Sunday, October 18, 2009

MBA படிக்க போறீங்களா? பாகம்-2

என் பதிவை நம்பி, படிச்சு, ஒட்டு போட்டு, கமெண்ட் எழுதி ஊக்குவிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!!! :) ரொம்பவே உற்சாகமா இருக்கு..அதே உற்சாகத்தோட இதோ இந்த பதிவும்.

முதலில் என்னென்ன specialisations இருக்குன்றத பார்ப்போம்.

1. Finance/நிதித்துறை: நிறைய பேர் விரும்பும் ஒரு துறை இது. பணம் சம்பதப்பட்டதாலயோ என்னமோ, தெரியல (என்னோடைய துறையும் இது தான்!). முதல்ல காமர்ஸ் அல்லது அக்கௌண்ட்ஸ் பின்னணி இருக்குறவங்களுக்கு தான் ஏற்றதுங்க்ற  மாதிரி இருக்கும், ஆனா முன்ன சொன்னது போல அப்படி கிடையாது. முதல் வருஷம் காமர்ஸ் படிச்சா எங்களைஎல்லாம் தலைவர்களா போட்டு இன்ஜினியரிங் போன்ற மத படிப்பு படிச்சவங்களுக்கு சொல்லி தர சொல்லுவாங்க. அப்போல்லாம் ரொம்ப பந்தாவா இருக்கும்.. எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான் அப்புறம் back to square one. :) உங்களுக்கு கணக்கு, வழக்கு, கணிதம், எல்லாம் ரொம்ப பிடிக்கும் என்றால் இது தான் உங்களுக்கு ஏற்ற கோர்ஸ். சோ, கலக்குங்க! வேலை வாய்ப்பு பொறுத்த வரைக்கும் நிறைய வழிகள் இருக்கு. நான் ரொம்ப விரிவா எழுதல, ஒரு ஐடியா தான்

  •     Equity Research Companies : நான் இருக்குற துறை, இதை பத்தி விரிவா இன்னொரு நாள் சொல்றேன். நிறைய ஆர்வமுள்ளவர்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு துறை இது.. ரொம்ப எளிதா சொல்லனும்னா, investment banks, hedge funds, banks போன்ற நிறுவனங்களுக்கு அவங்களு ஏற்ற வகைல business/finance சம்பத்தப்பட்ட ஆராய்ச்சி பண்ணி குடுக்கறது. நல்ல சம்பளம் கிடைக்கும், ஆனா வேலை பளு அதிகமா இருக்கும். Irevna, City Analyitcs, போன்ற நிறுவனங்கள் இந்த வேலைவாய்ப்பை அளிக்குது
  • Banks: இதை பத்தி சொல்லவே வேண்டாம். ஒவ்வொருத்தருடைய அனுபவம் மற்றும் தகுதிக்கு ஏற்றவாறு வேலை கிடைக்கும். நிறைய பேர்  விரும்பறது risk management, risk analysis, போன்ற துறைகளை
  • Investment Banks: Goldman Sachs, JP Morgan போன்ற நிறுவனங்கள் தான் முக்கால்வாசி MBA க்களின் கனவு. சம்பளம் சும்மா superaa குடுப்பாங்க. அங்க முதல்ல trainee ஆக போயி, கொஞ்சம் கொஞ்சமா முன்னேறலாம்.
  • Consultants: Ernst & Young, McKinsey, PWC போன்ற பிக் 4 கம்பனிகளும் உங்களுக்கு வேலை வாய்ப்பு தரலாம். 
  • IT/Software: இதையும் யாரு விட்டு வைப்பார்? பொதுவா நிதி சம்பத்தப்பட்ட மென்பொருள் செய்யும் நிறுவனங்கள் MBA Finance படிச்சவங்களை Business Analyst ஆ எடுப்பாங்க.  இன்போசிஸ் தன்னுடைய finacle மென்பொருளுக்காக MBA finance படிச்சவங்களை எடுப்பாங்க. அதே போல ERP, SAP போன்ற துறைகளிலும் நல்ல வேலை வாய்ப்பு இருக்கு
இது போக மற்ற நிறுவனங்களிலும் நிறைய வேலை வாய்ப்பு இருக்கு. Manufacturing companies எனப்படும் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்கள் எல்லாம் தங்களுடைய நிதி நிர்வாகதுக்காகவும் உங்களை தேர்ந்தெடுக்கலாம்

