Friday, October 23, 2009

வீராசாமி-The Man of Action!!

என்ன முழிக்கிறீங்க? எல்லாரும் எந்திரன்  படத்துக்கே விமர்சனம் எழுத தொடங்கிட்டதுக்கு அப்புறம் ரெண்டரை வருடம் முன்ன வந்த வீராசாமிய பத்தி இப்ப எழுத வாரேன்னு தானே?

அப்படி சாதரணமா விட்டுட முடியுமா? அந்த படத்தையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த நாளையும்? அது எந்த நாளுன்னு கேக்குறிங்களா? அது தான் நாங்க மூணு பேரு திருச்சி ரம்பா ஊர்வசி திரையரங்கத்துல தலைவர் படத்த பார்த்த நாளு!

ஹ்ம்ம்..நிறைய பேருக்கு நான்னா, TR நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு நான் அவர் ரசிகை.. ஆமாங்க..நம்புங்க.. அவரு படத்துல அவரு உதிர்த்த முத்துக்களை எல்லாம் சேகரிச்சு நிஜ வாழ்கையில பாவிக்கிற ஆளு நான்! எப்படின்னு யோசிக்கிறீங்களா? நல்லா யோசிங்க, அதை அப்புறமா இன்னொரு நாள் பொறுமையா போடுறேன்.. (பின்ன பதிவெழுத மேட்டர் வேணாமா?)

அப்படிப்பட்ட தலைவர் ரசிகையாகிய நான், அவரு படம் தியேட்டர்ல வரும்போது பார்க்காம சும்மா விடுவேனா?? ரம்பா ஊர்வசியில ஓடுதுன்னு தெரிஞ்சதும் முதல் வேலையா கிளாஸ்ஸ பங்க் பண்ணிட்டு நானும் கோகியும் ஸ்கூட்டிய BHEL ஸ்டாண்ட்ல விட்டுட்டு சத்ரதுக்கு பஸ் ஏறிட்டோம்.. அங்க ஒரு வேலை முடிஞ்சதும் Femina Shopping Mall (ஆமாங்க, அது தான் திருச்சியோட சிட்டி சென்டெர்.. எங்களுக்கு நல்லா பொழுது போகும்) போயிட்டு காயுக்கு போன் அடிச்சோம்.. அவ கெளம்பி வாரேன்னு சொன்னதும், அதுக்குள்ள லஞ்ச் சாப்டுட்டு பஸ் ஸ்டாண்ட்ல அவ வந்ததும் தியேட்டருக்கு நடக்க ஆரம்பிச்சோம்.. போற வழியில டிக்கெட் முன்பதிவு செய்யலையே, ஹவுஸ் புல் ஆகிடுமோன்னு ஒரே கவலை... அட உண்மையத்தாங்க சொல்றேன்..

அங்க வேர்த்து விறுவிறுத்து ஒரு வழியா போனா டிக்கெட் ஈசியா கிடைச்சிட்டு.. இருந்தாலும் நல்லா கூட்டம்..பின்ன தலைவர் படமாச்சே.. அங்கல்லாம் இங்க மாதிரி டிக்கெட் நம்பர் கிடையாது.. எங்க வேணும்னாலும் உட்காரலாம்.. அப்படி எங்க இருக்கலாம்னு யோசிச்சிட்டு இருந்தப்போ ரெண்டு பேரு பேசிட்டே வாராங்க:  "டேய் வடிவேல் படம் பாக்குற மாதிரி ஒரே காமெடியா   இருக்கும்டா, டைம் போறதே தெரியாது" ன்னு சொல்லிட்டே அவங்க சீட்ட தேட ஆரம்பிச்சுட்டாங்க.. சரி தலைவருக்கு இவ்வளவு கூட்டம் வருதேன்னு சந்தோஷமா ஸ்டார்டிங் சீன போட்டான் பாருங்க.....

அப்படி ஒரு சர வெடி..ரவுடி பசங்களெல்லாம் கலாட்டா  பண்ண, அவங்கள அடிக்கிறதுக்கு அப்படியே ஒரு குடிசைக்குள்ள இருந்து வர்றார்: அப்படியே வெடிக்குது அந்த குடிசை... அந்த பைட் சீனுக்கு அப்புறம் என்ன இருக்கணும்? சரியா சொன்னா படத்துல அவரு பயன்படுத்தின சீப்பு உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்..

