங்களுக்கு வேறெதுவும் தெளிவு படுத்தனும்னு நினைச்சிங்கன்னா பின்னூட்டம் மூலமா தெரியப்படுத்துங்க!

நன்றி!

23 comments:

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

IIPM? அப்படியா? ரொம்ப நன்றிங்க, தாங்கள் கொடுத்த தகவல்கள் அனைத்தும் பயனுள்ளவை, தொடருட்டும் சேவை.

எம்.எம்.அப்துல்லா said...

சகோதரி நாசியா,

உபயோகமான தகவல்கள். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இன்னும் விரிவாகத் தொடருங்கள்...இன்ஷா அல்லாஹ்.

S.A. நவாஸுதீன் said...

ரொம்பத் தேவையான பதிவு சகோதரி. நிரைய பேருக்கு உபயோகமாக இருக்கும்.

நிரைய தவகல்கள் சேகரித்து ஒரு அருமையான பதிவை தந்தமைக்கு பாராட்டுக்கள்.

S.A. நவாஸுதீன் said...

எம்.எம்.அப்துல்லா said...

மாப்ள, இன்னும் உன் மேல கோவமாத்தான் இருக்கேன்.

நாஸியா said...

ஷ‌ஃபிக்ஸ், எம்.எம்.அப்துல்லா, S.A. நவாஸுதீன்

ஊக்கப்படுத்தியமைக்கு நன்றி சகோதரர்களே!

இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து எனக்கு தெரிந்த தகவல்களை பகிர்ந்துக்கொள்கிறேன் :)

அன்புடன் மலிக்கா said...

உபயோகமான தகவல்கள்,

திருமதி நாஸியா சமைக்கத்தெரியாட்டி என்ன
சூப்பரா பறிமாரத்தெரிகிறதே!!!!

யாசவி said...

Can u tell more abt eMBA for working professional

:)

பித்தனின் வாக்கு said...

நஸியா அது என்ன கேப்சன் சமைக்கத் தெரியல்லைனு, என் சமையல் பதிவுகளை படித்துப் பாருங்கள். சமைக்கவும். வீட்டுல நல்ல பேரு கிடைக்கும். வித்தியாசமான உணவு மற்றும் நெறுக்குத்தீனி வகைகளை எழுதி வருகின்றேன். நன்றி. துறை சார் தகவல்களுக்காக காத்துக் கொண்டுள்ளேன். நன்றி.

நாஸியா said...

நன்றி, சகோதரி மலிக்கா, :) கூடிய சீக்கிரம் சமைக்கவும் செஞ்சுடலாம், இன்ஷா அல்லாஹ்!

யாசவி,

eMBA = Executive MBA வை கேட்கிறீர்கள் என்றால், நம் நாட்டில் உள்ள பல புகழ்பெற்ற கல்லூரிகளில் இந்த ஒரு வருட படிப்பை நடத்துகிறார்கள். MBA என்று மட்டும் இல்லாமல் மிகவும் specialised ஆனா சில படிப்புகளும் இந்த நிர்வாகத்துறையில் உண்டு. ISB Hyderabad, SP Jain, MDI Gurgaon போன்ற இடங்களில் படித்தால் வேலை வாய்ப்புகள் பிரகாசமாக அமையும்!

நீங்கள் online MBA பற்றி கேட்கிறீர்கள் என்றால், என்னை பொறுத்த வரையில் நாம் அறிவை வளர்த்துக்கொள்ள பயனுள்ளதாக இருக்குமே ஒழிய வேறெந்த வகையில் பயன் தருமா என்பதை பற்றி எனக்கு தெரியவில்லை..


பித்தனின் வாக்கு
:) ரொம்ப நன்றி.. இது வரைக்கும் தனியா நானே சமைக்கும்படியான சூழ்நிலை அமையல. அது தான்.. இறைவன் நாடினால் கூடிய விரைவில் கேப்ஷன மாத்திடறேன்

Mrs.Menagasathia said...