2.Marketing: எனக்கு தெரிஞ்சு எங்க கல்லூரியில உள்ள mechanical engineers எல்லாரும் விரும்பி எடுத்த துறை இது. நிறைய பேருக்கு விற்ப்பனை பிரிவில் சேர்ந்து பெரிய ஆளாகிடனும்னு ஆர்வம் இருக்கும். எங்க வகுப்பில் ஒரு தடவை ஒரு ஆசிரியர் சொன்னார், நிறைய நிறுவனங்களோட மேலிடத்துல இருப்பவர்கள் (CEO) எல்லாம் விற்ப்பனை பிரிவில் தான் முதலில் தொடங்கினார்கள் என்று. அங்க தான் ஒரு நிறுவனத்தோட நுணுக்கங்களை எல்லாம் நேரடியான மக்கள் தொடர்பின் மூலமா தெரிஞ்சுக்க முடியும்.. என்ன தான் நிதித்துறை எடுத்த பணம் சம்பாதிக்கலாம் என்றாலும் ஒரு தொழிலின் இண்டு இடுக்கெல்லாம் தெரிய வைக்குற துறை இது தான். 

  • Sales Profile: பலதரப்பட்ட நிறுவனங்களில் அவர்களுடைய தயாரிப்பை (product & services ) மக்களிடம் கொண்டு சேர்க்கும் வேலை. இது நீங்க ஒரு சிமெண்ட் நிறுவனதுளையும் வேலை செய்யலாம், ஒரு வங்கியில் அதனுடைய கடன் வசதிகளை விற்கும் பிரதிநிதியாகவும் ஆகலாம். நல்ல வேலை செஞ்சா குறுகிய காலத்துல பல சிகரங்களை தொடலாம்
  • Brand Management: ஒரு பொருளின் பெயர், அது சம்பம்தம்பட்ட  நிறம், லோகோ, போன்ற எல்லாத்தையும் நிர்வாகம் செய்யும் வேலை. அதாவது Britannia Biscuits என்று சொன்னால் உங்களுக்கு என்னவெல்லாம் நினைவுக்கு வருதோ அதெல்லாம் உருவாக்குற வேலை. ரொம்ப exciting ஆனா துறை இது
  • Statiscal/Marketing Research: இது கணிதம் ரொம்ம்ம்ம்ப பிடிச்சவங்களுக்கு. எப்பவுமே மார்க்கெட்டிங்க  பொறுத்தவரை ஆராய்ச்சி பண்றது ரொம்ப முக்கியம்.. அதை சார்ந்த நிறுவனங்கள் அளிக்கும் வேலை. AC Nielsen, Dexterity போன்ற நிறுவனங்கள் வேலை கொடுக்கலாம்
3. Human Resources: ஒரு நிறுவனத்துல ஆட்களை எடுப்பது, அவர்களுக்குரிய சம்பளம், ஊக்கத்தை நிர்வாகம் செய்வது, அவர்களுக்கு பயிற்சி வகுப்புகளை எடுப்பது போன்ற வேலை. படிப்ப பொறுத்த வரைக்கும் கொஞ்சம் சைகொலோஜி எல்லாம் இருக்குற மாதிரி இருக்கும். உங்களுக்கு மனிதர்களையும், அவர்களை படிப்பதிலும் விருப்பம் இருக்குமாயின்  இது தான் உங்களுக்கு ஏற்ற துறை. எல்லாவிதமான நிறுவனங்களிலும் உங்களுக்கு வேலை வாய்ப்புள்ளது.

4. Systems: நமக்கு கொஞ்சம் கூட ஒத்துவராத படிப்பு. அதனால மேலோட்டமா சொல்லிடறேன். நாம ப்ரோக்ராம் எல்லாம் எழுத போறதில்ல, ஆனா consultant ஆ   போகலாம். வேலை வாய்ப்பை பற்றி சொல்லவே வேண்டம், இருக்கவே இருக்கு ஏகப்பட்ட IT  நிறுவனங்கள்

முதல் இரண்டு துறைகளான Finance & Marketing தான் என்னடைய துறை.. அதனால கொஞ்சம் அதிகம் தகவல்களை கொடுத்துள்ளேன்.. ஹீ ஹீ..