எல்லாரும் சரியா சொல்லிட்டீங்க.. உங்க வாசகதவ யாராச்சும் தட்டினா குரியர் காரரா இருக்கும். பொய் கையெழுத்து போட்டுட்டு சீப்ப வாங்கிக்கோங்க.

அந்த தங்கச்சி செண்டிமெண்ட் சீனுல தங்கச்சி ஜீன்ஸ் பேன்ட் வாங்கிக்கேட்டதும்  தலைவர் கண்கலங்கி திரும்பி பார்ப்பார் பாருங்க, அதுல தியேட்டரே சும்மா அதிர்ந்துதுங்க... அப்புறம் ஒரு டயலாக் விடுவார் "ஏம்மா, நம்மள வளர்த்தது ஒரு இட்லிகட ஆயா, அதனால நாம ஜீன்ஸ் எல்லாம் போடா கூடாதும்மா".. இப்படி ஒரு சமூக நீதிய நம்ம தலைவர தவிர வேற யாராச்சும் யோசிக்க முடியுமா?

அப்புறம் படத்தோட ஹீரோயின் மும்தாஸ்.. அவங்களுக்கு ரொம்ப வித்தியாசமான வேடம்னு டைட்டில்ல போட்டாங்க.. என்ன வித்தியாசமான நடிப்பு தெரியுமா அது? மும்தாசுக்கு வில்லனோட கல்யாணம் ஆயிட்டதுக்கு அப்புறம் தலைவர் எப்படிலாமோ பீல் பண்ணுவாரு.. அதுல முக்கியமானது: ஒரு நாள் தலைவர் தாடிய சீவுன சீப்பை அந்தம்மா மறைச்சு வெச்சிகிட்டு விளையாடும், தலைவர் அத புடிங்கிப்பார்.. அப்புறம் அந்த சீப்பா பார்த்து அழுது, பீல் பண்ணி, திரும்பவும் தாடிய சீவிக்குவாரு... என்னமா பீலிங்க்ஸ் ஒப் இந்தியா பாத்திங்களா? By the way, அந்த சீப்பு தான் உங்களுக்கு பார்சல்ல வந்துருக்கும்..

கதை எப்படி எல்லாமோ போயி, கடைசில சொன்ன வாக்க காப்பத்த முடியலயேன்னு தலைவர் நாற்காலியில உட்கார்ந்த மாதிரியே மண்டைய போட்டுருவாரு.. அவ்வளவு தான் முடிஞ்சுதுன்னு எல்லாரும் எந்திக்க, கொஞ்ச நேரத்துல மும்தாசும் மண்டைய போட்டுருவாங்க..எல்லாரும் அப்படியே சிலிர்த்து, கை தட்ட ஆரம்பிச்சுட்டாங்க.. பின்ன எப்படியாப்பட்ட காவியம் இது!

மறு நாள் கொல்லெஜுக்கு வந்து எல்லார் கிட்டயும் படத்த பார்த்த பெருமையும், கூடவே 'அகில உலக TR ரசிகர் மன்ற MBA பிரிவு தலைவி' ங்கற பட்டத்தையும் வாங்கிகிட்டு சந்தோஷமா பொழுத கழிச்சேன்!

37 comments:

குப்பத்து ராசா said...

கோபம் எல்லாம் சரியடுச்சா ! ஏன் இந்த கொலை வெறி!!

//டேய் வடிவேல் படம் பாக்குற மாதிரி ஒரே கோமேட்யா இருக்கும்டா, டைம் போறதே தெரியாது" ன்னு சொல்லிட்டே அவங்க சீட்ட தேட ஆரம்பிச்சுட்டாங்க..//

Super

ஹுஸைனம்மா said...

ஏன் நாஸியா, நல்லாத்தானே இருந்தீங்க... இப்ப ஏன் இப்படி.. ஒண்ணும் பிரச்னையில்லையே..?

நாஸியா said...

குப்பத்து ராஜா அவர்களே, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

கொல வெறியா? இதுக்கே வா?