உங்க பதிவுகள் அனைத்தும் ரொம்ப உபயோகமானதா இருக்கு நாஸியா.

ஆதித்தன் said...

நாஸியா! என்ன அதுக்குள்ள தொடர்பதிவை முடிச்சிட்டீங்கள்? இன்னும் நிறைய எதிர்பார்த்தமே...!
இன்னும் நிறைய எழுதுங்கள்.

ஒரு HR manager ஆவதற்கு கட்டாயம் MBA-HR செய்து இருக்கவேண்டுமா? BSc.HumanResourceManagement செய்தால் போதாதா?

Organisational behavioursக்கும் HRM க்கும் உள்ள தொடர்பு என்ன?

மணிகண்டன் said...

***
ஒரு HR manager ஆவதற்கு கட்டாயம் MBA-HR செய்து இருக்கவேண்டுமா? BSc.HumanResourceManagement செய்தால் போதாதா?
***
ஆதித்தன்,

இந்தியாவில் உள்ள பல நிறுவனங்களில் ஒரு நல்ல HR manager ஆவதற்கு நமக்கு இருக்கும் (தப்பித்தவறி இருந்துவிட்டால்) மூளையை ஒதுக்கிவைத்துவிட்டு வேலை செய்ய தெரிந்திருக்க வேண்டும். அவ்வளவு தான் :)-

நாஸியா - உங்களின் அனைத்து இடுகையும் படித்தேன். யூஸ்புல்லான விஷயம். அடிக்கடி எழுதுங்க.

நாஸியா said...

ரொம்ப ரொம்ப நன்றி, Mrs. Menagasathia. :)

ஆதித்தன்.. இன்னும் நிறைய இருக்கு தான்.. அப்பபோ அதெல்லாம் தனி தனி பதிவா போடுறேன்.. இறைவன் நாடினால்... உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றி! :)

\\ஒரு HR manager ஆவதற்கு கட்டாயம் MBA-HR செய்து இருக்கவேண்டுமா? BSc.HumanResourceManagement செய்தால் போதாதா?\\

MBA படிப்பு ஒரு passport மாதிரி... நீங்க MBA HR படித்தால் ஓரளவுக்கு நல்ல சம்பளத்துடன் நல்ல profile விரைவில் கிடைக்கும். BSc படித்தால் அதை அடைவதற்கு கொஞ்ச காலம் எடுக்கலாம்.. மேற்படிப்பு என்பது ஒரு கூடுதல் சிறப்பு-added advantage அவ்வளவே..

\\Organisational behavioursக்கும் HRM க்கும் உள்ள தொடர்பு என்ன?\\

முதலில் ஒரு விஷயம்- எனக்கு HR பற்றி ஓரளவுக்கு தான் தெரியும்.முதல் வருடம் மட்டுமே படித்தேன், அதிலும் சொற்பமாகவே .. தெரிந்ததை வைத்து சொல்கிறேன்.. OB என்றதும் எனக்கு என் முதல் வருட வகுப்புகள் நினைவுக்கு வருகின்றன.. மக்கள் தனியாகவும் குழுவாகவும் எப்படி ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள் என்பதை படிப்பதே OB. அதில் பெரும்பாலும் சைக்காலஜி போன்று தோற்றமளிக்கும் பாடங்கள் இருக்கும்..பல framework, models, theories and concepts அடங்கியது. அதில் எனக்கு நன்றாக நினைவிருப்பது Maslow's Theory, Theory X,Y thaan..

HRM practical ஆன பாடம். ஒரு நிறுவதில் HR சம்பத்தப்பட்ட வேலைகளை விளக்குவது.. அந்த நிறுவனத்திற்கு தேவையான ஆட்களை தேர்வு செய்வது முதல் அவர்கள் வேலை சம்பத்தப்பட்ட நிர்வாகம் அனைத்தையும் கவனித்துக்கொள்ளுதல் வரை படிப்பது..