அப்புறம் நிறைய கல்லூரிகள்ல dual specialisation எனப்படும் இரட்டை துறைகளை தேர்ந்தேடுக்கலாம். நிறைய இன்ஜினியரிங் படிச்சவங்க finance/marketing பிடிக்காம safe ஆ systems/HR போய்டுவாங்க. அதே போல நிறைய Commerce/Accounts படிச்சவங்ககூட ஏகப்பட்ட Maths இருக்குறத பாத்துட்டு finance எ வேணாம்னு முடிவு பண்ணிடுவாங்க. அப்படி எல்லாம் இல்லாம, நமக்கு எந்த துறைய எடுத்தா சரியா வரும் என்கிறத  முடிவு செஞ்சுட்டு மறு வேலைய பாக்கணும்.

என்ன எந்த துறைன்னு முடிவு செஞ்சாச்சா? தமிழ் நாட்டில் உள்ள புகழ் பெற்ற MBA கல்லூரிகளை பற்றி அடுத்த பதிவில் பார்போம்! இன்ஷா அல்லாஹ்!

16 comments:

S.A. நவாஸுதீன் said...

நிரைய பேருக்கு உபயோகப் படக்கூடிய வகையில் இந்த இடுகை அமைந்துள்ளது. பாராட்டுக்கள்

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

சவூதி அரேபியாவில் IGNOU இருக்குங்க, ஆனா ஒரு யூனிட்டுக்கு 250 டாலர் ஃபீஸ், அடுத்தது Sikkim Manipal University, கோர்ஸ் பீஸ் 12,000 ரியால்கள் வரை ஆகும், கடின உழைப்பு தேவை. ஈசியா படிக்கனும்னா ஆன்லைன் இல்லாட்டி டிஸ்டன்ஸ் லேர்னிங்க்தான் பெஸ்ட்!!

எம்.எம்.அப்துல்லா said...

நானும் எம்.பி.ஏ., பைனான்ஸ்தான் :)


//எனக்கு தெரிஞ்சு எங்க கல்லூரியில உள்ள mechanical engineers எல்லாரும் விரும்பி எடுத்த துறை இது. நிறைய பேருக்கு விற்ப்பனை பிரிவில் சேர்ந்து பெரிய ஆளாகிடனும்னு ஆர்வம் இருக்கும். எங்க வகுப்பில் ஒரு தடவை ஒரு ஆசிரியர் சொன்னார், நிறைய நிறுவனங்களோட மேலிடத்துல இருப்பவர்கள் (CEO) எல்லாம் விற்ப்பனை பிரிவில் தான் முதலில் தொடங்கினார்கள் என்று. அங்க தான் ஒரு நிறுவனத்தோட நுணுக்கங்களை எல்லாம் நேரடியான மக்கள் தொடர்பின் மூலமா தெரிஞ்சுக்க முடியும்.. என்ன தான் நிதித்துறை எடுத்த பணம் சம்பாதிக்கலாம் என்றாலும் ஒரு தொழிலின் இண்டு இடுக்கெல்லாம் தெரிய வைக்குற துறை இது தான் //


இல்லை நாஸியா. நான் இப்பொது டைரக்டராக பிரமோட் ஆகிவிட்டேன். முதலில் சேர்ந்தது இண்டர்னல் ஆடிட்டராக. அப்போது என் துறை மட்டும் இல்லாமல் கம்பெனியில் பிற துறைகளிலும் என்ன நடக்குதுன்னு ஆர்வமா பார்த்துக்கிட்டே இருப்பேன். ஒருமுறை இம்போர்ட் டிப்பார்மெண்ட் மேனஜர் வேலையை விட்டு நின்ற போது புதிதாக சரியான நபரை தேர்ந்தெடுக்க முடியாமல் நிறுவனம் தினறிய நேரத்தில் நான் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். அதுதான் இந்த 9 வருடத்தில் என்னை டைரக்டர் அளவிற்கு உயர்த்தி உள்ளது. நீங்க என்ன ஸ்பெசியலைசேஷன் எடுத்தாலும் சரி. ஆர்வம் மட்டுமே உங்களை உயர்த்தும் :)

நாஸியா said...

nandri, S.A. நவாஸுதீன், :)

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said... \\சவூதி அரேபியாவில் IGNOU இருக்குங்க, ஆனா ஒரு யூனிட்டுக்கு 250 டாலர் ஃபீஸ், அடுத்தது Sikkim Manipal University, கோர்ஸ் பீஸ் 12,000 ரியால்கள் வரை ஆகும், கடின உழைப்பு தேவை. \\

யப்பா! ரொம்ப காஸ்ட்லி தான் போல!