Hussainamma ... ஹீ. ஹீ.. பேஷா இருக்கேன்! :) இன்னும் நிறைய மொக்கை பதிவுகள் போடுறேன், அதை படிச்சு நீங்க மயக்கமாயிட கூடாது ;)

ப்ரியமுடன் வசந்த் said...

//ஹ்ம்ம்..நிறைய பேருக்கு நான்னா, TR நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு நான் அவர் ரசிகை.. //

அடியாத்தி...

ப்ரியமுடன் வசந்த் said...

அகில உலக TR ரசிகர் மன்ற MBA பிரிவு தலைவி' நாஸியா வாழ்க

சீப்ப ரிட்டர்ன் எடுத்துக்கோங்க...

பீர் | Peer said...

எச்சூச்மீ.. யக்கோவ்.. என்னா நடக்குது இங்க..

//இன்னும் நிறைய மொக்கை பதிவுகள் போடுறேன், அதை படிச்சு நீங்க மயக்கமாயிட கூடாது ;)//

ஒரு முடிவோடத்தான் கிளம்பி வந்திருக்கீங்களா? அவ்வ்வ்...

ப்ரியமுடன் வசந்த் said...

[_/_/_/_/_/_/_/_]

நீங்க அனுப்புன் சீப்புதானான்னு செக் பண்ணிக்கங்க

ஜெட்லி... said...

டி.ஆர் தலைவரா??

நான் எஸ்கேப்...

நாஸியா said...

வசந்த் அண்ணே, குடுத்ததை திருப்பி வாங்குற பழக்கம் எங்க தலைவருக்கு பிடிக்காதுண்ணே!

ஆமா பீர் காக்கா! ஒரு முடிவோட தான் வந்துருக்கேன்

என்ன ஜெட்லி சகோதரரே, வந்ததும் இப்படி ஓடுறிங்க? இதுக்கே இப்படியா?

*இயற்கை ராஜி* said...

visit

http://blogintamil.blogspot.com/2009/10/blog-post_23.html

to see the intro about your blog

Jaleela Kamal said...

//முதல் வேலையா கிளாஸ்ஸ பங்க் பண்ணிட்டு நானும் கோகியும் ஸ்கூட்டிய BHEL ஸ்டாண்ட்ல விட்டுட்டு சத்ரதுக்கு பஸ் ஏறிட்டோம்.. அங்க ஒரு வேலை முடிஞ்சதும் Femina Shopping Mall (ஆமாங்க, அது தான் திருச்சியோட சிட்டி சென்டெர்.. எங்களுக்கு நல்லா பொழுது போகும்) போயிட்டு காயுக்கு போன் அடிச்சோம்//

படம் விமர்சணம் எழுதற அளவிற்கெல்லாம் நமக்கு வராதுப்பா...

நீங்க முன்று பேரும் சேர்ந்து திருச்சிய கலக்கிட்டிங்க போல

நாஸியா said...

நன்றி, இயற்க்கை!

சகோதரி ஜலீலா, ஆமா.. அதெல்லாம் நினைச்ச ஏக்கமா இருக்கு.. ஆம்பள பசங்க எப்ப நினைச்சாலும் அவங்க நண்பர்கள சந்திசுக்கலாம்.. ஆனா நமக்கு பாருங்க கல்லூரியில இருந்து வெளிய வந்ததுமே எல்லாம் கட்.. அந்த நாளெல்லாம் நெனைச்சு பாத்தா ரொம்ப ஏக்கமா இருக்கு தெரியுமா. நாங்க எல்லாம் ஒவ்வொரு மூலையில இருக்கோம். இனி எதனை வருஷம் கழிச்சு பார்ப்போம்னு தெரியல! :(

S.A. நவாஸுதீன் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Unknown said...

ok super

jaye kumar - kuwait

SUFFIX said...

டி.ஆர் ரசிகர் மன்ற டி.டி.ஆர்!! ஓ.கே. ரைட்..ரைட்

நாஸியா said...

அழுவாதிங்க நவாஸுதீன் காக்கா!

ஆமா ஷபிக்ஸ் அண்ணே.. அதுல ரொம்ப பெருமை எனக்கு

நாஸியா said...

thanks Jaye

Elanthi said...