நன்றி மணிகண்டன்.. :) நல்லவேளை நான் HR இல்லப்பா! தப்பிச்சேன்.. ஹீ ஹீ..

ஆதித்தன் said...

மணி! மூளைய ஒதுக்கி வைக்கவேணுமா? ஹிஹி
அப்ப மூளைய பாவிக்கவேதேவையில்லை. ரொம்ப நல்லவேலையா இருக்குதே!

நாஸி! உங்கள் பதிவுகளைப்போலவே பதில்களும் மிகுந்த பயனுள்ளதாய் இருக்கின்றன. மிக்க நன்றி.

பீர் | Peer said...

//உங்களின் அனைத்து இடுகையும் படித்தேன். யூஸ்புல்லான விஷயம். அடிக்கடி எழுதுங்க.//

மணி, இப்ப ஒரு யூஸ்புல்லான விஷயம் எழுதியிருக்காங்க. வந்து படிங்க. :)

(அடப்பாவமே, யூஸ்புல்லா எழுதுறீங்கன்னு சொன்னது ஒரு குத்தமா?)

SK said...

Hi

We have plans to collect all possible higher studies informatino in one blog. If you would like to contribute, please write me in this email address

friends.sk@gmail.com

Will write you back in details.
SK

SK said...

http://enippadigal.blogspot.com/

This is where we are writing already..

நாஸியா said...

நன்றி ஆதித்தன்!

பீர் | Peer said... மணி, இப்ப ஒரு யூஸ்புல்லான விஷயம் எழுதியிருக்காங்க. வந்து படிங்க. :)

எனக்கு வெளம்பரம் புடிக்காது பாருங்க! ;)

Thanks for the invite SK, will mail you soon. I will be very happy to contribute!

வடுவூர் குமார் said...

நாஸியா
MBA மாத்திரம் அல்ல பல Engg. கல்லூரிகளின் தரமும் சொல்லிக்கொடுக்கும் தரமும் நன்றாக இல்லை.அரசாங்கத்தின் கெடுபிடி அதிகமானத்தான் ஏதாவது செய்யமுடியும்.

நாஸியா said...

\\வடுவூர் குமார் said...
நாஸியா
MBA மாத்திரம் அல்ல பல Engg. கல்லூரிகளின் தரமும் சொல்லிக்கொடுக்கும் தரமும் நன்றாக இல்லை.அரசாங்கத்தின் கெடுபிடி அதிகமானத்தான் ஏதாவது செய்யமுடியும்.\\

அதுவும் சரிதான்.. அப்படி பார்த்தல் நம் நாட்டில் உள்ள பல பள்ளி, கல்லூரிகளின் தரம் கொஞ்சம் கூட சரியில்லை.. ஓரளவுக்கு விவரமுடன் இருந்தால் கூட இப்படிப்பட்ட ஏமாற்றுக்காரர்களிடம் இருந்து தப்பிப்பது கடினமாகத்தான் உள்ளது..

UNIVERSAL said...

Dear Naziya,

Recently i visit your blog & i get enormous details about the MBA Studies.

Actually i have completed B.Sc Bio-chemistry & Now i am working in Riyadh with an ISP as a Sales CO-Ordniator.

I am interested to study MBA (Shipping & Logistics) So My query is any college providing this course?

If you know please provide the details.

I appreciate your efforts by providing the valuable info via blog.

Thanks,

Shahul @ +966 568 200 276

நாஸியா said...

Salam brother, thanks for your comments.

I just did some googling and found AMET Chennai offering the course you asked for. I don't know much but I remember my brothers' friend who did his UG there and got placed.

It appears to be a very specialised course, so do your research about the scope.. Whatever it is, if you really love the subject, you will excel no matter what!

All the best brother!

UNIVERSAL said...

Dear Sister,

Thanks for your feedback,I will check in google & get back to you.

Regard's,

Shahaul