\\ஈசியா படிக்கனும்னா ஆன்லைன் இல்லாட்டி டிஸ்டன்ஸ் லேர்னிங்க்தான் பெஸ்ட்!!\\

கண்டிப்பா.. :)

எம்.எம்.அப்துல்லா said...
நானும் எம்.பி.ஏ., பைனான்ஸ்தான் :)

சூப்பர்! அப்போ எதாச்சும் டவுட் இருந்தா ungala கேட்டுக்கலாம்!

\\இல்லை நாஸியா. நான் இப்பொது டைரக்டராக பிரமோட் ஆகிவிட்டேன். முதலில் சேர்ந்தது இண்டர்னல் ஆடிட்டராக. அப்போது என் துறை மட்டும் இல்லாமல் கம்பெனியில் பிற துறைகளிலும் என்ன நடக்குதுன்னு ஆர்வமா பார்த்துக்கிட்டே இருப்பேன். ஒருமுறை இம்போர்ட் டிப்பார்மெண்ட் மேனஜர் வேலையை விட்டு நின்ற போது புதிதாக சரியான நபரை தேர்ந்தெடுக்க முடியாமல் நிறுவனம் தினறிய நேரத்தில் நான் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். அதுதான் இந்த 9 வருடத்தில் என்னை டைரக்டர் அளவிற்கு உயர்த்தி உள்ளது.\\

மாஷா அல்லாஹ், நீங்க இவ்வளவு சீக்கிரம் ப்ரொமோட் ஆனதற்கு வாழ்த்துக்கள் சகோதரரே!

\\நீங்க என்ன ஸ்பெசியலைசேஷன் எடுத்தாலும் சரி. ஆர்வம் மட்டுமே உங்களை உயர்த்தும் \\

கண்டிப்பாக! இதுல மாற்றுக்கருத்து இல்லை... மார்க்கெட்டிங் என்று வரும்போது அந்த துறைய பற்றின சிறப்ப பற்றி சொன்னேன், அவ்வளவு தான் . நான் B Schools பற்றி எழுதும்போதே சொல்லிவிட்டேன் இதெல்லாம் just a பாஸ்போர்ட்... அதுக்கப்புறம் உயரங்களை தொடுறது அவரவர் திறமையில் தான் இருக்கு!

ஆதித்தன் said...

நல்லா விளங்கப்படுத்தி இருக்கிறீங்கள்! நன்றி!
Human Resources பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக எழுத முடியுமா? அதன் வேலை வாய்ப்புகள் எப்படி?

எம்.எம்.அப்துல்லா said...

//Human Resources பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக எழுத முடியுமா? அதன் வேலை வாய்ப்புகள் எப்படி? //


ஆதித்யன் அண்ணே,

ஹூமன் ரிசோர்ஸ்ல வேலைவாய்ப்பு என்பது மற்ற பிரிவுகளை ஒப்பிடும்போது சற்றே குறைவு. உதாரணமாக ஒரு நிறுவனத்தின் விற்பனைப் பிரிவில் சென்னை,திருச்சி,மதுரை,கோவை என ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு விற்பனைப் பிரதிநிதி தேவைப்படுவார்.இதுவே தேசிய அளவிலான நிறுவனம் எனும்போது மாநில அளவில் விரியும். அதேபோல்தான் ஒரு நிறுவனத்தின் நிதி நிர்வாகப்பிரிவில் ஹெட் ஆபிஸ்,ரீஜனல் ஆபிஸ்,பிராஞ்ச் ஆபிஸ் என பல இடங்களில் பலரும் பனியில் இருப்பர். ஆனால் ஹூமன் ரிசோர்ஸ் பிரிவில் பணியாளர்களின் தேவை என்பது எண்ணிக்கை அளவில் மிகவும் கம்மி.இன்னும் சொல்லப்போனால் ஓரிருவர் மட்டுமே தேவைப் படுவர். அதுமட்டுமின்றி பெரும் நிறுவனங்களில் மட்டுமே அந்தத் துறையும் இருக்கும். மீடியம் சைஸ் கம்பெனியில் பெரும்பாலும் பணியாளர்களின் பேரோல் போன்ற விஷயத்தை நிதிப் பிரிவில் இருக்கும் ஒரு பணியாளரே செய்துவிடுவர். ஆனால் உங்களுக்கு உண்மையிலேயே அதில் ஆர்வம் இருக்கும்பட்சத்தில் சுயமாக தொழில் செய்து கூட சிகரம் தொடலாம். அதாவது நிறுவனங்களின் பனியாளர்களுக்கு டிரெய்னிங் வழங்குவது, கன்சல்டண்ட்டாக பணிபுரிவது..இதுபோன்று. நம்முடைய பதிவர்களில் ஒருவரான அண்ணன் சுரேகா அவர்கள் இதற்கு சரியான உதாரணம்.இன்றைக்கு தமிழகத்தில் பெரும் நிறுவனங்கள் விரும்பும் டிரெய்னர்களில் அவரும் ஒருவர். அவர் எந்த நிறுவனத்திலும் ஹெச்.ஆர். டிப்பார்ட்மெண்டில் பணிபுரியாதவர்.