முடியல... அவ்வ்வ்வ்..........

ஆதித்தன் said...

ஸ்ஸ்ஸ்ஸ்! முடியல! உங்கட விமர்சனத்த வாசிக்கவே கண்ணக்கட்டுதே.....!! அப்ப படத்த பாத்திருந்தா... கோமா தான்!!!

சென்ஷி said...

//கதை எப்படி எல்லாமோ போயி, கடைசில சொன்ன வாக்க காப்பத்த முடியலயேன்னு தலைவர் நாற்காலியில உட்கார்ந்த மாதிரியே மண்டைய போட்டுருவாரு.. அவ்வளவு தான் முடிஞ்சுதுன்னு எல்லாரும் எந்திக்க, கொஞ்ச நேரத்துல மும்தாசும் மண்டைய போட்டுருவாங்க..எல்லாரும் அப்படியே சிலிர்த்து, கை தட்ட ஆரம்பிச்சுட்டாங்க..//

LOL :)))))))

நல்லவேளை... இந்தக் கொடுமையை நான் பார்க்கலை!

அன்புடன் மலிக்கா said...

நாஸியா நல்ல விமர்சமுங்க,
இப்படியே போனா நேர திருச்சி மெயிரோடு வந்துருமுல்ல

நாஸியா said...

ஆதித்தன், அப்ப யோசிச்சு பாருங்க, எவ்வளவு பெரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் அது! எவ்வளவு பெரிய சாதனை அது!

சென்ஷி, அது கொடுமை இல்லைங்க. எருமை, சாரி, பொறுமை! வாழ்கையில முக்கியமான ஒன்றான பொறுமைய கத்துக்கொடுத்தது நம்ம தலைவர் டி ஆர் தான்

மலீக்கா, நன்றி.. திருச்சி மெயின் ரோட்டுக்கு போனாலும் துபாய் பஸ் ஸ்டாண்ட்ல தான் பொய் முடியுது..

எம்.எம்.அப்துல்லா said...

//இன்னும் நிறைய மொக்கை பதிவுகள் போடுறேன், அதை படிச்சு நீங்க மயக்கமாயிட கூடாது ;)

//

உஸ்ஸ்ஸ்..யப்பா..இப்பவே கண்ணக்கட்டுதே!!!

:))

Prapa said...

உங்களது வேலைகளையெல்லாம் முடித்த பிறகு,,, ஆறுதலாக நம்ம வலைப்பக்கமும் வந்து பார்த்து ஏதாவது சொல்லிட்டு போனால் தானே ... எங்களுக்கும் இன்னும் ஏதாவது கிறுக்க ஆசை வரும்.... வாங்க எந்த நேரமும் வரலாம்.... கதவுகள் திறந்தே இருக்கும் என்று சொல்ல மாட்டன் ஏனென்றால் , நமக்கு கதவே கிடையாது...!!!

நாஸியா said...

என்ன அப்துல்லா காகா, இதுக்கே கண்ண காட்டுதுன்னு சொல்றிங்க ..

உங்களது வேலைகளையெல்லாம் முடித்த பிறகு,,, ஆறுதலாக நம்ம வலைப்பக்கமும் வந்து பார்த்து ஏதாவது சொல்லிட்டு போனால் தானே ... எங்களுக்கும் இன்னும் ஏதாவது கிறுக்க ஆசை வரும்.... வாங்க எந்த நேரமும் வரலாம்.... கதவுகள் திறந்தே இருக்கும் என்று சொல்ல மாட்டன் ஏனென்றால் , நமக்கு கதவே கிடையாது...!!!

சகோதரரே.. நானே இப்ப தான் எழுத ஆரம்பிச்சிருக்கேன்.. நீங்க பெரிய ஆளு.. கண்டிப்பா உங்க பதிவிற்கும் வாரேன்

Jaleela Kamal said...

ஆமாம் நாஸியா நீங்கள் சொவது சரி எல்லாத்துக்கும் பர்மிஷன், காரணம் சொல்ல வேண்டி வரும்,நானும் தொடர்ந்து ஓவ்வொரு வருடமும் என் தோழிகளை சந்திப்பது, அதுவும் ஒரு காலகட்டத்தில் எல்லாம் முடிந்து விட்டது.