நான் சாதாரண சென்னை பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவன்.நீங்க நாசியாவிடம் கேட்ட கேள்விக்கு ஒரு ஆர்வக் கோளாறில் நான் அறிந்த விஷயங்களைச் சொல்லி விட்டேன்.ஆனால் இந்தியாவின் சிறந்த நிறுவனங்களில் ஒன்றான பிம்-ல் பட்டம் பெற்ற சகோதரி நாஸியாவால் உங்களுக்கு மேலும் தகவல்களை வழங்க முடியும்

பிரியமுடன்...வசந்த் said...

//சமைக்க தான் முடியல, எழுதவாச்சும் செய்யலாமே//

ஹ ஹ ஹா

பிரியமுடன்...வசந்த் said...

//Finance & Marketing //

இங்கே இதுதான் அவசியமான கருத்துக்கள்

தொடர்ச்சியா சொல்லுங்க...

நாஸியா said...

ஆதித்தன் said...
நல்லா விளங்கப்படுத்தி இருக்கிறீங்கள்! நன்றி!
Human Resources பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக எழுத முடியுமா? அதன் வேலை வாய்ப்புகள் எப்படி?

சகோதரர் அப்துல்லாஹ் கூறியபடி HR துறையில் வேலை வாய்ப்புகள் என்பது சற்றே குறைவு தான்.. நான் ஒரு சிறிய நிறுவனத்தில் பணி புரிகிறேன், இங்கு தனியாக HR என்று யாரும் கிடையாது. so that sort of explains the scope. இருந்தாலும் மென்பொருள் நிறுவனங்களிலும், வங்கிகளிலும் ஓரளவுக்கு நல்ல வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன. மேலும் ஒரு நிறுவனம் தனக்கு வேலை செய்பவர்களை வெறும் பணியாட்களாக எண்ணாமல் அவர்களை ஒரு resource ஆக கருதும் பாங்கு கொஞ்சம் கொஞ்சமாக பெருகி வருவதால் இந்த துரையின் வளர்ச்சியை பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை.

SAP இல் கூட HR module இருக்கின்றது. Recruiting, Training and Development, Workflow Management, Talent Management, Knowledge Management போன்ற பல சுவாரஸ்யமான உட்பிரிவுகளைக்கொண்டது HR.

HR தான் என்று முடிவெடுத்த பின் நீங்கள் அவசியம் கவனிக்க வேண்டியது, எந்த கல்லூரியில் சேர போகிறீர்கள் என்று. சில கல்லூரிகள் HR துறைக்கு மிகவும் பிரபலமானவை. அவற்றை தேர்ந்தெடுத்தீர்கள் என்றால் உங்களுக்கு வேலை வாய்ப்புகள் சற்றே அதிகமாக இருக்கும். இதை ஏன் சொல்கிறேன் என்றால் என்ன தான் ஒரு கல்லூரி புகழ்பெற்றதாக இருந்தாலும் அங்கே மிக குறைந்தவர்களே ஒரு குறிப்பிட்ட துறையை எடுத்திருந்தார்கள் என்றால் அங்கிருந்து நாம் விரும்பும் வேலை campus placements மூலம் கிடைப்பது கடினம். இந்தியாவை பொறுத்தவரை IIM Kolkatta, XLRI போன்றவை HR க்கு மிகவும் புகழ்பெற்றவை..

நாஸியா said...

எம்.எம்.அப்துல்லா said...
\\நான் சாதாரண சென்னை பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவன்.நீங்க நாசியாவிடம் கேட்ட கேள்விக்கு ஒரு ஆர்வக் கோளாறில் நான் அறிந்த விஷயங்களைச் சொல்லி விட்டேன்.ஆனால் இந்தியாவின் சிறந்த நிறுவனங்களில் ஒன்றான பிம்-ல் பட்டம் பெற்ற சகோதரி நாஸியாவால் உங்களுக்கு மேலும் தகவல்களை வழங்க முடியும்\\

படிப்பறிவை விட அனுபவ அறிவே சிறந்தது! அப்படி பார்த்தால் உங்கள் முன்னால் நான் கத்துக்குட்டி தான்.. தயவு செய்து உங்களுக்கு தெரிந்த தகவல்களை தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள்! இதற்க்கு என் வலைத்தளம் ஒரு platform ஆக உள்ளதில் மகழ்ச்சி கொள்கிறேன்!

------

நன்றி, சகோதரர் பிரியமுடன்...வசந்த் அவர்களே! தொடர்ந்து எழுதுவோம்! இறைவன் நாடினால்!

பித்தனின் வாக்கு said...

நஸியா நானும் ஃபைனான்ஸ் தான் எம்காம் & எம் பி ஏ.(கரஸ்--- பர்ஸ்ட் கிளாஸ்) நான் சென்னையில ஒரு உற்பத்தி துறை கம்பனியில் பாக்ட்ரி இளனிலை எக்ஸிகியுட்டிவா சேர்ந்தேன். பர்ச்சேஸ், சேல்ஸ், சென்ரல் எக்சைஸ்,சேல்ஸ் டாக்ஸ் பார்த்துக்கொண்டு இருந்தேன். அங்க பாக்ட்ரி அக்கவுண்ட்ஸ் மேனஜர் வரை மூன்று ஆண்டுகளில் உயர்ந்த என்னை அந்த கம்பனி என்னை சிங்கபூருக்கு அனுப்பி வைத்து இங்கு என்னை ஒரு டைரக்டர் ஆக ஒருஆண்டில் புரமேட் செய்தனர். ஆனாலும் எனக்கு டாலி மட்டும் தெரியும். எனக்கு பண்ட்ஸ் மற்றும் வைப்பு அல்லது பங்கு நிதிமேலான்மை பற்றித் தெரியாது. ஆதலால் தாங்கள் கட்டுரையாக எழுதினால் என்னைப் போன்றவர்களுக்கு வசதியாக இருக்கும். நன்றி சகோதரி.

Mrs.Menagasathia said...

உங்க பதிவுகள் அனைத்தும் பயனுள்ளவைகளாக இருக்கு நாஸியா.பாராட்டுக்கள்!!

நாஸியா said...

@பித்தனின் வாக்கு

உங்கள் அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டமைக்கு நன்றி, சகோதரரே! கூடிய விரைவில் என் துறை சார்ந்த பதிவுகளை போடுகிறேன், இறைவன் நாடினால்! தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள்!

@ Mrs. Menagasathia,

ரொம்ப, ரொம்ப நன்றி!! உங்கள் வலைத்தளம் தான் எனக்கு ரொம்ப உதவி செய்ய போகுது.. நீங்க போஸ்ட் பண்ணி இருக்குறதுல பாதி உருப்படியா செஞ்சாலே நான் சமையல் கத்துகிட்ட மாதிரி !

Anonymous said...

நாஸியா, நானும் MBA எனப்படும் வணிக மேலாண்மை படிப்புக்காக பல பிரயத்தனங்களை எடுத்துக்கொண்டு இருக்கிறேன்.தங்களின் மின்னஞ்சல் முகவரியை இங்கு பகிர முடியுமா?

ஆதித்தன் said...

அப்துல்லா, நாஸியா! நல்ல தகவல்கள் தந்தீர்கள்! மிக்க நன்றி!
நாஸி! உங்கள் வலைப்பதிவு பிளட்பார்மா இருப்பது உங்களை விட எங்களுக்குத்தான் அதிக மகிழ்ச்சி.
தொடரட்டும் உங்கள் பணி!
பாகம் -3 க்காக காத்திருக்கிறேன்.

நாஸியா said...

adaleru,

தங்கள் வருகைக்கு நன்றி.. என் மின்னஞ்சல் முகவரி: naaziablogger@gmail.com

ஆதித்தன்,

விரைவில் மூன்றாம் பாகத்தை வெளியிடுகிறேன்! ஆதரவுக்கு நன்றி!