பாத்திமா ஜொஹ்ரா said...

மரணத்தை நினைவில் கொள்ளுங்கள்,சினிமா போன்ற ஒரு தரம் கெட்ட மீடியா,அதில் வரும் நடிகன் உங்கள் தலைவர்,நவோதுபில்லாஹ்.அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டு,திருந்துவோம்.நல்ல விஷயங்கள் பற்றி எழுதுங்கள்,அல்லாஹ் நம்மை நரக படு குழியிலிருந்து காப்பானாக.ஆமீன்.

நாஸியா said...

ஜலீலா லாத்தா, இனி எங்கே தோழிகளை சந்திப்பது! பழைய நினைவுகள் ஒன்றே அந்த தோழமையை உயிர்ப்போடு வைத்திருக்கிறது..

பாத்திமா ஜொஹ்ரா

நீங்கள் சொல்வது சரிதான், சகோதரி .. வீண் விரயம் செய்பவர்களை அல்லாஹ் ஒரு போதும் நேசிக்க மாட்டான் என்று குரானில் அடிக்கடி வருகிறது.. அது போல பணத்தையும் நேரத்தையும் வீணடிக்கும் சினிமா போன்றவற்றை பார்ப்பதும் மட்டுமல்லாமல் எழுதுவதும் வீண் விரயம்தான்.. Jazakallah for your reminder.

ஆனால், நான் தலைவர் என்று சொன்னது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காகவே (i meant sarcasm) என்பதை நீங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன்...

மு'மீன்களுக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த மனித குலத்திற்ககே தலைவர் நபி முகம்மது (ஸல்) மட்டும்தான் :)

\\நல்ல விஷயங்கள் பற்றி எழுதுங்கள்,அல்லாஹ் நம்மை நரக படு குழியிலிருந்து காப்பானாக.ஆமீன்.\\

ஆமீன்,,

அஸ்ஸலாமு அலைக்கும் !

ஷாகுல் said...

படத்தில் ஒரு இடத்தில் உணர்ச்சி வசப்பப்ட்டு நான் மனுஷானா? நான் மனுஷனா? என கேட்பார். அதுக்கு ஆடியன்ஸ் இல்லடா நீ கரடி என ஆறுதல் கூறினர்.

உங்களுக்கு காமெடி கூட வருதுங்க.

ஷாகுல் said...

comment moderation போடுங்க நாஸியா

பீர் | Peer said...

நாஸியா, எங்க போனீங்க.. அவ்வளவு சீக்கிரமா விட மாட்டோம்.

ஒரு தொடர் விளையாட்டிற்கு உங்களை அழைத்துள்ளேன்.

பத்துக்கு பத்து - பிடித்ததும் பிடிக்காததும்

நாஸியா said...

சாகுல் காக்கா, அட ஆமா.. சரியா தான் சொன்னிங்க.. :)

பீரண்ணே, இதோ வந்துட்டேன்.. இட மாற்றத்தால கொஞ்ச நேரம் ஆயிட்டு.. இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து எழுதுறேன்..

Jaleela Kamal said...

படத்தில் ஒரு இடத்தில் உணர்ச்சி வசப்பப்ட்டு நான் மனுஷானா? நான் மனுஷனா? என கேட்பார். அதுக்கு ஆடியன்ஸ் இல்லடா நீ கரடி என ஆறுதல் கூறினர்.

உங்களுக்கு காமெடி கூட வருதுங்க

haa haa haa

Unknown said...

ஒரு entertaining, relax ஆக போய் கொண்டிருக்கும் இந்த BLOG ல் "பாத்திமா ஜொஹ்ரா" போன்றவர்கள் - "மரணத்தை நினைவில் கொள்ளுங்கள்" போன்ற சீரியஸ் ஆனா விஷயங்களை எழுதுவது முதலாவது தவறு. அப்படியென்றால் - முதலில் அவர் எதற்கு இந்த பதிவினை ஆரம்பம் முதல் கடைசி வரை படித்தாராம்? நாம் எல்லோருக்கும் அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ்விடத்தில் பக்தி உண்டு. நபிகள் நாயகத்திடம் மதிப்பும் மரியாதையும் உண்டு. நம் அனைவருக்கும் அல்லாஹ்விடத்தில் அவரவர் பங்களிப்பையும் அவரவர் எல்லை பற்றியும் தெரியும். எனவே எல்லா விஷயங்களிலும் இது போன்ற பயமுறுத்தல்களை தவிர்க்கவும். உலகியலின் பல்வேறு விஷயங்களை அதனதன் இயல்புகளுடன் பிரித்துப்பார்த்து அனுபவிக்க வேண்டுமே தவிர பாத்திமா ஜொஹ்ரா போல எழுதி திருமதி. நாஸியா போன்றோர்கள் எழுதுவதை மட்டு படுத்தக்கூடாது. ஊக்குவிக்க வேண்டும். நாம் பிறரை பற்றியே அதிகம் சிந்தனை செய்து, எப்போது குற்றம் காணலாம் என்று பார்த்துகொண்டே அல்லாஹ்வினிடத்தில் பக்தி செலுத்துவதை மறந்து விடுகிறோம். எனவே பாத்திமா ஜொஹ்ரா போன்றவர்கள் தயவு செய்து கொஞ்ச காலம் இன்டர்நெட் பக்கமெல்லாம் வராமல் அல்லாஹ்வினிடத்தில் தன் மனதை முழுமையாக அர்பணிக்க வேண்டுகிறேன். கல்வி, அறிவியல் போன்ற பல துறைகளில் இஸ்லாமியர்கள் முன்னேற வேண்டும். அதற்கும் அச்சமற்ற சமுதாயம் உருவாக வேண்டும். யாரும் யாருடைய தனிப்பட்ட விஷயங்களில் எல்லை மீறி தலையிடுதல் கூடாது. எனவே நான் "பாத்திமா ஜொஹ்ரா" வை வன்மையாக கண்டிக்கிறேன்.

அப்துல் ஹமீது

நாஸியா said...

சகோதரர் அப்துல் அவர்களே,

சகோதரி ஜொஹ்ரா சொன்ன விதமும், அவர் தவறாக புரிந்து கொண்டமை தான் சற்றே வருத்தமாக உள்ளதே தவிர எனக்கொன்றும் சங்கடம் இல்லை. நான் டீ ஆரை தலைவர் என்று சொன்னதை அவர் உண்மை என எண்ணியது எனக்கு ஆச்சரியத்தை தவிர வேறொன்றையும் தரவில்லை..


மரணம் என்பது சீரியஸான விஷயம் தான்.. ஆனால் அதை இன்ன நேரத்தில் தான் சிந்திக்க வேண்டும் என்பதில்லை.. எந்த நேரமும் மரணத்தை பற்றி எண்ண் வேண்டும்.. :)

மற்றபடி உங்களுடைய கனிவுக்கும், முதல் வருகைக்கும் நன்றி :)

Prathap Kumar S. said...

உங்க ரசிப்புத்தன்மைக்கும் பொறுமைக்கும் நான் தலைவணங்குகிறேன்... யார் யாருக்கோ அமைதிக்கான நோபல் பரிசை கொடுக்கறாங்க.. உங்களை விட்டுடுறாங்க...

சீப்பு கொரியர்ல வந்துச்சு ...அதுல கரடிகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டதுன்னு போட்டிருக்கு... அதனால திரும்ப அனுப்பிட்டேன்...:-)

நாஸியா said...

சகோதரரே, வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவன் மட்டுமே. தயவு செய்து அப்படி சொல்லாதீர்கள்.

ஆமா எனக்கு ஒரு நோபல் பரிசு குடுக்க கொஞ்சம் பரிந்துரை செய்யுங்களேன் ப்ளீஸ்.. :)

\\சீப்பு கொரியர்ல வந்துச்சு ...அதுல கரடிகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டதுன்னு போட்டிருக்கு... அதனால திரும்ப அனுப்பிட்டேன்...:‍)\\

இல்லைங்க, அது டூ இன் ஒன்.. அநியாயமா திருப்பி அனுப்பிட்டீங்களே